Sun Lanka Tamil News

Sun Lanka Tamil News எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை”
0774114074 0756916161

🔴இலங்கை போக்குவரத்து சபைக்குச்  சொந்தமான இரண்டு பேருந்துகள் அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில நேருக்கு ...
18/03/2026

🔴இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பம் இன்று (18) மதியம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 4 பேர் பலியானதுடன் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர் கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்.! அதிலிருந்து 18,000 மெ.தொ டீசல், 17,000 மெ.தொ பெட்ரோல் மற்றும் 3,000 மெ.தொ சுப்பர் ...
16/03/2026

இலங்கை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்.! அதிலிருந்து 18,000 மெ.தொ டீசல், 17,000 மெ.தொ பெட்ரோல் மற்றும் 3,000 மெ.தொ சுப்பர் டீசல் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்

16/03/2026
16/03/2026
16/03/2026

QR பெறுவதில் சிக்கலா?
வாகனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா?

கவலை வேண்டாம், தெரியாதோருக்கும் பகிருங்கள்!!!🚨

எரிபொருள் QR Code தொடர்பான
முக்கிய விழிப்புணர்வு!

இலங்கையில் எரிபொருள் பெறுவதற்கான National Fuel Pass (QR) முறையில், உங்களின் பழைய மொபைல் எண் தொலைந்துவிட்டதா? அல்லது வேலை செய்யவில்லையா? கவலைப்பட வேண்டாம்!
பழைய பதிவை நீக்கிவிட்டு, புதிய மொபைல் எண்ணில் மீண்டும் QR Code பெறுவது எப்படி? இதோ எளிய வழிமுறை:

✅ பழைய பதிவை நீக்குதல் (SMS மூலம்)

உங்கள் வாகன இலக்கத்தை பழைய எண்ணில் இருந்து விடுவிக்க, இப்போது நீங்கள் பயன்படுத்தும் புதிய மொபைல் எண்ணில் இருந்து ஒரு SMS அனுப்ப வேண்டும்.

📱 SMS அனுப்ப வேண்டிய எண்: 070 444 4444

📝 பதிவு செய்ய வேண்டிய விதம்:
FUEL (இடைவெளி) DELETE (இடைவெளி) [உங்கள் வாகன இலக்கம்]

(உதாரணம்: FUEL DELETE WPABC1234)

✅ புதிய பதிவை மேற்கொள்ளுதல்

பழைய பதிவு நீக்கப்பட்டவுடன் (Success Message வந்ததும்), கீழே உள்ள இணையதளத்திற்குச் செல்லுங்கள்:
🌐 இணையதளம்: fuelpass.gov.lk

உங்கள் புதிய மொபைல் எண்ணைக் கொடுத்து உள்நுழையவும் (OTP வரும்).

உங்கள் வாகன இலக்கம் மற்றும் Chassis Number (வாகனப் பதிவுப் புத்தகத்தில் இருக்கும் எண்) ஆகியவற்றை உள்ளிடவும்.

இப்போது உங்களுக்கான புதிய QR Code கிடைத்துவிடும்!

💡 முக்கிய குறிப்பு: * ஒரு அடையாள அட்டைக்கு (NIC) ஒரு வாகனம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

SMS அனுப்பும் போது வாகன இலக்கங்களுக்கு இடையே இடைவெளி (Space) விட வேண்டாம்.

இந்தத் தகவல் தெரியாமல் பல நண்பர்கள் எரிபொருள் பெற முடியாமல் சிரமப்படலாம். எனவே, இந்தப்பதிவை Share செய்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்!

முக்கிய குறிப்புகள் -

உங்கள் வாகனத்தின் உரிமையாளர் அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நீங்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

fuelpass.gov.lkஇணையதளத்திற்குச் சென்று உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, வரும் OTP குறியீட்டைப் பயன்படுத்தி பழைய QR குறியீட்டையே மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வாகனத்தின் உரிமையாளர் மாறியிருந்தால் அல்லது புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் இணையதளத்தில் 'Re-registration' அல்லது 'Update' பகுதிக்குச் சென்று புதிய விபரங்களை உள்ளிட்டு மீண்டும் பதிவு செய்ய வே

இஸ்ரேலில் திடீர் பரபரப்பு! அவசரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவில்லை - காரணம் என்ன?இஸ்ரேலிய வரலாற்றில் மிக அரிதான ஒரு சம...
15/03/2026

இஸ்ரேலில் திடீர் பரபரப்பு! அவசரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவில்லை - காரணம் என்ன?

