Juvenile Force In Political Organization

  • Home
  • Juvenile Force In Political Organization

Juvenile Force In Political Organization We blame society
But we are society
Change yourself, society will change automatically. It is high time that we remove all these evils.

Our country is still suffering from many social evils like communal-ism, untouchability, superstitions, dowry, drinking, etc. Lavish lifestyle, discrimination against women and large families are the other evils. In so far as social evils are concerned, the Government cannot do much. At best, it can pass laws. It is, therefore, up to the people themselves to give up these evils for good.

22/09/2017
Jagadesh Celebrates First Year Anniversary As CEO | Jagadesh

Jagadesh Celebrates First Year Anniversary As CEO In Digital Business - Smashwing Technologies Private Limited,After spending the past 3 years with Digital Business, I feel very privileged to be writing this message as the chief executive officer. This is a special time in our company’s history as we celebrate our first anniversary. We began our journey September 9, 2017, and have spent the past year continuing to build our brand, which has now become synonymous with our commitment to helping our clients share knowledge and create innovation.
As a company, we have seen much change over the past year. For example:

We have nearly quadrupled our workforce and have embraced diversity and gender balance.
We have become the leading provider of web based solutions in the India.
We have expanding our presence globally.

It is also important to note what has not changed at Digital Business, namely our commitments to providing exceptional client service and to living our core values: Excellence in Everything, Leadership by Example, Integrity and Transparency, Focus on the Client and Employee Centered.
Looking ahead, we are focused on accelerating the ex*****on of our growth strategy while continuing to build on the strength of our brand—in helping our clients share knowledge and create innovation and in bringing positive change to the communities in which we work and live. I am incredibly excited about this journey and truly believe the best of Digital Business is yet to come.
,,http://jagadesh.me/jagadesh-celebrates-first-year-anniversary-as-ceo-in-digital-business-smashwing-technologies-private-limited/,jagadesh

Jagadesh Celebrates First Year Anniversary As CEO In Digital Business - Smashwing Technologies Private Limited

22/09/2017

Jagadesh Celebrates First Year Anniversary As CEO In Digital Business - Smashwing Technologies Private Limited,[vc_row][vc_column][vc_column_text]
After spending the past 3 years with Digital Business, I feel very privileged to be writing this message as the chief executive officer. This is a special time in our company’s history as we celebrate our first anniversary. We began our journey September 9, 2017, and have spent the past year continuing to build our brand, which has now become synonymous with our commitment to helping our clients share knowledge and create innovation.
As a company, we have seen much change over the past year. For example:

We have nearly quadrupled our workforce and have embraced diversity and gender balance.
We have become the leading provider of web based solutions in the India.
We have expanding our presence globally.

It is also important to note what has not changed at Digital Business, namely our commitments to providing exceptional client service and to living our core values: Excellence in Everything, Leadership by Example, Integrity and Transparency, Focus on the Client and Employee Centered.
Looking ahead, we are focused on accelerating the ex*****on of our growth strategy while continuing to build on the strength of our brand—in helping our clients share knowledge and create innovation and in bringing positive change to the communities in which we work and live. I am incredibly excited about this journey and truly believe the best of Digital Business is yet to come.
[/vc_column_text][/vc_column][/vc_row],,http://jagadesh.me/jagadesh-celebrates-first-year-anniversary-as-ceo-in-digital-business-smashwing-technologies-private-limited/,jagadesh

18/09/2017

மாமல்லன் பத்திரிகை,,முன்னாள் விழுப்புரம் MLA திரு.புஷ்பராஜ், தேசிய மனித உரிமைகள் இயக்கம் திரு.ஜெகதிஷ், சிதம்பரம் AE.cd.arun.e.Gopal Abaran,http://jagadesh.me/gallery/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2/,jagadesh

18/09/2017

மாமல்லன் பத்திரிகை,,அண்ணன் அவர்களிடம் நமது மாமல்லன் இதழை மரியாதை நிமித்தமாக வழங்கி ஆசி பெற்றுவிட்டு அண்ணன் அவர்களுக்கு நினைவு பரிசாக புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வு!தேசிய மனித உரிமைகள் இயக்கம் நிர்வாகி திரு.ஜெகதிஷ் அருகில்!,http://jagadesh.me/gallery/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88/,jagadesh

