zeith marrikar

  • Home
  • zeith marrikar

zeith marrikar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from zeith marrikar, Social service, puttalam, .

Motto Rush champion ship 2026 Puttalam
08/06/2026

Motto Rush champion ship 2026 Puttalam

 #விஞ்ஞான_அறிவு
25/05/2026

#விஞ்ஞான_அறிவு

23/05/2026
21/05/2026

புத்தளத்தின் அடையாளங்கள் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக மறைந்து கொண்டே போக வேண்டுமா? 🥹

இந்த அடையாளம் ஏன் அகற்றப்பட்டது?
அதற்கான காரணம் மக்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டதா?

மீண்டும் அதேபோன்ற ஒரு வரலாற்று நினைவுச்சின்னத்தை அமைக்க யார் முன்வந்துள்ளனர்?
புத்தளம் மாநகர சபையா?
அல்லது புத்தளம் பெரியபள்ளி நிர்வாகமா?

இது யாரையும் குற்றம் சாட்டும் பதிவு அல்ல.
புத்தளத்தின் வரலாறும் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் சிறிய கேள்வி மட்டுமே.

இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல…
எதிர்கால தலைமுறைக்கும் புத்தளத்தின் அடையாளங்கள் நினைவாக நிலைக்க வேண்டும். 💔








அண்மைக் காலமாக, நாம் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களின் செயல்...
08/01/2026

அண்மைக் காலமாக, நாம் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களின் செயல்பாடுகள் புத்தள மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பது பலரின் பொதுவான உணர்வாக உள்ளது.

இது அவரை மட்டம் தட்டுவதற்காகவோ குறைகூறுவதற்காகவோ அல்ல, அவருக்காக வாக்களித்த புத்தளம் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த கருத்தை முன்வைக்கிறேன்.

குறிப்பாக சிலவற்றை மட்டும் இங்கு முன்வைக்கின்றேன் :

# பல பிரதேசங்களுக்கு சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாலும், அவை தொடர்பான தெளிவான தீர்வுகள், தொடர்ச்சியான நடவடிக்கைகள் அல்லது கண்காணிப்பு இல்லாமை அம்மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

# வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இன்னும் நீர் வற்றாமல் மக்கள் அவதிப்படும் இடங்களை தவிர்த்து, நீர் வற்றிய பகுதிகளுக்கு மட்டுமே கள விஜயம் மேற்கொள்ளப்பட்டமை, நிலவரத்தை நேரடியாக புரிந்து கொள்ளத் தவறியதாக பார்க்கப்படுகிறது.

# சில ஊர்களுக்கு செல்லும் போது, அங்குள்ள ஒரு சிறிய குழுவினரை மட்டுமே சந்தித்து, பெரும்பான்மையான மக்களின் கருத்துகள், தேவைகள், பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவது போல தோன்றுகிறது.

# பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் உரைகள் மற்றும் செயல்பாடுகள், புத்தளம் மாவட்டத்தின் அடிப்படை பிரச்சினைகள், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை உண்மையாகவே பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

# சமூக ஊடகங்களில் காட்டப்படும் செயல்பாடுகள் மற்றும் களத்தில் நிலவும் உண்மை நிலவரம் என்பன ஒன்றுக்கொன்று பொருந்தாததாக இருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை உருவாக்குகிறது.

இனிவரும் காலங்களிலாவது, புத்தளம் மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் புரிந்து கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய, தீர்வை நோக்கிய அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இந்த கருத்தை முன்வைக்கிறேன்.

இது எதிர்ப்பு அரசியல் அல்ல, வாக்களித்தவன் என்ற வகையில் பொறுப்புணர்வை நினைவூட்டும் ஓர் பதிவு.

இன்று எனது 18வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறேன்.வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் பயணித்து கொண்டு இருக்கிறேன...
02/01/2026

இன்று எனது 18வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறேன்.

வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் பயணித்து கொண்டு இருக்கிறேன்.வல்ல இறைவனின் அருளால் இப்பயணம் வெற்றி பெரும்.

இலங்கை கொலைகாரன்,தமிழ்நாட்டு கொலைகாரனுக்கு வாழ்த்து.இரண்டும் ஒரே இனம் . ஒரு பிரச்சினைடா இரண்டு பேரும் ப்(f)லைட் ஏறி ஓடுர...
28/12/2025

இலங்கை கொலைகாரன்,தமிழ்நாட்டு கொலைகாரனுக்கு வாழ்த்து.

