Sheik Mansoor M

Sheik Mansoor M Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sheik Mansoor M, Gudiyattam.

கடிதம் 192024 பாராளுமன்றத்  தேர்தலுடன் ஒடிசா சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. ஒடிசா  மாநிலத்தில் நார்லா என்கிற சட்டமன்ற தொக...
20/12/2024

கடிதம் 19

2024 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒடிசா சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. ஒடிசா மாநிலத்தில் நார்லா என்கிற சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக சென்றேன்.

இந்தப் பயணம் எண்ணற்ற அனுபவங்களை தந்தது. மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் அரசு தந்த இந்த பணியை செய்வதற்கு ஆவலுடன் ஒடிசா சென்றேன்.

நேரடி விமானம் கிடைக்காததால் சத்தீஸ்கர் மாநிலத்தில் உடைய ராய்ப்பூர் சென்று அங்கிருந்து ஒடிசா மாநிலத்திற்கு சென்றேன்.
காரில் பயணிக்கும் பொழுது அந்த இயற்கை வளங்களின் அழகைகாண இரு கண்கள் போதவில்லை.

மழை, மலை, அருவி, வனம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

தேர்தல் மேற்பார்வையாளருடைய பணி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுடைய பணியில் எந்த குறுக்கிடும் செய்யக்கூடாது. சிறு பிழை இருந்தால் சுட்டிக்காட்டி அதை சரி செய்ய வேண்டும். பெரும்பிழை ஏதேனும் தெரிய வந்தால் உடனே தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவில் தேர்தல் ஒரு திருவிழா போலவே நடைபெறுகிறது. ஒடிசா மாநிலமும் விதிவிலக்கல்ல.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து வேட்பாளர்களும் நண்பர்கள் போல பேசிக்கொண்டு சிரித்த மகிழ்ந்ததை காண முடிந்தது.

அதிகாலையில் நான் தங்கி இருந்த அரசு மாளிகைக்கு அருகில் உள்ள ஒரு மலைக்கு ட்ரக்கிங் சென்றோம். பழங்குடியினர் உள்ள அந்த மலையில் வெகு தூரம் நடந்த சென்றது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

அனைத்து அருவி அருகில் ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டு அதில் பழங்குடியின மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டுள்ளனர். அந்த இயற்கை வளங்களை அந்த கடவுள் பாதுகாப்பதாகவே அவர்கள் எண்ணுகின்றனர்.
நான் சென்ற தினம் மழை என்பதால் அருவி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வந்து ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அலுவலர்களும் இவ்வளவு அதிகமாக அருவிபெருக்கெடுப்பதை இதுவரை கண்டதில்லை என்று குறிப்பிட்டனர்.

அனைத்து இடங்களிலும் ஒரு நெகிழி பைகள் பாட்டல்கள் என்று எதையும் காண முடியவில்லை. பின் தங்கிய மாநிலம் என்று கூறுகிறோம், ஆனால் இயற்கையை அதிகமாக நேசிக்க கூடிய மனிதர்களாகவே இருந்தனர். வெகு தூரம் நடந்து மலைக்குகைகள், ஓவியங்கள் போன்ற வரலாற்று சிறப்புமிக்க சுவடுகளை காண முடிந்தது.
ரபந்த்ரா, டோங்கிணிசம்சார போன்ற இடங்களை காண முடிந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சூரிய கோவிலை பார்க்க சென்று கொண்டிருந்தோம் ஆனால் நேரமின்மை காரணமாக தலைநகரில் அருகிலுள்ள கந்தகிரி உதயகிரி கோட்டை காண இறைவன் நல்கினான். ஜெயின துறவிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு மனிதர்களுடன் பண்பாட்டை எடுத்து வைத்ததை அறிய முடிந்தது. பின்னர் டௌலி(Dhaulii) சென்று அசோகர் கலிங்கப் போருக்கு பின்னாடி பௌத்தத்தை தழுவுன வரலாற்றை அறிய முடிந்தது. இரண்டு இடங்களும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அதைக் காணபெரும் மகிழ்ச்சி.

வீட்டிற்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள சில இனிப்பு பண்டங்களை வாங்கி சென்னை திரும்பினேன்.

