புனித யூதாததேயு இளையோர் மன்றம் இளவாலை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • புனித யூதாததேயு இளையோர் மன்றம் இளவாலை

புனித யூதாததேயு இளையோர் மன்றம் இளவாலை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from புனித யூதாததேயு இளையோர் மன்றம் இளவாலை, Social service, St. Jude Ilavalai, Jaffna.

எமது மன்றத்தினால் 24/05/2026 அன்று முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாமானது.       29 குருதிக்கொடையாளிகளின் பங்களிப்புடன் சி...
25/05/2026

எமது மன்றத்தினால் 24/05/2026 அன்று முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாமானது.
29 குருதிக்கொடையாளிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. எம் மன்றத்தின் வருடாவருடம் நடைபெறும் இச் செயற்பாட்டிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் பங்குத்தந்தை அவர்கட்கும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி அவர்கட்கும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும், குருதிக் கொடையாளிகளுக்கும், மற்றும் மன்றஅங்கத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

புனித யூதாததேயு இளையோர் மன்றம் நாடாத்தும் இரத்ததானம்.“ஒரு துளி இரத்தம்… ஒரு உயிரின் நம்பிக்கை.”உங்கள் சிறிய உதவி, ஒருவரி...
20/05/2026

புனித யூதாததேயு இளையோர் மன்றம் நாடாத்தும் இரத்ததானம்.

“ஒரு துளி இரத்தம்… ஒரு உயிரின் நம்பிக்கை.”
உங்கள் சிறிய உதவி, ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்றும் பெரிய வரமாக மாறலாம்.
அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து உயிர்களை காப்பாற்ற உதவுங்கள். 🙌

அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.துணிவும் தியாகமும் இணையும் மேடை…  வீரம் பேசும் ஒரு இரவு… “வீர மங்கை" நாடகம் மற்...
27/02/2026

அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

துணிவும் தியாகமும் இணையும் மேடை… வீரம் பேசும் ஒரு இரவு…
“வீர மங்கை" நாடகம் மற்றும் மலர் வெளியீடு, கலை நிகழ்வுகள், கௌரவிப்புக்கள்.

இந்த மேடைப் பயணத்தை தவறாமல் வந்து காணுங்கள்.

உங்கள் வருகை எங்கள் கலைஞர்களுக்கு உற்சாகம் 🙏

✨ 50 ஆண்டுகளின் பொற்காலப் பயணம் ✨இளவாலை புனித யூதாததேயு இளையோர் மன்றத்தின்50வது ஆண்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவ...
27/02/2026

✨ 50 ஆண்டுகளின் பொற்காலப் பயணம் ✨

இளவாலை புனித யூதாததேயு இளையோர் மன்றத்தின்
50வது ஆண்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🙏

நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த எம் மன்ற அங்கத்தவருக்கு மன்றம் சார்பாக இனிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்...
15/02/2026

நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த எம் மன்ற அங்கத்தவருக்கு மன்றம் சார்பாக இனிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

எம் மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு,உடல்நலம், ஒற்றுமை, உற்சாகம் ஆகியவற்றைஊக்குவிக்கும் நோக்கோடு நடாத்தப...
26/01/2026

எம் மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு,
உடல்நலம், ஒற்றுமை, உற்சாகம் ஆகியவற்றை
ஊக்குவிக்கும் நோக்கோடு நடாத்தப்படும் மாபெரும் ஆண்களிற்கான திறந்த மரதன் ஓட்டப் போட்டி.
வாருங்கள்… ஓடுங்கள்…
ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி!
இந்த நிகழ்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பெருமையான முயற்சி. அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.

 #பொங்கல் 🌾🔥🎋50 ஆண்டுகளாக ஒற்றுமை, உழைப்பு, சேவையின் அடையாளமாகநம் மன்றத்தின் பயணம் பெருமையுடன் தொடர்கிறது.சூரியனுக்கு நன...
15/01/2026

#பொங்கல்

🌾🔥🎋
50 ஆண்டுகளாக ஒற்றுமை, உழைப்பு, சேவையின் அடையாளமாக
நம் மன்றத்தின் பயணம் பெருமையுடன் தொடர்கிறது.
சூரியனுக்கு நன்றி சொல்லும் இந்த இனிய பொங்கல் நாளில்,
புதுப் பானையில் பொங்கும் அரிசிபோல்,
நம் மன்றத்தின் வளர்ச்சியும்,
இளைஞர்களின் கனவுகளும்
பொங்கிப் பெருகட்டும்.

எல்லோரின் இல்லங்களிலும்
மகிழ்ச்சி, வெற்றி, நல்வாழ்வு நிறைந்திடட்டும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.....🌞🎋🌾

 #கரோல் பாடல் போட்டி #இளவாலை மறைக்கோட்ட  இளையோர்களுக்கான கரோல் பாடல் போட்டியில் பங்கு பற்றி எம் பங்கு இளையோர்கள்  #முதலி...
14/12/2025

#கரோல் பாடல் போட்டி #

இளவாலை மறைக்கோட்ட இளையோர்களுக்கான கரோல் பாடல் போட்டியில் பங்கு பற்றி எம் பங்கு இளையோர்கள் #முதலிடத்தை # பெற்றுக்கொண்டனர்‌.
இப் பாடல் போட்டிக்கு சிறந்த முறையில் பாடல் எழுத்துருவாக்கம் செய்த திருமதி. யூஜின் ஷர்மிலானி அன்ரனிராஜா அவர்களுக்கும்
பாடலினை நெறிப்படுத்தி இசையமைத்த A.J.ஜேசுதாஸ் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

இப்பாடல் போட்டியில் பங்கேற்ற ஏனைய இளவாலை மறைக்கோட்ட பங்கு போட்டியாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நேற்றையதினம்(30.11.2025) எமது மன்ற உறுப்பினர்களின் உதவியுடன் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு உணவு வழங்கினோம்....
01/12/2025

நேற்றையதினம்(30.11.2025) எமது மன்ற உறுப்பினர்களின் உதவியுடன் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு உணவு வழங்கினோம்.

நிதியுதவிகளை வழங்கியோருக்கு நன்றிகள்.

Address

St. Jude Ilavalai
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனித யூதாததேயு இளையோர் மன்றம் இளவாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category