இரண்டும் ஒரே இனம் . ஒரு பிரச்சினைடா இரண்டு பேரும் ப்(f)லைட் ஏறி ஓடுர கூட்டம்

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் கல்லூரியின் Colours Night இல் மாணவியொருவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி மேட...
23/12/2025

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் கல்லூரியின் Colours Night இல் மாணவியொருவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி மேடையில் பலர் முன்னிலையில் பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளமையை நாடறியும்.

ஸ்குவாஷ் வீராங்கனையான சனித்மா ஷினாலி என்ற அந்த மாணவி, தனது பாடசாலை அதிபர் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள், மேடையில் இருந்தோர், பார்வையாளர்கள் என பலரையும் அதிரவைத்தது.

தனக்கு வரவேண்டிய விருது தட்டிப்பறிக்கப்பட்டதாக அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனையடுத்து இந்த மாணவியின் துணிச்சலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்து குவியத்தொடங்கின.

ஆனால், எதையும் தீவிரமாக அலசும் சமூக ஊடக பாவனையாளர்கள் சிலர், சனித்மா ஷினாலியின் பின்புலம், அவரது தந்தை யார்? அவரது செல்வாக்கு, பறிபோன இன்னொரு மாணவியொருவருக்கான வாய்ப்பு என பலவற்றையும் கிளறி எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சனித்மா ஷினாலியின் தந்தை மஹேஸ் சந்தன. இவர் இலங்கையின் பிரபல ஸ்குவாஷ் பயிற்சியாளர் ஆவார். தகவல்களின் படி, இவரே ஸ்குவாஷ் பயிற்சியாளர் ஆவார். அத்தோடு கொழும்பு றோயல் கல்லூரியின் ஸ்குவாஷ் பயிற்சியாளராகவும் உள்ளார்.

16th Asian Junior Team Championship 2013 Korea (National Coach)

16th Asian Junior Team Championship 2013 Korea (National Coach)

17th Asian Senior Team Squash Championship 2014 Hong Kong (National Coach)

12th South Asian Games 2016 Guhathi India (National Coach)

என அவரது அனுபவம் நீள்கின்றது.

இலங்கையின் ஸ்குவாஷ் விளையாட்டுத்துறையில் இவர் ஒரு பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
**********************************

வீராங்கனை Fathoum Issadeen

இலங்கையின் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையான Fathoum Issadeen இன் வாய்ப்பு மாணவி சனித்மா ஷினாலியின் தந்தையால், அவர் கொண்டுள்ள செல்வாக்கால் வேண்டுமென்றே தட்டிப்பறிக்கப்பட்டதாக முன்னரே குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இப்போது அது தொடர்பில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

குறிப்பாக Fathoum Issadeen இன் சகோதரர் பேஸ்புக்கில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:

"இந்த கதையின் இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாமல் உள்ளது. நானே ஒருகாலத்தில் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் ஆக இருந்தேன், மேலும் இந்த பெண்ணின் ஸ்குவாஷ் வாழ்க்கையும் வளர்ச்சியும் மிகவும் ஆரம்ப காலத்திலிருந்தே நெருக்கமாக பார்த்துள்ளேன். அந்த நேரத்தில், என் சகோதரியும் மற்றொரு வீராங்கனையும் பெண்கள் தேசிய சாம்பியன்களாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில், இந்த பெண் ஸ்குவாஷ் சம்மேளனத்தின் வெளிப்படையான ஆதரவை பெற்றிருந்தார். அதற்குக் காரணம், அவரது தந்தை தேசிய பயிற்சியாளராக இருந்தது. இந்த சலுகைகள் அவளை உச்சத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன. பொதுநலவாய விளையாட்டுகளுக்கான வீராங்கனை தேர்வு செய்யும்போது, தேர்வுப் போட்டிகளில் என் சகோதரியிடம் தோற்றிருந்தும், அவளை அனுப்பினர். இது வெளிப்படையான அநீதி; அந்த சூழ்நிலையை அவளும் அவளுடைய குடும்பமும் தெரிந்தே பயன்படுத்திக் கொண்டனர்.