வாசித்தமைக்கு நன்றி

கடிதம் 182024 ஆண்டு முடிய போகும் தருவாயில் உள்ளோம். இந்த வருடத்தின் சிறந்த அனுபவங்களை இங்கு  பகிர்கிறேன். வயநாடு நிலச்சர...
19/12/2024

கடிதம் 18

2024 ஆண்டு முடிய போகும் தருவாயில் உள்ளோம். இந்த வருடத்தின் சிறந்த அனுபவங்களை இங்கு பகிர்கிறேன்.

வயநாடு நிலச்சரிவு பேரிடரில் கேரளம் சென்று பணிபுரிய தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட குழுவில் ஒருவனாக வயநாடு சென்றேன். நிறைய அனுபவங்களை இந்தப் பயணம் எனக்கு தந்தது.

முதலில் ஒரு நிவாரண முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தது உண்மையில் பிரமிக்க வைத்தது. அந்த நிவாரண முகாமல் சமையல் செய்வதற்கான தனி இடங்களை தேர்வு செய்து தொடர்ந்து சமையல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேநீர், கட்டன்சாயா, பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகள் எந்நேரம் வழங்கப்பட்டு கொண்டிருந்தது.

நிவாரண முகாமில் பாதுகாப்புக்கு வந்தவர்களே வாலன்டியர்ஸ் (Volunteers) ஆக மாறியது. அவர்களே சக பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு உதவிகள் புரிந்தது ஒரு நல்ல அனுபவம்.

அனைத்து உடைமைகளும் இழந்த மக்கள் கவலையை மறக்க விளையாட்டு சம்பந்தப்பட்ட உபகரணங்களை நிவாரண முகாமல் கொண்டு வந்து விளையாட செய்தது உள்ளபடியே சந்தோஷமாக இருந்தது.

இரண்டாவது அங்குள்ள மக்கள் நிலச்சரிவருக்கு பழக்கப்பட்ட மக்களாகவே தெரிந்தனர். சின்ன சின்ன நிலச்சரிவுகளை சாதாரணமாக கடந்து போனவர்கள் ஆகவே இருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறையில் என் ஜி ஓக்கள்(NGO) அதிக அளவில் பணிகளில் ஈடுபடுவதை காண முடித்தது. நிவாரண பொருட்கள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே இருந்தது.

பாதிப்படைந்த இடங்களில் நேரடி கள ஆய்வுகளில் ஈடுபடும் பொழுது, இறந்தவர்களின் உடலின் பகுதிகள் பெறப்படும் பொழுது இயற்கைக்கு முன் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர முடிந்தது.

மிக அழகான இடம். தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று கூறுவார்களாம். ஏன் இயற்கை இப்படி அவர்களை சோதித்தது என்பது தெரியவில்லை.

தமிழக அரசால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நிலச்சரிவில் இறந்திருந்தார்கள் அவர்களுக்கு நிவாரண உதவி, 150 க்கும் மேற்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், பொக்லைன், உபகரணங்கள், மோப்ப நாய்கள் இன்னும் பல உதவிகளை தமிழக அரசு நல்ல முறையில் செய்து தந்தது.

ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.

Brother Marriage.
12/12/2023

Brother Marriage.

சமீபத்துல ரொம்ப சந்தோஷப்பட வச்ச ஒரு நிகழ்வு, சுரங்க தொழிலாளர்கள் 41 பேர  மீட்டது.   இயற்கையோட பெரும் போராட்டத்திற்கு பிற...
30/11/2023

சமீபத்துல ரொம்ப சந்தோஷப்பட வச்ச ஒரு நிகழ்வு, சுரங்க தொழிலாளர்கள் 41 பேர மீட்டது.

இயற்கையோட பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது ஒரு வரலாறு தான்.
அர்னால்ட் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஏழை தொழிலாளர்கள் என்றதனால் அப்படியே விட்டுவிடுவார்களா என்று தோன்றியது. ஆனால் இறுதி வரைக்கும் போராடி மீட்டது ஒரு பெரும் சாதனை.

கடிதம் 17குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியராக  பணிபுரிந்த போது ஒரு நபர் மரம் நடுவதில் பிரச்சனை செய்வதாக வட்டாட்சியர் தெரிவ...
03/11/2023

கடிதம் 17

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது ஒரு நபர் மரம் நடுவதில் பிரச்சனை செய்வதாக வட்டாட்சியர் தெரிவித்தார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே வழக்கு பதியப்பட்டதாகவும் தெரிவித்தார். மரம் நட வேண்டும் என்று அந்த நபர் என்னை பார்க்க அலுவலகத்திற்கு வந்தார்.

