இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட கிளை

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட கிளை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட கிளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட கிளை, Political Party, No. 63, Kaali kovil road, Kurumankadu, Vavuniya, Vavuniya.

07/12/2025

முன்னாள் யாழ் அரச அதிபர் சிவபாலசுந்தரம் அம்பலவாணர் அவர்களின் கருத்துக்கள்.

யாழ்நகரப்பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் எமது அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குறுகிய சிந்தனைகளையும் பற்றிப்பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன்.

கீழே உள்ள ஆங்கிலப்பிரித்தெடுப்பு பகுதியானது 1970 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக கடமையாற்றிய Wimal Amarasekara அவர்களது துணைவியாரின் Being One with Jaffna என்னும் தலைப்பிலான Sunday Times (plus பகுதி)கட்டுரையின் பகுதியாகும்.

The Old Park had some of the rarest trees. Apart from the giant Mahogany, Nedun, Ironwood, the inevitable Mango and the Tamarind, both of which brought some revenue annually for the upkeep of the garden, there were the Baobub and a tree from South America which had lovely blue flowers throughout the year, growing just outside our bedroom window. This tree was supposed to be the only one of its kind in Sri Lanka.

When I saw the Residency though, I got a little panicky wondering as to how we were going to maintain it. The Residency apart from its own bakery, the underground tunnels, the place where the personal staff of the GA were mustered in the morning and paid in the evening, in the past had 27 acres of garden land called the Old Park. This place had its own history. Percival Ackland D**e who had been the Government Agent of Jaffna for more than 36 years had bought the place with his own money and bequeathed it to his successors on an irrevocable deed of gift through Queen Victoria.

இந்த செய்தி ஒன்று போதும் யாழ்ப்பாணப் பழையபூங்கா கொண்டிருந்த சிறப்பையும் அதன் தொன்மையையும் பெறுமதியையும் அறிந்து கொள்வதற்கு. இன்று அபிவிருத்தி என்ற போர்வையில் எமது இளைய சமுதாயம் மட்டுமன்றி கற்றறிந்தோர் சமுகம் எனக்கூறிக்கொள்ளும் ஒரு சாரார், பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் போன்றோர் இத்தகைய பதிலீடற்ற பெரும் சம்பத்துக்கள் பறிபோவதைப்பற்றி எந்தவித கவலையுமின்றி வாழ்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.
ஆட்சிக்கு வரும் அரசுகளும் அவர்களால் நியமிக்கப்படும் ஆளுனர்களும் தமக்குரிய அதிகாரங்களை மக்கள் நலனுக்காகவன்றி அம்மக்களின் எதிரகாலத்தைக் கருத்தில் கொள்ளாது அவரவர் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் தான்தோன்றித்தனமாகப்பிரயோகிப்பதும் அதனை எதுவித ஆட்சேபனையுமின்றி அதிகாரிகள் சிரமேற்கொண்டு செயற்படுத்துவதும் நாம் எமது நிருவாக வரலாற்றில் தரிசித்த உண்மைகள்.

2023 ஆம் ஆண்டு தை 18 இல் அரச அதிபராகப்பொறுப்பேற்று சில நாட்களில் அப்போது ஆளுனராக இருந்தவர் பழைய பூங்காவின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் ஏற்கனவே உள்ள ஆளுனர் அலுவலகத்தோடு சில கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தார். மேலும் காணியைப்பிரித்து குறுக்காக வேலியிட்டு அது ஆளுனர் அலுவலகத்திற்குரியது என அத்துமீறலும் செய்திருந்தார்.

இந்நிலையில் எனது விடுதியிலிருந்து பார்த்தபோது அதிகாலை கனரக இயந்திரங்கள் அந்தக்காணியில் ஏதோ வேலைக்காக வந்திருப்பதைக் கேள்வியுற்றேன். அவை மாநகர சபைக்குரியவை என்பதையும் அறிந்துகொண்டேன். உடனடியாக மாநகர ஆணையாளருடன் தொடர்புகொண்டு இந்தக்காணி அரசாங்க அதிபருக்குரியது என்பது உங்களுக்குத் தெரியும்தானே! ஆயின் எனக்குத்தெரியாமல் எனது அனுமதி பெறாமல் என்ன செய்யப்போகிறீர்கள் என வினவியபோது ஆணையாளர் அது எங்களுடைய வேலைத்திட்டம் இல்லை. ஆளுனரின் உத்தரவுக்கமைய இயந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. எனக்கூறினார். உடனே இது அரசாங்க அதிபரின் காணிக்குள் எனது அனுமதியில்லாமல் எவரும் எந்த வேலையும் செய்ய அனுமதியில்லை. என்றுகூறி இயந்திரங்களை வெளியேறப்பணித்தேன்.

