அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி

  • Home
  • Sri Lanka
  • Kilinochchi
  • அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி

அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி Official page for the DMC Kilinochchi. Land Phone 021 2285330
CDMA 021 4927544
Fax 021 2117118
Hotline 117

, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் தற்...
12/11/2025

, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் தற்காலிக குடிசையில் வசித்து வரும் இரண்டு குடும்பங்கள் 11.11.2025 பெய்த கடும் மழையினால் வீட்டின் கூரையினால் மழைநீர் உட்புகுந்தமையினால் கிராம சேவையாளர் உடன் தொடர்பு கொண்டு மாவட்ட உதவி பணிப்பா ளரினால் களவிஐயத்தின் மூலம் பார்வையிட்டு அவர்களுக்கான தறப்பாள் வழங்கிவைக்கப்பட்டது

07/11/2025
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னா வெளி.கிராஞ்சி கிராம சேவையாள...
06/11/2025

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னா வெளி.கிராஞ்சி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது

05/11/2025

இன்று 05.11.2025 காலை 8.30 மணி தொடக்கம் 12.00மணி வரை இலங்கையில் சுனாமி ஒத்திகை நடைபெறும்.

நாடளாவிய ரீதியில் சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதிநாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை...
04/11/2025

நாடளாவிய ரீதியில் சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதி
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சுமாத்ரா தீவை அண்மித்த பகுதிகளில் பல சிறிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி தயார்நிலை குறித்து முப்படையினர், பொலிஸ், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துகொண்ட போதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த சுனாமி தயார்நிலை ஒத்திகையானது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை முறைமையின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுனாமிக்குத் தயாரான நாடு என்ற வகையில், களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு ஏனைய மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த ஒத்திகை நடத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுமாத்ரா தீவை அண்மித்த பகுதிகளில் ரிக்டர் அளவில் 6.5 இற்கு மேற்பட்ட பூகம்பம் பதிவானால், நாட்டில் சுனாமி ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், அதற்கு தயார்நிலை அத்தியாவசியமானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.

29/10/2025

Address

District Secretariat
Kilinochchi

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94772320528

Alerts

Be the first to know and let us send you an email when அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி:

Shortcuts

Share