அவரை அழைத்து விசாரணை செய்த பொழுது. அவர் தன் பெயர் ஸ்ரீகாந்த் என்றும், தான் ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக தெரிவித்தார், மேலும் தனது அண்ணன் இறப்பிற்கு பிறகு கிராமத்திலே தங்கியுள்ளதாகவும், எனது கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒரு Social Forest, தற்போது அழிக்கப்பட்டு மணல் கொள்ளை நடப்பதாக தெரிவித்தார். அந்த இடத்தில் மீண்டும் வனத்தை உருவாக்க முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அவரின் நோக்கத்தை சரியாக புரியாத நான், சட்ட ஒழுங்கு ஏதும் செய்யக்கூடாது என்று கண்டித்து அனுப்பினேன்.

இரண்டு நாட்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ஒரு கைபேசி அழைப்பு எனக்கு வந்தது, அதில் மாவட்ட ஆட்சியர் என்னிடம் நீங்கள் புதிதாக பதவி ஏற்று உள்ளீர்கள், நல்ல எண்ணத்தில் உள்ள மனிதர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். ஸ்ரீகாந்துக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

பிறகு ஸ்ரீகாந்த் அழைத்து மரம் நடுவதில் என்ன பிரச்சனை என்று கேட்டபோது ஆக்கிரமிப்பு தாரர்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பிறகு வருவாய் துறை அலுவலர்கள் காவல்துறை உதவியுடன் ஒரு மாத காலத்திற்குள் அங்கிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

பல முயற்சிகளுக்குப்பின் அந்த இடத்தில் 7000 மரக்கன்றுகள் நட்டு மாவட்ட நிர்வாகத்தை ஆச்சரியப்படுத்தினார்.

அந்த முயற்சிக்காக அவருக்கு தமிழக அரசின் இளைஞர் விருதும் விகடன் விருதும் கிடைத்தது எனக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

இரண்டு வாரத்திற்கு முன்னர் சென்னையில் எனது அலுவலகத்தில் என்னை சந்திக்க வந்த அவர் அந்த விருதினை என்னிடம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு நல்ல நண்பராகி விட்டார்.

அவர் வாழ்வில் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வாசித்தமைக்கு நன்றி...

கடிதம் 16சமீபத்தில் இயற்கை வழியில் வேளாண்மை என்ற புத்தகத்தை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜப்பான் நாட்டில் பிறந்த  மசானபு  ...
10/09/2023

கடிதம் 16

சமீபத்தில் இயற்கை வழியில் வேளாண்மை என்ற புத்தகத்தை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜப்பான் நாட்டில் பிறந்த மசானபு புகொகா என்ற இயற்கை விவசாயி, அவரது தோட்டத்தில் செய்த விவசாய புரட்சியின் வடிவமே இந்த புத்தகம்.

தனது நிலத்தில் அவர் செய்த விவசாய முறையினை "ஒற்றை வைக்கோல் புரட்சி" என்கிற புத்தகத்தின் மூலமாக தெளிவுபடுத்தி இருந்தார். இந்த புத்தகம் ஆங்கிலத்தில் " One Straw Revolution " என்ற பெயரில் வெளிவந்து, பல நாடுகளில் இயற்கை விவசாயம் நோக்கி மக்களை உந்தி தள்ளியது.

இவரது விவசாய முறையில் நிலத்தை பயிரிடத் தேவையில்லை, உரம் தேவையில்லை, பூச்சிக்கொல்லி தேவை இல்லை, கத்தரித்தல் தேவையில்லை மற்றும் களையெடுத்தல் தேவை இல்லை.
வடிவேல் கூறுவது போல "எதுவும் செய்யாதிருத்தல்".
இவர் கூறுவது நெல்லை மற்ற செடி, கொடிகளை விவசாயி வளர்க்கவில்லை... இயற்கை அதை வளர்க்கிறது...

