Social Talkies

Social Talkies SOCIAL TALKIES IS A NEW PAGE FROM THE HOUSE OF TOURING TALKIES. "CHAI WITH CHITHRA -SOCIAL TALK"
(4)

04/08/2026

பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்-க்கு எஸ்பிவி மெசேஜ்.. அதிமுகவுக்காக மெனக்கெடும் வேலுமணி..



"பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சு யாரிடமிருந்து வந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை மட...
04/08/2026

"பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சு யாரிடமிருந்து வந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை மட்டுமல்ல, சமூகத்தின் பொறுப்பாகும்" - தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்

கைது செய்யப்பட்ட உதயநிதி தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுகிறார். "இது பொய் வழக்கு தான், வெறும் திசை திருப்பும் முயற்சி தான்....
04/08/2026

கைது செய்யப்பட்ட உதயநிதி தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுகிறார். "இது பொய் வழக்கு தான், வெறும் திசை திருப்பும் முயற்சி தான். இந்த கைதை நான் காமெடியாக தான் நான் பார்க்கிறேன்" என்று கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் காலத்திலும் ...
04/08/2026

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் காலத்திலும் ஆண்களின் அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ,இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் உள்ளிட்ட அரசியல் ஆபாசங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். இப்படியொரு மோசமான பேச்சை எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை. கடுமையான கண்டனங்கள்.

செ. ஜோதிமணி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்

"உதயநிதியை சட்டப்படி தான் கைது செய்கிறோம்" - இணை ஆணையர் விஜயகுமார் " வக்கீல் வந்ததும் நீங்கள் உங்கள் நடவடிக்கையை எடுத்து...
04/08/2026

"உதயநிதியை சட்டப்படி தான் கைது செய்கிறோம்" - இணை ஆணையர் விஜயகுமார்

" வக்கீல் வந்ததும் நீங்கள் உங்கள் நடவடிக்கையை எடுத்துக்கொள்ளுங்கள் " - முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம்

நேற்றைய போராட்டத்தில் நடிகை த்ரிஷாவை பற்றி ஆபாசமாக பேசியதாக தஞ்சாவூரில் உதயநிதி மீது வழக்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோருக்கு "ஆய்வு" என்ற பெயரில் அச்சுறுத்தல் தரும் த.வெ.க. அரசை வன்மையாகக் கண...
03/08/2026

சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோருக்கு "ஆய்வு" என்ற பெயரில் அச்சுறுத்தல் தரும் த.வெ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் ஆலையை தொடர்ந்து ரெனால்ட் நிசான் கார் ஆலையிலும் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொள்கிறா...
03/08/2026

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் ஆலையை தொடர்ந்து ரெனால்ட் நிசான் கார் ஆலையிலும் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொள்கிறார். தொழிற்சாலையை பார்வையிட்டு முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்வதை அறிந்து சாலையெங்கும் மக்கள் குவிந்தனர்.

40, 50 ஆண்டுகள் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களின் அனுபவங்களை எடுத்து கொள்ளாமல், அவர்களின்...
03/08/2026

40, 50 ஆண்டுகள் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களின் அனுபவங்களை எடுத்து கொள்ளாமல், அவர்களின் ஆலோசனைகளை கேட்காமல், அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டாமல் தவெக அரசு செயல்படுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. காவிரி பிரச்சனையில் எதிர்க்கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

FULL VIDEO LINK : https://www.youtube.com/watch?v=T6yNacOxpWQஇன்றைய அரசியலில் காமராஜர்?"என் வாழ்வில் மூன்று முக்கியமான த...
03/08/2026

FULL VIDEO LINK : https://www.youtube.com/watch?v=T6yNacOxpWQ

இன்றைய அரசியலில் காமராஜர்?

"என் வாழ்வில் மூன்று முக்கியமான தலைவர்கள் இருக்கிறார்கள்... காமராஜர், அப்துல் கலாம், மன்மோகன் சிங். காமராஜர் பணத்துக்கு ஆசைப்படல அதனால் தான் அவரை இன்றும் நாம் ஞாபகத்தில் வச்சிருக்கோம். அவரை போல ஒரு அரசியல்வாதி யாருமே இல்ல." என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் சோசியல் டாக்கீஸ் நேர்காணலில் கூறியுள்ளார்.

Full Video Link : https://www.youtube.com/watch?v=OsbAHQ7qG4U&t=86sவிஜய்யின் வெற்றியை கணிக்க தவறியது எப்படி? என்ற கேள்வி...
01/08/2026

Full Video Link : https://www.youtube.com/watch?v=OsbAHQ7qG4U&t=86s

விஜய்யின் வெற்றியை கணிக்க தவறியது எப்படி? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது " பிரச்சனைகள் தான் முக்கியம் , தனி நபர் முக்கியமல்ல என்று பாடம் கற்றுக்கொண்டேன். இதுநாள் வரை மூப்பனார், ரஜினிகாந்த். விஜயகாந்த், திருமாவளவன், சீமான், கிருஷ்ணசாமி, சரத்குமார் என்று இத்தனை ஆண்டுகள் உருவாக்கி வைத்திருந்த மாற்று என்கிற ஒரு விதையை விஜய் அறுவடை செய்துவிட்டார். என்று சோசியல் டாக்கீஸ் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார்.

Address

Social Talkies
Chennai
600026

Alerts

Be the first to know and let us send you an email when Social Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category