இஸ்ரேலிய வரலாற்றில் மிக அரிதான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட ராணுவப் பாதுகாப்புக் கூட்டத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

• முக்கியமான பாதுகாப்பு முடிவுகள் எடுக்கப்படும் இக்கூட்டத்தில் பிரதமரின் நாற்காலி காலியாக இருந்தது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

• பிரதமருடன் சேர்த்து விமானப்படைத் தளபதி மற்றும் மொசாட் தலைவர் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

• அங்கு கூடியிருந்த அதிகாரிகளின் முகங்களில் நிலவிய கவலையும், தீவிரமான சூழலும் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்த்துவது போல் உள்ளது.

பிரதமர் எங்கே? அவர் நலமாக இருக்கிறாரா அல்லது பாதுகாப்புக் காரணங்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், இது குறித்த விவாதங்கள் உலக அளவில் தீவிரமடைந்துள்ளன.

உண்மையான நிலவரம் என்ன என்பதை இஸ்ரேலிய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

නෙතන්යාහු අතුරුදහන්: ඉරාන ප්‍රහාරයෙන් ඔහුට අනතුරක්ද?

ඊශ්‍රායල්- ඇමරිකා ඉරාන ආරම්භ වූ දා සිට ප්‍රථම වතාවට, ඊශ්‍රායල අගමැති බෙන්ජමින් නෙතන්යාහු අද පැවැත්වුණු ඉහළ මට්ටමේ අමාත්‍ය මණ්ඩල සහ ආරක්ෂක කැබිනට් රැස්වීමට සහභාගී නොවීම කැපී පෙනුණි. ඉරාන නායකත්වයට එල්ල වූ ඉලක්කගත ප්‍රහාර සහ ඉන් අනතුරුව එල්ල වූ දැවැන්ත මිසයිල ප්‍රහාර මාලාව හමුවේ කලාපීය උණුසුම උපරිම වී ඇති මොහොතක, ජ්‍යෙෂ්ඨ හමුදා සහ කැබිනට් නිලධාරීන්ගේ ප්‍රධානත්වයෙන් මෙම රැස්වීම පැවැත්විණි. නෙතන්යාහුගේ මෙම හදිසි සහ පැහැදිලි කළ නොහැකි අතුරුදහන් වීම ඔහුගේ සෞඛ්‍යය, ආරක්ෂාව හෝ තිරය පිටුපස සිදුවන උපායමාර්ගික මෙහෙයුම් පිළිබඳව ඊශ්‍රායලය පුරා දැඩි සමපේක්ෂනයක් ඇති කිරීමට හේතු වී තිබේ.

"දෙවන ඉරාන යුද්ධය" ලෙස නම් කර ඇති වත්මන් මැදපෙරදිග අර්බුදය තීරණාත්මක කඩඉමකට පැමිණ ඇති මොහොතක, ඊශ්‍රායල අගමැති බෙන්ජමින් නෙතන්යාහු පිළිබඳව ලොව පුරා දැඩි කතාබහක් නිර්මාණය වී තිබේ. එයට ප්‍රධානතම හේතුව වී ඇත්තේ අද දින පැවැත්වීමට නියමිතව තිබූ තීරණාත්මක ආරක්ෂක කැබිනට් රැස්වීමට ඔහු සහභාගී නොවීමයි.

යුද්ධය ආරම්භ වූ දා සිට සෑම තීරණාත්මක රැස්වීමකම පෙරමුණ ගත් නෙතන්යාහු, මෙවර ආරක්ෂක මණ්ඩලය හමුවට නොපැමිණීම ඊශ්‍රායල දේශපාලන ක්ෂේත්‍රය තුළ මහත් කැළඹීමක් ඇති කර තිබේ. ආරක්ෂක අංශ සහ ජ්‍යෙෂ්ඨ අමාත්‍යවරුන් විසින් මෙහෙයවනු ලැබූ මෙම රැස්වීමට අගමැතිවරයා නොපැමිණීමට නිල වශයෙන් කිසිදු හේතුවක් ඉදිරිපත් කර නොමැත.

