30/09/2025
காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் 25வது நிறைவு ஆண்டில் 23வது வருடாந்த பாலர் விழாவாக ஐக்கிய பாலர் விளையாட்டு விழா-2025 நிகழ்வு 12.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் விளையாட்டு மைதானத்தில் உமர் சன சமூக நிலையத்தின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட சன சமூக நிலையங்களின் சம்மேளன பிரதிச் செயலாளருமான AL.முஹம்மத் இர்ஷாத் JP
தலைமையில் மூன்று பாலர் பாடசாலைகளை ஒன்றினைத்த நிகழ்வாக மிக சிறப்பாக இடம் பெற்றது.
இவ்விழாவில் அல்-உமர் பாலர் பாடசாலை, அப்றா பாலர் பாடசாலை மற்றும் புளுமிங் ப்லவர்ஸ் பாலர் பாடசாலை என்பன பங்கு பற்றின. இந்நிகழ்வின் பிரதம அதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் ஜனாபா. நிஹாரா மெளஜுத் (SLAS) அவர்களும்,
கெளரவ அதிகளாக உமர் சன சமூக நிலையத்தின் சட்ட ஆலோசகர் ஜனாப். முஹம்மது சாலி M.முகைதீன் (LLB) அவர்களும், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர்
ஜனாபா. MS. சில்மியா (SLAS) அவர்களும், ஏறாவூர் உதவி பிதேச செயலாளர் ஜனாப். UM. அஸ்லம் (SLAS) அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சன சமூக நிலையங்களின் சம்மேளன தலைவர் திரு. சின்னத்துரை கமல் JP அவர்களும் புதியகாத்தான்குடி 167/B GSO ஜனாபா. பாத்திமா மபாஸா அலி அவர்களும், மற்றும் ஊர் முக்கியத்தர்கள்,
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், கல்விமான்கள், உலமாக்கள், உமர்சனசமூக நிலைய நிர்வாகிகள், பெற்றோர்கள், ஊர்மக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.