EEE Concept

EEE Concept Eduction,Economic Development & Enhancement of society ( EEE - Concept )

கல்வி , பொருளாதார அபிவிருத்தி & சமூக மேம்பாட்டு விடயங்கள்

அமெரிக்க நிலையத்தால் வழங்கப்படும் , 12 வார Business English Course.முற்றிலும் இலவசம்.◆ விண்ணப்பிக்க - https://bit.ly/EFP...
14/06/2022

அமெரிக்க நிலையத்தால் வழங்கப்படும் , 12 வார Business English Course.
முற்றிலும் இலவசம்.

◆ விண்ணப்பிக்க - https://bit.ly/EFP_02

.


https://www.facebook.com/grandmosquepx/photos/a.1676568775923274/3213010062279130/?type=3
17/12/2021

https://www.facebook.com/grandmosquepx/photos/a.1676568775923274/3213010062279130/?type=3

🚨கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் -
தொழில்துறை பயிற்சிக்கான பயிலுனர்களை ஆட்சேர்த்தல்

🟤பயிற்சி நெறி ஆரம்பம் : 2022.01.05 முதல்
🟤காலம் : 06 மாதப் பயிற்சி நெறி / 01 வருட பயிற்சி நெறி
🟤வயது எல்லை : பாடசாலை இடைவிலகியதிலிருந து 16 தொடக்கம் 45 வரை

🟤பயிற்சி நெறியைத் தொடரும் காலப்பகுதியில் : நாளொன்றுக்கு ரூபா. 400/= என்ற அடிப்படையில், மாதமொன்றின் 20 நாட்களுக்கு வழங்கப்படும்.

🟤பயிற்சி நெறிகள்:
➖ தச்சுத்தொழில் பயிற்சி – 06 மாதம்
➖ தும்பு கைத்தொழில் பயிற்சி - 06 மாதம்
➖ களிமண் கைத்தொழில் பயிற்சி - 01 வருடம்
➖ மென் பொறியியல் (லைட் இன்ஜினியரிங்) பயிற்சி நெறி – 01 வருடம்.

🟤 பயிற்சி நெறிக்கான நிலையங்கள்: இணைப்பில் பார்க்கவும்

🟤 பயிற்சி நெறியை திறம்பட பூர்த்தி செய்வோரை, திணைக்களத்திற்கு சொந்தமான நிலையங்களில் உற்பத்தித் துறையில் ஈடுபடுத்தி, வருமானம் ஈட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் அல்லது தொழில்முனைவோர் என்ற ரீதியில் சுயதொழில்களை ஆரம்பிக்கவும் தகுதி பெறுவர்.

🔴 விண்ணப்பங்களை புத்தளம் பிரதேச செயலகத்தில் (வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவில்) இம்மாதம் (டிசம்பர்) 2021 , 27க்கு முன்னர் சமர்ப்பிக்கவும்.

🔴 மேலதிக தகவல்களுக்கு : 0760505928 / 0718256893 0750779464
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
Recruitment of Apprentices for Industrial Training through Department of Industrial Development (NWP)

🟤 Training course starts : since 05th January 2022

🟤 Duration of the Training: 06 Month / 01 Year

🟤 Age limit: after school above 16 up to 45

🟤 Allowance: Per day – LKR 400/= X 20 classes X 06 months or 01 year

🟤 Training Course Details:

➖ Carpentry Training – 06 month
➖ Coir Industry Training – 06 month
➖ Pottery Industry Training – 01 year
➖ Light Engineering Training – 01 year

🟤 Training places: See the attachment.

🟤 Those who may complete the training successfully, may achieve opportunities to get employment at the Industrial Development Board’s Centers or can develop in the field of entrepreneurship.
--------------- ---------------
🔴 Please submit the applications at Field Officers Unit of Puttalam Divisional Secretariat -

On or before 27th December 2021.

🔴 For further detail: 0760505928 /0718256893 / 0750779464🟤

🔹 புலமைப்பரிசில் நிதி 👇👇★ இலங்கை பைத்துல்மால் நிதியம் வழங்கும் , உயர்த்தரம் கற்கும் மாணவர்களுக்கான நிதி உதவி.-----🔹 விண்...
03/11/2021

🔹 புலமைப்பரிசில் நிதி 👇👇

★ இலங்கை பைத்துல்மால் நிதியம் வழங்கும் , உயர்த்தரம் கற்கும் மாணவர்களுக்கான நிதி உதவி.
-----

🔹 விண்ணப்பிக்க தகுதியானோர் 👇👇

★ ஸகாத் பெற தகுதியான , வறிய முஸ்லிம் மாணவர்களாயிருத்தல் வேண்டும்.