නෙතන්යාහුගේ මෙම නොපැමිණීමත් සමඟ X (පෙර Twitter), Telegram සහ Facebook වැනි සමාජ මාධ්‍ය ජාලා තුළ විවිධ පුවත් ලැව්ගින්නක් සේ පැතිර යමින් පවතී. විශේෂයෙන්ම පසුගියදා ඉරානය විසින් ඊශ්‍රායලය වෙත එල්ල කරන ලද දැවැන්ත මිසයිල ප්‍රහාරයකින් නෙතන්යාහු ඉලක්ක වී ඇති බවත්, ඔහු තුවාල ලබා හෝ මියගොස් ඇති බවටත් තහවුරු නොකළ වාර්තා පල වෙමින් තිබේ.

මෙම පුවත් මේ දක්වා කිසිදු නිල ජාත්‍යන්තර පුවත් ඒජන්සියක් හෝ ඊශ්‍රායල රජය විසින් තහවුරු කර නොමැති අතර, මේවා හුදෙක් සමපේක්ෂන (Rumors) පමණක් බව මතක තබා ගත යුතුය.

නෙතන්යාහුගේ අතුරුදහන් වීම පිටුපස විවිධ මතවාද කිහිපයක් පවතී:
1. සෞඛ්‍ය තත්ත්වය:
අධික මානසික පීඩනය සහ පවතින යුදමය වාතාවරණය හමුවේ ඔහු හදිසි අසනීප තත්ත්වයකට පත්ව ඇති බවට මතයක් පවතී.

2. ආරක්ෂිත පියවර:
ඉරාන ප්‍රහාරයන්ගෙන් බේරීම සඳහා ඔහු රහසිගත බංකරයක (Underground Bunker) සිට මෙහෙයුම් මෙහෙයවනවා විය හැකිය.

3. උපායමාර්ගික මෙහෙයුම්:
ඉරානයට එරෙහිව එල්ල කිරීමට නියමිත ඊළඟ දැවැන්ත ප්‍රහාරය සැලසුම් කිරීම සඳහා ඔහු හමුදා මූලස්ථානයක රහසිගතව රැඳී සිටිනවා විය හැකිය.

කෙසේ වෙතත්, මැදපෙරදිග කලාපය දැඩි අස්ථාවර භාවයක පවතින මෙවැනි මොහොතක රටක නායකයෙකු ප්‍රසිද්ධියේ පෙනී නොසිටීම ජනතාව තුළ අනියත බියක් ඇති කිරීමට සමත් වී තිබේ. ඊශ්‍රායල රජය විසින් මේ සම්බන්ධයෙන් ඉදිරි පැය කිහිපය තුළ නිල නිවේදනයක් නිකුත් කරනු ඇතැයි බොහෝ දෙනා බලාපොරොත්තු වෙති.

🔴BREAKING  #அமெரிக்க போர்விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் அமெரிக்கன் US KC-135 கனரக 2 விமானங்கள் விபத்து!ஒன்று  #ஈராக்க...
12/03/2026

🔴BREAKING
#அமெரிக்க போர்விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் அமெரிக்கன் US KC-135 கனரக 2 விமானங்கள் விபத்து!

ஒன்று #ஈராக்கில் எரிந்து சாம்பல்!
மற்றது #இஸ்ரேலில் தரையிறங்கியது!

ஈராக் விபத்தில் விமானிகள் உட்பட 6 பேர் பலி!

உக்ரைன் மீது முதல் ட்ரோன் தாக்குதலை நடத்தியது ஈரானியர்களே! - ஜெலென்ஸ்கி அதிரடி​உக்ரைன் மீதான போரின் ஆரம்பக்கட்டத்தில் மு...
12/03/2026

உக்ரைன் மீது முதல் ட்ரோன் தாக்குதலை நடத்தியது ஈரானியர்களே! - ஜெலென்ஸ்கி அதிரடி

​உக்ரைன் மீதான போரின் ஆரம்பக்கட்டத்தில் முதன்முதலில் ஏவப்பட்ட 'ஷாஹெட்' தற்கொலைப்படை ட்ரோன்களை ரஷ்ய வீரர்கள் இயக்கவில்லை என்றும், அவற்றை ஈரானியர்களே நேரடியாக இயக்கினர் என்றும் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

🚨 இஸ்ரேலில் உணவுத் தட்டுப்பாடு! பங்கர்களில் முடங்கிய மக்கள் - துருக்கி ஊடகம் தகவல்.​மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர...
12/03/2026

🚨 இஸ்ரேலில் உணவுத் தட்டுப்பாடு! பங்கர்களில் முடங்கிய மக்கள் - துருக்கி ஊடகம் தகவல்.

​மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மற்றும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக, இஸ்ரேலிய குடிமக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடி வருவதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்புப் பெட்டகங்களில் (Shelters) தஞ்சமடைந்துள்ள பொதுமக்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல்களை முன்னெடுத்த நெதன்யாகு அரசின் நடவடிக்கைகள், கடந்த 11 நாட்களாக இஸ்ரேலிய பொருளாதாரத்திலும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

​லெபனான் மற்றும் ஈரான் ஆகிய இரு முனைகளிலிருந்தும் இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் அந்நாட்டின் உள்நாட்டு விநியோகச் சங்கிலி (Supply chain) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

போர் நீடித்து வருவதால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன், இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தங்களது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் "எந்தவொரு சூழ்நிலை...
12/03/2026

அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் "எந்தவொரு சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் இன்று வியாழக்கிழமை (12) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்டை நாடுகளுடனான தனது உறவுகளை ஈரான் மதிக்கிறது என்றும், ஆனால் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களில் இருந்து தொடங்கும் தாக்குதல்களுக்கு எதிராக எச்சரித்ததாகவும் பெஷேஷ்கியன் கூறினார்.

ஓமான் நாட்டு சுல்தானுடனான தொலைபேசி உரையாடலை அடுத்தே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்துடன், ஓமான் நாட்டின் மீதான தாக்குதல் பற்றி தமது நாடு உள்ளக விசாரணையை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

4,000 லீட்டர் மண்ணெண்ணெய் கடத்த முயன்ற லொறியை மடக்கிப் பிடித்த மக்கள்!கிதுல்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சுமா...
12/03/2026

4,000 லீட்டர் மண்ணெண்ணெய் கடத்த முயன்ற லொறியை மடக்கிப் பிடித்த மக்கள்!

கிதுல்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சுமார் 4,000 லீட்டர் மண்ணெண்ணெயை, எவ்வித சட்டபூர்வ அனுமதிப்பத்திரமும் இன்றி 4 தாங்கிகளில் ஏற்றிக்கொண்டு கேகாலை நோக்கிச் செல்ல முற்பட்ட லொறியை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கடந்த (05) ஆம் திகதி அதிகாலை வேளையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியில் மண்ணெண்ணெய் நிரப்பப்படுவதைக் கண்ட பிரதேசவாசிகள், உடனடியாகச் செயல்பட்டு லொறியை மடக்கிப் பிடித்ததுடன் கிதுல்கலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் லொறியுடன், அதன் சாரதி மற்றும் உதவியாளரைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கிதுல்கலை பொலிஸாரின் தகவல்படி, கைப்பற்றப்பட்ட 4,000 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் சந்தேகநபர்கள் இருவரும் இன்று (12) ஆம் திகதி ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

🇹🇷 துருக்கி அதிபர் எர்டோகான் முக்கியக் கருத்து!துருக்கி அதிபர் Recep Tayyip Erdoğan சமீபத்தில் வெளியிட்ட கருத்து உலக முஸ...
12/03/2026

🇹🇷 துருக்கி அதிபர் எர்டோகான் முக்கியக் கருத்து!

துருக்கி அதிபர் Recep Tayyip Erdoğan சமீபத்தில் வெளியிட்ட கருத்து உலக முஸ்லிம் சமூகத்தில் கவனம் பெற்றுள்ளது.

அவர் கூறியதாவது:

“எங்களிடம் சுன்னி அல்லது ஷியா போன்ற பிரிவுகள் என்ற மதம் இல்லை. எங்களிடம் ஒரே ஒரு மதம் தான் உள்ளது — அது இஸ்லாம்.”

மதப்பிரிவுகளை விட ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

🌍 உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பிரிவினைகளைத் தாண்டி ஒன்றுபட வேண்டும் என்ற செய்தியையும் அவர் இக்கூற்றின் மூலம் எடுத்துரைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

⚠️ இந்த பதிவு தகவல் மற்றும் செய்தி பகிர்வுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது; எந்தவிதமான வன்முறையையும் ஆதரிப்பதில்லை.

Address

Madawala Baggala Gedara
Madawala

Alerts

Be the first to know and let us send you an email when Sun Lanka Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sun Lanka Tamil News:

Share