இதில் விவசாயிக்கு எந்த விதமான பணியும் இல்லை.. என்று குறிப்பிடுகிறார். மேலும் இவர் "நிலத்தை பாதுகாக்கப் பிராத்தனை செய்யும் விவசாயிகளே அதனை அழித்துவிட்டார்கள்... மக்கள் இயற்கையை அழிப்பதை எதிர்க்கிறார்கள். ஆனால் வளர்ச்சியின் பெயரால் இயற்கை நாசமாவது மன்னித்து விடுகிறார்கள்." என்று குறிப்பிடுகிறார்.

இயற்கை விவசாயத்தின் மூலம் தண்ணிரவு பெற முடியும் என்பதை இந்த புத்தகத்தின் வாயிலாக நிறுவ முயற்சி செய்து உள்ளார். இயற்கையை மனிதன் புரிந்து கொள்ளும் முயற்சி செய்யாமல் இயற்கையை அதன் போக்கில் வளர விடுவது மட்டுமே மனித இனம் இந்த பூமியில் பிரவேசிப்பதற்கான ஒரே தீர்வாக இருக்கும் என்பதை திடமாக எடுத்துரைக்கிறார்.

அவரது உணவு முறைக்கு அவர் வைத்த பெயர் "இயற்கை உணவு முறை". அறிவியல் உலகம் முறை இயற்கையை முற்றிலுமாக அழித்து மண்ணை மலட்டுத்தன்மை அடைய வைக்கப் போவதாக அவர் கணிக்கிறார்.

விவசாயம் பெரு முதலாளிகளின் கைகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை திடமாக இந்த புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

விவசாயத்தின் மீது உள்ள பார்வையில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வர இந்த புத்தகம் முயற்சி செய்திருக்கிறது. விதை பந்துகள் முறையை பெரிதும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

ஜப்பான் மக்களால் பெரிதும் போற்றுதலுக்கு உண்டான இவர் பல அயல் நாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது முறையை மக்கள் பயன்பட எடுத்துரைத்திருக்கிறார்.

இந்த புத்தகம் எனக்கு ஒரு மிகப்பெரிய புதிய அனுபவத்தை தந்தது..

வாசித்தமைக்கு நன்றி

கடிதம் 15. "சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்" என்ற புத்தகத்தை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ்...
29/07/2023

கடிதம் 15.

"சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்" என்ற புத்தகத்தை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த
ஆர்.பாலகிருஷ்ணன் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

சிந்துவெளி நாகரிகம் பரவிய இடங்களில் பயன்படுத்தப்பட்ட ஊர் பெயர்கள் இன்றளவும் தமிழகம், வட மேற்கு இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் பயன்பாட்டில் உள்ளதை தரவுகளுடன் விளக்கியுள்ளார். இவரது இந்த முயற்சி பல தொன்மையான நாகரீகம் சார்ந்த Journals வெளிவந்துள்ளதை, புத்தக நடையில் தொகுத்துள்ளார்.

சிந்து நாகரிகம் என்பது திராவிடர்களுடைய நாகரீகம் என்பதை பல தரவுகள் கொண்டு நிறுவ முயற்சித்துள்ளார்.

சிந்து நாகரிகத்தில் சேவல் சண்டை நடந்ததை மெய்ப்பிக்கும் விதமாக நாணயம் வெளியிடப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு இன்றளவும் இந்தியாவில் சேவல் சண்டை தென் தமிழகத்தில் நடப்பதோடு இணைத்துப் பார்த்து சிந்து நாகரிகம் திராவிடர்களுடையது என்பதை நிறுவ முயற்சித்துள்ளார்.

ஐராவதம் மகாதேவன் மற்றும் அஸ்கோ பர்போலா போன்ற அறிஞர்களின் கருத்தியல் கொண்டும் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்.

திராவிடர்கள் மலைகளில் வாழ விரும்பியவர்கள் என்று கூறியுள்ளது வியப்பாக இருந்தது.

(பல தரவுகள் சம்பந்தமான அட்டவணை இந்த புத்தகத்தில் இருந்தது.)
கடந்த புத்தகத் திருவிழாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட புத்தகம் என்ற பெருமைக்குரியது.

வாசித்தமைக்கு நன்றி....

பிடித்திருந்தால் மட்டும் மற்றவர்களுக்கு பகிரவும்....

