காரல் மார்க்ஸ் நூலகம் பாகூர் புதுச்சேரி

  • Home
  • India
  • Bahour
  • காரல் மார்க்ஸ் நூலகம் பாகூர் புதுச்சேரி

காரல் மார்க்ஸ் நூலகம் பாகூர் புதுச்சேரி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from காரல் மார்க்ஸ் நூலகம் பாகூர் புதுச்சேரி, Library, West Street, Saraswathi Nagar, Bahour.

புதுச்சேரி மாநிலம், பாகூர் கார்ல் மார்க்ஸ் நூலகம் சார்பில் 74 ஆவது வாரச் சிறுகதை வாசிப்பு. 07-07-2026 செவ்வாய்க் கிழமை ம...
10/07/2026

புதுச்சேரி மாநிலம், பாகூர் கார்ல் மார்க்ஸ் நூலகம் சார்பில்
74 ஆவது வாரச் சிறுகதை வாசிப்பு.

07-07-2026 செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணி அளவில் சிறுகதை வாசிப்பு நிகழ்வு தொடங்கியது.
*எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத்* அவர்களின் சிறுகதையான
*கர்வாப்ஸி*
நூலகப் பொறுப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்டு வாசிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு அ.இளவரசி அவர்கள் தலைமை தாங்கிட இரா.ஆனந்தராமன் சிறுகதையை வாசிக்க சிறுகதை ஆர்வலர்கள்
பி .கல்கி, சீனு.பத்மநாபன், நா.சண்முகம், தே.முருகையன், சுமதி நடராஜன், இரா.பக்தவச்சலம், துரை. வேலாயுதம், க.புவனேசன், இரா.அய்யாசாமி, இரா. கலைச்செல்வன், பு.செல்வம்
ஆகியோர் சிறுகதை பற்றிய உரையாடல்களில் கலந்து கொண்டதுடன் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தொகுப்புரையை தமிழாசிரியர் சிவா. ஜெகதீசன் அவர்கள் வழங்கிட ஆசிரியர் நா.சண்முகம் அவர்கள்
வந்திருந்த அனைவர்க்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
#காரல்மார்க்ஸ்நூலகம் #வாசிப்பு_இயக்கம்

26/06/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

புதுச்சேரி மாநிலம், பாகூர் கார்ல் மார்க்ஸ் நூலகம் சார்பில்  வழமையான எதிர்பார்ப்புகளுடன்71 ஆவது வாரச் சிறுகதை வாசிப்பு..இ...
15/06/2026

புதுச்சேரி மாநிலம்,
பாகூர் கார்ல் மார்க்ஸ் நூலகம் சார்பில் வழமையான எதிர்பார்ப்புகளுடன்
71 ஆவது வாரச் சிறுகதை வாசிப்பு..

இவ்வாரம் 14/6/2026 ஞாயிறு மாலை 5.30 மணி அளவில் சிறுகதை வாசிப்பைத் துவங்குவதற்கு முன்னதாகவே மழை தன் கதையை வாசிக்கத் தொடங்கி இருந்தது.
அது ஓய்ந்ததும்..... எழுத்தாளர் "கோவில்பட்டி சாரதி"
அவர்களின் சிறுகதையான "தொக்கம் " நூலகப் பொறுப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்டு வாசிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு பி.கல்கி அவர்கள் தலைமை தாங்கிட..

இரா.ஆனந்த ராமன்* சிறுகதையை வாசிக்க....

சிறுகதை ஆர்வலர்கள்
சீனு.பத்மநாபன், சுமதி நடராஜன், சி.அஸ்வினியா, ஆ .பக்கிரி, க.புவனேசன், இரா.அய்யாசாமி, துரை. வேலாயுதம், இரா.கலைச்செல்வன், ப.சரவணன்
ஆகியோர் கதை பற்றிய உரையாடல்களில் கலகலப்பாக கலந்து கொண்டதுடன் தமது ஞாபக மறதி அனுபவங்களையும்
சிரிப்பும் களிப்புமாய்ச் சொல்லி மகிழ்ந்தனர்.

தொகுப்புரையை
*அரி.தமிழ் மஞ்சினி* அவர்கள் வழங்கிட...
*ஆசிரியர் நா.சண்முகம்* வந்திருந்த அனைவருக்கும் *நன்றி கூறி* நிகழ்ச்சியை நிறைவு செய்தார். #கோவில்பட்டி_சாரதி #தொக்கம் #சிறுகதை #முஎகச #தமுஎகச

சிறுகதை வாசிப்பு இயக்கத்தின் 71 ஆவது அமர்வாக 14.06.2026 ஞாயிறு மாலை 5 மணிக்கு எழுத்தாளர்  #கோவில்பட்டி_சாரதி எழுதிய  #தொ...
12/06/2026

சிறுகதை வாசிப்பு இயக்கத்தின்
71 ஆவது அமர்வாக
14.06.2026 ஞாயிறு மாலை 5 மணிக்கு
எழுத்தாளர் #கோவில்பட்டி_சாரதி எழுதிய #தொக்கம் என்ற
#சிறுகதை வாசிக்கப்படும் இந்நிகழ்வுக்கு
சிறப்பு விருந்தினராக
புதுச்சேரி வழக்குரைஞர்
தோழர் இரா.சரவணன் அவர்கள் பங்கேற்கிறார்..

