Kalmunai - கல்முனை page

Kalmunai - கல்முனை page Kalmunai news, entertainment & informations

நாமல் ராஜபக்ச கைது ! இலஞ்ச குற்றச்சாட்டில் கைது..Hon.AKD sir சிறப்பு சிறப்பு சிறப்பான தரமான சம்பவம்
04/09/2026

நாமல் ராஜபக்ச கைது !

இலஞ்ச குற்றச்சாட்டில் கைது..
Hon.AKD sir
சிறப்பு சிறப்பு சிறப்பான தரமான சம்பவம்

மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் பரிதாபகரமாக பலி…!!!நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பி...
04/09/2026

மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் பரிதாபகரமாக பலி…!!!

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய சக்தி ஊடக நிறுவனத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்   – உயிராபத்து இல்லைஅம்பாறை, செப். 03:ஜே.கே.யதுர்ஷன்சக்தி ஊ...
03/09/2026

விபத்தில் சிக்கிய சக்தி ஊடக நிறுவனத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் – உயிராபத்து இல்லை

அம்பாறை, செப். 03:
ஜே.கே.யதுர்ஷன்

சக்தி ஊடக நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் Sathasivam Kajenthiran நேற்று (03.09.2026) இடம்பெற்ற விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு உயிராபத்து எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுவதுடன், சிறிய சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதற்காக வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் ஊடகப் பணியில் ஈடுபட இறைவனைப்பிராத்திக்கின்றோம்...

CFC எப்பவும் கெத்துதான்
03/09/2026

CFC எப்பவும் கெத்துதான்

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர  #புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் த...
03/09/2026

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர #புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

#யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

#அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.

எல்லோரும் news போடுறாங்க, ஆனால் யாரு அவன்? அவன் போட்டோ தகவல்கள் எந்த ஊர் என்று எதுவுமே போடுறாங்க இல்லை.. இப்படி ஒரு கேவல...
02/09/2026

எல்லோரும் news போடுறாங்க, ஆனால் யாரு அவன்? அவன் போட்டோ தகவல்கள் எந்த ஊர் என்று எதுவுமே போடுறாங்க இல்லை.. இப்படி ஒரு கேவலமான செயல் செய்திட்டு அவன் ஊருக்குள்ள சுதந்திரமாக நடமாட போகின்றான்

மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பெற்றுக்கொடுத்த மேற்படி நபருடைய அடையாள அட்டை கல்முனை பகுதியில் வைத்து தொலைந்துவிட்டது. யா...
01/09/2026

மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பெற்றுக்கொடுத்த மேற்படி நபருடைய அடையாள அட்டை கல்முனை பகுதியில் வைத்து தொலைந்துவிட்டது. யாராவது கண்டு எடுத்தால் எனது இலக்கத்திற்கு அழைக்கவும் 🙏🏽🙏🏽🙏🏽
0776082418
Plz share 🙏🏽

01/09/2026

அரச அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு உத்தியோகத்தரும் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

“வாய்மொழியாகச் சொன்னார்கள்… அதனால் சென்றேன்” என்று மட்டும் நம்பி அபாயகரமான இடத்திற்குச் செல்ல வேண்டாம்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் அல்லது வழக்கமான பணிநேரத்திற்கு வெளியே அலுவலகத்திற்கு அல்லது அலுவலக பணிக்காக வெளிக்களத்துக்கு அழைக்கப்பட்டால்…

முடிந்தவரை:

யார் அழைக்கிறார்கள்?

எதற்காக அழைக்கிறார்கள்?

என்ன பணியைச் செய்ய வேண்டும்?

என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

முடிந்தால் எழுத்து மூலமான உத்தரவு அல்லது செய்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

WhatsApp அல்லது SMS மூலம் அறிவுறுத்தல் வந்திருந்தால் அதை அழிக்காமல் வைத்திருங்கள்.

அலுவலகத்தில் பாதுகாப்பற்ற மின்சார இணைப்புகள், நீர் தேங்கிய பகுதிகள் அல்லது வேறு அபாயங்கள் தென்பட்டால்…

“நான் உத்தியோகத்தர்; எனக்கு சொல்லப்பட்ட வேலையைச் செய்துவிட வேண்டும்” என்று நினைத்து உயிரைப் பணயம் வைக்காதீர்கள்.

முதலில் பாதுகாப்பு - பின்னர் பணி.

---

ஒரு உத்தியோகத்தரின் கடமை என்றால்…

அவர் தனது உயிரைப் பணயம் வைத்து பணியாற்ற வேண்டும் என்று அர்த்தமல்ல.

நிர்வாகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது.

உத்தியோகத்தர்களை பாதுகாப்பான சூழலில் பணியாற்றச் செய்வது நிர்வாகத்தின் அடிப்படைப் பொறுப்புகளில் ஒன்றாகும்.

அதே நேரத்தில்…

ஒவ்வொரு உத்தியோகத்தரும் தமது பாதுகாப்பிற்கான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஏனெனில் விபத்து நடந்த பின்னர்…

“எனக்குத் தெரியவில்லை…”

“யாரும் சொல்லவில்லை…”

“அவர் ஏன் அங்கு சென்றார் என்று தெரியவில்லை…”

என்று கூறப்படும் வார்த்தைகள்… ஒரு உயிரை மீண்டும் கொண்டு வராது.

---

இறுதியாக…

குறித்த சம்பவத்தில் யார் தவறு செய்தார்கள் என்று நாம் முன்கூட்டியே தீர்ப்பு வழங்க முடியாது.

அதை விசாரணை தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகக் கூறலாம்.

ஒரு உயிரிழப்பு வீணாகக் கூடாது.

இந்தச் சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

உண்மை வெளிவர வேண்டும்.

குடும்பத்தினருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும்…

இதேபோன்ற ஒரு சம்பவம் நாளை மற்றொரு அலுவலகத்தில்…

மற்றொரு உத்தியோகத்தருக்கு…

ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இன்று ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

நாளை இன்னொருவர் உயிரிழக்காமல் இருப்பதே…

இந்த மரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம்.

— (பிரதி செய்யப்பட்ட பதிவு)

முக்கிய அறிவிப்பு: அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் செப்டம...
01/09/2026

முக்கிய அறிவிப்பு: அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. இதில் தெரிவு செய்யப்பட்ட தகுதியுடைய புதிய பயனாளர்களுக்கே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

பயனாளர்கள் செய்ய வேண்டியவை:

பெயர் பட்டியலைச் சரிபார்க்கவும்: அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பயனாளர் பெயர் பட்டியல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும்.

பிரதேச செயலகங்களில் சரிபார்க்கலாம்: உங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உங்கள் பிரதேச செயலகங்களில் அல்லது உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேன்முறையீடுகள்/ஆட்சேபனைகள்: பெயர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபடல்கள் இருந்தால், அதற்கான மேன்முறையீடுகளைச் செய்வதற்குரிய கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்துத் தொடர்ந்து அறிவிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு:

தொடர்புடைய பிரதேச செயலகங்களை அல்லது நலன்புரி நன்மைகள் சபையைத் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பகிர்வோம்! பயனடைவோம்

இந்தத் தகவலை அஸ்வெசும திட்டத்தில் விண்ணப்பித்திருக்கும் மற்றும் கொடுப்பனவை எதிர்பார்த்திருக்கும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Address

Main Road
Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunai - கல்முனை page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category