07/06/2017

​*நாடக காதல் (Dramatic ❤️)*,*நாடக காதல் (Dramatic ❤️)*
காதலை நான் சாதி ஒழிப்பு கருவியாக என்றுமே பர்த்ததில்லை அதை நான் ஏற்றுக்கொண்டதும் இல்லை. காதலை நான் 'காதல்' என்ற அடிப்படையில் தான் பார்க்கிறேன். சாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் தாண்டி உண்மையான அன்பின் அடிப்படையில் இரண்டு இதயங்களுக்குள் தோன்றும் அற்புத உணர்வு அது. அதற்கு நான் வேறு எந்த சாயத்தையும் பூச விரும்பவில்லை. ஒரு தலித் காதலித்தாலும், ஆண்டைகள் காதலித்தாலும் இரண்டுமே காதல் தான். இரண்டு காதல்களுக்கும் இலக்கணம் ஒன்றுதான்! ஆனால் தலித் காதலை மட்டும் நாடகக் காதல் என மடைமாற்றுவது பச்சை சாதியவாதம் அன்றி வேறில்லை. எங்கள் வீட்டு பெண்கள் குத்துவிளக்கு, குலவிளக்கு அவர்களை ஏமாற்றி காதல் செய்கிறார்கள் என்று பெண்கள் மேல் திடீர் பாசம் பொழிபவர்கள் யார் என்று பார்த்தால் நேற்றுவரை பெண்குழந்தை பிறந்தாலே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றவர்கள் தான். அதிலும் ஒரு படி மேலே போய் எங்கள் குடும்பத்து பெண்கள் தான் எங்களுக்கு குலசாமி என அளந்துவிடுகிறார்கள் (சாமியே இல்லங்கிறோம் அப்புறம் என்னடா குலசாமி வெண்ணை!). பெண்கள் குலவிளக்கோ, குத்துவிளக்கோ, குலசாமியோ இல்லை. அவள் ரத்தமும் சதையும் கொண்ட நம்மைப்போல் அனைத்து உணர்வுகளையும் கொண்ட சக மனுஷி. அந்த மரியாதையையும், சுதந்திரத்தையும் முதலில் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.
காதலைப் பற்றிம் அதன் வீரியத்தை பற்றியும் சரியான புரிதல் இல்லாதே காதலைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் உருவாகக் காரணம். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தன்னை விட 24 வயது மூத்த வயதான பெண்ணைத்தான் காதலித்து கரம் பிடித்தார். நீங்களே கொஞ்சம் நினைத்து பாருங்கள் அவரின் வாழ்க்கையில் எத்தனை இளமை பொங்கும் அழகான பெண்களை கடந்து வந்திருப்பார்? ஆனாலும் அந்த இளம் பெண்களை தவிர்த்து வயதான பெண்ணைத்தான் கரம் பிடித்தார் என்றால் காரணம் காதல். அதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆண்டசாதியினருக்கு பக்குவம் பத்தாது. ஏன் நம் நாட்டில் கூட பண்டித(பிராமணர்) குடும்பத்தில் பிறந்த ராஜீவ் காந்தி கிறித்துவ பெண்ணான சோனியாவைத்தான் மணந்தார் காரணம் காதல். அவ்வளவு ஏன், பெரியாரை தெலுங்கர் என்றும், அவர் தன் மகள் வயதை ஒத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என கிண்டலடித்து மேடை தோறும் முழங்கும் சீமானே தன்னைவிட 22 வயது இளைய, தன் மகளின் வயதை ஒத்த தெலுங்கர் பெண் கயல்விழியைத்தான் திருமணம் செய்து கொண்டார் காரணம் கயல்விழி சீமான் மேல் கொண்ட காதல். இன்னும் கூட ஆழ்ந்து பார்த்தால், வன்னியர் குல சத்திரியர் ராமதாஸின் தாயார் என்ன சாதி? இன்று அவர் பரம எதிரியாக சித்தரித்து வைத்திருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் அவருடைய தாயாருக்கும் என்ன சம்பந்தம்? தலித் இட ஒதுக்கீட்டை பற்றி மேடை தோரும் கரித்துக்கொட்டும் அவர் மருத்துவம் பயின்றது எந்த சாதியினரின் இடஒதுக்கீட்டில்?போன்ற கேள்விகளை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.
சாதியை ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் எல்லா சந்தர்பங்களிலும் கடைபிடிக்க முடியாது. பல தருணங்களில் சாதியிலிருந்து நாம் வெளியேறித்தான் ஆக வேண்டும். அதுவும் காதலில் விழுதல் போன்ற முக்கியமான தருணங்களில் சாதியாவது! மதமாவது! இல்லை இல்லை நாங்கள் காதல் திருமணம் செய்ய மாட்டோம், பெற்றோர்கள் பார்த்து எங்கள் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டு சாதியை காப்பாற்றுவோம் என்றாலும் கூட உன் சாதி உனக்கு திருமணத்திற்கான முழு தகுதியை வழங்கிவிடாது. சாதியையும் தாண்டி உன் அந்தஸ்து, பணம், படிப்பு, உயரம், உடல் எடை, தோலின் நிறம், சொந்த வீடு போன்ற மற்ற காரணிகள் தான் உன் திருமணத்தை தீர்மானிக்கும். அங்கு உன் சாதி வெறும் Entry pass தான் அதுவே முழு தகுதியல்ல. இன்னும் விளக்க வேண்டுமானால் உன் தலைமேல் இருக்கும் மயிரின் அடர்த்தி கூட உன் திருமணத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாகலாம். ஒருவேளை நீங்கள் சோ ராமசாமி போல முழு வழுக்கையாக இருந்து அதனால் உன்சாதி பெண் உன்னை மணக்க மறுத்துவிடால்! நீங்களே சொல்லுங்கள் உங்கள் சாதியை விட உங்கள் மண்டையின் மேல் இருக்கும் மயிருக்குதானே மதிப்பு அதிகம்!! இத்தனை நாளும் சாதிபெருமை பேசி சாதி வெறியை வளர்த்து வந்ததிற்கு பதிலாக எர்வாமேட்டின் போட்டு மண்டையின் மேல் மயிரை வளர்த்திருந்தாலாவது உங்களுக்கு உபயோகப்பட்டிருக்கும்!!
இத்தனைக்கு பிறகும் எங்களுக்கு சாதிதான் பெரிது, நாங்கள் காதலர்களை ஆணவக்கொலைதான் செய்வோம் என்றால் உடுமலை பேட்டை சங்கர் கொலையாளிகளான அந்த இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்து பாருங்கள். ஒருவேளை அவர்கள் சட்டத்தை ஏமாற்றிவிட்டு வெளியே வந்தாலும் கூட ஒரு கொலைகாரனுக்கு யார் பெண் தருவார்?அவனுடைய சாதிக்காரர்களே தரமாட்டார்களே! கடைசிவரை அவன் அடியாளாய் தான் காலம் கடத்த வேண்டும். ஒருவேளை சட்டத்தின் படி கடுமையான தண்டனை பெற்றால் ஆயுள் முழுவதும் சிறையில் வாட வேண்டும். இளமை மொத்தமும் சிறையிலேயே கழிந்துவிடும். மீசையும் ஆசையும் நரைத்து விடுதலையாகி வெளியே வரும் போது, "ஆண்ட பரம்பரைடா! சத்திரியன்டா!" என அவனை தூண்டிவிட்டு கொலைகாரனாய் மாற்றிய அவன் சாதிக்காரன் தன் மனைவியுடன் ஒவ்வொரு நொடியும் காதலில் திளைத்து ரசித்து ருசித்து ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பான்...,,http://jagadesh.me/%e2%80%8b%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-dramatic-%e2%9d%a4%ef%b8%8f/,jagadesh

