Regional Directorate of Health Services, Jaffna

Regional Directorate of Health Services, Jaffna Official page of RDHS Jaffna. Providing health updates, services, and public health information for the Jaffna District.

21/08/2026
போஷாக்கு விழிப்புணர்வு கண்காட்சி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,சங்கானை.
06/08/2026

போஷாக்கு விழிப்புணர்வு கண்காட்சி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,சங்கானை.

போஷாக்கு விழிப்புணர்வு கண்காட்சி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,உடுவில்.
31/07/2026

போஷாக்கு விழிப்புணர்வு கண்காட்சி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,உடுவில்.

டிஜிட்டல் திரை பயன்பாட்டை கட்டுப்பாடுடன் மேற்கொள்வது● தொலைபேசி (மொபைல்), கணினி, தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் திரைகளின் ப...
26/07/2026

டிஜிட்டல் திரை பயன்பாட்டை கட்டுப்பாடுடன் மேற்கொள்வது

● தொலைபேசி (மொபைல்), கணினி, தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் திரைகளின் பயன்பாடு 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதல்ல.

● 2-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இது அவசியமல்ல.

● 2 – 5 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளுக்கு திரையைப் பார்வையிட அனுமதித்தால் அது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக மட்டுமே இருத்தல் வேண்டும். அவ்வாறே, இது பெரியவரொருவரின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் நாளொன்றுக்கு சுமார் அரை மணித்தியாலம் தொடக்கம் ஒரு மணித்தியாலம் வரை பயன்படுத்தலாம்.

● குழந்தையுடன் இருக்கும்போது நீங்கள் தொலைபேசி (மொபைல்), தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் திரைகளிலிருந்து விலகி இருப்பது குழந்தைக்கு மட்டுமல்லாது, உங்களுக்கும் அந்த நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும்.

● குழந்தையை ஆற்றுப்படுத்தல், தாலாட்டுதல், உணவு ஊட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு டிஜிட்டல் திரைப் பயன்பாட்டைத் தவிர்ப்போம்.

● அவர்கள் இந்த பழக்கத்திற்கு வசப்படும்போது அவர்களது போசணைக்கும், நித்திரைக்கும் குறுக்கீடு ஏற்படுவதுடன் இதனால் அவர்களது வளர்ச்சிக்கும் மூளையின் விருத்திக்கும் இடையூறை ஏற்படுத்தும்.

● மேலும், குழந்தைகளுக்கு டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தக் கொடுப்பதால் அவர்களின் பேச்சு தாமதமாகும், மன இறுக்கம் மற்றும் நடத்தைப் பிரச்சினைகள் போன்ற நிலைமைகள் உருவாகும் அபாயம் அதிகரிக்கும்.

Delft Comprehensive Public Health Program Wins the “Best Practices Award 2025”Presented at the Annual Academic Sessions ...
25/07/2026

Delft Comprehensive Public Health Program Wins the “Best Practices Award 2025”
Presented at the Annual Academic Sessions of the College of Community Physicians of Sri Lanka.

23/07/2026
குழந்தையின் நடவடிக்கைகளில் தந்தையின் பங்களிப்பு● சிறு வயதிலிருந்தே குழந்தையின் செயற்பாடுகளில் தந்தை முழுமையாக ஈடுபடுதல் ...
22/07/2026

குழந்தையின் நடவடிக்கைகளில் தந்தையின் பங்களிப்பு

● சிறு வயதிலிருந்தே குழந்தையின் செயற்பாடுகளில் தந்தை முழுமையாக ஈடுபடுதல் அவசியமாகும். இதன் மூலம் குழந்தை, தந்தை மற்றும் தாய் உட்பட குடும்பத்தில் சகலரதும் பிணைப்பு உறுதியடையும்.

● குடும்பத்தில் தாயின் மனநலம் மேம்படும்.

● குடும்பம் ஒன்றாக இணைந்து செய்யும் செயற்பாடுகளின்போது தந்தையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுதல் முக்கியமாகும். அப்போது குழந்தைகளும் வீட்டு வேலைகளில் உதவுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

● குடும்பத்தினுள் ஒருவருக்கொருவர் செவிமடுத்தல், மதிப்பளித்தல், நேசித்தல் போன்ற குணப்பண்புகளை குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்கின்றனர்.

● பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் முன்மாதிரியாக நடந்து கொள்ளுவதன் மூலம் அவர்கள் சிறு வயதிலிருந்தே மற்றவர்களுடன் நேர்மறையான துலங்கல்களைக் காட்டப் பழகிக்கொள்வார்கள்.

அன்றாட சூழலிலிருந்தும், வீட்டு வேலைகளிலிருந்தும் குழந்தை கற்றுக்கொள்வதற்கு உதவுவோம்.சிறு குழந்தைகளின் மூளை பிறந்த நாள் த...
20/07/2026

அன்றாட சூழலிலிருந்தும், வீட்டு வேலைகளிலிருந்தும் குழந்தை கற்றுக்கொள்வதற்கு உதவுவோம்.

சிறு குழந்தைகளின் மூளை பிறந்த நாள் தொட்டு கற்றல் செயன்முறையில் ஈடுபட்டிருக்கும்.

காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்தும், சந்திக்கும் மனிதர்களிடமிருந்தும், சுற்றுச்சூழலில் உள்ள விலங்குகளிலிருந்தும், மரஞ்செடி கொடிகள் போன்றவற்றிலிருந்து தூண்டப்பெற்று அதன் மூலம் கற்றுக் கொள்கின்றனர்.

செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் மற்றும் ஏனைய அன்றாட வீட்டு வேலைகளின் மூலம் அநேகமான விடயங்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.

இதன் மூலம் பொறுப்பேற்றல், கரிசணை, ஒத்துழைப்புடன் செயற்படல், புத்தாக்கத்திறன்களை மேம்படுத்தல், ஆக்கப்பூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் சிந்தித்தல் முதலிய வாழ்க்கைத் தேர்ச்சிகளைப் பெறுவதற்கு குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

குழந்தையின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, அவர்களின் வயதுக்கேற்ற தினசரி வீட்டு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவோம்.

Address

Health Village, Pannai
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Regional Directorate of Health Services, Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share