OBA Jeilani Central College

OBA Jeilani Central College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OBA Jeilani Central College, Balangoda.

21/05/2022
24/09/2021

#எமது_ஜெய்லானி_தேசிய #பாடசாலையின் க.பொ.த சா/த #பரீட்சை_2020_பெறுபேறு_ஒரே_பார்வையில்

இம்முறை வெளியான க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகளின் படி எமது ஜெய்லானி தேசிய பாடசாலை கடந்த காலங்களை விட மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின்றோம்.

இந்தப் பெறுபேற்றின் பின்னால் பலரது அயராத உழைப்பு மறைந்திருக்கிறது. குறிப்பாக முன்னாள் அதிபர் A.M.ரிசாத் சேர் அவர்களது வேலைத்திட்டங்கள், நகர்வுகள் இந்த பெறுபேற்றில் பெரும் பங்களிப்பு செலுத்தியதை அனைவரும் அறிவீர்கள். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னாள் அதிபர் அவர்கள் இரவு பகல் பாராது மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டதோடு ஆசிரியர்களையும், மாணவர்களையும், பெற்றோர் உட்பட ஏனைய தரப்புக்களையும் மிகச் சிறந்த முறையில் வழிநடாத்தியதை நாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.
எத்தனை எத்தனை பெற்றோர் கூட்டங்கள். எத்தனை எத்தனை மேலதிக வகுப்புக்கள், எத்தனை எத்தனை செமினார்கள், மதிப்பீடுகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியான அனைத்து வகையான தூய்மையான முயற்சிகளுக்கும் கிடைத்த பரிசே இந்த போற்றத்தக்க பெறுபேறாகும்.

ரிசாத் அதிபர் அவர்களே, எமது பாடசாலையினது SDEC, OBA, பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் சார்பாக நீங்கள் செய்த அர்ப்பணிப்போடு கூடிய பணிக்காக என்றும் நன்றியுடையவர்களாக இருப்பதோடு பிரார்த்தனைகளையும் செய்து கொள்கின்றோம். இந்த மாணவர்கள் எப்போதும் உங்களை நினைவில் கொள்வார்கள், பிரார்த்திப்பார்கள் என்பது உறுதி.

மேலும் இதற்காக இரவு பகல் பாராது, விடுமுறை நாள் பாராது, அதிபர் அவர்களோடு இணைந்து பாடுபட்டுழைத்த
O/L பகுதித் தலைவர் உட்பட சகல ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய பிரதி, உதவி அதிபர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இந்த அனைத்து அடைவுகளின் பின்னாலும் இருந்து பங்களிப்புக்கள் வழங்கிய SDEC, OBA உறுப்பினர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் மற்றும் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது நன்றிகளையும், பிரார்த்தனைகளையும் செய்து கொள்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ்
நிச்சயமாக உங்கள் அனைவருக்குமான நிரப்பமான கூலியை இறைவன் வழங்குவான்.

இம்முறை பெற்ற பெறுபேறுகளையும், கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது எமது பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பாக கீழே தரப்பட்டுள்ள மதிப்பீடுகள் மூலம் அவதானிக்கலாம்.