ஆணையாளர் இதுபற்றி ஆளுனருக்குத் தெரிவித்ததும் ஆளுனர் என்னுடன் தொடர்புகொண்டு தான் ஒரு நடைபயிலும் சாலை அமைக்க இருப்பதாகவும் அதைச் செய்யப்போவதாகவும் அதைத்தடுக்கவேண்டாம் எனவும் கூறினார். ஆனாலும் பழையபூங்கா அபிவிருத்தி பற்றி தீர்மானிக்கவேண்டியது அரசாங்க அதிபரே என்றும் அதன் அபிவிருத்தி பற்றிய முன்மொழிவுகள் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆராய்விலுள்ளது பற்றியும் ஆளுனரோடு விவாதித்தேன். அவர் உடனடியாக நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களை காலை எட்டு மணிக்கே என்னிடத்தில் அனுப்பி எனது ஒப்புதலைப்பெற முயன்றார். ஆனாலும் இறுதிவரை நான் அதற்கான ஒப்புதலை வழங்கவுமில்லை குறித்த வேலை நடை பெறவுமில்லை.

27 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெறுமதியான அமைவிடத்தில் வரலாற்றுப்பதிவுகள் பலதையும் கொண்ட இந்தக்காணியை எந்தவித தூரநோக்குமின்றி நினைத்தபடி துண்டாடி வெறும் ஒழுங்கற்ற கட்டிடக்காடாக்கி இன்று அழகிழந்து கிடக்கிறது பழைய பூங்கா!

அரியாலை, செம்மணி, மண்டைதீவு, கோப்பாய் போன்ற நகரைச்சுற்றிய இடங்களுக்கு கொண்டு போயிருக்கக்கூடிய அரச கட்டிடங்கள் கைதடி, மாங்குளம், வ்வுனியா போன்ற பகுதிகளில் அமைக்கப்பட வேண்டிய ஆளுனர் மாளிகை மற்றும் ஆளுனர் அலுவலகங்கள் போன்றவற்றை யாழ்நகரப்பழைய பூங்காவில் காலத்துக்குக் காலம் அமைத்து தங்கள் தான்தோன்றித்தனமான அதிகாரப்பிரயோகத்தின்மூலம் அலங்கோலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

கண்டி, கொழும்பு, அனுராதபுரம், காலி போன்ற நெருக்கடியான நகரங்களில்கூட நகரப்பூங்காக்கள் தீண்டப்படாமல் அவற்றின் தொன்மையும் சிறப்பும் பேணப்பட்டுக்கொண்டிருக்க யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பூங்காவான பழைய பூங்கா இவ்வாறு குதறப்படுவதைத் தடுத்தேயாகவேண்டும்.

சிவபாலசுந்தரம் அம்பலவாணர்
முன்னாள்
யாழ் அரச அதிபர்

5/12/2025

23/12/2025 இன்று தமிழரசு கட்சி யின் வவுனியா மாவட்ட கிளை அலுவலகத்தில் "தாயகத்தில்"நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு  நி...
23/11/2025

23/12/2025 இன்று தமிழரசு கட்சி யின் வவுனியா மாவட்ட கிளை அலுவலகத்தில் "தாயகத்தில்"நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள்

தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டத்தின் விளைவே மாகாணசபை முறைமை: தேர்தலை நடத்துங்கள் என்கிறார் சத்தியலிங்கம் எம்.பித...
19/11/2025

தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டத்தின் விளைவே மாகாணசபை முறைமை: தேர்தலை நடத்துங்கள் என்கிறார் சத்தியலிங்கம் எம்.பி

தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டத்தின் விளைவாகவே மாகாணசபை முறைமை அரசியல் அமைப்பின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டது. உடனடியாக அந்த தேர்தலை நடத்துங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் (19.11) இடம்பெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மீதான விவாதத்திலே கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அமைச்சு அரச இயந்திரத்தை சுழலச் செய்யும் பிரதான அச்சாணியாக அமைந்துள்ளது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் 3 படி நிலைகளில் அரச நிர்வாகம் நடைபெறுகின்றது.

