DINAL GROUP

DINAL GROUP " மக்கள் பொதுநல அமைப்பு"

" காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."

 #கதிர்காம பாத யாத்திரை செல்லும் பக்த அடியார்களுக்கு இன்றைய தினம் 2026.07.06 பொத்துவில்  #நாவலாறு பாலத்தின் அருகே இரவு உ...
06/07/2026

#கதிர்காம பாத யாத்திரை செல்லும் பக்த அடியார்களுக்கு இன்றைய தினம் 2026.07.06 பொத்துவில் #நாவலாறு பாலத்தின் அருகே இரவு உணவு எமது DINAL GROUP பொது நல அமைப்பினால்
வழங்கப்பட்டது.

" ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்"  (குறள்: 33)நாளைய தினம் 2026.07.07 ரொட்டை  #வீரையடி பிள்ளையார்...
06/07/2026

" ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்" (குறள்: 33)

நாளைய தினம் 2026.07.07 ரொட்டை #வீரையடி பிள்ளையார் ஆலய
சங்காபிஷேக பாற்குட பவனி நிகழ்வு நடைபெறவுள்ளது.
மற்றும் நாளைய தினம் அன்னதான நிகழ்வும் நடைபெற உள்ளதால், அதற்கு தேவையான அரிசி, இன்றைய தினம் 2026.07.06 DINAL GROUP
பொதுநல அமைப்பினால் குறித்த ஆலயத்தின் தலைவரின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

" கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னார்து கொல்லோ உலகு.."  (குறள்: 211)எமது   கடந்த 2026 .07.04 ஆம் திகதி பொத்துவில...
06/07/2026

" கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னார்து கொல்லோ உலகு.." (குறள்: 211)

எமது கடந்த 2026 .07.04 ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு #ஶ்ரீமுருகன் ஆலயத்தில் கதிர்காம கந்தனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு
இரவு உணவினை வழங்கி வைத்தோம்.

அன்றைய தினம் அன்னதானம் வழங்க
பொத்துவில் உல்லை பகுதியை சேர்ந்த #துரைசாமிகண்ணதாசன் ( உல்லை கண்ணன் ) எம்முடன் கை கோர்த்தார்.

அதுமட்டுமல்லாமல் 2026.07.06 ம் திகதி அதாவது இன்றைய நாள் பொத்துவில் #நாவலாறு பகுதியில் இளைப்பாறும்
பாத யாத்திரை அடியவர்களுக்கு இரவு உணவு வழங்க உள்ளோம்.
இதற்கும் உதவி கரம் நீட்டினார், நலன் விரும்பியான #துரைசாமிகண்ணதாசன்
அவர்கள்.

முதல் முறையாக எமது இற்கு
தனி மனிதனாக முன்வந்து உதவி செய்த
#துரைசாமிகண்ணதாசன் அவர்களுக்கும் a
அவரின் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருட்கடாட்சம் கிட்டட்டும் என உறுப்பினர்கள் என்ற வகையில்
அவருக்காக பிரார்த்தனை செய்கின்றோம்.

உங்களாலும் இயன்ற சிறிய அளவு உதவி என்றாலும் செய்ய முடியும். நலன்விரும்பிகள் யாராவது இருந்தால்
கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்...👇

#தொலைபேசி எண் :- 0775219993 ( தலைவர் )

2026.07.04 நேற்றைய தினம் பொத்துவில் குண்டுமடு  #ஶ்ரீமுருகன் ஆலய வளாகத்தில்கதிர்காம கந்தனை தரிசிக்க வந்த அடியவர்களுடன்,கோ...
05/07/2026

2026.07.04 நேற்றைய தினம் பொத்துவில் குண்டுமடு #ஶ்ரீமுருகன் ஆலய வளாகத்தில்
கதிர்காம கந்தனை தரிசிக்க வந்த அடியவர்களுடன்,கோவில் நிர்வாகிகள் மற்றும் DINAL GROUP அங்கத்தவர்களும்
சிறிய நேர்முக பேட்டி ஒன்றினை எடுத்தோம்.

அதன்போது அங்கு வந்திருந்த பாத யாத்திரை அடியவர்களின் தலைவர் #ஜெயாஐயா அவர்கள் எங்களோடு உரையாடினார். மற்றும் இந்த சந்திப்பில்
அடியவர்களோடு அடையவராய் வரும் #சுப்ரமணியம் எவ்வாறு அவர்களுடன் இந்த பாத யாத்திரைக்கு எங்கு எவ்வாறு இணைந்து கொண்டது என விளக்கியதோடு , இப்போது பேசும் பொருளாக இருக்கும் சுப்ரமணியை உதைத்ததன் காரணமாக சமூக வலைதளங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.அதன் விளைவாக இலங்கையை சேர்ந்த #அனோஜன் என்கிற இளைஞன்
சிறையில் அடைபட்டு கிடக்கிறார்.

