GREEN LAYER - Environmental Organization, Jaffna, Srilanka.

  • Home
  • GREEN LAYER - Environmental Organization, Jaffna, Srilanka.

GREEN LAYER - Environmental Organization, Jaffna, Srilanka. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GREEN LAYER - Environmental Organization, Jaffna, Srilanka., Social service, .

கிளிநொச்சி மாவட்டத்தில் பசுமையினை ஏற்படுத்த Greenlayer சுற்றுச்சூழல் அமைப்பாகிய நாங்கள் புதிய கிளையினை 18.10.2025 அன்று ...
20/10/2025

கிளிநொச்சி மாவட்டத்தில் பசுமையினை ஏற்படுத்த Greenlayer சுற்றுச்சூழல் அமைப்பாகிய நாங்கள் புதிய கிளையினை 18.10.2025 அன்று கௌரவ ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள மேற்படி எமது Greenlayer அமைப்பின் கிளை - பெரும் எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நாட்டி பசுமையினை ஏற்படுத்த புறப்பட்டுள்ள எங்களுக்கு உங்கள் சிறு சிறு உதவிகளை இந்த இணைப்பில் செலுத்தி எங்களை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Kili People initiating Watering Project for 3400 plants at Kilinochchi Campus - University of Jaffna. These plants are surrounding of 3 Faculties in Kilinochchi Campus.

31/03/2025
எங்கள் தேசத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்ததும் பொருளாதார ரீதியில் பெரும் பயனைக் கொடுக்கவல்லதுமான  பத்தாயிரம் முழு நெல்லி...
25/03/2025

எங்கள் தேசத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்ததும் பொருளாதார ரீதியில் பெரும் பயனைக் கொடுக்கவல்லதுமான பத்தாயிரம் முழு நெல்லிக்கன்றுகளை நடும் எமது செயற்திட்டத்தில் நீங்களும் இணைந்து கொண்டு உங்களின் வீடுகளில் ஒரு முழு நெல்லிக்கன்றினை நட முன்வாருங்கள்.

04/11/2024
03/11/2024

Copied
*அச்சுறுத்தும் காலநிலை!*

WWF (World Wildlife Fund) 2024 லிவிங் பிளானட் அறிக்கை:-

1970-2020 காலகட்டத்தில் உலகின் விலங்கினங்கள் சராசரியாக 73% குறைந்துள்ளன.

நன்னீர் உயிரினங்கள் 85%, நிலவாழ் உயிரினங்கள் 69%, கடல் வாழ் உயிரினங்கள் 56% வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இது உலகின் ஒவ்வொரு மூலையையும் பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சனை.

பூமி ஆபத்தான நிலையை நெருங்குகிறது, இது மனித இனத்திற்கான இயற்கையின் பகிரங்கமான எச்சரிக்கை. இது மனிதகுலத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

காரணங்கள்: இதற்கு மனித நடவடிக்கைகள், குறிப்பாக இயற்கை வாழ்விடங்களை அழித்தல், காலநிலை மாற்றம் போன்றவை முக்கிய காரணங்கள்.

*பல்லுயிர்ச் சூழல்* *அழிவு* : பூமியில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள் வேகமாக குறைந்து வருகின்றன.

*சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பு:* உயிரினங்களின் இழப்பு சுற்றுச்சூழல் சமநிலையை கடுமையாக பாதித்து, மனிதர்களின் உணவு, மருத்துவம், நீர் போன்ற அடிப்படை தேவைகளையும் பாதிக்கும்.

*காலநிலை மாற்றம்:* உயிரினங்களின் இழப்பு காலநிலை மாற்றத்தை மேலும் தீவிரமாக்கும்.

*என்ன செய்யலாம்?*

இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்: காடுகளை அழிப்பதை நிறுத்தி, புதிய காடுகளை உருவாக்க வேண்டும்.

சுத்தமான எரிசக்தி: புதைபடிவ எரிபொருட்களை குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

*பசுமை நுகர்வு:* சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
எல்லா செய்திகளும் எல்லோருக்கும் தெரியும்! ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார்?? *இயற்கை தான்*

31/10/2024

தீபாவளியின் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் புது வண்ணங்கள் சேர்க்கட்டும். தீபாவளி கொண்டாட்டம் உங்கள் மனதில் அன்பு, அமைதி, சந்தோஷம் என மூன்றையும் பரப்பும் ஒரு அழகிய ஒளியாய் இருக்கட்டும். இந்த பண்டிகை உங்கள் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றிட ஒரு புதிய தாரகையாக அமைந்திட வாழ்த்துக்கள்

29/10/2024

புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தினைச் சேர்ந்த வைத்திலிங்கம் பொன்னுத்துரை (Postmaster ) அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு 100 ற்கும் மேற்பட்ட புங்குடுதீவில் உள்ள (ஆலடி)தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்விகற்கும் மாணவச் செல்வங்களுக்கு 100 முழுநெல்லிக்கன்றுகளும் 100 மாங்கன்றுகளும் 29.10.2024 இன்று எமது Greenlayer அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டது. இதற்கு வைத்திலிங்கம் பொன்னுத்துரை (Postmaster ) அவர்களின் மகன் ஆனந்தன் அவர்கள் (சுவிஸ்) நிதியுதவியளித்துள்ளார்.

எமது Greenlayer சுற்றுச்சூழல் அமைப்பு ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் 92 000 க்கு மேற்பட...
23/10/2024

எமது Greenlayer சுற்றுச்சூழல் அமைப்பு ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் 92 000 க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நாட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த எமதமைப்பு எதிர்வரும் 31.12.2024 முடியும் போது ஐந்தாண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும். இதுவரை நாட்டிய மரக்கன்றுகளின் தற்போதய நிலைகளை யாவரும் கவனிக்கும் வகையில் பெயர்ப்பலகைகளை நாம் நாட்டிய மரக்கன்றுகள் ஒவ்வொன்றிலும் தொங்கவிட முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக 1000 பலகைகளை செய்துள்ளதுடன் 23.10.2024 அன்று யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் 2020 மற்றும் 2022 இல் நாட்டிய மரக்கன்றுகள் எம்மால் நாட்டப்பட்டன என்பதனை ஆதாரப்படுத்தும் நோக்கில் 7 மரக்கன்றுகளுக்கு பெயர்ப்பலகைகள் மாணவர்களினால் தொங்கவிடப்பட்டன.

Address


40000

Alerts

Be the first to know and let us send you an email when GREEN LAYER - Environmental Organization, Jaffna, Srilanka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to GREEN LAYER - Environmental Organization, Jaffna, Srilanka.:

  • Want your organization to be the top-listed Government Service?

Share