மத்திய அரசு - பொது நிர்வாகம், மாகாண சபை - மாகாண சபைகள், உள்ளுராட்சி - உள்ளுர் அதிகார சபைகள் ஆனாலும் அரசியலமைப்பு ரீதியாக இவ்வாறாக அரச நிர்வாக நடைமுறைகள் முறையாக வகுக்கப்பட்டு அவை சட்டமாக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கல் மூலம் வெவ்வேறு மட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அவை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

காலணித்துவ ஆட்சிக்கு பின்னர் சுதந்திர இலங்கையின் நிர்வாக கட்டமைப்பானது மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதாக உள்ளது.

ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் திருத்தங்களால் அதிகார பரவலாக்கல் நடைபெற்றிருந்தாலும் நாட்டில் வாழுகின்ற பல் இன குழுமங்களின் தனித்துவமான இன,மத,மொழி, கலாசார அடையாளங்களை பாதுகாக்க தவறியதன் காரணமாகவும் அவர்களை இந்த நாட்டின் இரண்டாந்தர பிரசைகளாக நடத்தியதாலும் சமூகங்களுக்கடையேயான கசப்பான வரலாற்று சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாட்டில் குறிப்பிட்டவொரு சமூகத்தை முன்னிலைப்படுத்தி இயற்றப்படுகின்ற சட்டங்கள் ஒருபோதும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

மாறாக சமூகங்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதுடன் நாட்டை நேசிக்கின்ற வளமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியாது.

நாட்டில் எங்குமில்லாத நிர்வாக நடைமுறை எமது மாகாணத்தில் காணப்படுகிறது. மகாவலி “எல்” வலயம் கொண்டு வரப்பட்டு மாகாணத்திற்கு வெளியே இருந்து சிங்கள மக்கள் முல்லைத்தீவு வவுனியா மாவடங்களில் குடியேற்றப்பட்டு அவர்களுக்கான புதிய பிதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு முல்லைதீவு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது.

அப்பிரதேச செயலாளர் பிரிவு 6 வட்டாரமாக பிரிக்கப்பட்டு அதில் 5 வட்டாரங்கள் வவுனியா வடக்கு பிரதேச சபையுடனும் ஒரு வட்டாரம் கரைத்துறைப்பற்று பிரதேச சபையுடனும் இணைக்கப்பட்டு அவர்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

திட்டமிட்ட வகையில் எமது மாவட்டங்களின் இனப்பரம்பலை மாற்றும் நோக்கத்திலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கமாக செய்யப்பட்ட இச்செயற்பாடு அங்கு அங்கு வாழும் மக்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு குடியேற்றப்பட்ட மக்களுக்கும் பூர்வீக குடிகளுக்குமிடையே மோதல் நிலையை ஏற்படுத்தும்.

குடியேற்றவாசிகளுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்காக பூர்வீக தமிழ் மக்களுடைய குளங்கள் விளைநிலங்களை அபகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

அதில் ஒன்று தான் “திரிவைத்தகுள ஆக்கிரமிப்பு”. மகாவலி அதிகாரசபை, வனவள தினைக்களம் பொறுப்பற்ற வகையில் இனமுரன்பாட்டை தோற்றுவிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள்.

“கிவுலுஓயா நீர்பாசன திட்டம்”. நடைமுறைப்படுத்துவதால் பல குளங்கள் அதனோடிணைந்த காணிகள் நீரேந்து பகுதிக்குள் உள்வாங்கப்படும்.
எவ்வாறு இந்த பிரச்சனைகளை தீர்க்கப் போகிறீர்கள். இதற்காக விசேட குழுவொன்றை நியமித்து தீர்வை காணுங்கள்.

மணலாறு பிரதேச செயலாளர் பிரிவை உள்ளடக்கியதாக பிரதேச சபையை நிறுவுங்கள், அங்கு குடியேற்றப்பட்ட மக்களுக்கு சேவையை வளங்க ஏற்பாடுகளை செய்யுங்கள்.

அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பிரதேச சபைகளை பிரித்து தனியான பிரதேச சபைகளை உருவாக்கி மக்களுக்கான சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்.

