வெல்ஃபேர் கட்சி பாபநாசம் சட்ட மற்ற தொகுதி

  • Home
  • India
  • Ayyampettai
  • வெல்ஃபேர் கட்சி பாபநாசம் சட்ட மற்ற தொகுதி

வெல்ஃபேர் கட்சி பாபநாசம் சட்ட மற்ற தொகுதி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வெல்ஃபேர் கட்சி பாபநாசம் சட்ட மற்ற தொகுதி, Political Party, Chakkarapalli, Ayyampettai.

26/03/2026
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் எப்பாடுபட்டாவது கூட்டணி வைக்க வேண்டும் என பாசிச பாஜக  கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அத...
25/03/2025

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் எப்பாடுபட்டாவது கூட்டணி வைக்க வேண்டும் என பாசிச பாஜக கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி ஏற்படாவிட்டால் தங்களுக்கு தமிழ்நாட்டில் ஒற்றை தொகுதி கூட கிடைக்காது என்பது பாஜகவுக்கு நன்கு தெரியும். எனவே அதிமுகவுடன் இணைவதற்கான அனைத்து தகடு தத்தங்களையும் அது செய்து கொண்டிருக்கிறது. கொங்கு மண்டல ஷிண்டேக்களை பயன்படுத்தி அதிமுகவை உடைப்பதற்கும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் இணைவதற்கான பாஜகவின் முயற்சிகளை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், மறுபக்கம் அதிமுக பாஜக கூட்டணி உருவாகி விடாதா என நாக்கை தொங்க போட்டு அலைகிறது திமுக. பாஜக எனும் பூச்சாண்டியை காட்டித்தான் 2021ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் திமுகவிற்கு பின்னால் அணிவகுத்தன. ஆட்சிக்கு வந்த பிறகு காட்சிகள் மாறியது. திமுகவின் சிறுபான்மை பாசம் திசை மாறியது. ஜனநாயக முற்போக்கு சக்திகளும் நம்பிக்கை இழந்துவிட்டன. மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டால் ஒழிய சிறுபான்மை மற்றும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் திமுகவிற்கு பின்னால் அணி திரள வாய்ப்பில்லை. எனவே தான் அதிமுக பாஜக கூட்டணி உருவாகப் போகிறது என செய்தியை பரப்புகிறார்கள். பாஜக செய்யும் அதே பாணியிலான செயலை தான் திமுகவும் செய்கிறது.

ஆனால் துரதிருஷ்டவசமாக திமுகவுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக முஸ்லிம் கட்சிகளும் அதிமுகவை ஒட்டுமொத்தமாக வசை பாடுவதும் திமுகவின் குரலாக ஒழிப்பதும் சரியான ஒன்றல்ல. அதிமுகவுடன் பாஜக இணைய வேண்டும் என திமுக எப்படி விரும்புகிறதோ அதைப்போலவே திமுகவிற்கு ஆதரவு அளிக்கக்கூடிய முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் பேராவல் கொண்டுள்ளார்கள். சமூக சேவை செய்வதையே தங்கள் தலையாயப் பணியாக கொண்டிருக்கும் சமுதாய அமைப்புகள் அவ்வாறு எண்ணுவதில் பிழையில்லை. ஆனால் அரசியல் அமைப்புகளும் அதே பாதையில் பயணிப்பது ஏற்புடையதல்ல. சரியான நிலைப்பாடும் அல்ல. அது அவர்களுக்கு பேராபத்து என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அரசியல் பேரம் பேசுவதற்கான வழிகள் அதன் மூலம் அடைந்து விடும் என்று கூடிய குறைந்தபட்ச அரசியல் புரிதல் கூட அவர்களுக்கு இல்லை. .

சிறுபான்மை அமைப்புகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருபோதும் திமுகவோ அதிமுகவோ நமது பாதுகாவலர்கள் அல்ல. அவர்களது முதன்மை நோக்கம் அவர்களது நலன் மட்டுமே. தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படக் கூடாது என்பது குறைந்தபட்ச அரசியல் புரிதல். அந்தப் புரிதலின் அடிப்படையில்தான் திமுகவிற்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிப்பது போல அதிமுகவிற்கும் ஆதரவு அளிக்கப்படுகிறது. அதிமுக முடிவை மாற்றுமானால் ஆதரவு முடிவுகளும் மாறும்.

நாம் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை நம்முடைய சுய தீர்மானங்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய, பிற கட்சிகளின் அழுத்தங்கள் அவற்றை முடிவு செய்யக்கூடாது. நம்முடைய செயல் திட்டத்திற்கு திமுகவோ அதிமுகவோ அல்லது வேறு கட்சிகளையோ பயன்படுத்த தெரிந்தால் அதுதான் புத்திசாலித்தனமான அரசியல்.

பிற கட்சிகளோடு கூட்டணி சேர்வது என்பது ஒவ்வொரு கட்சியினுடைய சுய விருப்பங்கள். அதில் ஒருவருடைய முடிவில் மற்றொருவருக்கு முரண்பாடும் எதிர்ப்பும் இருக்கலாம். அது அவரவர்களுடைய புரிதலின் அடிப்படையிலான ஜனநாயக உரிமையாகும்.

