04/08/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பின் கவனி பாராட்டு கிடந்த தபால் நிலையத்தினை என் எஸ் டி யூத் யூனியன் ஆனது தன் கவனத்தை அதன் பக்கம் செலுத்தி பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இன்று அரச அதிகாரிகளின் பாவனிக்கும் மக்களின் அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு அந்த கட்டிடத்தினை நிர்மாணித்து நேற்றைய தினம் திறப்பு விழா செய்யப்பட்டது.
அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு
இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களையும் மறந்துவிடக்கூடாது.
சேனபுர ஜும்மா பள்ளிவாயிலின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், சேனபுர பொது நல அமைப்பு, மற்றும் அதனுடன் சார்ந்து பள்ளிவாயிலின் கீழ் இயங்கும் அனைத்து பொது அமைப்புகளுக்கும் மற்றும்
நலன் விரும்பிகளுக்கும் முழுமூச்சாக நின்று அதனுடைய வேலை திட்டங்களை முடித்த இளைஞர் அமைப்புக்கும் இந்த இடத்திலேயே நன்றிகளை தெரிவிக்க மறந்து விடக்கூடாது.
அதேபோன்று இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக சில பரிசீல்களை வழங்கிய சேனபுர ஸ்டோர்ஸ் உரிமையாளர் அவர்களுக்கும் மற்றும் சேனபுர ஜும்மா பள்ளிவாயலின் முன்னாள் பொருளாளர் ஏ எல் எம் அஸ்வர் அவர்களுக்கும் இந்த இடத்திலே நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்.
அதேபோன்று இந்நிகழ்ச்சியை நடத்தி தந்த எங்கள் ஊரின் அன்பு அறிவிப்பாளர் மௌலவி முஸம்மில் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை அமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம் .
அதேபோன்று சுமார் பத்து வருட காலமாக தங்களுடைய கடையை எந்த ஒரு லாபமும் இன்றி ஊரின் தேவைக்காக தபால் நிலையத்தை நடத்திச் செல்ல வழங்கிய சில்லறை கடை முதலாளி பரீட் அவர்களுக்கும் ஊர் மக்கள் சார்பாகவும் பள்ளிவாயல் நிர்வாகத்தின் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதேபோன்று ஒற்றுமையுடன் ஒரு முன்னேற்றத்திற்காக செயல்படுவோம் என்று கூறி முடிக்கின்றேன்.
நன்றி ...............….....................................................