1. Mohamed Muannas Fathima Musharafa - 9A

2. Mohamed Naseer Fathima Afreen - 9A

3. Mohamed Razeen Fathima Ayna - 8A,C

4. Fazmy Mohamed Fathima Nuha - 6A, 3B

5. Mohamed Nilam Fathima Samha - 6A,3B

6. Mohamed Inaam Fathima Ilma - 6A, 3B

7. Mohamed Fayis F. Fasmila - 6A, 2B, C

8. Mohamed Ansar Minza Banu - 6A, 2B,S

9. Bawa Farook Fathima Sheika - 5A, 4B

10. Mohamed Rifas Mo. Sadir - 5A, 4B

11. Nasurudeen Fathima Afla - 5A, 4B

12. Nasar Fathima Rahna - 5A, 3B,C

13. Mohamed Riswan Fa. Simla - 4A, 4B,C

14. Mohamed Fairoos F.Hazeena - 4A, 4B,C

15. Subramaniyam Abeeshana - 4A, 3B,2C

16. Mohamed Naleem F. Fareeha 4A, 3B, 2C

17. Mohamed Nasar F. Sahla - 4A, B, 4C



Tamil - 90%
A - 19
B - 11
C - 27
S - 12
W - 08

English - 90%
A - 13
B - 14
C - 30
S - 11
W - 08

Islam - 88%
A - 24
B - 07
C - 26
S - 06
W - 11

History - 86%
A - 09
B - 08
C - 22
S - 27
W - 11

Maths - 77%
A - 14
B - 08
C - 17
S - 16
W -18

Science - 74%
A - 05
B - 08
C - 14
S - 30
W - 20

Sinhala - 99%
A - 06
B - 29
C - 19
S - 11
W - 01

Arabic - 94%
A - 19
B - 07
C - 17
S - 13
W - 04

HPE - 83%
A - 15
B - 10
C - 07
S - 03
W - 07

Media Study - 100%

A/L

With Maths - 77%

With & without maths - 80%

2019 - 68%
2018 - 51%


2019 - 03A
2020 - 19A


2019 - 01A
2020 - 13A

2019 -15 W
2020 - 08W


2019 -16A
2020 - 24A


2019 - 07A
2020 - 14A


2019 - 04A
2020 - 09A


2019 - 02A
2020 - 05A

2019 - 02B
2020 - 08B

2019 - 35W
2020 - 20W

(சென்ற வருடமும் (2020) கொரோனா காரணமாக நீண்ட நாட்கள் பாடசாலை நடைபெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க) நன்றி.
SDEC, OBA
24.09.2021

11/06/2021

அதிபர் A.M. ரிசாத் அவர்களது அவசர இடமாற்றம் தொடர்பான அறிவித்தல்

அதிபர் A.M. ரிசாத் அவர்கள் 2019 செப்டம்பர் மாதம் எமது பாடசாலையை பொறுப்பேற்று இன்று வரை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மிகச் சிறப்பாக கடமையாற்றி வந்ததை யாவரும் அறிவீர்கள். அதிபர் அவர்கள் குறுகிய காலத்தில் ஒரு தேசிய பாடசாலைக்குரிய வேகத்தோடு இயங்கி வந்தார் என்பதை நாம் அறிவோம்.

கல்வி, ஒழுக்கம், மனிதவள அபிவிருத்தி, பௌதிக வள மேம்பாடு, இணைப்பாட விதான செயற்பாடு, பெற்றோரை பாடசாலையோடு இணைத்தல், சமூகத்தை கல்வி ரீதியாக அக்கறை கொள்ளச் செய்தல், தனவந்தர்களது உதவியைப் பெற்றுக்கொள்ளல் என எல்லாத் துறைகளையும் ஒருசேர முன்னேற்ற வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இரவு பகலாக கடுமையாக உழைத்து வந்தார்.

அதிபர் அவர்களது ஒன்றரை வருட காலத்தில் கொரோனா சூழலுக்கு மத்தியிலும் 30 தடவைகளுக்கு மேல் கல்வி அமைச்சுக்கு சென்று கல்வி அதிகாரிகளோடு பல வாக்குவாதங்களில் ஈடுபட்டு ஒரு தேசிய பாடசாலைக்குரிய வளங்களை பெற்றுக்கொள்வதற்காக கடுமையாக முயற்சித்தார். அதனது அறுவடைகளை இப்போது மெதுமெதுவாக கண்டு வருகிறோம்.

பாடசாலை பிள்ளைகளது ஒழுக்கத்தை சரிக்கட்ட முனையும்போது எமது ஒரு சில பெற்றோர்களோடு முரண்பட வேண்டிய சந்தர்ப்பங்களை கூட அவர் முகம் கொடுத்தார். தனிப்பட்ட ரீதியில் பாதிப்புகள் வந்தாலும் மாணவர்களது கல்வியோடு கூடிய ஒழுக்கத்தை மேம்படுத்துவதில் எந்த விட்டுக் கொடுப்பையும் அவர் செய்ததில்லை

அவரது தலைமைத்துவ ஆற்றலை புரிந்து கொள்வதற்கு 2020இல் அதிபர் அவர்கள் நடாத்திக் காட்டிய இல்ல விளையாட்டுப் போட்டி சான்றாக அமைந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

தற்போது பாடசாலைக்குள் நுழையும் போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளை நோட்டமிடும் எவரும் அதிபர் அவர்களது தூரநோக்கு, தலைமைத்துவ ஆற்றல் என்பவற்றை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

இப்படி ஒரு வரப்பிரசாதமாக எமது பலாங்கொடை சமூகத்திற்கு கிடைத்த அதிபர் A.M. ரிசாத் அவர்களுக்கு திடீரென கல்வி அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவித்து கடிதம் கிடைத்திருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். இது கல்வி அமைச்சினால் அவர்களாகவே செய்த இடமாற்றம் என்பதை பெற்றோர் நலன் விரும்பிகளுக்கு அரியத் தருவதோடு, தொடர்ந்தும் A.M. ரிசாத் அதிபர் அவர்களை எமது பாடசாலையில் வைத்துக்கொள்வதற்காக எம்மாலான முயற்சிகளை தற்போது செய்து வருகிறோம் என்பதை அறியத்தருகின்றோம்.

