10/02/2026
வருட ஆரம்ப நினைவுகள்...
Km/Ak/Al - Azhar Vidyalayam - Oluvil
-------------------------------------------------
ஒலுவில் அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா - 2026
- எதிர்காலத்திற்கான முதற் படி
Oluvil - Media | 30 - 01 - 2026
ஒலுவில் அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தின் தரம் - 01 புதிய மாணவர்களின் வித்தியாரம்ப விழா 29.01.2026 ம் திகதி அதிபர் அஷ்ஷேய்க் U.K.அப்துர் ரஹீம் (நளிமி) அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளான தரம் - 01 மாணவர்களுக்கு மலர் தூவி மாலை அணுவித்து பேண்ட வாத்தியத்துடன் வீதி ஊர்வலமாக வரவேற்புடன் ஆரம்ப நிகழ்வில் பாடசாலைக்கான EPSI இணைப்பாளர் MI.சியாத்(ISA), அல் ஹம்றா மகா வித்தியாலய அதிபர் AL.அப்துல் ஜப்பார், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் MHM.அலிறஸா, பள்ளிவாசல் பேஷ் இமாம் MCM.ஜப்ரி(ஸஃதி), தொழிலதிபர் IL.பஷில், கலாபூஷணம் ஜலால்டீன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்வில் 'பேராசை பெரு நட்டம்' எனும் நாடகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பாராட்டையும் பெற்றது.