07/05/2017

உலகம் உருண்டை ,╰✿╮

"உலகம் உருண்டை என்று சொன்னார் அப்பா

நான்கு சுவர்கள் இருப்பதுதான் உருண்டையா என்றேன்...
வீடே உலகமென இருந்த எனக்குத் தெரியவில்லை

அவர் சொன்னது வெளி உலகம் என்பதை...
நான் வெளி உலகம் பார்க்க வேண்டும்

அழைத்துச் செல்லுங்கள் என்றேன்...
மறுப்பேதும் கூறாது

மறுநாளே கூட்டிச்சென்றார்...
அப்பாவின் இரு விரல்கள் பற்றிக்கொண்டேன்

அந்த நொடியில் ஆரம்பித்தது என் முதல் பயணம்...
நான் பார்த்த அனைத்தும் எனக்குப் புதிது

அவைகளுக்கும் நான் புதிதுதான்...
வியப்போடு என்னைப் பார்த்த மரங்கள்

சில இலைகள் தூவி என்னை வரவேற்றது...
கண்ணில் பட்டதையெல்லாம் அவரிடம் கேட்டிக்கொண்டே நடந்தேன்

அவரும் பதில் சொல்லிக்கொண்டே நடந்தார்...
நம்மைப் பார்த்ததும் அவர் ஏன் தட்டை நீட்டுகிறார்?

அவர் பிச்சைக்காரர் என்றார்...
அங்கு ஏன் அவர்கள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்?

அது ரேசன் கடை என்றார்...
வாசலில் இத்தனை செருப்புகளா, மனிதர்கள் எங்கே?

கடவுளைக் காணச் சென்றுள்ளார்கள் என்றார்...
அழும் குழந்தையை இழுத்துச் செல்கிறார்களே ஏன்?

அது பள்ளிக்கூடம் என்றார்...
சாலையோரம் உறங்குகிறார்களே இவர்களின் வீடெங்கே?

அதில் தான் அவர்கள் உறங்குகிறார்கள் என்றார்...
வண்ணம் பூசத் தெரியவில்லையோ,சிவப்பும் வெள்ளையுமாய் இருக்கிறது?

அது காவல் நிலையம் என்றார்...
அழுதுகொண்டே சிலர் உள்ளே செல்கிறார்கள்

சிரித்துக்கொண்டே சிலர் வெளியே வருகிறார்கள்.

அது மருத்துவமனை என்றார்...
இங்கு மட்டும் இவ்வளவு அமைதியா

அது பூங்கா என்றார்...
அடடே என்ன அழகாக ஒரு மனிதனை வரைந்துள்ளார்கள்.

அது விபத்தில் இறந்தவருடையது என்றார்...
பூக்கள் பெண்ணுக்காகத்தான் என்றீர்களே, ஆணின் கழுத்தில் ஏன்

அவர் மாப்பிள்ளை என்றார்...
இத்தனை பொம்மைகள் வைத்திருந்தும் அவர் ஏன் மகிழ்ச்சியாய் இல்லை.

அவர் வியாபாரி என்றார்...
எங்கு செல்கிறார்கள் இத்தனை மக்களும்.?

முதல் காட்சி ஆரம்பிக்கப் போகிறது என்றார்...
அந்த மாடுகள் ஏன் அழுதுகொண்டே வண்டி இழுக்கிறது?

சோம்பேறி மனிதனின் புத்திசாலித்தனம் என்றார்...
இப்போது நாம் எங்கு செல்கிறோம்?

நான்கு சுவர்கொண்ட உன் உருண்டை உலகத்திற்கு என்றார்.",,http://jagadesh.me/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/,jagadesh