★ 2020 ம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதி 4 A , 3 B , 2 C , 1 S புள்ளிகளை பெற்ற மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
-----

🔹 விண்ணப்பம் பெறும் முறை 👇👇

★ நவம்பர் 25 ம் திகதிக்கு முன்பு , நேரடியாகவோ , தபால் மூலமோ , மின்னஞ்சல் மூலமோ பெறலாம்.
(விபரம் கீழுள்ள படத்திலே உண்டு).
-----

🔹 விண்ணப்ப இறுதி திகதி 👇👇

★ 25 / 12 / 2021.
-----

🔹 மின்னஞ்சல் முகவரி 👇👇

[email protected]
-----

🔹 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
👇👇

★ இலங்கை பைத்துல்மால் நிதியம்.
#44 A , ஹேக் வீதி ,
பம்லப்பிட்டிய ,
கொழும்பு - 04.
-----

🔹 மேலதிக விபரங்களை கீழுள்ள படத்திலே அவதானிககலாம்.

தகவல் மூலாதாரம் - தினகரன் பத்திரிகை.
-----

EEE Concept



■ தகவல் தொழில்நுட்பத்துறை புலமைப்பரிசில் திட்டம் (IT).  💻⌨️இலங்கையின் புகழ்ப்பெற்ற தனியார் கல்வி நிறுவனமான ESOFT நிறுவனம...
19/09/2021

■ தகவல் தொழில்நுட்பத்துறை புலமைப்பரிசில் திட்டம் (IT). 💻⌨️

இலங்கையின் புகழ்ப்பெற்ற தனியார் கல்வி நிறுவனமான ESOFT நிறுவனமும் , இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையிலே (IT) புலமைப்பரிசில் திட்டமொன்றினை நாடாளாவிய ரீதியிலே முன்னெடுக்கவுள்ளனர்.

◆ முழு புலமைப்பரிசில் 10,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்.

◆ பகுதியளவிலான புலமைப்பரிசில் 20,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்.

◆ முழுமையாகவும் , பகுதியளவிலும் இணையும் 30,000 மாணவர்களுக்கும் , ஆங்கில பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும்.

◆ விண்ணப்ப இறுதி திகதி - 25/09/2021

◆ Online மூலம் விண்ணப்பிக்க - https://bit.ly/IT-Scholarships

◆ 𝗘𝗦𝗢𝗙𝗧 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 செயலியை (App) பதிவிறக்கம் செய்து பின்னர் விண்ணப்பிக்கவும் (https://bit.ly/ESOFTapp)

தெரிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் , SMS மூலம் தகவல் வழங்கப்படுமென குறித்த நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர்.

★ இத்தகவலை பிறரோடும் பகிருங்கள் , நமது EEE Concept பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து , தொடர்ந்தும் இணைந்திருங்கள்.




.

கல்வி , சுகாதாரம் , சமூக நலன்சார் விடயங்களிலே , தங்களை ஈடுப்படுத்தி , அர்ப்பணிப்போடு செயலாற்றும் புத்தளம் Youth Vision  ...
17/09/2021

கல்வி , சுகாதாரம் , சமூக நலன்சார் விடயங்களிலே , தங்களை ஈடுப்படுத்தி , அர்ப்பணிப்போடு செயலாற்றும் புத்தளம் Youth Vision சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் நமது வாழ்த்துக்களும் , பிரார்த்தனைகளும்.

கொவிட் தடுப்பூசி திட்டத்திலே , இவர்கள் காட்டிய அக்கறையும் , உயர்வான தொண்டு சேவையுமே , இவர்களுக்கான உயர்ந்த அடையாளத்தை வழங்கியுள்ளது.

.


14/07/2021
வேலை வாய்ப்பு @ முஸ்லிம் எய்ட்.உங்கள் சுய விபரக்கோவையை , உறவுகள் இல்லாத இருவரின் அத்தாட்சியோடு , 07 நாட்களுக்குள் அனுப்ப...
07/07/2021

வேலை வாய்ப்பு @ முஸ்லிம் எய்ட்.

உங்கள் சுய விபரக்கோவையை , உறவுகள் இல்லாத இருவரின் அத்தாட்சியோடு , 07 நாட்களுக்குள் அனுப்புங்கள்.

உங்களை பற்றியும் , நீங்கள் எதிர்ப்பார்க்கும் பதவி தொடர்பாகவும் சுருக்கமாக அனுப்பலாம்.

பதவி தொடர்பான விபரங்கள் , கீழுள்ள படத்திலே உண்டு.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - [email protected]

.


புலமைப்பரிசில்.★ இலங்கை மாணவர்களுக்கு.★ பாகிஸ்தானில் கல்வி பயில அரிய சந்தர்ப்பம்.★  வைத்தியத்துறை / பொறியியல் / இளமாணி க...
10/05/2021

புலமைப்பரிசில்.

★ இலங்கை மாணவர்களுக்கு.

★ பாகிஸ்தானில் கல்வி பயில அரிய சந்தர்ப்பம்.

★ வைத்தியத்துறை / பொறியியல் / இளமாணி கற்கை / முதுமாணி கற்கை / PhD போன்ற கற்கைகளுக்கு வாய்ப்பு.

★ நிபந்தனைகள் கீழே தரப்பட்டுள்ளது.

★ விண்ணப்ப முடிவு - 15/06/2021.




அனைத்து மகளிருக்கும் '' சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்'' .
07/03/2021

அனைத்து மகளிருக்கும் '' சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்'' .

