Dawwath Thabliq Of World Wide

Dawwath Thabliq Of  World Wide Dhawwa & Breaking News

26/05/2017

10/10/2016

true news never hide

06/05/2016

Help in need

08/02/2016

Aadai aniyum murai....

Tongi (Bangladesh) தப்லீக் இஜ்திமா 2016.உலகில் வருடா வருடம் அதிகளவு முஸ்லிம்கள்(சுமார் ஐம்பது லட்சத்துக்கு அதிகமான மக்கள...
08/01/2016

Tongi (Bangladesh) தப்லீக் இஜ்திமா 2016.

உலகில் வருடா வருடம் அதிகளவு முஸ்லிம்கள்(சுமார் ஐம்பது லட்சத்துக்கு அதிகமான மக்கள் ) ஒன்று சேரக் கூடிய பங்களாதேசில் வருடம் தோறும் நடைபெற்று வரும் தப்லீக் இஜ்திமா
பங்களாதேஸ் தொங்கி எனும் இடத்தில்
ஆரம்பமகி உள்ளது

Tongi ( Bangladesh ) Tableegi ijtema 2016 :

With the Grace of ALLAH Tongi Ijtema is starting from 8th January and dua will be on 10th January.
second part will starts from 15th January
This is the Largest gathering of Muslim, Around 80 lakh brothers will attend the first part and 60 lakh brothers will attend the second part of Ijtema..
May ALLAH Accept this ijtema and spread hidaya and Peace ALL over the Bangladesh and world.

F (Space) Shooranews Send To 40404

https://m.facebook.com/Shoora-News-Sri-Lanka-3534528114688…/

24/12/2015

Dawwath Thableeq of World Wide

பைபிலில் " முஹம்மத் (ஸல்) அவர்கள்...!₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹"₹₹₹கிருஸ்துவர்கள் அல்குர்ஆனை இறைவேதமாக நம்புவதில்லை..! அவர்கள...
09/12/2015

பைபிலில் " முஹம்மத் (ஸல்) அவர்கள்...!
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹"₹₹₹

கிருஸ்துவர்கள் அல்குர்ஆனை இறைவேதமாக நம்புவதில்லை..! அவர்கள் மறுத்தாலும், வெறுத்தாலும் அல்குர்ஆன்
இறுதி வேதமே..! அதைப் போல் ஒரு வசனத்தைக் கூட யாராலும் கொண்டுவர முடியாது..! கிருஸ்துவர்கள் அல்குர்ஆனை நம்பாவிட்டாலும் பைபிலை இறைவேதம் (?) என்றே நம்புகிறார்கள்..! அவர்கள் நம்பும் இறைவேதத்திலும் இறுதித் தூதர் முஹம்மத் ( ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளார்கள்..! இருந்தாலும் கிருஸ்த்துவர்கள் மறுக்கும் கொள்கையோடு அறிவின்றி இதையும் திசை திருப்பவே முனைகிறார்கள்..!

இயேசு இறைத்தூதர், வேதம் வழங்கப்பட்டவர், மஸீஹ், இறைவனின் வார்த்தை, தகப்பன் துணையின்றி அற்புதமாகப் பிறந்தவர்..அப்படியிருந்தும் " இயேசுவின் சொந்த இனத்தவர்களே இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று பைபில் சொல்கிறது .இயேசுவின் சொந்த இனம் ( இஸ்ரவேலர்கள்) செய்த அதே தவறைத்தான் கிருஸ்துவர்கள் செய்கிறார்கள்..!

தெளிவான இறுதி வேதம் அருளப்பட்டும் அதை அறிவின்றியே புறக்கணிக்கிறார்கள். இயேசுவின் மார்க்கத்தை விட்டும் விலகி, ஒரே கர்த்தருக்கு இணை வைத்து இறைமையைக் கூறு போட்டுப் பார்க்கிறார்கள்..!
இன்று உலகில் அனைத்து, இறைத்தூதர்களும் போதித்த ஏகத்துவ ( இறைவன் ஒருவனே என்ற) மார்க்கமாக திகழ்வது இஸ்லாம் மட்டுமே தான்..!