மேலும் அதிபர் அவர்களுடைய சேவையை எமது பாடசாலைக்கு தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்காக பெற்றோர் தரப்பிலிருந்து முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்வதும் இன்றியமையாததாகும்

SDEC, OBA.
R/J.C.C
11.06.2021

24/03/2021

(A/L) 2023

இம்முறை O/L பரீட்சை எழுதிய மாணவர்களுள் உயர்தர #கணித_விஞ்ஞான_பிரிவில் கற்க விரும்பும் மாணவர்களுக்கான பாடசாலை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் #திங்கட்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே எமது ஜெய்லானி தேசிய பாடசாலை மற்றும் வேறு பாடசாலைகளில் இருந்து கணித விஞ்ஞானத் துறையில் கற்க எதிர்பார்த்துள்ள மாணவர்கள் அனைவரும் #29ம்_திகதி_காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு வருகை தருமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

- Mr.Niyas Bsc

- Mr.Nafees Bsc

- Mr.Abilas Engineer (U.G.)

- Mr.Sasitharan Engineer(U.G)

வெளி மாணவர்களுக்கான Hostel வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

R/Jeilani National School,
Balangoda.

இது தவிர

Additional Project At
Balangoda

-
Dr.Shakir MBBS (SL)
Mr.Shahim MLS (UG)

-
Mr.Niyas BSc
Mrs. Farwin BSc

-
Mr.Sampath BSc
Mr.Nafees BSc

-
Mrs. Rifka MLS
Mr.Sivarushantharaja BSc (U.G)

Additional Class will be start
2021/03/24 at 5pm

0775858547
0766788372

 ுற்றுமதில்_அமைத்தல்__எமது பாடசாலையின் 90வருட கால (1931) வரலாற்றுத் தேவையாக அமைந்த பாடசாலையைச் சுற்றிவர மதில் அமைக்கும் ...
10/03/2021

ுற்றுமதில்_அமைத்தல்_

_எமது பாடசாலையின் 90வருட கால (1931) வரலாற்றுத் தேவையாக அமைந்த பாடசாலையைச் சுற்றிவர மதில் அமைக்கும் வேலைத்திட்டம் அங்கத்தவர்களின் மேற்பார்வையின் கீழ் நலன்விரும்பிகளின் நிதியுதவியினைக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே...._

_தற்போது இதன் வேலைகள் #நிதிப்_பற்றாக்குறை காரணமாக இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளமையால் இவ் வேலைத்திட்டத்தினை தொடர்ந்து கொண்டு செல்ல நலன்விரும்பிகளின் உதவியினை நாடுகின்றோம்._

_10, 10 அடிகளாக பிரிக்கப்பட்டு வேலைகள் நடைபெறுவதனால் தனது மரணித்த அல்லது உயிரோடுள்ள பெற்றோரின் பெயரில், அல்லது தனது பெயரில் #நிலையான_தர்மம் ஒன்றினை செய்ய நாடுபவர்கள் எமது OBA அமைப்பினை தொடர்பு கொள்ளவும்._

_"ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனது அனைத்து செயல்களும் முடிந்து விடும் மூன்று காரியங்களைத் தவிர_
_1. நிலையான தர்மம்_
_2. பிறர் பயன் பெறும் கல்வி_
_3. தனக்காக பிரார்த்தனை செய்யும் குழந்தை._
_(ஹதீஸ் : முஸ்லிம்)_

_இறைவன் உங்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக._

ு_வங்கிக்_கணக்கு_விபரம்.

A/C Name: - Old Boys Association Jeilani Central College
A/C No: 020013251354001
Seylan Bank
Balangoda Branch.
-
OBA
R/Jeilani NS,
Balangoda

Address

Balangoda

Telephone

+94767449004

Website

Alerts

Be the first to know and let us send you an email when OBA Jeilani Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to OBA Jeilani Central College:

Share