A.I.M(Anuradhapura Independent Movement )

  • Home
  • A.I.M(Anuradhapura Independent Movement )

A.I.M(Anuradhapura Independent Movement ) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A.I.M(Anuradhapura Independent Movement ), Social service, .

03/04/2026

ஜனாசா அறிவித்தல்

எமது நண்பர் K.M.M Nafasன் அன்பு தந்தை குலாம் முஹம்மத் நேற்று 2026:04:02 காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் சித்தி பரிதாவின் அன்பு கணவரும் பெரோஸ், பர்வீஸ், நபாஸ் மற்றும் செனாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், இகிரி கொள்ளாவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜகரியா, மர்ஹும் பஷீர் ஆசிரியர், மர்ஹூம் கபூர் ஆசிரியர், மர்ஹூம் சட்டத்தரணி தாஹிர் ஆகியோரது சகோதரரும் ஆவார்

ஜனாஸா 2026.04.04 மு.ப.10:00 மணிக்கு விஜயபுற முஸ்லிம் மையவாடியிற்கு நல்லடக்கம் செய்யப்பட்டது

புகழனைத்தும் அல்லாஹ்விற்கேAIM சமூக அமைப்பின் நிதியுதவியின் கீழ் அனுராதபுரம் நாச்சாதுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட குடும...
01/04/2026

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே

AIM சமூக அமைப்பின் நிதியுதவியின் கீழ் அனுராதபுரம் நாச்சாதுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட குடும்பமொன்றின் அடிப்படை தேவைகளில் ஒன்றான மின்சார இணைப்பினை பெற்றுக்கொடுக்க முடிந்தது.

இதனை சிறப்பாக செயற்படுத்த எமக்கு மிக உறுதுணையாக இருந்த எமது AIM சமூக உறுப்பினர் Mohamed Shahin அவர்களுக்கும் இதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்த AIM அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் எமது AIM சமூக அமைப்பின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

"கேட்போருக்கும், கேட்காதோருக்கும் உதவுங்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் உதவி செய்பவர்கள் எந்த நிலையிலும் அதனை செய்யலாம்"

Secretary
AIM

புகழனைத்தும் அல்லாஹ்விற்கேAIM அமைப்பின் முயற்சியில் Qatar Charity قطر الخيرية நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் அநூராதபுரம...
17/03/2026

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே

AIM அமைப்பின் முயற்சியில் Qatar Charity قطر الخيرية நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் அநூராதபுரம் மிஹிந்தலை முஸ்லீம் வித்தியாலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் நடைப்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ், 10 துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கு நிதியுதவி வழங்கிய Qatar Charity நிறுவனத்திற்கு எமது அமைப்பு சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

புகழனைத்தும் அல்லாஹ்விற்கேAIM சமூகத்தின் நிதியுதவியின் கீழ் இவ்வருட புனித ரமழான் மாதத்தில் அநூராதபுரம் மொகிதீன் ஜும்மா ம...
16/03/2026

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே

AIM சமூகத்தின் நிதியுதவியின் கீழ் இவ்வருட புனித ரமழான் மாதத்தில்

அநூராதபுரம் மொகிதீன் ஜும்மா மஸ்ஜித் - 3 கஞ்சிகள் (உறுப்பினர்களின் தனிப்பட்டது உட்பட)

அநூராதபுரம் மொகிதீன் ஜும்மா மஸ்ஜித் - AIM சமூகத்தின் மூலம் தலைநோன்பு இப்தார் ஏட்பாடு

நீராவி 10 பர்சஸ் பள்ளிவாயல் - இரண்டு கஞ்சிகளும்
(உறுப்பினர்களின் தனிப்பட்டது உட்பட)

நீராவி 25 பர்சஸ் பள்ளிவாயல் - 1 கஞ்சியும்
(உறுப்பினர்களின் தனிப்பட்டது உட்பட)

அன்வர் ஜும்மா பள்ளியவாயல் சிராவஸ்திபுர - 1 கஞ்சியினையும் AIMசமூகத்தினால் வழங்கமுடியமாகியது.

அல்ஹம்துலில்லாஹ் 🤲

இதனை சிறப்பாக நடத்தி தந்த அனைவருக்கும் மற்றும் Akram Haris (உப செயலாளர்)
அவர்களுக்கும் AIM சமூகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

Secretary
*AIM*

புகழனைத்தும் அல்லாஹ்விற்கேAIM சமூகத்தின் வேண்டுகோளின்படி Qatar Charity قطر الخيرية நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் முதற்...
15/03/2026

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே

AIM சமூகத்தின் வேண்டுகோளின்படி Qatar Charity قطر الخيرية நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் முதற்கட்டமாக அநூராதபுரம் சாஹிரா கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டமாக, பாடசாலை அதிபர் அல்ஹாஜ் Azath mohamed அவர்களின் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 25 துவிச்சக்கரவண்டிகளும், இரண்டாங்கட்டமாக 15துவிச்சக்கர வண்டிகளும் இன்று (15-03-2026) சாஹிரா பாடசாலையில் வழங்கிவைக்கப்பட்டன.