கிருஸ்துவர்கள் ஒரு காலமுமே பைபில் என்ன சொல்ல வருகிறது என்று பார்க்கமாட்டார்கள்..! பைபிலுக்கு இப்படித் தான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதிலேயே தான் குறியா இருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு வெறி என்றே சொல்லவேண்டும்.!.ஏனெனில் உண்மையிலேயே பைபிலை சிந்திப்பவன் இயேசுவையும், இயேசு போதித்த மார்க்கத்தையும் கண்டு கொள்வான்..! ஆனால் கிருஸ்துவர்களின் இந்தப் போலியான நம்பிக்கைகள் பைபிலையோ அல்லது குர்ஆனையோ சிந்திக்க இடம் தராது. ! இதனால் தான் அல்லாஹ்வும் " கண்ணிருந்தும் குருடர்கள்..காதிருந்தும் செவிடர்கள்" என்று சொல்லிக் காட்டுகிறான்..!

இப்படிப்பட்ட குருடர்கள், இயேசுவை கடவுளாக்கினால், கடவுளின் மகனாக நம்பினால் கர்த்தரின் அன்பும், இயேசுவின் இரட்சிப்பும் கிடைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள்..!
ஆனால் எந்த இரட்சிப்புமே இவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை..மாறாக கர்த்தரின் சாபத்தைத் தவிர..! இவர்களது வழிகேடு எப்படிப் பட்டது என்பதை அறிய வேண்டும் என்றால், இவர்கள் மரணத்தை சுகிக்க வேண்டும்.! அது ஒன்றுதான் எதைப்பற்றி அறிவின்றி தர்க்கிக்கிறார்களோ, அதைப் புரிய வைக்கும். !
சரி, தலைப்புக்கு வருவோம்

MUHAMMED (SAW) IN THE BIBLE
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

"உன்னைப்போல் ஓரு தீர்க்கதரிசியை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவர் அவர்களுக்குச் சொல்வார்"
(இணைச் சட்டம் 18 :18)

மேற்படி வசனம் பழைய
ஏற்பாட்டில் இறைவன் மோசேவுக்கு ( மூஸா அலை) சொன்னது..! இந்த முன்னறிவிப்பை கிருஸ்துவர்கள் இயேசு மீது அறிவின்றிப் போட்டுக் கொண்டு, இறைவனின் முன்னறிப்பை நிராகரிக்கிறார்கள் .!

இது எந்த வகையிலுமே இயேசுவைக் குறித்து சொல்லப்படவேயில்லை..! இயேசு மோசே போல் இல்லை....!
மோசே கடவுளும் இல்லை..! கடவுளின் மகனும் இல்லை..! முஹம்மத் நபி எப்படி இறைவனின் தீர்க்கதரிசியாக இருந்தார்களோ அதே போல் ஒரு கண்ணியமான தீர்க்கதரிசியாகவே மோசே இருந்தார்..!

வேண்டுமென்றால் ஒரு வாதத்திற்காக இரண்டு விடயங்களில் இயேசு மோசே போல் (LIKE UNTO THEE) என்று வைத்துக்கொள்ளலாம்
1) மோசேவும், இயேசுவும் இறைத்தூதர்கள்..!
2) இருவருமே யூதர்கள்..!
இது தவிர மற்ற அனைத்து ஒற்றுமைகளும் முஹம்மத் நபிக்குத் தான் பொருந்தும்..!

இது இயேசுவைக் குறித்து சொல்லப்பட்ட வசனம் என்றால் கர்த்தர் முழு உலகையுமே குழப்பத்திற்கு உண்டாக்கி மக்களை வழிகெடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இங்கே கர்த்தர் " அவர்களின் சகோதரர்களினில் இருந்து வெளியாக்குவேன்" என்று குறிப்பிட்டே கூறியுள்ளார்!

