Office of the Deputy Director of Agriculture Mullaitivu

Office of the Deputy Director of Agriculture  Mullaitivu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Office of the Deputy Director of Agriculture Mullaitivu, Government Organization, Office of the Deputy Director of Agriculture, Mullaitivu.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஆளுகைக்கு கீழ் ஐயங்கன்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் புத்துவெட்டுவான் கி...
28/07/2026

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஆளுகைக்கு கீழ் ஐயங்கன்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் புத்துவெட்டுவான் கிராமத்தில்
2026 சிறுபோகத்தில் நடைமுறைப்படுத்தபட்ட யா யா நெற் செய்கை கண்ட முறை திட்டத்தின் வயல் விழா ஆனது ஈஸ்வரநாதன் எனும் விவசாயியின் முன்மாதிரி செய்கை பண்ணப்பட்ட பரசூட் முறையில் செய்கை பண்ணப்பட்ட வயலில் இடம்பெற்றது வயல் விழா நிகழ்வு 23.07.2026 அன்று நடைபெற்றது.
ஐயங்கன்குளம் விவசாயப் போதனாசிரியர் சயுத்பவான் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் அதிதிகளாக முல்லைத்தீவு மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் ,பாடவிதான உத்தியோகத்தர்(மறு வயல் பயிர்கள்)
விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது அமைப்புக்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர் . மேற்படி அறுவடை விழாவில் யா யா நெற் செய்கை கண்ட முறை தொடர்பிலும் பரசூட் முறை தொடர்பாகவும் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஆளுகைக்கு கீழ் கொல்லவிளாங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்  கொல்லவிளாங்குள...
20/06/2026

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஆளுகைக்கு கீழ் கொல்லவிளாங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கொல்லவிளாங்குளம் கிராமத்தில் மதன்ராஜ் எனும் விவசாயியால் முன்மாதிரி துண்டாக செய்கை பண்ணப்பட்ட பாசிப்பயறு MIMB7 அறுவடை வயல் விழா நிகழ்வு 17.06.2026 அன்று நடைபெற்றது.
கொல்லவிளாங்குளம் விவசாயப் போதனாசிரியர் அ.றஜித் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் அதிதிகளாக முல்லைத்தீவு மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் ,பாடவிதான உத்தியோகத்தர்(மறு வயல் பயிர்கள்)
கொல்லவிளாங்குளம் கிராம அலுவலர் விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது அமைப்புக்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர் . மேற்படி அறுவடை விழாவில் பயறு(MIMB7)இனம் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

16/06/2026 அன்று முல்லைத்தீவு பிரதி விவசாய பணிப்பாளர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக உத்தி...
18/06/2026

16/06/2026 அன்று முல்லைத்தீவு பிரதி விவசாய பணிப்பாளர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான நிதியியல் மற்றும் வருடாந்த கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி இடம்பெற்றது பயிற்சி நெறியின் வளவாளராக திரு ரஞ்சித்குமார் பிரதம கணக்காளர் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு கலந்து கொண்டார்.

மேற்படி பயிற்சி நெறியில் முல்லைத்தீவு மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர்,அலுவலக நிர்வாகம் மற்றும் நிதி துறை அலுவலர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர் கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நமது சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் 'பார்த்தீனியம்' (Parthenium) களைகள...
05/06/2026

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நமது சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் 'பார்த்தீனியம்' (Parthenium) களைகளை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம்(05/05/2026) ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விவசாய நிலங்களுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் பார்த்தீனியம் தாவரங்களை ஒழிப்பதையும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில் விவசாயத் திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் எனப் பலதரப்பினரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர். அனைவரினதும் கூட்டு முயற்சியால் இந்தச் சுற்றுச்சூழல் தூய்மையாக்கல் பணி வெற்றிகரமாக நிறைவுற்றது.

