Manikkapody Trust மாணிக்கப்போடி அறக்கட்டளை

  • Home
  • Manikkapody Trust மாணிக்கப்போடி அறக்கட்டளை

Manikkapody Trust மாணிக்கப்போடி அறக்கட்டளை கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக எமது சேவையை வழங்குகிறோம்

01/01/2025

புதிய 2025 ஆண்டு அனைவருக்கும் சுபிட்சமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்

Happy New Year 2025!
May this year bring you peace, joy, and countless opportunities for growth and success. Wishing you good health, prosperity, and happiness in all your endeavors. Here’s to a fresh start and a brighter future!

04/12/2024

கடந்த வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல உயிர் சேதங்கள் பொருளாதார சேதங்கள் ஏற்பட்டன, இதில் பல பாடசாலை மாணவர்கள் தங்கள் கற்கை உபகரணங்களை இழந்து தவிக்கின்றனர், அவர்களுக்காக அவசர கற்கை உபகரணக்களை வழங்கலாம் என முடிவெடுத்துள்ளோம். இந்தப் பணியில் உதவ விரும்புவோர் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

04/12/2024

#முடிந்ததைசெய்வோம் #முடியும்வரைசெய்வோம்

02/11/2024

அன்புடையீர்,
எங்கள் அம்மாவின் மறைவுக்குப் பிறகு இந்த இக்கட்டான நேரத்தில் எம்மை அணுகி இரங்கலைப் பகிர்ந்து கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக தமது வேலைப் பழுவுக்கு மத்தியிலும் வருகை தந்த கௌரவ நீதிபதிகள் சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகளுக்கும் எமது நன்றி.

தேர்தல் பிரச்சார காலம் ஆயினும், நேரம் ஒதுக்கி வருகைதந்த முன்னாள் அமைச்சர், முன்னாள் பா. ம. உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர், முன்னாள் அரசாங்க அதிபர் உட்பட பல கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் தற்போதைய வேட்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

மேலும், பிஸியான உலகில் சமூகவலைத்தளங்களினூடாக தங்கள் அன்பான வார்த்தைகள், அனுதாப செய்திகள் தெரிவித்தோர்
நேரில்வந்து பூமாலைகள், பூசெண்டுகள், மலர்வளையங்கள் அணிவித்தோர்/ அனுப்பிவைத்தோர் அனைவருக்கும் எமது பணிவான நன்றிகள்.

இதற்கும் மேலாக 24/10/2024 தொடக்கம் நேற்று வரை எங்கள் வீட்டில் அடுப்பெரிய விடாது தொடர்ந்து சமைத்த உணவுகளைப் பரிமாறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும் நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

மனமார்ந்த நன்றியுடன்,
நல்லம்மாவின் பிள்ளைகள்

Kumarasamy Manikkapoody
Manikkapody Rajathurai
Sri Shan
Sulojana Yogarajah
M Mangala Shanker

16/05/2024

#முடிந்ததைசெய்வோம்
#முடியும்வரைசெய்வோம்

01/01/2024

2024.01.01
அனைவருக்கும் மகிழ்ச்சி சமாதானம் மற்றும் வளம் நிறைந்த புதுவருடமாக அமையட்டும் 2024

Wishing you all a happy, peaceful and prosperous NEW YEAR 2024.

Merry Christmas
25/12/2023

Merry Christmas

11/05/2023

வணக்கம்🙏😊

08/04/2023

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*விடை தெரியாத வரை தான் வினாக்களுக்கு ஒரு சுவாரசியம் இருக்கும். எதிர்காலம் அறியாத வரை தான் நிகழ்காலத்திற்கு உயிர் உண்டு.*

*அடுத்த நொடி நடப்பது நடக்கட்டும். இந்த நொடியை நிம்மதியாக வாழ்வோம்.*

*மற்றவருக்கு நம்பிக்கையாக இருங்கள். ஆனால், ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதீங்க.*

*நாம் தெரிந்த நியாயம் இது என்று விவாதிக்கலாம் தவறில்லை. ஆனால், நமக்கு தெரிந்தது மட்டும் தான் நியாயம் என்று விவாதிப்பது தான் தவறு.*

*வாழ்க்கையில் வீணாக நடந்ததையும், கடந்ததையும் மறந்து விடுங்கள். இனி நடப்பதையும், கடப்பதையும் கவனமாக கையாளுங்கள்.*

*வறுமை தரும் தைரியத்தை பணத்தால் கூட தந்துவிட முடியாது.*

*சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்திற்கு இசை. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது சக்தியின் பிறப்பிடம்.*

*விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது இளமையின் இரகசியம். படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது அறிவின் பிறப்பிடம்.*

*நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள். அது மகிழ்ச்சியின் வழி. உழைக்க நேரம் ஒதுக்குங்கள். அது வெற்றியின் விலை.*

*கொடுத்தால் மறந்து விடுங்கள். கிடைத்தால் நினையுங்கள்.*

*ஆரம்பத்தில் நேசிப்பது ஒரு போதை. வேர்விட்டு வளரும் போது அது ஒரு கர்வம். காலப்போக்கில் அது ஒரு அலட்சியம். இருந்தும் இல்லாமல் போகும் போது தான் அது ஒரு கணத்த இதயமாகிறது.*

*பிறருக்கு வருவதை நீங்கள் தடுக்க நினைத்தால் உங்களுக்கு வருவது தானாக நின்று விடும்.*

*நல்லது நடந்தால் அதை அனுபவியுங்கள். கெட்டது நடந்தால் அதை அனுபவமாக்குங்கள்.

08/04/2023

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

தளர்ந்து நிற்காதே சோர்ந்து
இருக்காதே!
வளர்ச்சியில்.வீழ்ச்சி என்பது ஒரு நிகழ்ச்சி மட்டும் தான்
முயன்றால் எட்டும் உயரம் தான்...

உன் தடைகளையும்,எதிர்பார்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு முன்னேறும் போது வெற்றிகள் மலராகவும்,மாலையாகவும் மகுடமாகவும் வந்து சேரும்...

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றிவிட்டால் எது இருந்தாலும்,இல்லை என்றாலும் சாதிக்கமுடியும்!!!

Address

Munaikkadu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manikkapody Trust மாணிக்கப்போடி அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share