Jaffna Uni

Jaffna Uni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Uni, Political organisation, jaffna, Jaffna Town.

பல நூறு மாணவர்களின் கல்வி சார்ந்த பொறுப்பை நடுத்தெருவில் விட்டுவிட்டு மாநகர பதவிக்காக ஜேவிபியின் பின்னால் அலையும் பல்கலை...
10/04/2025

பல நூறு மாணவர்களின் கல்வி சார்ந்த பொறுப்பை நடுத்தெருவில் விட்டுவிட்டு மாநகர பதவிக்காக ஜேவிபியின் பின்னால் அலையும் பல்கலைக்கழக விரிவுரையாளர்.

தற்போது ஜேவிபியின் பின்னால் அலையும் கபிலன் என்ற யாழ்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி சார்ந்த பல பொறுப்புக்களை நட்டநடுத்தெருவில் விட்டு விட்டு ஜேவிபி காட்டிய பதவி ஆசையில் ஜேவிபியிற்கு பின்னால் திரிகிறார். யாழ்பல்கலைக்கழக கலைப்பீடத்தகவல்களின் படி கபிலன் என்ற நபர் அவருக்கு வழங்கப்பட்ட பல பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவுசெய்து கையளிக்காமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு தனது ராஜனாமா கடிதத்தினை துணைவேந்தரிடம் கையளித்துவிட்டு வெளியேறியதாக அறிய முடிகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல மாணவஅணிகளின் பரீட்சை வினாத்தாள்களை திருத்தி கையழிக்கவில்லை என குற்றம் சாட்டடப்படடுகிறது.

அது மட்டுமல்ல பல மாணவ அணிகளின் விரிவுரைகளை நிறைவுசெய்ய வில்லை எனவும் அவற்றை அரைகுறையாக விட்டு தேர்தலுக்காக பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும் மாணவர்களின் செய்முறை பயிற்சிகள் மற்றும் திட்டங்களையும் நிறைவுசெய்யாமல் பாதியில் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு இறுதிவருட மாணவர்களின் ஆய்வு மேற்பார்வை விடயங்களையும் அரைகுறையாக விட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக மாதாந்தம் பல இலட்சம் ரூபா ஊதியமாகப்பெற்ற ஒருவிரிவுரையாளர் ஒரு பொறுப்புணர்வின்றி தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் கையளிக்காமல் மாநகர சபைப்பதவிக்காக ஜேவிபியின் காலில் விழுந்துள்ளார்.

பல்கலைக்கழக விடுப்பில் பல லட்சம் ரூபா மாதாந்த ஊதியத்துடன் உயர்படிப்பை படித்து நிறைவுசெய்த பின்னர் தனது கல்வி முன்னேற்றத்திற்கு அடித்தனமாக இருந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களையும் உரிய முறையில் கவனிக்க தவறிய ஒருவர் ஒரு பொறுப்புள்ள கல்விமானாக இருக்கமுடியாது.

இத்தகையை பொறுப்பற்ற ஒருவர் இனவாத சக்தியான ஜேவிபியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்னத்தை கிழிக்க போகிறார் என்பது தான் தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள கேள்வி.........

ஜேவிபியின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கும் கபிலன் மாநகர சபைத்தேர்தலில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி பதவியாசையில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்தவர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார் என்பது தான் ஜதார்த்தம்........

வடகிழக்கின் தமிழ்த்தேச இருப்பை பாதுகாக்கும் கட்சி!!
08/11/2024

வடகிழக்கின் தமிழ்த்தேச இருப்பை பாதுகாக்கும் கட்சி!!

28/10/2024
யாழ் பல்கலைக்கழத்தை சீரழித்த பெருமை டக்கிளஸ் தேவானந்தாவைச் சாரும்.ஈபிடிபி கட்சியின் செயலாளரும் முன்னை நாள் அமைச்சருமான ட...
24/10/2024