07/05/2017

ரகசியத் தொடுகை,*ரகசியத் தொடுகை*
குழந்தைகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை நினைத்தாலே மனதில் ஒரு எரிமலை வெடித்து குமுறுகிறது. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என மனம் பரபரக்கிறது. ஆனால் இதை எப்படிச் செய்வது என்ற குழப்பம் பெற்றோருக்கு. பாலியல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை குழந்தைகளிடம் எந்த வயதில் எப்படி ஆரம்பிப்பது என்பதே குழப்பத்துக்கு காரணம். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, ரகசிய தொடுதல் பற்றியெல்லாம் அவர்களிடம் பேசியிருக்கிறீர்களா?
குழந்தைகளுக்கு அவர்கள் உடல் உறுப்புகளின் பெயர்களை அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் பிரைவேட் பார்ட் எனப்படும் அந்தரங்க உறுப்புகளின் பெயரை நாம் சொல்வதில்லை. ஒரு வேளை அந்த உறுப்பில் பாதிப்பை குழந்தைகள் சந்திக்கும்போது அதை தெளிவாகவும், முழுமையாகவும் சொல்லத் தெரியாமல் போகலாம். பிரச்னை முழுமையாக வெளியில் தெரியாமல் போவதால் பாதிக்கப்படுவது குழந்தைகளே. உடல் உறுப்புகளின் பெயர்களை, குறிப்பாக உதடு, மார்பு, பட்டக்ஸ், பெண் மற்றும் ஆண் குறி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிச் சொல்லித்தருவதில் தயக்கம் வேண்டாம்.
எதெல்லாம் அந்தரங்க உறுப்புகள் (ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு மற்றும் பின்புறம், பெண் குழந்தை எனில் மார்பையும் சேர்த்துக் கொள்ளவும்) என்ற தெளிவை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். அந்த உறுப்புகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது. அம்மாவும் அப்பா மட்டுமே குறிப்பிட்ட வயது வரை பார்க்கலாம். மருத்துவரிடம் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அந்தரங்க உறுப்புகளைக் காட்டலாம். அதுவும் பெற்றவர்கள் முன்னால் மட்டுமே. மற்ற யாரும் அந்தப் பகுதிகளை பார்க்கவோ, தொடவோ, உரசவோ, தடவவோ அல்லது முத்தமிடவோ அனுமதிக்கக் கூடாது என்பதை விளக்குங்கள்.
உங்கள் குழந்தையிடம் உடலின் எல்லை எது என்று கற்றுக் கொடுங்கள். குழந்தையின் உடலை வெளி நபர்கள் எந்த எல்லை வரை என்ன காரணங்களுக்காக தொடலாம் என்பதை (உதாரணங்களோடு) குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வேறு யாராவது குழந்தைகளின் பிரைவேட் பார்ட்டை தொட முயற்சிக்கின்றனரா என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
பாலியல் தொந்தரவுகள் என்பவை ரகசியங்கள் அல்ல. அவற்றை மனம் திறந்து சொல்ல வேண்டும் என்பதைப் புரிய வைக்கலாம். பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் குழந்தைகள் இதை வெளியில் சொன்னால் தன்னை தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் யாரிடமும் சொல்லாமல் விடுகின்றனர். மேலும் குழந்தைகளை பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கும் நபர்கள் ‘‘நானும் நீயும் ரகசியமா விளையாடப் போறோம் இதை யாரிடமும் சொல்லிடாத. அப்புறம் உனக்கு தான் பிரச்னை வரும்,’’ என்று குழந்தைகளை அச்சுறுத்துகின்றனர். குழந்தைகள் இது போல யாராவது சொன்னால் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள்.
அந்தரங்க உறுப்புகளை யாரும் எந்த காரணத்துக்காகவும் புகைப்படம் எடுக்கக் கூடாது. இது பற்றி பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. குழந்தைகளை நிர்வாணமாக படம் எடுப்பது மற்றும் அந்தரங்க உறுப்புகளை படம் எடுப்பதும் அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் என்று புரிய வையுங்கள். இதுபோன்ற செயல்களுக்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது.
பாதுகாப்பற்ற அல்லது நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் இளம் வயதினர் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை பார்ப்பது மற்றும் தொடுவது போன்ற அசெளகரியமான சூழலில் குழந்தைகள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் (Say NO, Run, Tell) குறித்து புரிய வையுங்கள். முதலில் அப்படி தொட முயலும் நபரிடம் முடிந்த அளவுக்குச் சத்தமாக நோ சொல்ல வேண்டும்; உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்; பெற்றொரிடம் நடந்ததைக் கூற வேண்டும் என்பதைக் கட்டாயம் உணர வையுங்கள்.
பாதுகாப்பற்ற சூழலை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்கான 'கோடு வேர்டை' உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். எப்போதெல்லாம் பாதுகாப்பற்ற உணர்வை அடைகிறார்களோ அப்போதெல்லாம் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போதோ, உறவினர்கள் மத்தியில் இருக்கும் போதோ குழந்தை இந்த வார்த்தையின் மூலம் பெற்றோருக்கு தனது பிரச்னையை உடனடியாக உணர்த்தலாம். தூங்கும் போதும், விளையாடும் போதும் அவர்கள் அசவுகரியமாக உணர்ந்தால் இந்த வார்த்தையை பயன்படுத்தப் பழக்குங்கள்.
பிரச்னை எதுவும் ஏற்படாத பட்சத்திலும் குழந்தைகள் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். பருவ மாற்றத்தின் காரணமாக அவர்கள் உடலில் தானாக உணரும் மாற்றங்களையும் மனம் விட்டுப் பேச வாய்ப்புக் கொடுங்கள். அப்போது தான் உடல் பற்றிய ரகசியக் கூச்சம் விடுபடும். பிரச்னை வரும்போது தயங்காமல் குழந்தைகள் வெளிப்படுத்த பழகும்.
நல்ல தொடுகை, கெட்ட தொடுகை என்பதைவிட ரகசியமாகத் தொடுகை எது என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். வெளி நபர்கள் அந்தரங்க உறுப்புகள் பற்றிப் பேசுவது மற்றும் அவற்றை ரகசியமாக தொட முயற்சிக்கும்போது குழந்தைகள் அலர்ட் ஆக இந்த வார்த்தை பயன்படும்.
தன் உடல் மற்றும் தொடுகை சார்ந்த விழிப்பு உணர்வு சக குழந்தைகளோடு இருக்கும்போதும் பின்பற்ற வேண்டும். மோசமான எண்ணத்தோடு அணுகுபவர்கள் முதலில் குழந்தைகளின் நண்பர்களாகியே பின்பு தங்களது உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுக்கு பிடித்தவர்கள், நண்பர்கள், ஆசிரியர், பயிற்சியாளர் என்று யாராக இருந்தாலும் அந்தரங்க உறுப்புகளை தொட அனுமதிக்கக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது பெற்றோரின் கடமை.
அப்படி இவை எல்லாவற்றையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் பட்சத்தில் அது உங்கள் குழந்தையின் அஜாக்கிரதையால் நிகழ்ந்த தவறு என்பது போன்ற குற்ற உணர்ச்சி மட்டும் ஒருபோதும் சிறிதளவு கூட குழந்தையின் மனதில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதும் மிகவும் முக்கியம்!
#குழந்தைகள் மற்றும் பெற்றோர் குறித்துக் கொள்ள வேண்டிய Child Helpline நம்பர்: 1098
நன்றி:- யாழ் ஸ்ரீதேவி, மலையாள நடிகர் நிவின் பௌலியின் காணொளி(யூ ட்யூப்),,http://jagadesh.me/%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%88/,jagadesh