ஆப்ரஹாம் ( இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு மனைவிகள்
ஒன்று சாரா மற்றது ஹாஜரா. சாராவுக்குப் பிறந்தவர் ISAAC (PBUH) இவரின் வழித்தோன்றலே இயேசு. ஹாஜராவிற்கு பிறந்தவர் ISMAIL (PBUH) இவர்களின் வழித்தோன்றலே முஹம்மத் ( ஸல்) அவர்கள். (அதாவது ISAAC இன் சகோதர வம்சம்) இது இயேசுவிற்கு சொல்லப்பட்டதென்றால் எதற்கு கர்த்தர் " அவர்கள் சகோதரர்களினின்று" என்றொரு வார்த்தையை பாவிக்க வேண்டும்..

கிருஸ்தவர்கள் வம்சாவழியிலும் குழம்பியே போயுள்ளனர். அவர்களிடம் இருக்கும் பைபிலின் வம்சாவழி பச்சைப் பிழையானது என்றே வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதுவும் எந்த விஞ்ஞானியுமே பைபிலின் வம்சாவழி சரி என்று சொன்னதுமில்லை ..!.நம்பியதுமில்லை. !
உதாரணமாக முதல் மனிதன் அதாம் (அலை) யில் இருந்து ஆப்ரஹாம் ( இப்ராஹீம் அலை) வரைக்கும் மொத்தம் 20 தலைமுறைகள் தான் ஆகி இருக்கின்றன என்ற பைபில் வரலாற்றை ஒரு விஞ்ஞானி கூட ஒத்துக் கொண்டது கிடையாது..! சொல்லப்போனால் ஜெரூஸலம் பைபில் பள்ளியில் உள்ள போதனாசிரியர்கள் கூட இதை நம்பவில்லை..! இதனால் ஆய்வாளர்கள் பைபிலை சந்தேகப்படும் கட்டாய சூழ்நிலையிலேயே உள்ளனர்..! தலைமுறை பற்றி நான்கு சுவிஷேசக்காரர்களுமே கடும் முரண்பாட்டில் உள்ளனர் ( பார்க்க:- மத்தேயு; 1.27 லூக்கா 3:23-38) இவர்கள் இறைவேதம் என்று எண்களை வைத்து விளையாட்டு நடாத்தியுள்ளனர்..!

மேலும், மேற்படி உள்ள முன்னறிவிப்பை கர்த்தரை வைத்தே பாருங்கள்...!
இது இயேசுவைக் குறித்து சொல்லப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்..!

கிருஸ்துவர்கள் கர்த்தரை முக்காலமும் அறிந்தவர் என்று நம்புகிறார்களா ? அல்லது எதிர்கால ஞானம் கர்த்தருக்கு கிடையாது...அதனால்தான் கர்த்தர் இப்படியொரு முன்னறிவிப்பை சொல்லியுள்ளார் என்று நம்புகிறார்களா ?

1) எதிர்காலத்தில் இயேசு மோசே போல் அல்லாமல் தகப்பனின்றி பிறப்பார் என கர்த்தருக்கு தெரியும்.!
2) எதிர்காலத்தில் இயேசு இந்த பூமியில் அடக்கம் பண்ணப்பட மாட்டார் என்பதும் கர்த்தருக்குத் தெரியும்..!
3) எதிர்காலத்தில் இயேசு குடும்ப வாழ்க்கையில் அதாவது மணம் முடித்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட மாட்டார் என்றும் கர்த்தருக்கு அன்றே தெரியும்..!
4) எதிர்காலத்தில் இயேசு இயற்கை மரணம் எய்த மாட்டார் என்ற உண்மையும் கர்த்தருக்குத் தெரியும்..!
5) எதிர்காலத்தில் இயேசு தனது சொந்த இடத்தை விட்டு எங்குமே இடம்பெயர மாட்டார் என்ற விஷயமும் கர்த்தர் அறிந்தது தான்.!
6) எதிர்காலத்தில் இயேசுவை அவரது சொந்த இனத்தவர்களே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை (பைபில் இயேசுவை அவரது சொந்த ஜனங்களே ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறுகிறது) என்ற தூதுவத்துவமும் கர்த்தருக்கு முன்பே தெரியும்..!
7) இயேசுவை கடவுளாக வணங்குவார்கள்..அதனால் மோசே போல் தான் இயேசுவும் என்று உவமைப்படுத்துவது பொருந்தாத விஷயம் என்று அப்பவே கர்த்தருக்கு தோன்றியிருக்கணுமே!.இறைமையில் பங்கு உள்ளவராகவா மோசே இருந்தார் ?