கடிதம் 14நடமாடும் நூலகம்மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் எனக்கு அலைபேசி மூலம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க கேட்டுக்கொண்டார்.மாவட்...
20/05/2023

கடிதம் 14

நடமாடும் நூலகம்

மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் எனக்கு அலைபேசி மூலம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அறைக்கு சென்ற பொழுது மாவட்ட ஆட்சியருடன் கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் உறுப்பினர்கள், நூலக அலுவலர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தனர். ராமநாதபுரம் மக்களிடையே கற்றல் எண்ணத்தை அதிகப்படுத்துவதற்காக ஒரு நடமாடும் நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தனது எண்ணத்தை தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் உதவியுடன் நடமாடும் நூலகத்தை உருவாக்க தனது திட்டத்தை தெரிவித்தார். அந்தத் தனியார் கல்லூரி பேருந்து ஒன்றை நடமாடும் நூலாகமாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அந்தப் பேருந்தை நடமாடும் நூலகமாக மாற்றுவதற்கு தேவையான வடிவமைப்பையும் வெளிப்புறத் தோற்றத்தையும் உருவாக்கி தருவதாக உறுதி அளித்தார்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேருந்தை கல்லூரி நிர்வாகத்திடம் பெற்று தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இடம் பேசி வடிவமைப்பையும், வெளிப்புறத் தோற்றத்திற்கான டிசைன்களையும் பெற்று நடமாடும் நூலகத்தை ராமநாதபுரம் முகவை சங்கமம் புத்தகத் திருவிழாவிற்கு முன்னதாக தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரிடம் சற்று சந்தேகமாக இந்த நடமாடும் நூலகம் பயனுள்ளதாக இருக்குமா என்று எனது ஐயத்தை கேட்டேன். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிச்சயமாக இந்த நடமாடும் நூலகம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அன்று தொடங்கி பல அரசு அதிகாரிகளின் உதவியோடும், தனியார் கல்லூரி மற்றும் நிறுவனத்தின் உதவியோடும் நடமாடும் நூலகம் உருவாக்கப்பட்டது. நடமாடும் நூலகத்தில் சுமார் 2000 புத்தகத்திற்கும் மேலாக மாவட்ட நூலக அலுவலரின் ஒத்துழைப்போடு புத்தகங்களை அடுக்கி வைத்தோம். பின்னர் முகவை சங்கம புத்தகத் திருவிழாவில் நடமாடும் நூலகத்தை மாணவர்களின் பார்வைக்கு பயன்பாட்டிற்கும் புத்தகத் திருவிழா நடக்கும் மைதானத்திற்கு கொண்டு சேர்த்தோம்.

மாணவர்கள் ஆர்வத்தோடு நடமாடும் நூலகத்தை கண்டு மகிழ்ந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் இந்த நடமாடும் நூலகத்தை எங்களது பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த நடமாடும் நூலகம் ஒவ்வொரு பள்ளிக்கும் வந்து சேரும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

இந்த கல்வி ஆண்டு தொடங்கியவுடன் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த நடமாட நூலகம் செல்வதற்கான திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் நடமாடும் நூலகம் முக்கிய இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களிடையே அறிமுகமாகி கற்றல் ஆர்வத்தை மக்களிடையே தூண்டச் செய்தது. பல மக்கள் தங்களது கருத்துக்களை நடமாடும் நூலகத்தில் வைத்துள்ள புத்தகத்தில் தெரிவித்தனர். நடமாடும் நூலகத்தின் முயற்சிக்கு மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

அனைத்து நாட்களிலும் ஐந்து முதல் பத்து நாளிதழ்களையும், வாரத்தில் 10 வார இதழ்களையும் வாங்கி நடமாடும் நூலகத்தில் வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாசித்தமைக்கு நன்றி.
விரும்பினால் மற்றவர்களுக்கு பகிரவும். நன்றி.

