Divisional Secretariat Manthai East

Divisional Secretariat Manthai East மகிழ்ச்சியான மக்களுடன் ஒரு அழகான பிரதேசத்தை உருவாக்குதல்

07/08/2026
📢 பிரதேச செயலாளருக்கு (DS) தெரிவிக்கவும் – மாந்தை கிழக்குமாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் சேவைகள் தொடர்பான உங்கள் தேவைக...
28/07/2026

📢 பிரதேச செயலாளருக்கு (DS) தெரிவிக்கவும் – மாந்தை கிழக்கு

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் சேவைகள் தொடர்பான உங்கள் தேவைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் அவசர பிரச்சினைகளை இப்போது எளிதாக எங்களிடம் தெரிவிக்கலாம்.

📱 படத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, உங்கள் கருத்துகள் மற்றும் தேவைகளைப் பதிவு செய்யுங்கள்.
இதன் மூலம்:

✅ உங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம்
✅ புதிய யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம்
✅ சிறந்த சேவைகளைப் பெற உதவலாம்
✅ பொதுப் பிரச்சினைகளை அறியத்தரலாம்
✅ தேவையான சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம்
✅ பிரதேச செயலாளருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்

⏱️ விரைவான பதில்
🛡️ வெளிப்படையான மற்றும் பொறுப்பான சேவை
👥 அனைவருக்கும் சமமான சேவை
🌐 டிஜிட்டல் முறையில் எளிதான தொடர்பு
“மக்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து, சிறந்த பொதுச் சேவையை வழங்குவோம்.”
📍 பிரதேச செயலகம் – மாந்தை கிழக்கு
#மாந்தைகிழக்கு #பிரதேசசெயலகம் ்கு_தெரிவிக்கவும் #பொதுமக்கள்சேவை #டிஜிட்டல்சேவை

தேசிய நிகழ்ச்சித்திட்டம் – “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீ லங்கா” தேசிய நேர்மை வாரம் – 2026
27/07/2026

தேசிய நிகழ்ச்சித்திட்டம் – “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீ லங்கா” தேசிய நேர்மை வாரம் – 2026

45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவை முன்னிட்டு 08 தேசிய போட்டித் தொடர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன...!25 மாவட்டங்க...
22/07/2026

45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவை முன்னிட்டு 08 தேசிய போட்டித் தொடர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன...!
25 மாவட்டங்களுக்கு 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் மற்றும் ஒரு தேசிய விருதுவிழா...!
National Youth Services Council-NYSC
இலங்கையின் இளைஞர்களிடம் உள்ள கலை, இலக்கிய, படைப்பாற்றல் மற்றும் புதுமைத்திறன்களை தேசிய மட்டத்தில் அடையாளம் கண்டு கௌரவிப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டிற்கான போட்டிகளில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள திறமையான இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெறுவதற்கான சிறப்பான வாய்ப்பாக இது அமைகிறது. இப்போட்டிகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பங்கேற்கலாம்.
இம்முறை போட்டித் தொடர்களில் பின்வரும் பிரிவுகள் இடம்பெறுகின்றன:
"Melody" – இசைப் போட்டி
"Steps" – நடனப் போட்டி
"Young Voices" – பேச்சு மற்றும் அறிவிப்பாளர் (Anchoring/Presentation) போட்டி
"NovaMind" – செயற்கை நுண்ணறிவு (AI) படைப்புப் போட்டி
"Inkspire" – இலக்கியப் போட்டி
"Shutter Stories" – புகைப்படப் போட்டி
"Dream Canvas" – ஓவியப் போட்டி
"Beyond Limits" – மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான சிறப்பு போட்டி
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் 2026 ஜூலை 30 ஆம் திகதிக்குள் nysc.lk/youthawards இணையதளத்தில் நுழைந்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பதிவு நிறைவடைந்த பின்னர் கிடைக்கும் பதிவு உறுதிப்படுத்தல் படிவத்தை போட்டி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய போட்டிப் பிரிவுகளுக்கான படைப்புகள், அந்தப் பதிவு படிவத்துடன் சேர்த்து 2026 செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மகரகம தலைமை அலுவலகத்தின் கலைத்திறன் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.
போட்டி கால அட்டவணை
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் – 2026 ஜூன் 20 முதல் ஜூலை 30 வரை
பிராந்திய மட்டப் போட்டிகள் – 2026 ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 30 வரை
மாவட்ட மட்டப் போட்டிகள் – 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 30 வரை
படைப்புகள் சமர்ப்பிக்கும் இறுதி நாள் – 2026 செப்டம்பர் 10
தேசிய மட்டப் போட்டிகள் – 2026 அக்டோபர் 01 முதல் நவம்பர் 30 வரை
தேசிய மட்டத்தில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு 45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவில் தேசிய விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டைய தேசிய இளைஞர் விருதுவிழாவில் பல முக்கிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி, முதன்முறையாக 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மேலும், பிராந்திய, மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்காக திறமையாளர் குழு (Talent Pool) அடிப்படையிலான பயிற்சி நிகழ்ச்சிகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும் தகவல்களுக்கும்
ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும்:

🌐 nysc.lk/youthawards
மேலதிக தகவல்களுக்கு
0771099673

எமது பிரதேச செயலகத்தால் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கான இணையதள முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த முறைமை...
24/06/2026

எமது பிரதேச செயலகத்தால் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கான இணையதள முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த முறைமை ஊடாக பொதுமக்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வருகை தராமல் தமது கை தொலைபேசியை பயன்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்வதோடு குறித்த முறைப்பாடு தொடர்பான முன்னேற்றங்களையும் குறுஞ்செய்தி ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

பின்வரும் இணைப்பை பயன்படுத்தி தமது முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ள முடியும்.

https://eapps.manthaieast.ds.gov.lk/complaint_system/public/login.php

கடந்த 04.06.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு இரண்டாம் காலாண்டுக்கான பிரதேச விவசாயக் குழுக்கூட்டம் மற்றும் சுற...
18/06/2026

கடந்த 04.06.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு இரண்டாம் காலாண்டுக்கான பிரதேச விவசாயக் குழுக்கூட்டம் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டம் என்பன பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த குறித்த கூட்டத்திற்கு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்,நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழிநுட்ப அலுவலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக்குழுக் கூட்டம் மற்றும் போதை ஒழிப்பு குழு கூட்டம் ஆகிய ன பிரதேச செயலக மாநாடு மண்...
15/06/2026

பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக்குழுக் கூட்டம் மற்றும் போதை ஒழிப்பு குழு கூட்டம் ஆகிய ன பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் கடந்த 10.06.2026 (புதன்) அன்று பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்திற்கு சிறுவர் பெண்கள் மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான ஏனைய திணைக்களங்களை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

05.06.2026 வெள்ளிக்கிழமை உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு எமது மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தில் சிரமதான நிகழ்வும் ம...
08/06/2026

05.06.2026 வெள்ளிக்கிழமை உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு எமது மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தில் சிரமதான நிகழ்வும் மர நடுகை நிகழ்வும் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கணக்கார்,நிர்வாக உத்தியோகத்தர்,நிர்வாக கிராம அலுவலர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

வன்னிவிளாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா உற்சவம் – தாகசாந்தி சேவை-------------------------------------------------...
05/06/2026

வன்னிவிளாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா உற்சவம் – தாகசாந்தி சேவை
-----------------------------------------------------------------------------------
வன்னிவிளாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா உற்சவம் அண்மையில் பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு, வருகை தந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இச்சேவையின் மூலம் மகா உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதில் ஊழியர் நலன்புரி சங்கம் தனது பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மற்றும் இச்சேவைக்கு பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

#வன்னிவிளாங்குளம்_ஸ்ரீமுத்துமாரியம்மன்_ஆலயம் #மகாஉற்சவம் #தாகசாந்திநிலையம் #மாந்தைகிழக்கு_பிரதேசசெயலகம் #ஊழியர்நலன்புரிசங்கம் #சமூகசேவை

 #வளமான நாடு அழகான வாழ்க்கை # #சமூக சக்தி 2026 # #ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டம்  #இலங்கையில் பல்முக வறுமையை ஒ...
04/06/2026

#வளமான நாடு அழகான வாழ்க்கை #
#சமூக சக்தி 2026 #
#ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டம் #

இலங்கையில் பல்முக வறுமையை ஒழிப்பதற்காக மக்களின் வரி பணமான ரூபாய் 25,000 மில்லியன் செலவில் கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்றன. இந்த திட்டம் 02.06 2026 அன்று நாட்டின் ஆயிரம் கிராமங்களில் தொடங்கப்பட்டது.

அந்தவகையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 19 வேலைத்திட்டங்கள் 2026 இல் மேற்கொள்ளப்படவுள்ளன.

அவற்றுள் செல்வபுரம் நெற்தளம் விரிவுபடுத்தல், விநாயகபுரம் நெற்தளம் விரிவுபடுத்தல் மற்றும் புணரமைத்தல் bettyபோன்ற வேலைத்திட்டங்களிற்கான அங்குரார்பன நிகழ்வு 02.06.2026 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் செல்லத்தம்பி திலகநாதன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தருந்தார்.இந் நிகழ்வின் ஏற்பாட்டாள மாந்தை கிழக்கு பிரதேச செயலக்கத்தின் பிரதேச செயலாளர் ம. சர்மிலி, பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சி சார் பிரதேச சபை உறுப்பினர்கள், பிராஜா சக்தி சமூக அபிவிருத்தி குழு சபை தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர்,கமக்கார அமைப்பு தலைவர் செயலாளர், WRDS, RDS அமைப்பு, மற்றும் ஏனைய சமூக மட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Address

Pandiyankulam
Naddankandal

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212283470

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Manthai East posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Manthai East:

Shortcuts

Share