France Tamil Sangam

France Tamil Sangam France Tamil Sangam
Fédération Tamoul de France

La Fédération Tamoule de France (FTF) dit France Tamil Sangam est une organisation à but non lucratif dont le but est de promouvoir et enrichir la langue et la culture tamoul en France.

அனைவருக்கும் வணக்கம்,பெண்மையின் மேன்மையைப் போற்றும் வகையிலும், நம் சமூகப் பெண்களின் அளப்பரிய சாதனைகளை அங்கீகரிக்கும் நோக...
23/02/2026

அனைவருக்கும் வணக்கம்,

பெண்மையின் மேன்மையைப் போற்றும் வகையிலும், நம் சமூகப் பெண்களின் அளப்பரிய சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கிலும், பிரான்சுத் தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்பில் 'மகளிர் நாள் விழா 2026' பிரான்சின் மலக்ஃகோப் (Malakoff) நகரில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில், தாங்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்வு விவரங்கள்:

நாள்: 1 மார்ச் 2026
நேரம்: 15h (மாலை 3 மணி)
இடம்: Salle des fêtes, 13 Avenue Jules Ferry, 92240 Malakoff, France

அனைவரும் வருக!

தங்கள் வருகையை எதிர்நோக்கும்,
பிரான்சு தமிழ்ச் சங்கம்

அனைவரும் வருக 🙏
15/02/2025

அனைவரும் வருக 🙏

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
14/01/2025

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

01/01/2025

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2025

பிரான்சுத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், சிறந்த தமிழ் பற்றாளருமான புலவர் பொன்னரசு (எ) கனகராசு அவர்கள் 03.06....
05/06/2024

பிரான்சுத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், சிறந்த தமிழ் பற்றாளருமான புலவர் பொன்னரசு (எ) கனகராசு அவர்கள் 03.06.2024 அன்று மறைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வருத்தங்களுடன்,
பிரான்சுத் தமிழ்ச் சங்கம்,
பாரீஸ், பிரான்ஸ்

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...
15/01/2024

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் பேரனும், மன்னர் மன்னன் - சாவித்திரி அம்மையார் அவர்களின் மூத்த மகனுமான கோ.செல்வம்...
26/12/2023

புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் பேரனும், மன்னர் மன்னன் - சாவித்திரி அம்மையார் அவர்களின் மூத்த மகனுமான கோ.செல்வம் அவர்களின் மறைவிற்கு பிரான்ஸ் தமிழ் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது...

பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா ...
19/01/2023

பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா ...

பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அடுத்துள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53 ஆவது ஆண்டு பொங்.....

அனைவருக்கும் வணக்கம் !பிரான்சுத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 17/12/2022 அன்று பாரீசில் நடைபெற்றது. 52 ஆண்டுகள் ...
20/12/2022

அனைவருக்கும் வணக்கம் !

பிரான்சுத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 17/12/2022 அன்று பாரீசில் நடைபெற்றது. 52 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பிரான்சுத் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இச்செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சுத் தமிழ்ச் சங்க தலைவராக திரு. தசரதன் மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல் துணைத்தலைவராக திரு. தளிஞ்சன் முருகையா, பொதுச்செயலாளராக கோகுலன் கருணாகரன், துணைச் செயலாளராக திரு. தெய்வ வரதராசன், பொருளாளராக திரு. மொழிச்செல்வன், துணைப் பொருளாளராக திருமதி. எலிசபெத் அமல்ராஜ், செய்தித்தொடர்பு மற்றும் இளைஞர் பிரிவு பொறுப்பாளராக திரு. ஜேஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53வது ஆண்டு பொங்கல் விழாவினை ஜனவரி மாதம் 15-ஆம் தேதி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிரான்சு தமிழ்ச் சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தலைவர் திரு. தசரதன் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

- செய்தித்தொடர்பகம், பிரான்சு தமிழ் சங்கம்.

உங்கள் படைப்புகளை அனுப்ப...
08/02/2022

உங்கள் படைப்புகளை அனுப்ப...

Adresse

Rue Sauvier
Malakoff
92240

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque France Tamil Sangam publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à France Tamil Sangam:

Partager