Arani Silk City - TN 97

Arani Silk City - TN 97 development at Arani TN 97

20/04/2022
20/04/2022
04/02/2022

வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு வழியாக திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 1000 ரூபாய் மட்டுமே 2022-23 நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆரணி மக்களவை தொகுதியை நல்லா செய்யுறாங்க 🙄. நமது ஆரணி தொகுதி எம்.பி அவர்கள் என்ன செய்து கொண்டுள்ளார்கள்?? .

கடைசி வரை ஆரணி நகருக்கு ரயிலே வராதா?🤥

Dr M K Vishnu Prasad Dr. MK Vishnu Prasad

29/01/2022

#வேண்டும்_ஆரணி_மாவட்டம்

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஜவ்வாது மலை வாழ் பழங்குடி மக்கள் எதிர்பார்ப்பு.

இன்றைய நம் தினமதி செய்தியில்

21/01/2022

#வேண்டும்_ஆரணி_மாவட்டம்

ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, கண்ணமங்கலம், பெரணமல்லூர், ஜமுனாமரத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வணிக சங்கங்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



Hashtag Trend

21/01/2022

#வேண்டும்_ஆரணி_மாவட்டம்

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. M. K. Stalin அவர்கள் பரிசீலனை செய்து திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என இதன் மூலம் கேட்டு கொள்கிறோம்

E.V Velu Dr M K Vishnu Prasad Sevvoor S Ramachandran Kalaignar TV NewsJ Edappadi K.Palanisamy

18/01/2022

ஆரணி மக்களுக்கு இது ஒன்றும் புதியது இல்லையே? பண்டிகை நாட்களில் மட்டுமில்லாமல் வார நாட்களிலும் இதே நிலைமை தான் நீடிக்கிறது.

அரசு போக்குவரத்து கழகம் எப்போது தான் விடிவுகாலம் கொண்டு வரப்போகிறது?

04/01/2022

#வேண்டும்_ஆரணி_மாவட்டம்

நாளை 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் திமுக அரசின் 2வது சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

ஆரணி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆரணி மாவட்டம், ஆரணியில் அரசு கலைக் கல்லூரி, ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரிங் ரோடு திட்டம், ஆரணி சுகாதார மாவட்டம், ஆரணி நெடுஞ்சாலை கோட்டம், ஆரணியில் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாத்து சுற்றுலா தலமாக மாற்றுவது, ஆரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது, ஆகிய அறிவிப்புகள் இடம் பெறுமா?

அதேபோல், வந்தவாசி வட்டத்தை பிரித்து பெரணமல்லூர் வருவாய் வட்டம், ஆரணி மேற்கு மற்றும் போளூர் ஒன்றியத்தை சீரமைத்து கண்ணமங்கலம் ஒன்றியம் உருவாக்குவது, பெரணமல்லூர் மற்றும் தெள்ளார் ஒன்றியத்தை சீரமைத்து தேசூர் ஒன்றியம் உருவாக்குவது என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுமா?

அதேபோல், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், சேத்துப்பட்டு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது, தேவிகாபுரம், எஸ்.வி.நகரம், சேவூர், படவேடு, கலசப்பாக்கம், சந்தவாசல், ஒண்ணுபுரம், வெம்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்துவது என பல்வேறு அறிவிப்புகளும் வெளிவருமா?

போக்குவரத்து துறையின் சார்பில் ஆரணி, செய்யாறு, போளூர் மற்றும் வந்தவாசி பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்க ஆவணம் செய்ய வேண்டும். மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள ஆரணி நகரில் கூடுதலாக போக்குவரத்து பேருந்து பணிமனை தொடங்க வேண்டும். மேலும் வருவாய் வட்டத்தின் தலைமையகமாக உள்ள கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம், பெரணமல்லூர் பகுதியில் புதிய பேருந்து பணிமனை தொடங்க வேண்டும்.

ஆவலுடன் காத்திருக்கும் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, பெரணமல்லூர், வெம்பாக்கம், செய்யாறு, கண்ணமங்கலம், ஜமுனாமரத்தூர் பகுதி மக்கள்.

#ஆரணி_மாவட்டம்_உருவாக்க_வேண்டும்

#ஆரணி, #போளூர், #சேத்துப்பட்டு, #ஜமுனாமரத்தூர், #செய்யாறு, #வந்தவாசி, #வெம்பாக்கம், #பெரணமல்லூர்

M. K. Stalin Sevvoor S Ramachandran Dr M K Vishnu Prasad E.V Velu MK Vishnu Prasad Chief Minister of Tamil Nadu Rajakannappan Followers Edappadi K.Palanisamy V senthil balaji dinakaran daily newspaper ஆரணி Kalaignar Seithigal Kalaignar TV NewsJ

15/12/2021
14/12/2021

ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத் தொடரிலும் திருவண்ணாமலை - சென்னை இடையே தினசரி ரயில் சேவை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசோ திருவண்ணாமலை மாவட்டத்தை முற்றிலும் புறக்கணிக்க படுகிறது.

அதேபோல், ஆரணி வழியாக ரயில் பாதையை இணைக்க கடந்த 2006 ஆம் ஆண்டு திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டத்தை உருவாக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆரணி நகருக்கு எப்போது தான் ரயில் வரும் என்ற கேள்விக்குறியில் ஆரணி மக்கள் உள்ளனர்.

Address

Arani
Arni
632301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arani Silk City - TN 97 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category