அவளுடைய தந்தை, நெறிமுறையுடன் இருந்தாலும் இல்லையெனினும், அவளின் வாழ்க்கையை உயர்த்த அனைத்து வழிகளையும் பயன்படுத்தினார். இப்போது உள்ள விநோதம் என்னவென்றால், அவள் தன்னை ஒரு “தலைவர்” போல காட்டிக்கொண்டு, அந்த நீச்சல் வீரரை விட தானே அதிக வெற்றிக்குத் தகுதியானவள் என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறாள். வெற்றியைப் பெறுவதில் அவள் மிகுந்த பிடிவாதம் கொண்டிருப்பதால், மற்றொருவர் வெற்றி பெறுவதை அவளால் சகிக்க முடியவில்லை என நான் நம்புகிறேன். அவளுடைய கதைக்களம், அவள் எப்போதும் சரி என்றும் மற்றவர்கள் எல்லாம் தவறு என்றும் காட்டுகிறது.

இதையெல்லாம் பார்த்தால், இது கர்மா முழு வட்டமாக திரும்பி வந்தது என்று நான் நம்புகிறேன். அதே சமயம், ஒவ்வொரு கதைக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பெண்ணையும் அவளுடைய குடும்பத்தையும் நான் சிறுவயதிலிருந்தே அறிந்தவன், மேலும் நான் பேசுவது முழுக்க முழுக்க என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில்தான்."

அவர் இட்டுள்ள இந்தப் பதிவு பலரது கவனத்தையும், ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, Fathoum Issadeen இந்த விவாரம் தொடர்பில் பிரபல யூடிப்பர் சமுதித்த உடனான உரையாடலில் தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் அவலம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் அந்த வீடியோவும் தற்போது பரவலாக பகிரப்படுகின்றது.
இது தொடர்பில் அதிகாரிகள் மீண்டும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறித்த பாடசாலையின் அதிபர் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டுமென்பதே பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

********************************
Fathoum Zaleeha Issadeen, எமது தேசத்தின் கீர்த்திமிகு Squash வீராங்கனை.

மூன்று முறை (2019, 2020, 2021) தொடர்ச்சியாக National Champion.

இரண்டு முறை தெற்காசிய போட்டிகளில் Bronze medalist.

ஃபதூம் இஸ்ஸடீன் இப்போது எங்கே இருக்கிறார்.

விளையாட்டு துறையை விட்டு விலகி வீட்டில் இருக்கிறார்.

விலகினாரா? விலக நிர்ப்பந்திக்கப்பட்டாரா?

தற்போது பேசு பொருளாகியிருக்கும் சிறிமாவோ வித்தியாலய மாணவியின் தந்தையாரே இலங்கை Squash தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்.

ஃபதூம் Squash துறையில் இவ்வளவு சாதனைகள் செய்து விட்டு பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ள தயாராக இருந்த போது அவருக்கு வெட்டு விழுந்தது.

Commonwealth போட்டிகளில் பங்கேற்பதற்கான trials நிகழ்ந்த போது கூட இந்த மாணவி ஃபதூமிடம் தோல்வி கண்டிருந்தார் என்பது மேலதிக தகவல்!

ஃபதூம் தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக பேசுவதற்கு அப்போது மேடையொன்று கிடைக்கவில்லை.

Publicity crisis இற்குள் அகப்பட்டு சிரமப்படுவதை விரும்பாத ஃபதூம் விளையாட்டை விட்டு விலகி வீட்டுக்குள் முடங்கியதாக சொல்கிறார் அவரது சகோதரர்.

நீதி மன்றம் உங்கள் முன் திறந்திருக்கிறது.
இதன் உண்மைத் தன்மை ஆராயப்பட வேண்டிய அவசியம்......!!!

කොළඹ ශ්‍රී ලංකා කාන්තා විද්‍යාලයේ වර්ණ රාත්‍රියේදී බොහෝ දෙනෙකු ඉදිරියේ වේදිකාවේ කතා කරමින් සිසුවියක් තමාට අසාධාරණයක් සිදු වූ බවට චෝදනා කිරීමේ සිද්ධිය කෝපයට හේතු වී තිබේ.

ස්කොෂ් ක්‍රීඩිකාවක් වන ශානිත්මා ෂිනාලි ඇගේ පාසල් විදුහල්පතිනියට එරෙහිව කළ චෝදනා වේදිකාවේ සහ ප්‍රේක්ෂකයින් බොහෝ දෙනෙකු කම්පනයට පත් කළේය.

ඇයට හිමි විය යුතු සම්මානයක් ප්‍රතික්ෂේප කළ බවට ඇය ප්‍රසිද්ධියේ චෝදනා කර තිබුණි. මෙයින් පසු, සිසුවියගේ ධෛර්යය විවිධ අංශවලින් ගලා එන්නට පටන් ගත්තේය.