ஆனால் ஆதரவு அளித்ததின் பேரில் அல்லது கூட்டணியில் இணைந்ததின் பேரில் அந்தக் கட்சிகளின் குரலாக சிறுபான்மை கட்சிகள் மாற வேண்டிய தேவை இல்லை. உங்கள் அரசியலை உங்கள் பார்வையில் இருந்து நீங்கள் பேசுங்கள். திமுகவையும் அதிமுகவையும் விமர்சிப்பதற்கு அடுத்தவர்களுக்கு உரிமை உண்டு. அவ்வாறு விமர்சனங்களை எதிர்கொள்கின்ற பொழுது அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மட்டுமே. கூட்டணியில் இணைந்ததற்காக அவர்களுக்கான குரல்களாக பிற கூட்டணிக் கட்சிகள் செயல்படக்கூடாது. பிறர் திமுகவை விமர்சிக்கின்ற பொழுது அதை எதிர்த்து கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் களம் இறங்குவதும் அதிமுகவை விமர்சிக்கின்ற பொழுது அதேபோல மறுபக்கம் களம் இறங்குவதும் புரிதலற்ற தவறான அரசியல் போக்கு. உங்கள் செயல்பாடுகளை விமர்சித்தால் நீங்கள் அழகிய முறையில் பதில் கொடுங்கள். அடுத்தவர்களுக்கான குரலாக நீங்கள் ஒருபோதும் மாறாதீர்கள்.

அதைப்போலவே வரம்பற்ற புகழ் மொழிகளும் ஆபத்தானதே. யார் எப்போது தங்களது நிறத்தை மாற்றிக் கொள்வார்கள் என்பது அரசியல் களத்தில் நிரந்தரமற்ற ஒன்று. எவனையும் நம்பி நாம் ஏமாந்து விடக்கூடாது. எனவே அரசியல் களத்தில் அரசியலாக மட்டுமே பேச வேண்டும். தங்களுக்கு கிடைக்கப் போகும் ஒற்றை தொகுதிக்காக வரம்பற்ற புகழ் பேச்சுகளும் சமூகத்தை அடகு வைக்கும் நிகழ்வுகளும் சமுதாய துரோகமாகும்.

- K.S. அப்துல் ரஹ்மான்

வெளிநாட்டிலிருந்து அனுமதி இன்றி நிதி பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எ...
14/03/2025

வெளிநாட்டிலிருந்து அனுமதி இன்றி நிதி பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா, சகோ ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனை தீர்ப்பை உறுதி செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

சங்பரிவார் கும்பல்களும் கார்ப்பரேட் சாமியார் மடங்களும் பல லட்சம் கோடிகளை சட்டவிரோதமாக குவித்து கொண்டிருப்பதையும், ஆன்மீகத்தின் பெயரால் வெளிநாடுகளில் மடங்கள் அமைத்து பயணங்களின் ஊடாக கள்ளக் கடத்தலில் ஈடுபடுவதையும் பெரும் பணக்கார குடும்பங்களில் பெண்களை வசீகரித்து அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதையும் ஆன்மீகத்தின் பெயரால் அரசு நிலங்களையும் காட்டையும் ஆக்கிரமிப்பு செய்வதையும் வேடிக்கை பார்க்கும் நீதிமன்றங்களும் சட்டங்களும் சிறுபான்மை சமூகத்தின் தலைவர்கள் தங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்காக நிதி வசூல் செய்தால் அவற்றை தண்டனைக்குரிய குற்றமாக கருதுவது தேசத்தின் அவமானம்.

தேர்தல் பத்திரத்தின் மூலமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலமாகவும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பாஜகவும் பிற அரசியல் கட்சிகளும் பெற்றுக் கொண்டிருப்பதை குறித்து கேள்வி கேட்பதற்கு கூட திராணியற்ற நீதிமன்றங்கள் தான் மக்கள் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி வசூல் செய்தார்கள் என்பதற்காக தண்டனை அளிக்கிறது.

இந்தத் தீர்ப்பும் தண்டனையும் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா, சகோதரர் ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எந்த அவமானத்தையும் உருவாக்கப் போவதில்லை. சிறைக்குச் செல்வதாக இருந்தாலும் தலை உயர்த்தியே செல்வார்கள். ஊழல் செய்தோ உயிர்களை கொலை செய்தோ அவர்கள் இந்த தண்டனையை பெறவில்லை. சங்கிகளாலும் திமுகவின் காவல்துறையாலும் வேட்டையாடப்பட்ட கோவை முஸ்லிம்களுடைய துயர் துடைப்பதற்காக வேண்டி தான் இந்த நிதி வசூலை அவர்கள் செய்தார்கள். மக்களுக்கான போராட்டத்தில் அவர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு தண்டனையும் அவர்களுக்கான சமூக பரிசாகும்.

தன் சமூக மக்களுக்காக போராடிய ஒவ்வொரு தலைவர்களும் முன்னரும் சிறை சென்றுள்ளார்கள். இப்போதும் செல்வார்கள். இனிமேலும் செல்வார்கள்.