ஆக, இவ்வளவெல்லாம் தெறிந்த கர்த்தர் "மோசே போல்" அல்லாத ஒருவரை அதாவது இயேசுவைக் குறித்து எதற்கு இவ்வளவு பெரியதோர் பொய்யை ( "உன்னைப் போல்" ஒரு தீர்க்கதரிசியை அவர்களுக்காக ஏற்படுத்தி என் வசனங்களை அவர் வாயினால் அருளுவேன்) என்று சொல்லணும் ?

மோசேவை கடவுளாகவும், கடவுளின் (இரத்த சம்பந்த) குமாரனாகவும் கிருஸ்துவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால் ஒரளவுக்காவது இயேசு, மோசே போல் ஆவார் என்று நம்பலாம் ஆனால் இதற்கும் அவர்கள் தயாரில்லை..!
மோசே போல் அல்லாத,
மேசே போல் பிறக்காத,
மோசே போல் வாழாத,
மோசே போல் இடம்பெயறாத,
மோசே போல் ஆட்சிபுரியாத,
மோசே போல் வெற்றி பெறாத,
மோசே போல் இயற்கை மரணம்
எய்தாத இயேசுவைக் குறித்தே தான் " உன்னைப் போல்" ஒரு தீர்க்கதரிசியை ( LIKE UNTO THEE) என்று கர்த்தர் முன்னறிவிப்பு செய்தார் என்றால்,
"கர்த்தர் ஹேஸ் நோ நொலேஜ் ஒப்f பிfவுஷர்- "எந்த வித எதிர்கால அறிவுமின்றி கர்த்தர் உளறியுள்ளார்" என்று தான் உககமே சொல்லணும்.!!!
ஆனால் நாம் அப்படி சொல்ல மாட்டோம்...ஏனென்றால் மகத்துவமிக்க இறைவன் சகல பொருட்கள் மீதும் ஆற்றல் உள்ளவன்..! ஞானம் நிறைந்தவன்..அனைத்தையும் முன்கூட்டியே அறிந்தவன்..! கடலிலும், தரையிலும் அவனுக்கு மறைவாக எதுவுமேயில்லை..! பேராற்றல் நிறைந்தவன்..எக்காலமும் அறிந்தவன்..! அவனது முன்னறிவிற்பு மக்களைக் குழப்பாது. அது மக்களுக்கு ஒரு அருளாகவே இருக்கும்..! அவன் தனது தீர்க்கதரிசனத்தை மோசே போல் சகல விதத்திலும் பொருத்தமான இறுதித் தூதர் முஹம்மத் ( ஸல்) அவர்களைக் வெளியாக்கி தனது வாக்கை உண்மைப் படுத்தி, அவர் வாயாலேயே, அவனது கட்டளைகளை சொல்லவைத்தான்.!
சொல்ல வைத்தது மட்டுமல்ல, தான் சொன்னதை அனுவளவும் மாறுபடாமல் அதைப் பாதுகாக்கவும் செய்தான்..!
( "நிச்சயமாக நாமே அல்குர்ஆனை இறக்கி அருள்புரிந்தோம். அதனை நாமே பாதுகாப்போம்-அல்குர்ஆன்)"