யாழ் பல்கலைக்கழத்தை சீரழித்த பெருமை டக்கிளஸ் தேவானந்தாவைச் சாரும்.
ஈபிடிபி கட்சியின் செயலாளரும் முன்னை நாள் அமைச்சருமான டக்கிளஸ் தேவானந்தா 1994 ம் ஆண்டியிருந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு அரசுகளில் வேறுபட்ட அமைச்சராகவும் இருந்து அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விச்சமூகத்தினை படுமோசமாக சீரழித்துள்ளார்.
எந்த வழிகளில் சீரழித்துள்ளார் என்பதனை சற்றுக்கவனிக்கவும்
1) துணை வேந்தர்களை நியமிக்கும் போது திறமையானவர்களை நியமிக்காமல் தன்னிடம் பின்கதவால் வந்து மண்டியிடுகின்ற சீத்துவம் குறைந்தவர்களை உபவேந்தராக நியமித்து பல்கலைக்கழகத்தின் தரத்தினை சீரழித்துள்ளார்.
2) சண்முகலிங்கன் வசந்தி அரசரட்ணம் சிறீசற்குணராசா போன்றர்கள் பின்கதவால் டக்கிளஸ் தேவானந்தாவிடம் காலில் விழுந்து பதவியை பெற்றவர்கள். அண்மையில் சற்குணராசா டக்கிளஸ் தேவானந்தாக்கு தர்மதேவதை என பட்டம் வழங்கி கௌரவித்திருந்தார்
3) இந்த நன்றிக்கடனுக்காக டக்கிளஸ் தேவானந்தாவின் காலில் விழுந்து துணைவேந்தராக வரும் நபர்கள் டக்கிளஸ் தேவானந்தா காலால் காட்டுவதனை தலையால் செய்து வருகிறர்கள்.
4) கல்வியறிவில்லாத பல்கலைக்கழக கல்வி தொடர்பான நிர்வாகம் தொடர்பான அறிவோ அனுபவமோ இல்லாத தனது கைக்குகூலிகளை பல்கலைக்கழக மூதவையில் நியமித்து பல்கலைக்கழக அனைத்துவிதமான செய்ற்பாடுகளையும் ஊழல் மிக்கதாகவும் கேலிக்குரியதாகவும் ஆக்கியுள்ளார்.
5) தன்னிடம் காலில் விழுந்து துணை வேந்தராகிய நபரையும் தான் நியமித்த மூதவை உறுப்பினரையும் பயன்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு வேண்டிய விரிவுரையாளகளை மற்றும் கல்விசாரா ஊழியர்களையும் நியமித்து பல்கலைக்கழகத்தில் தரத்தினை மிகமோசமாக சீரழித்துள்ளார்.
6) டக்கிளஸ் உடைய சிபார்சில் அடிப்படைத் தகுதி இல்லாதவர்கள் விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
7) கணனி பற்றிய அடிப்படை அறிவில்லாதவர்கள் கணனி பயன்பாட்டு உதவியாளர்களாகவும் வாகனம் ஓட்டத்தெரியாதவர்கள் சாரதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்களார்கள்.
😎 போட்டிப்பரீட்சைகளில் குழறுபடிகளை செய்து திறமையற்றவர்கள் சிலர் பதிவாளர்களாகவும் உதவிப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
9) உதவியாளர்களாக நியமிக்கபட்டுள்ள பலர் தாம் அமைச்சரின் செல்லப்பிள்ளைகள் என்று கூறி அவர்களுக்குரிய அலுவலக வேலைகளைச் செய்வதில்லை.
10) தனக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் ஏதேனும் கடுமையான தவறிழைத்தால் துணைவேந்தரையும் மூதவை உறுப்பினர்களையும் பயன்படுத்தி அவற்றை மூடிமறைத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினைச் சீரழித்து வருகின்றாரார்.

🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 தமிழ்த் தேசியத்தின் பாதையில் தடம்மாறாத, சலுகைகளுக்கு விலைபோகாத, ஒற்றையாட்சியை எதிர்க்கும் ஒற்றைத...
20/10/2024

🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 🚲 தமிழ்த் தேசியத்தின் பாதையில் தடம்மாறாத, சலுகைகளுக்கு விலைபோகாத, ஒற்றையாட்சியை எதிர்க்கும் ஒற்றைத் தலைமையான அண்ணன் #கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அதிகமான ஆசனங்களோடும் பெருவாரியான விருப்பு வாக்குகளோடும் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது #தமிழினத்தின் எதிர்கால இருப்பிற்கும் நிலைப்பிற்கும் அத்தியாவசியமானது.

இலக்கு ஒன்றே இனத்தின் #விடுதலை!🔥

18/12/2022

ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முற்படும் சுமந்திரனின் கரங்களை பலப்படுத்தும் புலம்பெயர் அமைப்புக்கள்.

