04/07/2026
மின்னொளியில் இலங்கும் மருதமுனை சிறுவர் பூங்கா.!
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் துரித நடவடிக்கை.!
மருதமுனை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா கல்முனை மாநகர சபையினால் மின்னொளியூட்டப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் கடந்த புதன்கிழமை அங்கு கள விஜயம் மேற்கொண்டு, பூங்காவின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்ந்த நிலையில், மக்கள் நலன் கருதி தேவையானளவு பிரகாசமான மின் விளக்குகளை உடனடியாக பொருத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதையடுத்து கல்முனை மாநகர சபையின் தெரு விளக்கு பராமரிப்பு பிரிவினரால் மின்னொளி கட்டமைப்புகள் யாவும் துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு, புதிய பிரகாசமான கோப்ரா மின் விளக்குத் தொகுதிகள் பொருத்தப்பட்டதுடன் செயற்பாடின்றி காணப்பட்ட Park Light தொகுதிகளும் சீர்செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொழுதுபோக்கு கூடாரங்களிலும் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.