எனவே அவருக்காகவும் அவரின் குடும்பத்திற்காகவும் பெருமனதுடன் அவரை விடுவிக்கும்படி மக்கள் சார்பாக நாங்களும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

" "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்!"

#பாதயாத்திரை #கதிர்காமம் #ஶ்ரீமுருகன்

2026.07.04 நேற்றைய தினம் பொத்துவில்  #ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில் கதிர்காமக்கந்தனை தரிசிக்க வந்த அடியவர்களுடன் DINAL GRO...
05/07/2026

2026.07.04 நேற்றைய தினம் பொத்துவில் #ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில்
கதிர்காமக்கந்தனை தரிசிக்க வந்த அடியவர்களுடன் DINAL GROUP குழு உறுப்பினர்கள் கலந்துரையாடியபோது....

" அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.. "  (குறள் 226)  யாழ்ப்பாண செல்வச்சன்னிதியிலிருந்து காட்டு...
05/07/2026

" அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.. " (குறள் 226)

யாழ்ப்பாண செல்வச்சன்னிதியிலிருந்து காட்டுவழி பாதையின் ஊடாக கதிர்காமம் செல்லும் அடியார்கள் 2026.07.04 நேற்றைய தினம் பொத்துவில் குண்டுமடு #ஶ்ரீமுருகன் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

அவர்களுக்கு இரவு உணவு DINAL GROUP பொதுநல அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. 🙏🙏 🕉️

#பாதயாத்திரை #கதிர்காமம் #பொத்துவில் #சுப்ரமணி #ஶ்ரீமுருகன்

04.07.2026  காட்டுவழி பாதையின் ஊடாக கதிர்காமம் செல்லும் பக்த அடியார்கள் இன்றைய தினம் பொத்துவில் ,குண்டுமடு  #ஶ்ரீமுருகன்...
04/07/2026

04.07.2026 காட்டுவழி பாதையின் ஊடாக கதிர்காமம் செல்லும் பக்த அடியார்கள் இன்றைய தினம் பொத்துவில் ,குண்டுமடு #ஶ்ரீமுருகன் ஆலயத்திற்கு காலை 8.00 மணிக்கு வந்தடைந்தனர்.

இவர்களோடு #சுப்ரமணி உம் வந்தடைந்து உள்ளார்.

மற்றும் இன்றைய தினம், அடியார்களுக்கு DINAL GROUP தரப்பில் இரவு நேர அன்னதான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
🙏🙏🙏

#பொத்துவில் #கதிர்காமம் #பாதயாத்திரை

2026.07.03 இன்றைய நாள் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்போடு ( பொத்துவில் ) DINAL GROUP தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும...
03/07/2026

2026.07.03 இன்றைய நாள் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்போடு ( பொத்துவில் ) DINAL GROUP தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து , தி/கோ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் சிரமதானப்பணியை
சிறப்பாக செய்து முடித்தோம்..

2026.07.02 நேற்றைய தினம் பொத்துவில் மகா போதிராஜராம விகாரையில் பொசன் தோரணை விழாவின் போது பூத்தட்டு ஏலப்போட்டியில் DINAL G...
03/07/2026

2026.07.02 நேற்றைய தினம் பொத்துவில் மகா போதிராஜராம விகாரையில் பொசன்
தோரணை விழாவின் போது பூத்தட்டு ஏலப்போட்டியில் DINAL GROUP இன் அதிஷ்டத்தினால் அந்த பூத்தட்டை தன்வசப்படுத்தி கொண்டது. ☸️🙏🙏☸️

#பொத்துவில் ☸️🙏

2026.06.30 இன்றைய தினம் இன்ஸ்பெக்டர் ஏத்தம் தையல் போதன நிலையத்தின் ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க 03 தையல் இயந்திரங்களை...
30/06/2026

2026.06.30 இன்றைய தினம் இன்ஸ்பெக்டர் ஏத்தம் தையல் போதன நிலையத்தின் ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க
03 தையல் இயந்திரங்களை பொருத்துவதற்கான செலவை ஏற்றதுடன்
தையல் நிலையத்திற்கு 03 மின்குமிழ்களையும் வழங்கி வைத்தோம்.

Address

Inspector Eatham, Thamarikulam , Pottuvil/10
Pottuvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when DINAL GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category