05/02/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 75வது இலங்கை திரு நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வாழைச்சேனை வர்தக சங்கத்தின் தலைமைக்காரியாலயமும், பொலிஸ் பாதுகாப்பு அறனும் திறந்து வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.இந்த வாழைச்சேனை வர்த்தக சங்கத்தில் அங்கம் வஹிக்கும் சகல உறுப்பினர்களும் , வர்த்தகர்களும் தோளோடு தோள் நின்று எங்களுக்கு மிகவும் பெறுமதி மிக்க ஆதரவுகளை வழங்கினார்கள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.அத்தோடு எல்லா வகையிலும் எங்களுக்கு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கிய வாழைச்சேனை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.