නමුත්, සියල්ල විශ්ලේෂණය කිරීම ගැන බැරෑරුම් ලෙස සිතන සමහර සමාජ මාධ්‍ය පරිශීලකයින් සනිත්මා ෂිනාලිගේ පසුබිම, ඇගේ පියා කවුද? ඇගේ බලපෑම සහ තවත් අතුරුදහන් වූ සිසුවෙකුට අවස්ථාව ඇතුළු බොහෝ දේ අවුස්සන්නට පටන් ගෙන තිබේ.

සනිත්මා ෂිනාලිගේ පියා මහේෂ් චන්දන ය. ඔහු ශ්‍රී ලංකාවේ ප්‍රසිද්ධ ස්කොෂ් පුහුණුකරුවෙකි. තොරතුරු වලට අනුව, ඔහු ස්කොෂ් පුහුණුකරු වේ. ඔහු කොළඹ රාජකීය විද්‍යාලයේ ස්කොෂ් පුහුණුකරු ද වේ.

16th Asian Junior Team Championship 2013 Korea (National Coach)

16th Asian Junior Team Championship 2013 Korea (National Coach)

17th Asian Senior Team Squash Championship 2014 Hong Kong (National Coach)

12th South Asian Games 2016 Guhathi India (National Coach)

ඇගේ අත්දැකීම් දිගටම පවතී.

ඇය ශ්‍රී ලංකා ස්කොෂ් කර්මාන්තයේ කීර්තිමත් පුද්ගලයෙක් වීම සැලකිය යුතු කරුණකි.
*******************************************

ක්‍රීඩිකාව ෆතුම් ඉසදීන්

ශ්‍රී ලංකාවේ ප්‍රසිද්ධ ස්කොෂ් ක්‍රීඩිකාවක් වන ෆතුම් ඉසදීන්ගේ අනාගත ශිෂ්‍යාව වන ශනිත්මා ෂිනාලිගේ පියා ඇගේ බලපෑමෙන් හිතාමතාම සූරාකෑමට ලක් වූ බවට මීට පෙර චෝදනා එල්ල වී තිබුණද, දැන් නැවතත් මතභේදයක් මතු වී තිබේ.

විශේෂයෙන්, ෆතුම් ඉසදීන්ගේ සහෝදරයා මේ පිළිබඳව ෆේස්බුක් හි සටහනක් පළ කර ඇත.

එහි පරිවර්තනය පහත පරිදි වේ:

"මෙම කතාවේ බොහෝ අය නොදන්නා තවත් පැත්තක් තිබේ. මමත් වරක් ජාතික ස්කොෂ් ශූරියක් වූ අතර, මම ඉතා කුඩා කාලයේ සිටම මෙම කාන්තාවගේ ස්කොෂ් වෘත්තිය සහ සංවර්ධනය සමීපව නිරීක්ෂණය කළෙමි. ඒ කාලයේ මගේ සහෝදරිය සහ තවත් ක්‍රීඩිකාවක් කාන්තා ජාතික ශූරතා විය.
එක් අවස්ථාවකදී, මෙම කාන්තාවට ස්කොෂ් සම්මේලනයේ පැහැදිලි සහයෝගය ලැබුණි. මෙයට හේතුව ඇගේ පියා ජාතික පුහුණුකරු වීමයි. මෙම වරප්‍රසාද ඇයව ඉහළට තල්ලු කිරීමට භාවිතා කරන ලදී. පොදුරාජ්‍ය මණ්ඩලීය ක්‍රීඩා උළෙල සඳහා ක්‍රීඩිකාවක් තෝරා ගැනීමේදී, අත්හදා බැලීම් වලදී මගේ සහෝදරියට පරාජය වුවද ඇයව යවන ලදී. මෙය පැහැදිලි අසාධාරණයක් විය; ඇය සහ ඇගේ පවුලේ අය දැනුවත්ව තත්වයෙන් ප්‍රයෝජන ගත්හ.

ඇගේ පියා, සදාචාරාත්මකව හෝ වෙනත් ආකාරයකින්, ඇගේ වෘත්තීය ජීවිතය උසස් කිරීමට සෑම ක්‍රමයක්ම භාවිතා කළේය. අමුතු දෙය නම් දැන් ඇය තමාව “නායකයෙකු” ලෙස නිරූපණය කිරීමට සහ පිහිනුම් ක්‍රීඩිකාවට වඩා වැඩි සාර්ථකත්වයක් ලැබිය යුතු බව සාධාරණීකරණය කිරීමට උත්සාහ කිරීමයි. සාර්ථකත්වය අත්කර ගැනීම සම්බන්ධයෙන් ඇය ඉතා මුරණ්ඩු නිසා, ඇයට වෙනත් කෙනෙකු ජයග්‍රහණය කිරීම ඉවසිය නොහැකි බව මම විශ්වාස කරමි. ඇගේ කතා වස්තුවෙන් පෙන්නුම් කරන්නේ ඇය සැමවිටම නිවැරදි බවත් අනෙක් සියල්ලන්ම වැරදි බවත්ය.