ரணில் மைத்திரி நல்லாட்சிக் காலத்தில் சிறீலங்காவின் ஆட்சியாளராக வலம்வந்த சுமந்திரன் அப்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்க ஒரு துரும்பைக்கூட கொடுக்கவில்லை.

இன்று அவரது நயவஞ்சக முகம் அம்பலப்பட்டுள்ள நிலையில் ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்த்தினை தீரவாக வலியறுத்திவிட்டு வந்து 3ஆம் நாளில் வறுமையில் வாடும் மக்களிடம் நிவாரணப் பொருட்களுடன் சென்று அதனைக் கொடுத்துவிட்டு தனக்குப்பின்னல் தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பது போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்த அவர் எடுக்கும் முயற்சிக்கு கலையரசன் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்ற போர்வையில் புலம்பெயர் தமிழ் மக்களின் பணத்தில் ஐ.நா வரை சென்று பொறுப்புக்கூறலை வலியுறுத்துபவர் போன்று நடிக்கும் கல்முனைச் செயற்பாட்டாளரும் துணைநிற்கின்றார்.
இவர்களது துரோக நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

09/07/2021

தமிழ் என்றும் நிலைக்கும்

https://youtu.be/TPpzy0FrHTs நடிகர் விவேக் மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையதளத்தில் எழுதிய கட்டுரை-------------------...
19/04/2021

https://youtu.be/TPpzy0FrHTs நடிகர் விவேக் மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையதளத்தில் எழுதிய கட்டுரை
-----------------------------------------
சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.

பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம்.

எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும்.

வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா! தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!’ எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான். அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.’, ‘உம்’, ‘சரி’, ‘மாட்டேன்’ என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும். ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான். அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது.

அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை. காரணம் அவன் விடுவதில்லை. அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ?!

தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது. இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்’ என்பார்(முந்திக்கொண்டானே!). ஹாரிஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்தார்கள்.

அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச்செல்வேன். டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான்.

இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது. அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள்.

இதுவரை ‘புத்திர சோகம்’ என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை.

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!

குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்.

அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்!

பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!

பின் குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான். அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..!

ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை.

வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு. நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம். அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு. அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம். அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும். என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும்.

‘The Good, The Bad and The Ugly’ என்றொரு இத்தாலிய சினிமா. நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன் ‘The Good, The Bad and The Ugly’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன். இசையமைப்பாளர் ‘என்னியோ மொரிக்கோன்’ இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும். இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்!

நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது. எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே. அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது, இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன்.

நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?’. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna’ என்று என்னை அலெர்ட் செய்கிறது. மனம் திறந்து : கடைசி முத்தம்!

- நடிகர் விவேக்

மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையதளத்தில் விவேக் எழுதிய கட்டுரை

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு வருட முழு நேர கற்க...
05/04/2021

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு வருட முழு நேர கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது

(15 வகையான கற்கை நெறிகள்)

01. Automobile Mechanics

02. Auto Electrician

03. Power Electrician

04. Air Conditioning and Refrigeration

05. Electronics

06. Machinist (Tool Machinery)

07. Welder

08. Baker

09. Laboratory Technician (Food & Technology)

10. Assistant Quantity Surveyor

11. Draft Person

12. Construction Site Supervisor

13. Surveying Field Assistant

14. ICT Technician

15. Computer Hardware & Network Technician

வருகையின் அடிப்படையில் மாதாந்தம் Rs.4000/= கொடுப்பனவாக வழங்கப்படும்

வெளி மாகாணத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதிகள் கொடுக்கப்படும்

தேவையான தகைமை

சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக இரண்டு அமர்வுகளுக்குள் ஆறு பாடங்களில் சித்தி அல்லது குறித்த பாட நெறிக்குரிய NVQ 03 தகைமையை பெற்றிருத்தல்

வயதெல்லை : 16 - 24

Closing Date : 2021-04-30

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The Director / Principal, SLGTI, Ariviyal Nagar, Kilinochchi.

http://slgti.com/slgti-courses-training-programmes/

11/02/2021

TELO கருணாகரம் MP ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கல் Decentralization வேண்டுமாம். பாராளுமன்றில் கதறியிருக்கிறார்.

Address

Jaffna
Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Uni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jaffna Uni:

Share