07/05/2017

​நேர்மையாளன் இராவணன்,நேர்மையாளன் இராவணன்
பத்துத் தலை இராவணன் என்ற பகுத்தறிவுக்குப் புறம்பான கட்டுக்கதைகள் ஆரியர்களால் எழுதப்பட்டது. அநேகமாக பத்துத் தலையில் இருக்கும் மூளைகளுக்கு நிகரான அறிவு பெற்றவராக இராவணன் இருந்திருப்பார். அறிவிற் சிறந்தவன் திராவிடனாக இருப்பதை ஏற்றுக் கொள்ளாத ஆரியர்கள் அதைப் பத்துத் தலை என்று திருத்தியிருப்பார்கள்.
இராவணனை கொடுமைக்காரன், அரக்ககுணம் நிறைந்தவன், கொடூரன் என்ற நிலையிலேயே அறிய வைத்திருக்கின்றன கதா காலட்சேபங்களும், பட்டிமன்றங்களும், ஆரியச் சிந்தனைகளும். ஆனால் அதைப் புறந்தள்ளிப் பெரும் தனித் திறமைகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு மாமனிதன் இராவணன்.
இராவணனிடம் கொட்டிக் கிடந்த திறமைகளாக ஆரியம் ஒத்துக் கொண்டதில் சில மட்டுமே பதிவிடுகிறேன்.
தமிழிசையில் திறமைசாலி, இன்று கர்நாடக சங்கீதம் என்று மருவிய கரைநாட்டுச் சங்கீதத்தில் நிபுணன். குறிப்பாக வீணை வாசிப்பதில் சிறப்பானவர். *இராவணனின் கொடி வீணைக் கொடி.*
ஆரியர்கள் கொண்டாடும் சிவபக்தர்களைவிடச் சிறந்த சிவபக்தன் இராவணன். இவரது இசைக்கு சிவன் மயங்கியதாக ஆரியர்கள் எழுதிய இராமயணமே கூறுகிறது.
ஆயுர்வேத மருத்துவம் கற்றவன் இராவணன். மண்டோதரி கருத்தரித்தபோது அவளுக்கான மருத்துவ முறைகள் அனைத்தும் கூட இருந்து செய்தவர் இராவணன். இதற்கு நேர்மாறாக ஆரிய இராமன், தன் மனைவி சீதை கருத்தரித்த போது கண்டவர்களின் பேச்சைக் கேட்டுக் காட்டில் விட்டான். முன்பொரு முறை 14 ஆண்டு வனவாசத்தில் சீதையைத் தவிர்ப்பதற்காக முள்ளும், பாம்பும், கொடிய விலங்கும், கொல்லும் அரக்கர்களும் இரக்கமின்றி நிறைந்திருப்பார்கள் என்று சொல்லிச் சீதையை மறுத்தானோ அதே காட்டில் கர்ப்பிணிச் சீதையைக் கொடூரமாகவிட்ட ராமனைவிட, கர்ப்பிணி மனைவிக்காக தான் கற்ற ஆயுர்வேத மருத்துவத்தை கூட இருந்தே பயன்படுத்திய இராவணன் கோடி மடங்கு உயர்ந்தவர்.
குகனொடு அய்வரானோம்

குன்று சூழ்வான்

மகனொடு அறுவரானோம்

பின்பு .................

அகனமர்ந்த என்காதல் அய்ய

நின்னொடு எழுவரானோம்
என்று இராமனைப்போல் விபீசணனிடம் பகட்டு மொழி பேசி, உள்ளடி வேலைகளுக்கு ஆள்பிடிக்காத நேர்மையாளன் இராவணன்.
ஒரு நேர்மையாளன், பிறன்மனை நோக்காத பேராண்மையாளன், ஒரு இல், ஒரு வில், ஒரு சொல் எனும்படியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் என்று காவியம் போற்றும் காப்பியத் தலைவன், சூர்ப்பணகை வந்து காதல் மொழி பேசியவுடன் என்ன செய்திருக்க வேண்டும்! "அம்மா, நான் திருமணமானவன், எனக்கு அழகான! மனைவி உண்டு, அவள் பெயர் சீதை, என்தம்பிக்கும் மனைவி உண்டு அவள் பெயர் ஊர்மிளா" என்று சொல்லியிருக்க வேண்டுமல்லாவா? அதைச் செய்தும் சூர்ப்பணகை தொந்தரவு செய்திருந்தால் அவள் அரக்கி. அதைவிடுத்து, சீதை வரும்வரை கடலை போட்டுவிட்டு, தூரத்தில் சீதையைக் கண்டவுடன் தம்பி லட்சுமணனிடம் கடலை போடும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இறுதியில் மூக்கறுத்து பெண்ணை ஓடவிடுபவன் அரக்கனா? தெய்வமா?
தங்கைக்கு ஒரு துயரம் என்றவுடன் பாசம் மிகுந்த எந்த அண்ணனும் பொங்கியெழவே செய்வான். அதுவும் அநீதி இழைக்கப்பட்ட தங்கைக்கு நீதி கேட்பவன்தான் மனிதன். ஆக, ஆகச்சிறந்த மனிதன் இராவணன் என்பதில் மிகைக் கருத்து ஏதுமில்லை.
நடுக்காட்டில் மனைவியைத் தவிக்கவிட்டுவிட்டு அண்ணன் தம்பி இருவரும் பொய்மான் எனத் தெரிந்தும் போகின்றனர் எனில், அது மேதமையா? பேதமையா? நீதி கேட்கச் சென்ற இடத்தில், மோகித்து அல்ல; நீதியின் பொருட்டு பெண்ணைக் கவர்தல் பண்டைய போர்மரபு. அதைச் செய்த இராவணன் எப்படித் தவறானவனாக முடியும்.
மோகத்தின் பொருட்டே சீதையிடம் இராவணன் வந்திருந்தால் அவளை ஏன் அசோகவனம் வரைக் கொண்டு செல்ல வேண்டும்? பஞ்சவடியில் உள்ள குடிலே போதுமே!
இன்னும் இராவணனின் சிறப்பைச் சொன்னால் அது மீண்டுமொரு இராவண காவியமாகிவிடும்.
அசோகவனத்தில்