ஒரு போதும் ஷூவர்கன் பரம்பரையை போல் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

K.S. அப்துல் ரஹ்மான்
மாநிலத் தலைவர்
வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு

அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கையுடன், அறம்சார் அரசியல் முழக்கத்துடன், சமூக நீதிக்கான அரசியல் போராட்...
02/03/2025

அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கையுடன், அறம்சார் அரசியல் முழக்கத்துடன், சமூக நீதிக்கான அரசியல் போராட்ட செயற்களத்தில் கடந்த 13 வருடங்களாக வெல்ஃபேர் கட்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் இயங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய அரசியல் மாற்றங்களுக்காகத்தான் வெல்ஃபேர் கட்சி பாடுபட்டு வருகிறது. ஒற்றை வாக்கியத்தில் சொல்ல வேண்டுமெனில் சமூக நீதியுடனான மக்கள் நல அரசு உருவாக்கத்தை நோக்கித்தான் வெல்ஃபேர் கட்சி பீடு நடைபோடுகிறது. குற்றப் பின்னணி கொண்டவர்களின், கோடீஸ்வரக் கோமான்களின், கார்ப்பரேட் பெரு முதலாளித்துவ கொள்ளையர்களின் புகலிடமாக மாறியுள்ள சமகால அரசியல் களத்தை நல்லவர்களின், சாதாரண மக்களின் ஏக்கங்களை புரிந்து கொண்டவர்களின் அரசியல் களமாக மாற்றுவதற்கான பாதைதான் வெல்ஃபேர் கட்சி, கட்சியின் கடந்த காலச் செயல்பாடுகளை உற்று நோக்கினாலே போதும் அதன் செயல்பாடுகளை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். சொந்த நிலம் இல்லாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிலத்தை பெற்றுத் தந்துள்ளது. மக்கள் போராட்டங்களில் என்றும் முன்றின்று இயங்குகிறது. CAA எதிர்ப்புப் போராட்டங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும். விலைவாசி உயர்விற்கும் மதுவிற்கும் எதிரான போராட்டங்கள், ஒற்றை மொழி, கலாச்சாரம், தேசம் என்ற பாசிச சித்தாந்தத்திற்கும் இனவாதச் செயல்பாடுகளுக்கும் எதிராக அனைத்து ஜனநாயக முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பது என வெல்ஃபேர் கட்சியின் தலைவர்களும் செயல்வீரர்களும் என்றும் மக்களுடன் வீதிகளில் நிற்கின்றனர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரானச் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றிய பொழுது அவற்றை திரும்பப் பெறுச் செய்வதற்கானப் போராட்டங்களைத் தனியாகவும் பிற அரசியல் சமூக இயக்கங்களுடன் இணைந்தும் வெல்ஃபேர் கட்சி முனைப்புடன் முன்னெடுத்தது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தை வெல்ஃபேர் கட்சியின் மாணவ இளைஞர் இயக்கமான பிரட்டர்னிட்டி இயக்க தலைவர்கள்தான் டெல்லியில் துவங்கி வைத்தனர். ஆயிஷா ரெணாவும் அஃப்ரின் பாத்திமாகவும் அகில இந்திய அளவில் போராட்டத்தின் அடையாளங்களாக மாறினர். இன்றும் அவர்கள் களத்திலேயே உள்ளனர்.

என் ஐ ஏவால் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தாரின் குறை கேட்பு மக்கள் தீர்ப்பாயம் கோவையில் நடைபெற்றது. சிறைவாசிகளின் விடுதலைக்காக தொடர் சட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி காக்க சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி மாறிவ அளவிலும் அகில இந்திய அளவிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுத்து அதன் மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி முஸ்லிம் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு வடிவம் கொடுத்துள்ளது வெல்ஃபேர் கட்சி.

நீதிபதி சச்சார் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் சமூக கல்வி பொருளாதார வலிமைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை கைமேற்கொண்டு வருகிறது கட்சி.

தமிழ்நாட்டில் சனாதன பாசிச கருத்தை எதிர்கொள்ள பெரியாரிய கருத்தியலை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பெரியாரியவாதிகளோடு இணைந்து செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது கட்சி.

பாலஸ்தீன மக்களுக்காக எப்போதும் களத்தில் துடிப்புடன் இயங்கி வருகின்றனர்.

நீதி சுதந்திரம் சமத்துவம் என்ற முழக்கத்துடன் எளிமையை அடையாளமாக்கி சேவையை போராட்டமாகக் கொண்டு களமாடி வருகின்றனர் கட்சியின் செயல்வீரர்கள். மக்களின் தேவைகளை அரசிடம் எடுத்துச் சொல்லி அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் செயலாற்றி வருகின்றனர்.

சகோதரரே.!

இணைவீர்!

Address

Chakkarapalli
Ayyampettai
614211

Alerts

Be the first to know and let us send you an email when வெல்ஃபேர் கட்சி பாபநாசம் சட்ட மற்ற தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share