கடிதம் 13பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் காணப்படும் இந்த ரக மர இருக்கைகளில் உள்ள  நெகிழி கயிறானது சிறிது காலத்திற்குப் ப...
07/05/2023

கடிதம் 13

பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் காணப்படும் இந்த ரக மர இருக்கைகளில் உள்ள நெகிழி கயிறானது சிறிது காலத்திற்குப் பிறகு சேதமடைந்து விடுவதால் அந்த இருக்கையை பயன்படுத்தப்படாமல் விடுகிறோம். அதில் உள்ள நெகிழி கயிரினை முழுவதுமாக நீக்கி மீண்டும் பின்னி பயன்படுத்தக் கூடியதாக மாற்றும் பணியை செய்து கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றும் இந்த பணியானது கவனத்துடன் செய்ய வேண்டிய ஒன்று. சிறிது கவன சிதறல் ஏற்பட்டாலும் மீண்டும் அந்த வரிசையை முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அந்தப் பெரியவரிடம் பேசும் பொழுது இந்த நெகிழியை கயறை பின்னுவதற்கு குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் ஆகும் என்று கூறினார்.

பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த பணி சூழலில், ஒரு நபர் எந்தவிதமான பரபரப்புக்கும் இடம் அளிக்காமல் தனது பணியை பொறுமையாகவும் கவனத்துடனும் செய்து கொண்டிருந்தார்.

வாழ்வில் எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்க வேண்டும் என்பதில்லாமல் சில சமயங்களில் பொறுமையாகவும் நிதானத்துடனும் இருக்கலாம்.

வாசித்தமைக்கு நன்றி.

கடிதம் 12ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவின் போது கலை மற்றும் இலக்கிய ஆர்வலர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றினேன். அந்த சங்க...
30/04/2023

கடிதம் 12

ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவின் போது கலை மற்றும் இலக்கிய ஆர்வலர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றினேன். அந்த சங்கத்தின் உறுப்பினரான வான்தமிழ் sir, இந்த புத்தகத்தை எனக்குத் தந்து நிச்சயமாக இதை படியுங்கள் என்றார்.

புத்தகத்தின் பெயர் "யாத் வசேம்".
இது தமிழ் வார்த்தை தானா என்று கேட்டேன். புத்தகத்தை படியுங்கள் உங்களுக்கே புரியும் என்றார்.

சில நாட்களுக்குப் பிறகு வாசிக்க ஆரம்பித்தேன். இந்த புத்தகம் உலகில் மதங்களின் பெயர்களால் நடக்கக்கூடிய மனிதக் கொலைகளையும் அதன் கோரமான பின்புலத்தையும் கேள்வி கேட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் பின்பகுதியில் ஒரு சில வரிகள் "ஹிட்லர் வரலாற்றில் மறைந்து போயிருந்தான். ஒரு அரக்கனை உலக மறந்து இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் வீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில் எங்கும் ஹிட்லரின் "மைக்கேம்ப" பளபளக்கும் பிரதிகள் கிடைக்கின்றன. எங்கிருந்து மறுபடியும் இந்த உற்சாகம் ?ஏன் அவன் வெற்றி ஆர்வத்தை தூண்டுகிறது? யாருக்கு லட்சியமாகிறான்? ஹிட்லர் மறுபடியும் பாராட்டுக்குரியவன் ஆகிறான். கேள்வி என்னை வாட்டுகிறது. பயமுறுத்துகிறது"

மேற் சொன்ன வரிகள் இந்த புத்தகத்தின் மீதுள்ள ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியது. இந்த புத்தகம் முதற்பாதி நாஜிப்படையிலிருந்து தப்பித்த ஒரு யூத குடும்பம் பிரிந்து அப்பா மகள் மட்டும் இந்தியா வருகிறார்கள். மனைவி, மகள், மகன் நாஜிப்படையிடம் சிக்கிகொள்கிறார்கள். இந்தியா வந்த அந்த அந்தப் பெண் அப்பாவின் இறப்பிற்கு பிறகு ஒரு இந்திய குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து இங்கேயே திருமணம் முடித்து, 60 வயதிற்கு பிறகு தன்னுடைய சொந்தங்களை தேடி ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு சென்று தனது சொந்தங்களை கண்டுபிடித்தாளா? என்பதுதான் கதைக்களம்.

இந்த புத்தகத்தில் யூதர்களுக்கு நாஜிப் படைகள் செய்த ஒவ்வொரு கொடூரத்தையும் விவரிக்கிறது. பல தருணங்களில் இந்த புத்தகத்தில் குறிப்பிடும் கொடூரங்கள் பலருக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம். பின்னர் யூதர்கள் இஸ்ரேல் வந்தடைந்த பின்னர் பாலஸ்தீனருக்கு இடம் பெயரைச் செய்த கொடூரங்களையும் இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

தனது குடும்பத்திற்கு என்ன ஆனது என்று ஏங்கிக் கொண்டு இருந்த அந்தப் பெண்ணிற்கு தன்னுடைய அக்காவை திரும்பிப் பார்த்த பின்னர் ஏற்பட்ட உரையாடல்கள் இந்த புத்தகத்தின் பலருடைய மனசாட்சியை தட்டி எழுப்பியது.