உங்கள் அமைச்சிற்கு உட்பட்ட பல பிரச்சனைகள் அங்கு காணப்படுகிறது. கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புங்கள். இதனால் மக்களுக்கான சிறப்பான சேவையை வளங்கலாம்.

டிஜிற்றலேசன் திட்டத்தை மிக அடிப்படை மட்டத்தில் செய்கின்ற உத்தியோகத்தர்கள் தமது தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கான இலத்திரனியல் சாதனங்களை வளங்க ஏற்பாடு அவசியமானது.

சாத்தியமான இடமாற்ற கொள்கை அற்றநிலையில் பலர் தொடர்ந்தும் கஸ்ர பிரதேசங்களிலேயே பணி செய்கிறார்கள், தண்டனை பெறுபவர்களை கஸ்ர பிரதேசங்களுக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்துங்கள், அவர்கள் மேலும் அங்கு பிரச்சனைகளை உண்டுபன்னுவார்கள். அவர்களை அதிகாரிகளின் கண்காணிப்பில் வைத்து உச்சமான உழைப்பை பெற நடவடிக்கை எடுங்கள்.

தேர்தல்களை நடாத்துவதற்காக 5.0 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிவருகிறோம். தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டத்தின் விளைவாகவே மாகாணசபை முறைமை அரசியல் அமைப்பினூடாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாகாண சபையை தமிழ் மக்கள் தங்களது தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்த போதும் குறைந்த அதிகாரங்களை கொண்ட அந்த மாகாணசபையைக் கூட இயங்கு நிலையில் வைத்திருப்பதற்கு எந்தவொரு அரசும் விரும்பாத நிலையை பார்க்கும்போது மாறிமாறி ஆட்சிப்பீடம் ஏறும் அரசாங்கங்கள் இந்த நாடு ஒரு பல் இன, பல மொழி பேசுகின்ற பல தேசிய இனங்கள் கூடி வாழும் நாடாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை உணர்ந்துகின்றது.

அவ்வாறு தேர்தல்களை நடாத்தினால் கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபைகளினால் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவதற்கான இயலுமையை மட்டுப்படுத்துவதே வரலாறு.

உள்ளுராட்சி மன்றங்களாக இருக்கட்டும் மாகாண சபைகளாக இருக்கட்டும் முழு அதிகார பலத்துடன் மத்திய அரசின் அதிகார, அரசியல் தலையீடின்றி; சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும்.

இச்சபைகள் வருமானத்தில் தன்னிறைவடைந்து மக்களுக்கான சேவையை வழங்க மத்திய அரசாங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சபைகளுக்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி பாரபட்சமின்றி அனைத்து சபைகளுக்கும் பகிரப்படுதல் வேண்டும். எனவே உள்ளுராட்சி சபைகள் சுயமாக இயங்கக்கூடிய வகையில் பின்வரும் விடயங்களை முன்மொழிகின்றேன்.

உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொதுவான விடயமாக இருந்தாலும் பொதுவாக இருந்தாலும் எமது பிரதேசங்களில் உள்ள சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

வருமானத்தை அதிகரிப்பதற்கு ஆதனவரி அறவீடு மிகவும் முக்கியமானது. ஆனால் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் ஆதன வரி மதிப்பீடு இதுவரை செய்யப்படவில்லை.

மதிப்பீட்டாளர்களுக்கான ஆளணிப்பற்றாக்குறை நிலவுறது.
இதற்காக விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டு குறிப்பிட்ட காலவரையறைக்குள் விலைமதிப்பீட்டு பணிகள் முடிக்கப்படல் வேண்டும்

அதே போன்று உள்ளுராட்சி சபைகளில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை, வாகனங்கள், இயந்திர உபகரணங்களை வழங்கி வினைத்திறனுடன் சபைகள் இயங்குவதற்கு இந்த பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்த வேண்டும்.

அதே போன்று தேர்தல்கள் செலவுக்காக 5.0 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடைபெறாதுள்ள மாகாண சபைத்தேர்தல்களை நடாத்துவதன்மூலம் அரசியல் சாசனத்திலுள்ள அதிகாரங்களை மக்கள்மயப்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் — தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்க...
07/11/2025

மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் — தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார், வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் இன்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இயலாமைக்குட்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்…!இயலா...
05/11/2025

இயலாமைக்குட்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்…!

