பாமக மீடியா 2.0

பாமக மீடியா 2.0 பாட்டாளி மக்கள் கட்சி செய்திகள்.

14/02/2026

திமுகவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டும் காணொளியை வெளியிட்ட பாமக தலைவர் Anbumani Ramadoss அவர்கள்.

பாமக தலைமை நிலையச் செய்தி :தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026 / பாமக வேட்பாளராக விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் ...
25/01/2026

பாமக தலைமை நிலையச் செய்தி :

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026 / பாமக வேட்பாளராக விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல்

அன்புடையீர் வணக்கம்!

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட விருப்பமனு அளித்தோருக்கு நேர்காணல் நடைபெறுகிறது. விருப்ப மனு அளித்தோர் தவறாமல் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கீழ்க்கண்ட *மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு* விருப்ப மனு அளித்தவர்கள் வர வேண்டிய தேதியும் நேரமும்

27-01-26 காலை 10 மணி

திருவள்ளூர்
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
கோவை
நீலகிரி
திருச்சி

27-01-26 மதியம் 2 மணி

வேலூர்
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
இராமநாதபுரம்

28-01-26 காலை 10 மணி

கடலூர்
அரியலூர்
பெரம்பலூர்
தஞ்சாவூர்
திருவாரூர்
திண்டுக்கல்

28-01-26 மதியம் 2 மணி

திருவண்ணாமலை
கிருஷ்ணகிரி
திருப்பத்தூர்
புதுக்கோட்டை
சிவகங்கை

29-01-26 காலை 10 மணி

சேலம்
நாமக்கல்
தேனி
மதுரை
விருதுநகர்

29-01-26 மதியம் 2 மணி

தருமபுரி
ஈரோடு
கரூர்
திருப்பூர்

30-01-26 காலை 10 மணி

மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருநெல்வேலி
தூத்துக்குடி
தென்காசி
கன்னியாகுமரி

30-01-26 மதியம் 2 மணி
புதுவை மாநிலம் .........

நேர்காணல்...
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

நேர்காணல் நடைபெறும் இடம் :
*பனையூர் அலுவலகம்*
கிழக்கு கடற்கரை சாலை, சென்னை.

69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி சர்வே நடத்தக் கோரி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பாமக ஆர்ப்பாட்...
16/12/2025

69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி சர்வே நடத்தக் கோரி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பாமக ஆர்ப்பாட்டம்.

நாள்: 17.12.2025 புதன்கிழமை (காலை)

இடம்: எழும்பூர் இராஜரத்தினம் திடல் அருகில், சென்னை.




வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்று, காவல்...
17/09/2025

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்று, காவல்துறையின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளின் 38-ஆம் ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு, வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.

#வன்னியர்_இடஒதுக்கீடு #பாமக #வன்னியர்_சங்கம்

பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வெளியிட்ட ‘விடியல் எங்கே?’ ஆவணம் (தி.மு.கவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்)மருத...
26/08/2025

பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வெளியிட்ட ‘விடியல் எங்கே?’ ஆவணம் (தி.மு.கவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்)

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று வெளியிட்டார்கள்.

#விடியல்எங்கே

இன்று 13 ஆகஸ்ட் 2025 பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின்  தமிழக மக்கள் உரிமை மீட்பு பய...
13/08/2025

இன்று 13 ஆகஸ்ட் 2025 பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண திட்டம் 👇🏻

விக்கிரவாண்டி - மாலை 4 மணி
விழுப்புரம் - மாலை 7 மணி

#உரிமைமீட்க_தலைமுறைகாக்க
.0

பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்01 : பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம்: த...
09/08/2025

பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்

01 : பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம்: தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்.

02 : வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம்.

03 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

04 : சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்

05 : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெறச் செய்ய பா.ம.க. உறுதியேற்கிறது.

06 : பெண்கள் பாதுகாப்பு, சட்டம் -ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய திராவிட மாடல் அரசுக்கு கண்டனம்.

07 : தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

08 : தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு.

09 : தமிழ்நாட்டில் 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

10 : தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

11 : தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்.

12 : காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!

13 : தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

14 : அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

15 : அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 9,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

16: மக்களை ஏமாற்ற மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.

17 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

18 : அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.

19 : சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

https://www.youtube.com/live/-RguGtmupQE?si=46Ziy-V9cQeeULy6
09/08/2025

https://www.youtube.com/live/-RguGtmupQE?si=46Ziy-V9cQeeULy6

🔴LIVE | பாமக | அன்புமணி ராமதாஸ் | பொதுக்குழு | சென்னை | மாமல்லபுரம் #உரிமைமீட்க #தலைமுறைகாக்க ...

https://youtu.be/pxuAeK9DcjA?si=ITQ0zRQkmTr4ZNf3
07/05/2025

https://youtu.be/pxuAeK9DcjA?si=ITQ0zRQkmTr4ZNf3

வன்னியர் மாநாட்டிற்காக பொது மக்களுக்கு வேண்டுகோள் வைத்த அன்புமணி | பாமக மீடியா 2.0DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activit...

வரும் 11-ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்ச...
05/05/2025

வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை (LOGO).
#இனமேஎழுஉரிமைபெறு

Address

Ariyalur

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாமக மீடியா 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share