மோசே போல் இயேசுவல்ல..மோசே போல் இறுதித்தூதர் முஹம்மத் ( ஸல்) அவர்களே..!
யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை..! பைபிலும் " இயேசுவின் சொந்த ஜனங்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று கூறுகிறது..அதேபோல்தான் கிருஸ்துவர்களும் இறுதித்தூதை ஏற்காமல் இருக்கிறார்கள்..! இது கர்த்தரின் தவரோ, இயேசுவின் தவரோ அல்ல..! கிருஸ்துவ மிஷனரிகளின் தவறு..! பைபிலை தமக்கு வேண்டியவாறு கூட்டி, குறைத்து புதுப்புது பதங்களைத் திணித்து பவுலின் கொள்கைகளுக்கு ஏற்றமாறி ஆக்கிக்கொண்டார்கள்..! உண்மையான ஒரு கிருஸ்த்துவன் பவுலின் நிருபங்களை ஊன்றிப் படித்தால் எந்த அளவு இயேசுவின் மார்க்கம், இயேசுவின் போதனைகள் திசைமாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வான்..!

கர்த்தர் சொன்ன தீர்க்கதரிசனம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கே சகல விதத்திலும் பொருந்தும். ஏனெனில் மோசேவும், ( மூஸா அலை ) முஹம்மத் (ஸல்) அவர்களும்:-

1) தீர்க்கதரிகள
2) வேதம் அருளப்பட்ட இறைத்
தூதர்கள் (ரஸூல்மார்கள்.
3) இயற்கையாக தகப்பன் உறவால்
பிறந்தவர்கள்
4) நாட்டை விட்டு இடம்பெயர்தவர்
கள் ( Migrate)
5) இறைமையில் பங்கு கேற்காதவர்
கள் ( No claim divinity)
6) இதே மண்ணில் அடக்கம்
பண்ணப்பட்டவர்கள்
7) இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு
குழந்தை பெற்றவர்கள்..!
(Jesus has no wife)
8) ஆட்சிபுரிநதவர்கள்
9) ஒரு பெரிய சமூகத்தையே ஓரிறைக்கொள்கையால் வெற்றி பெற்றுக் காட்டியவர்கள்..! (கிருஸ்துவம் என்பது ஓரிறைக் கொள்கை என்றாலும், கடவுள் 3 பேராகவும், மூன்று பேரில் ஒருவராகவும் இருப்பதாக ஒரு மாயக் கொள்கையின் அடிப்படையில் பவுலால் நிருவப்பட்டு, இயேசுவின் வழிதவறி நிற்கிறது ! கர்த்தரும் கடவுள், இயேசுவும் கடவுள் என்றால் அது ஓரிறைக் கொள்கையில்லை..! கர்த்தருக்கு இணைவைக்கும் இரு கடவுள் கொள்கை..! ஆனால் மோசேவும், முஹம்மத் (ஸல்) அவர்களும் ஒரே கடவுளை வழிபட்டு அவனையே வணங்கும்படி போதித்தார்கள்..! இதுவும் மோசே போல் ஒரு தீர்க்கதரிசியாக முஹம்மத் (ஸல்) அவர்களே இருக்கிறார்கள் என்று தெளிவு படுத்துகிறது..!)
10) தாயும் தகப்பனும் உள்ளவர்கள்.!

"உன்னைப்போல் ஓரு தீர்க்கதரிசியை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவர் அவர்களுக்குச் சொல்வார். (இணைச் சட்டம் 18 :18 )

கிருஸ்துவர்கள் மறைத்தாலும், அறிவின்றி மறுத்தாலும்:-
"MUHAMMED (PBUH) IN THE BIBLE

13/11/2015
30/10/2015

Address

Deen Junction
Negombo

Telephone

+971553058521

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawwath Thabliq Of World Wide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dawwath Thabliq Of World Wide:

Share

Category