இயலாமைக்குட்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டமொன்று கிளிநொச்சி திறன்விருத்தி நிலைய கேட்போர் கூட்டத்தில் நேற்று (04.11.2024) இடம்பெற்றது.

இயலாமைக்குட்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதத் வசந்த டி சில்வா மற்றும் இயலாமைக்குட்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவின் இணைத்தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஆலோசனைகூட்டத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த இயலாமைக்குட்பட்டவர்களுக்கான அமைப்புக்கள், அவர்களுக்கு சேவை வழங்கும் அரச திணைக்களங்கள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்போது இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான இயலாமைக்குட்பட்டவர்கள் உள்ளனர். அதனடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தின் இயலாமைக்குட்பட்டவர்களுக்கான பாராளுமன்ற குழுவானது அவர்கள் சார்ந்த வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்துச்செல்லும் வகையில் மாவட்டம்தோறும் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்படுத்தி திட்டமொன்மொழிவுகள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நேரடியான ஆலோசனைகளையும் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் இக்குழுவின் முதலாவது சந்திப்பானது யுத்தத்தினால் அதிகளவு பாதிப்புக்களை எதிர்கொண்டு அதிக இயலாமைக்குட்பட்டவர்களை கொண்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்காக இன்று இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும் என தெரிவித்தார். அத்துடன் விரைவில் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான சந்திப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

#ஊடகப்பிரிவு



வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்…!வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் கடந்த 31.10.2025 அன்று வவுனியா மா...
02/11/2025

வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்…!

வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் கடந்த 31.10.2025 அன்று வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் வவுனியா பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச ரீதியான பல்வேறு பிரச்சினைகள் பற்றி விரிவான கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக வவுனியாவில் காணப்படும் கல்குவாரிகளின் பிரச்சினை, வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகள், குளங்களை அண்மித்த காணிகளின் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து பிரச்சினைகள், பாடசாலைகளுக்கான ஆசிரியர் தேவைப்பாடு, வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், யானை வேலி அமைத்தல், பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள், மாநகரசபை ஆணையாளர், உறுப்பினர்கள் திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

#ஊடகப்பிரிவு



31/10/2025
நானாட்டான் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்…!மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று ...
30/10/2025

நானாட்டான் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்…!

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று (30.10.2025) நானாட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நானாட்டான் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச ரீதியான பல்வேறு பிரச்சினைகள் பற்றி விரிவான கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

#ஊடகப்பிரிவு



இலங்கை-பெலாருஸ் நாடுகளிற்கு இடையிலான நேரடி விமானசேவை தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டேன்.இலங்கை-பெலாருஸ் ...
29/10/2025

இலங்கை-பெலாருஸ் நாடுகளிற்கு இடையிலான நேரடி விமானசேவை தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டேன்.
இலங்கை-பெலாருஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக அண்மையில் தெரிவுசெய்யப்பட்டிருந்தேன்.
இவ்விமானசேவை இரு நாடுகளிகும் இடையே கல்வி, பொருளாதாரம், விளையாட்டு, கலாச்சார மற்றும் சுற்றுலாதுறையில் இனைந்து செயல்பட வாய்ப்பளிக்கும் என நம்புகிறேன். அத்துடன் அங்கு கல்வி கற்கும் 3000 ற்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் இலகுவாக பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
Attended the official ceremony of launching direct flights between Sri Lanka (Mattala) and the Belarussian capital Minsk today along with His Excellency Mikhail Kasko, Ambassador of the Republic of Belarus to India, Bangladesh, Nepal, and Sri Lanka, H.E. Mr. Levan Dzhagaryan, Ambassador of Russia in Srilanka, Mr. Vladzimir Barkun, Deputy Director General Marketing and International Affairs, Belavia International Airline.
The first plane of “Belavia” airlines was solemnly welcomed yesterday at the Mattala Rajapaksa International Airport.
Hopefully connecting both countries will provide the opportunity to develop tourism industry and strengthen bilateral cooperation in education, economics , trade, cultural and various other sectors in future.
I believe that this initiative will ease the difficulties faced by more than 3000 Srilankan students who are studying in Belarus.

Address

No. 63, Kaali Kovil Road, Kurumankadu, Vavuniya
Vavuniya

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share