குறிப்பாக ஒரு இடத்தில் இந்த புத்தகம் சொன்ன வரிகள் பலருக்கு பதிலாக இருக்கலாம்.

"60 ஆண்டு காலம் தனது குடும்பத்திற்கு என்ன ஆனது என்று மனதிற்குள் புலம்பிய அந்த கதையின் நாயகி. 60 ஆண்டுகளும் கலவரத்தோடு வாழ்ந்த அவள், இறுதியில் அமைதியை அடைவதற்கு எடுத்த ஒரே ஆயுதம் "மன்னித்து விடுவது".

"மன்னித்துவிடு.. நெஞ்சை அழுத்தும் இந்த பழுவை இறக்கிவிடு. ஒரு முறை மன்னித்துவிடு. என் கடந்த காலத்தை மாற்ற முடியாது. அதை ஏற்றுக்கொள்ள தொடங்கினேன். வாழ்க்கையையும் அதனுடன் வலியையும் ஜீரணித்துக் கொண்டேன். இப்போது நினைவுகளுடன் சண்டை போடவில்லை. வலியின் நினைவுகளை அழுத்தி வைக்கவில்லை. பாயவிட்டேன். என் மூச்சு நிதானமானது. இதயத்துடிப்பு அமைதியானது... பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு அமைதி.... நிம்மதி."

ஜூடைசம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இந்த மூன்று மதங்களுக்கும் முக்கிய இடமாக உள்ள ஜெருசலத்தில் நடக்கின்ற விவாதங்கள், ஒவ்வொரு மத நம்பிக்கையாளர்களும் பிற மத நம்பிக்கையாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகளாக இருந்தன.

ஆனால் பதில்கள்.....
கடவுள் அனைவரையும் ஆட்கொள்பவனாகவே இருக்கிறான்.

வாசித்தமைக்கு நன்றி.
உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும் நண்பர்களுக்கு பகிரவும்.

Phone suggested this picture which I took a year before. Just Memories. Annaism. No offence.
28/04/2023

Phone suggested this picture which I took a year before. Just Memories.
Annaism. No offence.

கடிதம் 11கலீத் ஹுசைனி எழுதிய "The Kite Runner" என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக  உணர்வுபூர்வமான புத்தக...
10/04/2023

கடிதம் 11

கலீத் ஹுசைனி எழுதிய "The Kite Runner" என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக உணர்வுபூர்வமான புத்தகங்களில் ஒன்று.

இந்த உலகத்தில் நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய அரசியல் கொள்கை, மதம், இனக்குழுக்கள் இடையே ஆன சண்டை, துரோகம், அதிகாரம் மற்றும் ராணுவம் இதைத் தாண்டி "அன்பே" மிகப்பெரியது என்பதை உணர்வுபூர்வமாக இந்தக் கதையின் மூலமாக உணரலாம்.

ஆப்கானிஸ்தானில் இரண்டு வேறு இனக் குழுக்கள் ஆன நண்பர்கள் விதியின் கோரத்தால் பிரிவதும், பின்னர் நண்பனுக்கு செய்த துரோகத்தை நினைத்து வருந்துவதும், நண்பன் இறந்து விட்டான் என தெரிந்து அவனுடைய மகனை காப்பாற்ற தன்னுடைய உயிரையும் பனையம் வைக்கும் மற்றொரு நண்பன் என்ற கதை களத்தில் இந்த கதை நகர்கிறது.

இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது பலமுறை கதையோடு இணைந்து கண் கலங்கி விடுவீர்கள். இஸ்லாமிய வாழ்வியலோடு ஒன்றிய கதையாக இது உள்ளது. நல்ல வாசிப்பை நேசிக்கக் கூடிய வாசகர்கள் இந்த புத்தகத்தை நிச்சயமாக படிக்கவும்.

வாசித்தமைக்கு நன்றி.

Address

Gudiyattam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheik Mansoor M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share