எதிர்வரும் காலங்களில் இன்னும் சில பாடசாலைகளுக்கும் இவ்வுதவித்திட்டம் Qatar Charity நிறுவனத்தின் நிதி உதவியின் மூலம் AIM சமூகத்தினூடாக வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு நிதியுதவி வழங்கிய QATAR CHARITY நிறுவனத்திற்கும் இதற்கு பூர்ண ஒத்துழைப்பை தந்த எமது AIMசமூக அமைப்பின் அங்கத்தவர்களான Ferose Rauf மற்றும் Mohamed Rafeekஆசிரியர் அவர்களுக்கும் AIM சமூகம் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைகின்றோம்..

"உங்களால் இயன்றவரை மட்டுமே நற்செயல்களை மேற்கொள்ளுங்கள்,
ஏனெனில் அவை குறைவாக இருந்தாலும் தவறாமல் செய்யப்படும் செயல்களே சிறந்தவை."
நூல்: இப்னு மாஜா

Secretary
*AIM*

உயர்கல்வியினை தொடரும், பொருளாதார தேவையுடைய மாணவர்களின் தேவையினை இனங்கண்டு, சிறியதொரு கொடுப்பணவினை வழங்குவதற்கு எமது அமைப...
19/07/2025

உயர்கல்வியினை தொடரும், பொருளாதார தேவையுடைய மாணவர்களின் தேவையினை இனங்கண்டு, சிறியதொரு கொடுப்பணவினை வழங்குவதற்கு எமது அமைப்பு எடுத்த தீர்மானத்தின் பலனாக உயர்தர விஞ்ஞானப்பிரிவு மற்றும் மருத்துவ கற்கையினை தொடரும் மாணவர்கள் பயனடைகின்றனர்.

புகழனைத்தும் இறைவனுக்கே.

தேவையுடைய மாணவர்கள் எம்மை தொடர்புகொள்ளலாம்.
இணைந்து பயணிக்க விரும்பும் நல்லுள்ளங்களையும் பஅன்புடன் அழைக்கிறோம்

“மிகச்சிறந்த தர்மம் குடிநீர் வழங்குவதாகும்”புகழனைத்தும் அல்லாஹ்வுக்கேகுடும்பமொன்றின் அடிப்படை தேவையான குடி நீர் வழங்கலின...
08/04/2025

“மிகச்சிறந்த தர்மம் குடிநீர் வழங்குவதாகும்”

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே

குடும்பமொன்றின் அடிப்படை தேவையான குடி நீர் வழங்கலினை பூர்த்திசெய்ய முடியமாகியுள்ளது. எமது செயற்பாடுகளை தேவையுடைய குடும்பங்களுக்கு உரிய முறையில் வழங்குவதற்கு எமது நண்பர்களினதும் மற்றும் பெயர்குறிப்பிட விரும்பாத நலன்விரும்பிகளினதும் பங்களிப்பு இன்றியமையாதது

சேர்ந்து பயணிப்போம்.

Happy Children's Dayசிறுவர் தின வாழ்த்துக்கள்.. ලෝක ළමා දිනයක් වේවා …!
01/10/2024

Happy Children's Day
சிறுவர் தின வாழ்த்துக்கள்..
ලෝක ළමා දිනයක් වේවා …!

2024 இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு AIM சமூகம் என்ற வகையில் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை...
22/09/2024

2024 இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு AIM சமூகம் என்ற வகையில் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..!!!

AIM Society we warmly Congratulations and wishes to 9th Executive President of Sri Lanka 2024 Anura Kumara Dissanayake 🇱🇰..!!!

Congratulations!!

AIM - Anuradhapura Independent Movement

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவ செல்வங்களுக்கு.....புலமைப்பரிசில் பரீட்சை உங்களுக்கு வாழ்க்கையில் ப...
14/09/2024

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவ செல்வங்களுக்கு.....

புலமைப்பரிசில் பரீட்சை உங்களுக்கு வாழ்க்கையில் பெறுமதியான பாடங்களைக் கற்றுத் தரும், வாழ்க்கை என்பது கற்றல் மற்றும் வெற்றி மற்றும் தோல்வி எதுவாக இருந்தாலும் எப்போதும் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தத் தேர்வின் முடிவுகள், வாழ்க்கையில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான வலிமையும் தைரியமும் உங்களுக்கு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இன்றைய கல்வி உலகில் கால்பதிக்கும் இளம் தளிர்கள் நாளைய உலகின் தத்துவ ஞானிகளாக, விஞ்ஞானிகளாக, ஆய்வாளர்களாக உயர் நிலைகளுடன், சமநிலை ஆளுமை உடைய, சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய, நாட்டிற்கும் உலகிற்கும் பெருமை சேர்க்கும் நற்பிரஜைகளாக மாற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நீங்கள் சிறந்து விளங்க AIM சமூகத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!!