இராவணனால்

நிரூபிக்கப்பட்ட

சீதையின் கற்பு

அயோத்தியில் இராமனால்

களங்கப்பட்டு நின்றது

உற்றார் ஊரார்

பேச்சைக் கேட்டு

மனைவியைச்

சந்தேகிக்கும்

எல்லோரும்

ஒழுங்கீன இராமனே,,http://jagadesh.me/%e2%80%8b%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/,jagadesh

07/05/2017

துரோகிகளை அடையாளம் காணுங்கள்...!,

ஹெச். ராஜா பத்திரிக்கையாளரை தேசத் துரோகினு சொன்னதுக்கு பொங்கிய நடுநிலையாளர்களே....

ஈழ தமிழர்களின் விடுதலைக்காக புலிகளை ஆதரித்து பேசிய வைகோவை தேச துரோகினு வழக்கு போட்டு புழல் சிறையில் தள்ளிய கருனாநிதியை நீங்கள் தூக்கி கொண்டாடுவது ஏன் ?????

துரோகிகளை அடையாளம் காணுங்கள். இல்லையேல், நமக்காக போராடும் வைகோக்கள் இந்த துரோகிகளால் தோற்கடிக்கப் பட்டு விடுவார்கள்.

,,http://jagadesh.me/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%99/,jagadesh

20/04/2017

நம்ம அண்ணன் ஓபிஎஸ்தானுங்க,நம்ம அண்ணன் ஓபிஎஸ்தானுங்க.

================================
ஆறு வருஷம்மா தமிழ் நாட்டுல நிதி அமைச்சரா இருந்தது யார்ரா???
அண்ணன்தாங்க....
அப்போ அந்த மூன்றரை லட்சம் கோடி கடனுக்கு யார்ரா காரணம்??
அண்ணன்தாங்க....
பொதுப்பணி துறைய கவனிச்சது யார்ரா??
அதுவும் அண்ணன்தாங்க...
அப்போ அந்த மணல், மின்சாரம் & பி.டபிள்யூ.டி & கிரனைட் ஊழலுக்கு யார்ரா காரணம்??
அண்ணன்தாங்க....
அந்த கருப்பு பண முதலைகள் சேகர் ரெட்டி & கரூர் அனபுநாதன் கோஷ்டிகளுக்கு பங்குதாரர் யார்ரா?
அண்ணன்தாங்க....
அந்த கிரனைட் கொள்ளையன் பிஆர்பிக்கு நெருங்கிய நண்பன் யார்ரா??
அண்ணன்தாங்க....
அம்மா அப்பலோவுல இருந்தப்போ பொறுப்பு அதிகாரத்துல இருந்தபோதும், சிகிச்சைபத்தி சந்தேகப்படாம, அம்மா இட்லி சாப்டாங்க, காப்பி குடிச்சாங்கன்னு சொல்லி ஏதுமறியா தொண்டன

ஏமாத்தியது யார்ரா??
அதுவும் அண்ணன்தாங்க...
அம்மா மறைவுக்கு அப்புறம்மா முதல்வர் அதிகாரத்துல இருந்தப்பவும், அம்மாவமரணத்தபத்தி பேசாமா, விசாரண செய்யாம இருந்தது யார்ரா??
அண்ணன்தாங்க....
ஜல்லிக்கட்டுக்கு போராடுன மாணவர்கள் & இளைஞர்கள தீவிரவாதிகள் என முத்திரைகுத்தி பேசியது யார்ரா???
அண்ணன்தாங்க....
சட்டசபையில பொய்யான பின்லேடன் படம் காமிச்சது யார்ரா???
அண்ணன்தாங்க....
நீட்நுழைவுதேர்வு, GST வரி மசோதாக்கெலாம் தமிழக உரிமைகள விட்டுகொடுத்து, கையெழுத்து போட்டது யார்ரா??
அண்ணன்தாங்க....
சிவனேன்னு இருந்த சின்னம்மாவை, பொது செயலாளர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் முன்மொழிந்து அவரோட காலுல விழுந்த முதல்ஆளு யார்ரா??
அதுவும் அண்ணன்தாங்க...
ஓ... எல்லாத்துக்கும் காரணம் நம்ம அண்ணன் ஓபிஎஸ்தானா.????,,http://jagadesh.me/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%99%e0%af%8d/,jagadesh

20/04/2017

நீட் தேர்வின் பின்னணியில் உலக வர்த்தகம்:,நீட் தேர்வின் பின்னணியில் உலக வர்த்தகம்:

========================================

நீட் தேர்வின் பின்னணியில் உலக வர்த்தக அமைப்பின் (W.T.O) அரசியல் உள்ளது.
பல நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்கும் அமைப்பு இது. இங்கு ஒவ்வொரு நாட்டிலும், அந்த அரசு சார்பில், வர்த்தகங்களை கண்காணிக்கும் மந்திரியும் பங்கேற்பார்.
இதில் 1995-ல் இருந்து கல்வியில் சந்தை வாய்ப்புகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அங்கு வெளிப்பட்டு வருகின்றன.
டபிள்யூ.டி ஓ-வில், பங்கேற்ற வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு, 'வர்த்தகங்களில் சேவை துறைகளை திறந்துவிடுவதற்கு விருப்பம் தெரிவித்தது.
அதற்கு, இந்தியாவில் ஒரேவித கல்வி, தேர்வு முறை இருக்க வேண்டும். அவர்களின் வணிகச் சந்தையில் ஆடுகளம் சமமாக இருக்க வேண்டும்.
மாநிலத்துக்கு ஒருகல்வி முறை இருந்தால், வெளிநாட்டு வர்த்தகர்கள் இங்கு கல்வி வணிகம் செய்ய இயலாது எனக் கருதி, அவர்களுக்காகவே தற்போது நீட் தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.
இது,1986-ம் ஆண்டிலிருந்து கல்வியில் தனியார்மயம் அனுமதிக்கப்பட்ட அபாயத்தின் தொடர்ச்சியாகும்.
நீட் மற்றும் எக்சிட் போன்ற தேர்வுகள் இந்திய உயர் கல்வியை உலக வர்த்தக அமைப்புக்கு அடகு வைத்து, இந்திய கல்வியை கார்ப்பரேட் மயமாக்கக் கூடியதாகும். இதுபோன்ற கார்ப்பரேட் வணிகத்திற்காகவே நீட் தேர்வு திணிக்கப்படுகிறது.,,http://jagadesh.me/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/,jagadesh

20/04/2017

​கருணாநிதி சக அரசியல் தலைவர்களை விமர்சித்த பெயர்,கருணாநிதி சக அரசியல் தலைவர்களை விமர்சித்த பெயர் வேணுமா இத படிங்க முதலில்
கருணாநிதி.மற்றகட்சித் தலைவர்களை தனக்கு தேவைபடாத பல்வேறு காலக் கட்டத்தில் எப்படி பேசினார் என்பதை மறக்க முடியுமா...
1.பருவப் பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி..
2.நேருவோ, மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர் ?
3.காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா.
4.வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்.
5.சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்.
6.பாவாடை நாடா அனந்தநாயகி;
7.கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்;
8.வழிப்போக்கன் வாழப்பாடி;
9.மூப்பனார் மூளையில் கோளாறு;
10.செவிடன் ஜீவா;
11.நொண்டி ராமமூர்த்தி;
12.காவடி கல்யாணசுந்தரம்
13.மலையாளி, கோமாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்.,
14.இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா;
15.பண்டாரம் வாஜ்பாய்;
16.பரதேசி அத்வானி;
17.ஆக்டோபஸ் மோடி;
18.காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை, ஜெயலலிதா.
19.செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்;
20.அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்;
21.போதை நடிகர் விஜயகாந்த்;
22.தரகர், தா.பாண்டியன்;
23.கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்;
24.மந்தபுத்தி திருமாவளவன்.
25.வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு;
26.ஓடுகாலி திருநாவுக்கரசு.
27.ஈ.வெ.ரா.,வை ஏமாற்றிய புறம்போக்கு, கி.வீரமணி;
28.கள்ளத் தோணி, வைகோ.
29.இந்து என்றால் திருடன்;
30. ராமன் ஒரு குடிகாரன்;
31.கன்னியாஸ்திரிகள் எல்லாரும் கற்புக்கரசிகள் அல்ல;
32.தாடியுள்ள இஸ்லாமியர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் தான்.
33.சொரணை கெட்ட தமிழன், மரமண்டைகள், வாழை மட்டைகள், சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று, எட்டு கோடித் தமிழர்களையும் வசைபாடிய இவர் தமிழ் நாட்டு மக்கள் மேல் பாசம் எப்படி இருக்கும,,http://jagadesh.me/%e2%80%8b%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2/,jagadesh

20/04/2017

அமெரிக்கா கண்டனமாம், . .!,இலங்கை இராணுவம் ஹைத்தி நாட்டு சிறுமிகளை பல ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

134 இலங்கை இராணுவத்தினர் ஜ.நா அமைதிப்படையில் உள்ளனர்.ஹைத்தியில் உள்நாட்டுப்போர் இப்படித்தான் அடக்கப்படுகிறது.

அமெரிக்கா கண்டனமாம், . .
இப்படி எத்தனை கண்டனத்தை பார்த்துவிட்டோம்.இந்தியாவின் நட்பு நாடாம் இலங்கை,வந்தவனும் சரியில்ல வாச்சவனும் சரியில்ல,,http://jagadesh.me/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/,jagadesh

20/04/2017

ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....,ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்

அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...

ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்

சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்

செய்ய மாட்டார்கள் ...
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்

பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்

கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை

பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர்

பலியாகியும் மருத்துவம் கொடுத்த

மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்

செய்ய மாட்டார்கள் ...
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு

உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை

அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு

கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த

அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்

செய்யமாட்டார்கள் ...
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்

ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர

வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்

செய்யப்படுமாம்" ...
கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை

பண்ணாணாம்...!
ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...
குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து

ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..

அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்

கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...
ஹெல்மெட்_அணிவதால். ...

சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...
இப்பொழுது சொல்லுங்கள்

ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....,,http://jagadesh.me/%e0%ae%b9%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/,jagadesh

