We The Leaders Ramanathapuram

  • Home
  • We The Leaders Ramanathapuram

We The Leaders Ramanathapuram We The Leaders | Lead the Change

"என் மண் என் மக்கள்" என்னும் புனித பயணத்தை துவங்கிய இராமேஸ்வரத்தில் We The Leaders இயக்கத்தில் இணைந்த தன்னார்வலர்கள் அறி...
12/06/2026

"என் மண் என் மக்கள்" என்னும் புனித பயணத்தை துவங்கிய இராமேஸ்வரத்தில் We The Leaders இயக்கத்தில் இணைந்த தன்னார்வலர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இராமேஸ்வரம் நகராட்சி பகுதி தன்னார்வலர்கள் கலந்து கொண்டு அவரவர் கருத்துக்களை எடுத்துரைத்து அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என சூளுரைத்தனர்.

மாறுவோம்!! மாற்றுவோம்!!



We The Leaders Foundation || We The Leaders Ramanathapuram || K.Annamalai || Annamalai Warriors Ramanathapuram

தலைவர் திரு.அண்ணாமலை கண்டன அறிக்கை!!தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கு...
12/06/2026

தலைவர் திரு.அண்ணாமலை கண்டன அறிக்கை!!

தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

K.Annamalai

மாற்றத்தை விரும்பும் பாஜ நிர்வாகிகள்!!வலிமையான பாரதம்,  வளமான  தமிழகம் அமைய  அந்தத் திருவண்ணாமலையாரின் அவதாரமாக நான் கரு...
12/06/2026

மாற்றத்தை விரும்பும் பாஜ நிர்வாகிகள்!!

வலிமையான பாரதம், வளமான தமிழகம் அமைய அந்தத் திருவண்ணாமலையாரின் அவதாரமாக நான் கருதும் அண்ணாமலையாரின் பின்னால் நிற்பது சுயநலத்திற்காக அல்ல தேச நலனுக்காக நெஞ்சத்தில் நீறு பூத்த நெருப்பாய் ஆயிரம் கேள்விகள் இத்தனை காலம் இங்கிருந்து விட்டு செல்கிறோமே என்ற கவலை ஆனால் இந்த முடிவு காலத்தின் கட்டாயம்.

சித்தாந்தங்களை தாண்டிய ஓர் உணர்வு அண்ணாமலையாரின் பின்னாடி நிற்பது பதவிக்காக அல்ல, இப்பொழுது பதவி இல்லாமலும் அல்ல மாற்றம் வெறும் ஏமாற்றமாக போய்விட்ட காலத்தில் பிறை சந்திரனாய் முழு நிலவாய் எங்கள் கண்களுக்கு தெரிந்த ஒற்றை நம்பிக்கை அண்ணாமலை!!

அவர் பின்னால் நின்று மாறுவோம்! மாற்றுவோம் என்ற ஒற்றை முழக்கத்தோடு இனி பயணிப்பேன்.

திருமதி.ஜெயந்தி (இராமேஸ்வரம்).

K.Annamalai || We The Leaders Foundation

12/06/2026

வணக்கம்,

உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்காக தற்போது Referral Code முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

wetheleader.org இணையதளத்தில் புதிய உறுப்பினர்களை பதிவு செய்யும் போது, Referral Code பகுதியில் உங்கள் Member ID-யை (கடைசி 6 எண்கள்) பதிவு செய்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுங்கள்.

இதன் மூலம் உங்கள் முயற்சியினால் எத்தனை உறுப்பினர்கள் இணைந்துள்ளனர் என்பதை நீங்களே உங்கள் Profile-ல் அறிந்து கொள்ள முடியும். மேலும், உறுப்பினர் சேர்க்கை பணியில் உங்களின் பங்களிப்பை தலைமை அலுவலகத்திலும் அறிந்து கொள்ள முடியும்.

நன்றி.!!

இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே,தமிழகத்தை வழிநடத்தும் நாளைய தலைவராக இன்றே இணைந்திடுவீர்.மாறுவோம்! மாற்றுவோம்!!உங்கள் பகுதி...
11/06/2026

இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே,
தமிழகத்தை வழிநடத்தும் நாளைய தலைவராக இன்றே இணைந்திடுவீர்.

மாறுவோம்! மாற்றுவோம்!!

உங்கள் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதற்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்.

cell: 9443465991 , 097156 31683 , 8189827272.



K.Annamalai || We The Leaders Foundation || We The Leaders Ramanathapuram

ஒவ்வொரு கிராமத்தின் துடிப்பு மிக்க இளைஞர்கள் அழைக்கிறோம்.வாருங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை நாம் நிர்ணயிப்போம்!! மாறுவோம...
11/06/2026

ஒவ்வொரு கிராமத்தின் துடிப்பு மிக்க இளைஞர்கள் அழைக்கிறோம்.

வாருங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை நாம் நிர்ணயிப்போம்!!
மாறுவோம்! மாற்றுவோம்!!



K.Annamalai || We The Leaders Foundation

அன்புக்குரிய இளம் தலைமுறையினரே உங்களால் இந்த சமூகம் வழிநடத்தப்பட வேண்டும்.  K.Annamalai || We The Leaders Foundation || ...
11/06/2026

அன்புக்குரிய இளம் தலைமுறையினரே உங்களால் இந்த சமூகம் வழிநடத்தப்பட வேண்டும்.



K.Annamalai || We The Leaders Foundation || Annamalai Warriors Ramanathapuram

10/06/2026

Heartiest congratulations to our Hon. PM Thiru Narendra Modi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.

May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.

இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளி...
10/06/2026

இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில், ஐயா பாரதிராஜா அவர்கள் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி.

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு, எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

தலைவர்
K.Annamalai

Address

Kenikkarai

623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share