මේ සියල්ල දෙස බලන විට, මෙය කර්මය සම්පූර්ණ චක්‍රයක් බව මම විශ්වාස කරමි. ඒ සමඟම, සෑම කතාවකටම පැති දෙකක් ඇති බව අප මතක තබා ගත යුතුය. මම මේ කාන්තාව සහ ඇගේ පවුලේ අයව කුඩා කල සිටම හඳුනනවා, මම මේ කතා කරන්නේ සම්පූර්ණයෙන්ම මගේම අත්දැකීමෙන්."

ඇයගේ මෙම සටහන බොහෝ දෙනෙකුගේ අවධානය සහ උනන්දුව දිනාගෙන ඇත.

ඊට අමතරව, මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් ජනප්‍රිය යූ ටියුබ්කරු සමුධිත්ත සමඟ කළ සංවාදයකදී ෆතූම් ඉසදීන් ඇය විඳි බව කියන දුෂ්කරතාව පිළිබඳව අදහස් දක්වා තිබුණි. ඇගේ වීඩියෝව ද පුළුල් ලෙස බෙදා ගැනෙමින් පවතී.

මේ සම්බන්ධයෙන් බලධාරීන් තවදුරටත් පරීක්ෂණ පැවැත්විය යුතුය.

අදාළ පාසලේ විදුහල්පතිවරයාට එරෙහිව විවිධ විවේචන එල්ල වෙමින් පවතින බැවින්, මෙම සිදුවීම් සම්බන්ධයෙන් සත්‍යය හෙළි වනු ඇතැයි බොහෝ දෙනෙක් බලාපොරොත්තු වෙති.

අපේ රටේ ප්‍රසිද්ධම ස්කොෂ් ක්‍රීඩිකාව වන ෆතුම් සලීහා ඉසඩීන්.

තුන් වතාවක් (2019, 2020, 2021) අඛණ්ඩව ජාතික ශූරිය.

දකුණු ආසියානු ක්‍රීඩා උළෙලේ ලෝකඩ පදක්කම්ලාභී දෙවරක්.

දැන් ෆතුම් ඉසඩීන් කොහෙද?

ඇය ක්‍රීඩා ක්ෂේත්‍රයෙන් විශ්‍රාම ගොස් නිවසේ සිටී.

ඇය විශ්‍රාම ගියාද? ඇයට විශ්‍රාම යාමට බල කළාද?

දැනට සාකච්ඡාවට භාජනය වන සිරිමාවෝ විද්‍යාලයීය සිසුවියගේ පියා ශ්‍රී ලංකා ස්කොෂ් ජාතික කණ්ඩායමේ පුහුණුකරු වේ.

ස්කොෂ් ක්ෂේත්‍රයේ බොහෝ ජයග්‍රහණ ලබා ගැනීමෙන් පසු, ෆතුම් ඇයව කපා දැමූ විට පොදුරාජ්‍ය මණ්ඩලීය ක්‍රීඩා උළෙලට සහභාගී වීමට සූදානම්ව සිටියාය.

අතිරේක තොරතුරු නම්, පොදුරාජ්‍ය මණ්ඩලීය ක්‍රීඩා උළෙලට සහභාගී වීමේ අත්හදා බැලීම් සිදු වූ විට පවා මෙම ශිෂ්‍යාව ෆතුම්ට පරාජය වී ඇති බවයි!

ෆතුම්ට ඇයට සිදු වූ අසාධාරණයට එරෙහිව කතා කිරීමට ඒ අවස්ථාවේ වේදිකාවක් නොලැබුණි.

ඔහුගේ සහෝදරයා පවසන්නේ ප්‍රචාරණ අර්බුදයට හසු වීමට අකමැති වූ ෆාතම් ක්‍රීඩාවෙන් ඉවත් වී තම නිවසට සීමා වී ඇති බවයි.

ඔබ ඉදිරියේ අධිකරණය විවෘතයි.
මෙහි සත්‍යතාව විමර්ශනය කළ යුතුයි...!!!

Address

Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when zeith marrikar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share