நண்பர்கள், தோழர்கள், வாசகர்கள் அனைவரும் நேரத்தோடு பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.. #முஎகச #தமுஎகச #

02/06/2026
31.05.2026 ஞாயிறு மாலையில் பாகூர் காரல் மார்க்ஸ் நூலகத்தில் நடைபெற்ற 69-வது சிறுகதை வாசிப்பு திருவிழாவில்எழுத்தாளர் மொசை...
01/06/2026

31.05.2026 ஞாயிறு மாலையில் பாகூர் காரல் மார்க்ஸ் நூலகத்தில் நடைபெற்ற 69-வது சிறுகதை வாசிப்பு திருவிழாவில்

எழுத்தாளர் மொசைக்குமார்
அவர்களின் "நேச அலைகள்" சிறுகதைத் தொகுப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டது "பொறி" எனும் சிறுகதை வாசிப்பு நிகழ்வின்
வில்லியனூர்
மேலத்திருக்காஞ்சி
கட்டிடக்கலைஞர் சுரேஷ் இராமலிங்கம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவரது நெகிழ்வான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
"நான் இப்படி ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டதே இல்லை, நான் ஒரு கட்டிடக்கலைஞர் கூலிக்காரன். ஆனால் என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அமர வைத்து நான் சார்ந்த தொழில் சம்பந்தமான ஒரு சிறுகதை வாசித்து அதில் என்னையும் கருத்து கூற வைத்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது"
என்று கூறினார்.

அவரை கௌரவித்து நூலகம் சார்பில் பயனடை பொருத்தப்பட்டது.
#தமுஎகச #முஎகச #மொசைக்குமார்

வழமையான ஆரவாரத்தோடு69 ஆவது வார சிறுகதை வாசிப்பு...31/05/2026 ஞாயிற்றுக்கிழமை மாலையில்...இவ்வாரம் எழுத்தாளர் மொசைக்குமார்...
01/06/2026

வழமையான ஆரவாரத்தோடு
69 ஆவது வார
சிறுகதை வாசிப்பு...
31/05/2026 ஞாயிற்றுக்கிழமை மாலையில்...

இவ்வாரம் எழுத்தாளர் மொசைக்குமார் அவர்களின்
"நேச அலைகள்" சிறுகதைத் தொகுப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டது "பொறி" எனும் சிறுகதை.
நிகழ்வுக்கு தே.முருகையன் அவர்கள் தலைமை தாங்கிட.... சிறப்பு அழைப்பாளராக, மேலத்திருக்காஞ்சி கட்டிடக்கலைஞர் சுரேஷ் இராமலிங்கம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்து கொள்ள....
இரா. ஆனந்தராமன் சிறுகதையை வாசிக்க....
சிறுகதை ஆர்வலர்கள்
சீனு.பத்மநாபன்., பி.கல்கி., அரி.தமிழ்மஞ்சினி., நா.சண்முகம்., சுமதி நடராஜன்., ஆ.பக்கிரி., ப.விவேக்குமார்., க.புவனேசன்., வேல்முருகன்., ரேவதி., அய்யாசாமி., ப.சரவணன்
ஆகியோர் கதை பற்றிய உரையாடல் களில் கலந்து கொண்டனர்.

சிறப்பானதொரு தொகுப்புரையை சிவா.ஜெகதீசன் அவர்கள் வழங்கிட... இரா.பக்தவச்சலம் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
#முஎகச #தமுஎகச

உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்க்கின்றோம்.
27/05/2026

உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்க்கின்றோம்.

காரல் மார்க்ஸ் நூலகத்தின் 24.05.2026 அன்று சிறுகதை வாசிப்பு முகாம் 68 ஆவது கூடுகை அழைப்பிதழ்... அனைவரும் வாரீர்.. வாசிப்...
22/05/2026

காரல் மார்க்ஸ் நூலகத்தின் 24.05.2026 அன்று
சிறுகதை வாசிப்பு முகாம்
68 ஆவது கூடுகை அழைப்பிதழ்... அனைவரும் வாரீர்.. வாசிப்போம்..

17.05.2026 ஞாயிறு மாலையில் பாகூர் காரல் மார்க்ஸ் நூலகத்தில் நடைபெற்ற சிறுகதை வாசிப்பு திருவிழாவில்எழுத்தாளர் ம.காமுத்துர...
21/05/2026

17.05.2026 ஞாயிறு மாலையில் பாகூர் காரல் மார்க்ஸ் நூலகத்தில் நடைபெற்ற சிறுகதை வாசிப்பு திருவிழாவில்
எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதி ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த
"அப்படி யார்கிட்டயும் வாங்கல" என்ற சிறுகதை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

நிகழ்வில்
சிறப்பு விருந்தினராக முதலியார் பேட்டை க.அமானுல்லா அவர்கள் கலந்து கொண்டு கதைக்குள்ளேயும் கதைக்கு வெளியேவும் பல்வேறு கருத்துகளை நெகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். அவருக்கு பாகூர் காரல் மார்க்ஸ் நூலகம் சார்பில் சிறப்பு செலுத்தப்பட்டது
#தமுஎகச #முஎகச #காமுத்துரை

Address

West Street, Saraswathi Nagar
Bahour
607402

Website

Alerts

Be the first to know and let us send you an email when காரல் மார்க்ஸ் நூலகம் பாகூர் புதுச்சேரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category