20/04/2017

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்...!,திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்வது ஒரு பேஷனாகி விட்டது.
அப்படி என்ன நாம் வீழ்ந்தோம் என்று கேட்டால்.. வெறும் புலம்பல்கள் தான் பதிலாக வருகிறது!
திராவிடம் என்ற சொல்லே பிடிக்காத பாஜக, ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களுக்கும் "தூய" தமிழ் தேசியம் பேசும் சாதி வெறியர்களுக்கும் இடையே இது ரெண்டுமே இல்லாத அப்பாவி "இளைஞர்களும்" மாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு தான் இப்பதிவு.
தமிழ்நாடு திராவிட கொள்கைகள், திராவிட கட்சிகளால் தான் வளர்ந்து இருக்கிறது. இதற்கு நீங்கள் தமிழ்நாட்டை தாண்டி வட இந்தியா நோக்கி கொஞ்சம் சென்றால் எளிதில் புரியும்.
அடிப்படை கட்டமைப்புகள், பொருளாதார முன்னேற்றம், சமூக நீதி கொள்கைகள் என இந்தியாவின் பிற மாநிலங்களை விட நாம் வளர்ந்து தான் இருக்கிறோம்.
இந்தியாவின் சூப்பர் மாநிலம் என்ற மாயை கொண்ட குஜராத்தை விட நாம் பல இடங்களில் முன்னேறி இருக்கிறோம்.
கல்வியில் சிறந்து விளங்கும் கேரளாவை விட நாம் தொழில் துறையில், வேலை வாய்ப்பில் சிறந்து விளங்குகிறோம்.இந்தி திணிப்பை எதிர்க்கும் தற்கால கன்னட தேசத்திற்கு 60 வருடங்கள் முன்னரே நாம் வழிக்காட்டியாக இருக்கிறோம்!
தமிழ்நாட்டில் சில இடங்களில் மதரீதியான,சாதிய ரீதியான அரசியல் வெற்றி பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் சாதி,மத ரீதியான அரசியலை ஏற்கவில்லை.அதனாலேயே சாதிய,மதவாதிகளால் தமிழகத்தில் வேறூன்ற முடியவில்லை.
இதுவரை ஆண்ட திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பல தவறுகளை செய்திருக்கிறார்கள்,ஊழல் ஓட்டுக்கு பணம் , குடும்ப அரசியல் இலவசங்கள், கொடுத்து தமிழகத்தின் கடனை அதிகபடுத்தியிருக்கிறார்கள்.
அதேவேளையில் இரு கட்சிகளும் ஒட்டுமொத்தமாக ஒரு மத த்தையோ ,சாதியையோ சார்ந்த கட்சிகளாக செயல்படவில்லை.அவர்கள் நினைத்தாலும் அப்படி செயல்பட முடியாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
காரணம் காலங்காலமாக மதங்களை,சாதிகளை தாண்டிய பிணைப்பை திராவிட இயக்கங்கள் வளர்த்திருக்கின்றன.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடக்கும் மதரீதியான பதட்டங்கள் தமிழகத்தை பெரிதாக பாதிக்கவிடாமல் இந்த அரசுகள் செயல்படுவதாக தோன்றலாம்.அதுவல்ல உண்மை.இங்கே பெரும்பான்மை மக்கள் மதரீதியான ,சாதீயரீதியான பிளவுகளை கடுமையாக எதிர்க்கிறார்கள்.7 கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில் எங்கோ சில இடங்களில் மட்டுமே சிறுசிறு மோதல்கள் நடக்கின்றன.
ஒருமுறை உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்க்கும் இஸ்லாம் சமூகத்தின் ஏக இறைவனை ஒரு பத்ரிக்கை கார்டூனாக போட்டுவிட்டார்கள்.அது முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் எங்கள் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சிலர் கடைகளை அடித்து கலவரத்தை ஏற்படுத்த முனைந்தார்கள்.அதை தடுத்தவர்கள் அதே மதத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர்.காரணம் சமுத்துவம் மட்டுமே இருவேறு சமூகத்தையும் வாழவைக்கும் பிரிவினை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி விவகாரம்,குஜராத் கலவரம் இப்படி பல விஷயங்களில் ஒட்டுமொத்த இந்தியாவும் பதட்டமாகும் வேளையிலும் தமிழர்கள் கண்ணியம் காத்தார்கள்.
காலங்காலமாக அவர்களுக்குள் ஊட்டப்பட்ட சமூகநீதி கொள்கைகள், பரஸ்பர மத நம்பிக்கைகளை மதிக்கும் பண்பு இவை திராவிட இயக்கங்களின் பிரச்சாரத்தினாலே சாத்தியப்பட்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,கல்வி ,மறுமணம் ,இந்தி திணிப்புக்கு எதிரான கல்விக் கொள்கைகள் என சமூகரீதியாக திராவிட கொள்கைகள் தமிழகத்தை ஒரு "மெச்சூரிட்டி" சமூகமாக மாற்றியிருப்பது உண்மை.
தீவிர மதப்பற்றாளர்கள் கூட மதரீதியான மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறார்கள்.இதை வேறெந்த மாநிலத்திலும் காண்பது அரிது.மத த்தின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களை முதலில் எதிர்ப்பவர்கள் அதே தீவிர மத நம்பிக்கை கொண்டவர்கள் தான்.
அவரவர் உணவு அவரவர் உரிமை என்ற பக்குவத்தை தமிழர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.மாட்டுகறி உண்பதாக சொல்லி இங்கே யாரும் அடித்து கொல்லப்படவில்லை.தனிமனித உரிமைகள் ஓரளவு இங்கே கட்டிக்காப்பாற்றப்பட்டு வருகிறது.சிற்சில சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் உண்மையான அடையாளம் அல்ல.
ஊழல்,ஓட்டுக்கு பணம்,குடும்ப அரசியல் இவையெல்லாம் ஒழிக்கப்பட வேண்டியவையே.நம்மால் இதை ஒழிக்கவும் முடியும்.ஆனால் காலங்காலமாக கட்டிக் காப்பாற்றிவரும் சமூக சமநிலை பாதிக்கப்பட்டால் எந்தகாலத்திலும் அதை மீட்டெடுக்க முடியாது.பணத்தை சம்பாதித்துவிடலாம்.மனநிம்மதியான சூழல் கெட்டால் அதை திரும்ப பெற முடியாது.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்.திராவிட கொள்கைகள் நம் சமூக கட்டமைப்பை காத்து நிற்கும் வலிமையான அரண்.,,http://jagadesh.me/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4/,jagadesh

Address


Alerts

Be the first to know and let us send you an email when Juvenile Force In Political Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Government Service?

Share