நிர்மாண கைத்தொழில் அதிகார சபையினால் இளைஞர் சமூகத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு .-----------◆ குறை வருமான குடும்பங்களின் 18-...
05/03/2021

நிர்மாண கைத்தொழில் அதிகார சபையினால் இளைஞர் சமூகத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு .
-----------

◆ குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சி.

◆ 30,000/- கொடுப்பனவுடன் இலவச பயிற்சி

◆ தச்சு வேலை , மேசன் வேலை , கம்பி வேலைப்பாடுகள்
டயில் வேலை கலைஞர்கள் , குழாய்கள் பொருத்தல் செயற்பாடுகள் போன்ற துறைகளைச் சேர்ந்தோருக்கு வேலைத்தள பயிற்சிகள் வழங்கப்படும்.

◆ இரண்டு சீருடைகளுடன் 3 மாதங்களுக்கு ரூபா.30,000 கொடுப்பனவு மற்றும் வேலைத்தள பயிற்சி வழங்கப்படும்.

◆ தேவையான கையேடு மற்றும் கருவிகளுக்காக ரூபா 5,000 கொடுப்பனவு வழங்கப்படும்.

◆ உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற CIDA சான்றிதழுடன் தேசிய திறன் அபிவிருத்தி தகைமை சான்றிதழ்களும் (NVQ) வழங்கப்படும்.

◆ 2021 மார்ச் 15ம் திகதி வரை மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

◆ மாதிரி விண்ணப்பம் கீழே வழங்கப்பட்டுள்ளது .

◆ இந்த லிங்கிலும் விண்ணப்பம் பெறலாம் - https://drive.google.com/file/d/1ztK5tq_a-I5npoT0b23N--uR-pYxchZp/view

◆ 25 மாவட்டங்களுக்கும் தொடர்பாளர்கள் உள்ளனர் , அவர்களையும் தொடர்பு கொள்ள முடியும் .

◆ புத்தளம் மாவட்ட தொடர்புகளுக்கு -
Ms J.Shifa 0777283668

◆ மேலதிக விபரங்களுக்கு ,பிரதான காரியாலய தொடர்பு இலக்கம் - 0702731995

.


திறன் அபிவிருத்திக்கான பயிற்சிகள் • குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் •...
26/02/2021

திறன் அபிவிருத்திக்கான பயிற்சிகள்

• குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

• இளைஞர்களுக்கு 30,000/- கொடுப்பனவுடன் இலவச பயிற்சி

• மூன்று மாத பாடநெறி .

• பயிலும் காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000/= வழங்கப்படும்.

• பயிற்சியின் முடிவில் மேலதிக பயிற்சி மேம்பாட்டிற்காக ரூ. 5,000/= இற்கான வவுச்சர் வழங்கப்படும்.

• சான்றிதழ் வழங்கப்படும்.

• Carpenter, Mason, Bar Bender, Tile Worker மற்றும் Plumber என 5 வகையான தொழில்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

• Construction Industrial Development Board எனும் கச்சேரியில் இயங்கும் அரச நிருவனத்தால் இவை நடாத்தப்படுகின்றன.

• முடிவுத் திகதி : மார்ச் 15, 2021

• Contact: 077- 728 3668

பிறருக்கும் தெரியப்படுத்தி , வறுமை போக்க உதவுங்கள்.

.


கற்கும் சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி ----------------உலக முஸ்லிம் லீக்கின் நிவாரணம் மற்றும் சமூகசேவைக்கும் ,  அபி...
26/02/2021

கற்கும் சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி
----------------

உலக முஸ்லிம் லீக்கின் நிவாரணம் மற்றும் சமூகசேவைக்கும் , அபிவிருத்திக்குமான அமைப்பின் இலங்கை கிளையினால் , 08 வயதிற்குட்பட்ட தந்தையை இழந்த குழந்தைகளுக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பம் ஆங்கிலத்திலே பூர்த்தி செய்யப்பட்டு , மின்னஞ்சல் மூலமோ , தபாலிலோ அனுப்பப்படல் வேண்டும் .

மாதிரி விண்ணப்பம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது .

கீழுள்ள தகவல்களை இணைத்தே , விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்

01 . பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதி
02 . தந்தையின் மரணச் சான்றிதழ் பிரதி
03 . தாயின் பிறப்புச் சான்றிதழ் பிரதி
04 . பெற்றோரின் திருமணப் பதிவின் பிரதி
05 . தாயின் தேசிய அடையாள அட்டை பிரதி.

• மின்னஞ்சல் முகவரி - [email protected]

• தபாலிட வேண்டிய முகவரி
The Director
IORWD-Sri Lanka Office
(New Application- Orphans unit)
658/83/1, Mahawila Garden,
Baseline Road, Dematagoda,
Colombo-09.

உங்களுக்கு தெரிந்த குழந்தைகள் இருந்தால் , உதவிடுங்கள்
அது உங்கள் சந்ததிகளுக்கும் வந்து சேரும் .




Address

88/11 , Marikkar Street
Puttalam
61300

Website

Alerts

Be the first to know and let us send you an email when EEE Concept posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category