KM/STR/AS-SIRAJ MAHA VIDYALAYA - NATIONAL SCHOOL

  • Home
  • KM/STR/AS-SIRAJ MAHA VIDYALAYA - NATIONAL SCHOOL

KM/STR/AS-SIRAJ MAHA VIDYALAYA - NATIONAL SCHOOL Our school was upgraded to a national school on 22.March.2021. The school has grades 1-13. Moreove

10/04/2026
பாடசாலையின் வரலாற்று சாதனை.இதுவரை பாடசாலையின் வரலாற்றில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களில் அதிகளவான மாணவர்கள் இம்...
01/04/2026

பாடசாலையின் வரலாற்று சாதனை.

இதுவரை பாடசாலையின் வரலாற்றில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களில் அதிகளவான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர். அத்தோடு அதிகளவான மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.இதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலையின் அதிபர், முன்னாள் அதிபர்,பிரதி அதிபர் மற்றும் பகுதி தலைவர்,கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

01/04/2026

இதுவரை கிடைத்த தகவலின் பிரகாரம் பாடசாலையின் வரலாற்று சாதனை.
இதுவரை பாடசாலையின் வரலாற்றில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களில் அதிகளவான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
Applied - 26
Sat- 23
University - 12
3A- 3
95% pass

(தகவல் மாறலாம்)

19/10/2025

இம்முறை எமது பாடசாலையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின் மீள் திருத்தத்தின் பின்னர் வெளியான முடிவுகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் வெட்டுப்புளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

MFF.SUBHA -134
MAM. ARHAM-132

இதற்கு உறுதுணையாக இருந்து கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மற்றும் இதற்கு வழிகாட்டியாக இருந்த எமது பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் எமது பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

12/10/2025
12/09/2025

இம்முறை நடைபெற்று முடிந்த நாவிதன் வெளி கோட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் எமது பாடசாலை அதிகளவான வெற்றிகளை பெற்றுள்ளது.

தரம் - 3 ஆண்கள் முதலாமிடம்
தரம் - 3 பெண்கள் இரண்டாமிடம்
தரம் - 4 ஆண்கள் முதலாமிடம்
தரம் - 5 ஆண்கள் முதலாமிடம்
தரம் - 5 பெண்கள் முதலாமிடம்

போன்ற வெற்றிகளை எமது பாடசாலை பெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த சகல ஆசிரியர்களுக்கும் மற்றும் இதற்கு வழிகாட்டியாக இருந்த எமது பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இம்முறை எமது பாடசாலையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவர்களையும். கௌரவிக்கும் நிகழ்வு எமது பாடசாலை...
04/09/2025

இம்முறை எமது பாடசாலையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவர்களையும். கௌரவிக்கும் நிகழ்வு எமது பாடசாலையின் அதிபர் MMM.AMEERUL HAQ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சித்தியடைந்த மாணவர்களின் விவரம்

AS.SADHAF -152 புள்ளிகள்
MNF.RIJA. -150 புள்ளிகள்
MSF.SADHEETHA BANU - 149 புள்ளிகள்
SF.RUKAIYA. -145 புள்ளிகள்
MFS.FATHIN -144 புள்ளிகள்
MH.SAFIYA -135 புள்ளிகள்

மூன்று மாணவர்கள்
MFF.SUBHA -131
MAM. ARHAM-131
RF.ILMA -130 புள்ளிகளை பெற்றுள்ளனர்

இதற்கு உறுதுணையாக இருந்து கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மற்றும் இதற்கு வழிகாட்டியாக இருந்த எமது பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

06/08/2025

எமது பாடசாலையில் சுமார் மூன்று வருடங்களாக காணப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக எமது பாடசாலையின் SDEC மற்றும்,பிரதேச சபை உறுப்பினர்களான நளீர்,சௌதியா,அதிபர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக எமது சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளரின் உதவியோடு ஆங்கிலம் மற்றும் கணிதம், primary போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆசிரியர்களைப் பெற்றுத் தந்த எமது சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

அது மட்டுமில்லாது எமது பிரதேச சபை உறுப்பினரான நளீர்அவர்கள் சம்மாந்துறை நாவிதன் வெளிஊடாக ஒரு பொது போக்குவரத்து வசதியினையும் ஏற்படுத்தி தருவதாக எமது வலயக்கல்வி பணிப்பாளரி டம் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த பொது போக்குவரத்து ஏற்படுத்தித் தரும் பட்சத்தில் எமது பாடசாலையில் மட்டுமல்லாது நாவதின் வெளியில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் எனவும் வலயக்கல்வி பணிப்பாளர் இதன் மூலம் உறுதி அளித்துள்ளார் இதற்கு உறுதுணையாக இருந்த எமது பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் நளீர் அவர்களுக்கும் சௌதியா அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சாளம்பைக்கேணி அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று...
11/07/2025

இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சாளம்பைக்கேணி அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் இம்மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இரவு பகல் பாராது இதற்காக உழைத்த அதிபர் பிரதி அதிபர்கள் பகுதி தலைவர்கள் தரம் ஒன்று முதல் தரம் 11 வரை இம்மானவர்களுக்கு கற்பித்த அனைத்து ஆசிரிய ஆசிரியர்கள் இம்மானவர்களின் பெற்றார்கள் பாடசாலை நலன் விரும்பிகள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றோம்.

சென்ற ஆண்டை விட இவ் வருடம் மாணவர் அடைவு 11% அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக கடந்த வருடம் சித்தி அடைவு வீதம் 64 % இருந்தது இந்த வருடம் அது 75 % அதிகரித்துள்ளது.

சம்மாந்துறை வலைய மட்ட ஆங்கில மொழித்தின போட்டியில் வெற்றி பெற்று இம்முறை எமது பாடசாலை மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் முதன் ...
07/07/2025

சம்மாந்துறை வலைய மட்ட ஆங்கில மொழித்தின போட்டியில் வெற்றி பெற்று இம்முறை எமது பாடசாலை மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக அதிகமானவர்கள் வெற்றிகளைப் பெற்று மாவட்டமட்டத்தித்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். அவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு எமது பாடசாலையின் அதிபர் அவர்களின் தலைமையில் இன்று எமது பாடசாலை காலை ஆராதனையில் இடம்பெற்றது.

Address

Near Km/Str/As-Siraj Maha Vidyalaya/National School, 12th Colony, 1st Division, Chalambaikkerny, 03 Central Camp Road

32050

Opening Hours

Monday 06:00 - 18:00
Tuesday 06:00 - 18:00
Wednesday 06:00 - 18:00
Thursday 06:00 - 18:00
Friday 06:00 - 18:00
Saturday 06:00 - 18:00
Sunday 06:00 - 18:00

Telephone

+94713566485

Alerts

Be the first to know and let us send you an email when KM/STR/AS-SIRAJ MAHA VIDYALAYA - NATIONAL SCHOOL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KM/STR/AS-SIRAJ MAHA VIDYALAYA - NATIONAL SCHOOL:

  • Want your organization to be the top-listed Government Service?

Share