22/05/2026

இன்றைய தேனீக்கள் தினத்தின் முக்கிய நிகழ்வுகள்
Highlights of today

உலக தேனிக்கள் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற தேனீக்கள் விழாவின் பதிவுகள்
22/05/2026

உலக தேனிக்கள் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற தேனீக்கள் விழாவின் பதிவுகள்

உலக தேனீக்கள்  தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் விவசாய போதனாசிரியர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் ...
22/05/2026

உலக தேனீக்கள் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் விவசாய போதனாசிரியர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் இன்று(22.05.2026) விவசாய போதனாசிரியர் திரு.க.ஜெனோஜன் ஏற்பாட்டில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.சி.கிருபவதனி தலைமையில் விவசாயி சு.குகதாசன் இல்லத்தில் சிறப்புற இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.சு.சிவஸ்ரீ கலந்து சிறப்பித்தார் அவருடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.த.ராஜகோபு, மேலதிக மாகாண விவசாய பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயகாந்தன் கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர்- ச.சந்திரகுமார்
அவர்களும் கலந்து சிறப்பித்தனர் கொளரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர் துணுக்காய் திரு.இ.ரமேஸ், மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் திருமதி.தி.நிகேந்தினி, பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் முல்லைத்தீவு திருமதி.ஜொ.மஞ்சுளா மற்றும் கால்நடை வைத்தியர்கள் துணுக்காய் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் - மாந்தை கிழக்கு, முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள், கிளிநொச்சி பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள். மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுநிகழ்வை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விவசாய அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில் உலக தேனீக்கள் தினமானது உலகளாவிய ரீதியில் தேனீக்களை பாதுகாக்கும் முகமாக மே மாதம் 20 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகவும் அதேபோல் நாங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விமர்சையாக தேனீக்கள் தினத்தினை கொண்டாடி வருகின்றோம் அந்த வகையில் தேனீக்கள் போல் பல்வேறு வகையான பறவைகள் உயிரினங்கள் அழிந்து வருகின்றன அழிவடைந்து வருகின்றன அவற்றினையும் இளைஞர் சமுதாயம் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது அதேபோல் தேனி வளர்ப்பினை வர்த்தக ரீதியாக மேற்கொள்வதற்கு என்று விவசாய திணைக்களம் உந்து சக்தியாக இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொண்டார்
மேலும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற இந்த தேனீக்கள் நாளானது மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது இந்த நிகழ்வில் பல்வேறு வகையான அறிவினை விவசாயிகள் பெற்றுக் கொண்டு வருகின்றார்கள் இவ்வாறான தேனீ வளர்ப்பு நிகழ்வானது முல்லைதீவு மாவட்டமெங்கும் விவசாயி திணைக்களத்தின் அனுசரணையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதற்கு தாமும் தொடர்ந்து பக்கபலமாக இருப்பதாகவும் தேனீ வளர்ப்பு தொடர்பாக இளைஞர்கள் பல்வேறு வகையான முயற்சிகளை முன்னெடுத்து தேனி வளர்ப்பாளர்கள் எல்லோரும் ஒன்று இணைந்து மிகப்பெரிய ஒரு தேன் பொருளாதரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்தார் தேனீக்கள் தின நிகழ்வில் இணைந்து கொண்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் விவசாயிகளும் செய்முறை ரீதியான அறிவினையும் அனுபவத்தினையும் பெற்றுக் கொண்டனர்

21/05/2026

உலக தேனிக்கள் தினம் 2026
இடம் - ஆலங்குளம் துணுக்காய்
நேரம் - 8.30 முற்பகல்
காலம் - 21/05/2026

தேனீக்கள் தினம் 2026முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேசத்தில் இடம் - ஆலங்குளம் துணுக்காய் நேரம் -  8.30 முற்பகல் காலம்...
21/05/2026

தேனீக்கள் தினம் 2026
முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேசத்தில்
இடம் - ஆலங்குளம் துணுக்காய்
நேரம் - 8.30 முற்பகல்
காலம் - 21/05/2026(நாளை)
அனைவரும் வருக

21/05/2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு விவசாய போதனாசிரியர் பிரிவில்

Address

Office Of The Deputy Director Of Agriculture
Mullaitivu
42000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Deputy Director of Agriculture Mullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share