13/12/2025
தகவல் மையம்
வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களாலேயே அதிகம் உருவாக்கப்படுவது. வென்றவர் எழுதுவது தான் வரலாறு; வீழ்த்தப்பட்டவர்களுக்கு வழமையாக வரலாற்றில் இடமிருப்பதில்லை. ஆனால், வீழ்த்தப்பட்டவர்களின் வரலாறு அவர்கள் சார்ந்த இனக்குழுமங்களில் இலக்கியங்களாகவும் கதைகளாகவும் பாடல்களாகவும் ஆவணங்களாகவும் திரைப்படங்களாகவும் தலைமுறைக்கு தலைமுறை கடத்தப்படும் விதத்தில் உள்ளது, அவ்வாறே கடத்தப்படவும் வேண்டும்.
எங்களிற்கு இப்போது இருக்கும் தேவை, எங்களது வரலாற்றை, எங்களது பண்பாட்டை, எங்களது கலாசாரத்தை, எங்களுக்குள் புதைத்து வைத்திராமல், அடுத்த தலைமுறைகளுக்கு கதைகளாகவும், பாடல்களாகவும், திரைப்படங்களாகவும், ஆவணங்களாகவும் கடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
எம் மக்களின் கலை, கலாசாரம், பண்பாட்டினை பேணி உயர் விழுமியங்களை பின்பற்றுகின்ற மனிதர்களாய் எம் எதிர்கால சந்ததியை உருவாக்க நாம் அனைவரும் ஒன்று கூடி செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் பயணித்து கொண்டு இருக்கிறோம்.
ஊர் கூடித் தேர் இழுத்தல் தமிழர் மரபு. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் எம் பயணம் இலகுவாகும். அரசியல் வேறுபாடுகளை களைந்து எங்களது வரலாற்றையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் ஒருமுகப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்திட்டத்தில் ஒன்றுபட்டு செயற்பட அனைவரையும் அழைக்கின்றோம்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து துறை சார்ந்த வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர் அனைவரையும் தன்னார்வலர்களாக எம்முடன் இணைந்து செயற்பட வேண்டுகின்றோம்.
முக்கிய கவனப் புள்ளிகள்:-
1. வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்தல் - பலரிடம் பழைய தமிழ் வரலாற்று ஆவணங்கள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி நாங்கள் தகவல்களைச் சேகரித்துப் பாதுகாத்தல் (Obtaining accurate facts/figures from the original source document to create a historical bank of information)
2. வரலாற்று ஆவணங்களைச் சேகரித்தல் - விரும்புபவர்கள் தங்களிடம் இருக்கும் வரலாற்று ஆவணங்களின் அசல்லையோ அல்லாவிட்டால் நகைலையோ தகவல் மையத்திடம் பணிப் பாதுகாப்பதற்காகக் கொயளிக்கலாம்
3. சில வரலாறுகள், முக்கிய நிகழ்வுகள் அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின், அனுபவித்தவர்களின் மனதில் மட்டுமே இருக்கின்றனவே தவிர எழுதப்படவில்லை. அவற்றையும் ஆவணப்படுத்தல்
4. தொல்பொருள் ஆராய்ச்சி, சேகரிப்பு, காலக் குறியீடுகள், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம்
5. சேகரிக்கப்பட்ட தமிழர் வரலாற்றுப் பொக்கிஷங்களைப் பாடசாலை மாணவர்களுக்கும், ஏனைய கல்வி சார்நிலையங்களுக்கும் காட்சிப்படுத்தல், ஆர்வம் ஏற்படுத்தல்
உடனடி தேவை:-
1. அகழ்வாராய்ச்சி, இலங்கைத் தமிழர் வரலாறு சார்ந்த அறிவுடைய கல்வியாளர்கள், பேராசிரியர்களின் தன்னார்வப் பங்களிப்பு
2. வரலாறு படித்தவர்களில் இன்றும் உயிர்வாழ்வவர்களுடனான நேர்காணல் - நேர்காண்பவர் அனுபவமும், ஆர்வமும், பொறுமையுமுள்ளவராக இருத்தல் அவசியம்
3. ஆவணச் சேகரிப்பு உதவியாளர்கள்
4. பலதரப்பட்ட பொறுப்புகளை மேற்கொள்ளக்கூடிய தன்னார்வலர்கள்
உங்கள் விண்ணப்பங்களை இண்ணய/மின்னஞ்சல் ([email protected]) வழியாகவோ, அல்லது யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள தொடர்பகக் காரியாலயத்திலோ சமர்ப்பிக்கலாம்.
தொடர்பு எண்: 0770101199
நன்றி
தமிழரசுத் தொடர்பகம்