හෙට 5 වසර ශිෂ්‍යත්ව විභාගයට පෙනී සිටින සියලුම සිසුන් වෙත....

ශිෂ්‍යත්ව විභාගය ඔබට ජීවිතයේ වටිනා පාඩම් කියා දෙනු ඇත, ජීවිතය යනු ඉගෙනීම සහ සාර්ථකත්වය හෝ අසාර්ථකත්වය නොසලකා සෑම විටම ඉදිරියට යාමයි. මෙම විභාගයේ ප්‍රතිඵල ඔබට ජීවිතයේ ඉදිරි අභියෝගවලට මුහුණ දීමට අවශ්‍ය ශක්තිය සහ ධෛර්යය ලබා දෙනු ඇතැයි අපි බලාපොරොත්තු වෙමු.

අද අධ්‍යාපන ලෝකයේ තරුණ අංකුර දාර්ශනිකයන්, විද්‍යාඥයන්, හෙට දවසේ උසස් පර්යේෂකයන්, සමබර පෞරුෂයක් ඇති, අභියෝගවලට මුහුණ දිය හැකි, රටත් ලෝකයත් ආඩම්බරයට පත් කරන යහපත් පුරවැසියන් බවට පත්වේවායි ඔබගේ ශිෂ්‍යත්ව විභාග සඳහා AIM ප්‍රජාව ඔබට සුබ පතයි....!!!!

We Wish You All the Very Best....

AIM - Anuradhapura Independent Movement

15/08/2024
Assalamu அலைக்கும் W Wஉதவும் எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்க்கும்... உன் ஒரு ரூபா தர்மம் ஒரு அப்பாவி குழ...
15/08/2024

Assalamu அலைக்கும் W W

உதவும் எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்க்கும்...

உன் ஒரு ரூபா தர்மம் ஒரு அப்பாவி குழந்தையின் உயிருக்கு பெருமூச்சு விட உதவலாம்... முடிந்தவரை கை கொடுங்கள்.... முடிந்தவரை பகிருங்கள்....

அனுராதபுரம் அசரிகம கிராமத்தைச் சேர்ந்த தந்தை எம். உபைத் இன் அன்பு மகன் எஸ்.முகமது உமைர் இன் உயிரை காப்பாற்ற கையேந்தி நிற்கின்றார்.... இந்த குழந்தையை காப்பாற்ற அதிக காலம் இல்லை..

மகன் பிறந்ததில் இருந்து கடுமையான தெலிசீமியா நோயால் அவதிப்பட்டு வருகிறார், மகனுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை. இந்தியா சென்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
அதைச் செய்வதற்கு இலங்கை மதிப்பின் படி 2,25,000,00 லட்ச ரூபா பணம் அவசரமாகத் தேவைப்படுகிறது, இந்தப் பணத்தைக் சேகரிக்கவும் உங்கள் உதவியை நாடவும் இவர்கள் தகுதியானவர்கள். நாம் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் இது நம் அன்பான குடும்பத்திலும் நிகழலாம்.
அந்த 10 வயது அப்பாவி மகன் தன் உயிருக்காக கெஞ்சுகிறான்..

இந்த காலத்தில் நாம் மிகவும் கடினமான நேரத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால்..
அந்த பெற்றோரின் கண்களில் இருந்து வடிக்கும் கண்ணீருக்கு உன்னிடமிருந்து வரும் சிறு உதவி தொகையும் பெரும் அறுவடையாக அமையும் என்பதை மறுக்க முடியாது......

சிறு மகனின் உயிரைக் காப்பாற்ற நீங்களும் உதவ நினைத்தால் தந்தையின் கணக்கிலக்கதிட்கு உங்கள் நன்கொடைகளை அளிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு
தந்தையின் தொலைபேசி எண்:

+94 76 394 1311

Account Details

Acc Number - 92899965
Account name - M.S. Ubaid
Bank - Bank of ceylon
Branch - Anuradhapura

குறிப்பு: வைப்பிலிட்ட பின் Bank Receipt ஐ எமது AIM WhatsApp இலக்கத்திற்கு அனுப்பவும்.

Secretary
AIM - Anuradhapura Independent Movement
Aim Charity Foundation.
+94 717028702
[email protected]

Address


Telephone

+9471 702 8 702

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.I.M(Anuradhapura Independent Movement ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share