Central Government Welfare Schemes Cell - BJP Tamilnadu

Directions Website

Central Government Welfare Schemes Cell - BJP Tamilnadu A Single Window for Assistance to All Central Government Welfare Schemes by BJP Tamilnadu.

15/09/2026

Coffee Table book of Central Government Welfare Schemes

உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் தலைமையகத்தை கொண்ட நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய லண்டனில் ஒப்பந்தம்... ஓ.... ஓ... அ...
14/09/2026

உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் தலைமையகத்தை கொண்ட நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய லண்டனில் ஒப்பந்தம்... ஓ.... ஓ... அப்படி வரீங்களா மொமெண்ட் ...

https://en.wikipedia.org/wiki/Samvardhana_Motherson

15/06/2026

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய பிறகு, டெல்லியில் தமிழக பாஜக தலைவர்கள் கூடிய கூட்டத்தில், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி பற்றி அமித் ஷா பேசும் போது, சில விஷயங்களை..ஆதாரத்தோடு கூறி இருக்கிறார்.
அதில் முக்கியமான ஒரு விஷயம் அண்ணாமலை தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வாங்கிய வாக்கு சதவீதமும், சட்டமன்ற தேர்தலில் நயினார் தலைமையில் பாஜக வாங்கிய வாக்கு சதவீதமும் கிட்டத்தட்ட சமமாக தான் இருக்கிறது.
ஆக அண்ணாமலை கூறுவது போல, தமிழக பாஜக வாக்கு வங்கி ஒன்றும் அவரால் வானளாவ உயர்ந்து விடவும் இல்லை...இப்போது அவர் விலகி போய் விட்டதால் கூடவே கட்சிக்கு எந்த பின்னடைவும் வந்து விடவில்லை...என ஆதாரத்துடன் விளக்கி கூறி, அடுத்த கட்ட கட்சி வேலையை போய் பார்க்க சொல்லிவிட்டார்.
அமித் ஷா, உள்துறை அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு வந்த சரியான தகவல்களை கூறினாலும் கூட, எல்லோருமே கிட்டத்தட்ட தவறாக கணக்கிடும் முறையில் அவருக்கு கிடைத்த வாக்கு சதவீதத்தை ஒப்பீடு செய்து கூறி இருப்பதால்...இதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அதாவது இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, ஒரு கட்சி கூட்டணி எதுவும் இல்லாமல் 'தனியாக' நின்று பெற்ற வாக்கு சதவீதத்தை தான், மிக சரியான சதவீதமாக நாம் கணக்கில் எடுத்து கொள்ள முடியும்.
உதாரணமாக இப்போது நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக விஜய் கட்சி மட்டும் தனியே நின்று, வாங்கிய வாக்கு சதவீதம் 35 %.
அதே போன்று நாம் தமிழர் சீமான் வாங்கிய வாக்கு சதவீதம் 4 %.
ஆக இது தான் இந்த கட்சிகளின் குழப்பம் இல்லாத உண்மையான வாக்கு சதவீதம்.
அந்த வகையில் திமுக, அதிமுக..பாஜக..என எல்லா கட்சிகளும் எப்போதும் கூட்டணி வைத்தே நிற்பதால், அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் என்பது, பலரும் கூறுவது போல..கணக்கீடு செய்வது போல..அந்த கட்சியின் துல்லியமான சதவீதம், நிச்சயமாக இல்லை.
சரி..அப்ப அண்ணாமலை கும்பல்கள் உருட்டுவது போல...அண்ணாமலை தலைவராக இருந்ததால் தான் 18 சதவீதத்துக்கும் மேலாக, அதிமுக...திமுகவுக்கு நிகராக பாஜகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்தது...இப்போது அவர் விலகியதால் மீண்டும் பாஜக நோட்டாவுக்கே வந்து விட்டது.. என்பதெல்லாம்.?
ஏதோ பாஜகவை அண்ணாமலை வந்து வானளாவ உயர்த்தி விட்டது போல பில்டப் செய்து மக்கள் மத்தியிலும் மீடியாக்களிலும் எப்போதும் வார் ரூம் மூலம் பிரமாண்டமாக உருட்டுவது தான் அவர்களின் வேலை என்றாலும் அதில் உண்மை சிறிதும் இல்லை.
ஆனால் அதே நேரத்தில் 2.5 /3 சதவீதமாக இருந்த பாஜக வாக்கு சதவீதத்தை, எனது கணக்கின்படி 6 சதவீதமாக...அதாவது 'இரட்டிப்பாக' அண்ணாமலை தனது காலத்தில் மாற்றி இருந்தார் என்பதை ஒத்து கொள்ள தான் வேண்டும்.
தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதத்தை இரண்டு மடங்கு அண்ணாமலை..சுலபமாக உயர்த்தியதற்கு மற்றொரு முக்கிய காரணம், அப்போது தமிழகத்தில் அதிகமாக இருந்த மோடி எதிர்ப்பு அலை என்பது சற்று குறைந்து, மோடி மீது இளைஞர்கள் ஆதரவு சற்று அதிகமான நேரம் என்பதால், அது அண்ணாமலைக்கு வசதியாக போயிற்று.
தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட என்ன தான் டெல்லி மேலிடம் அண்ணாமலையை அமைதி ஆக்கினாலும், அண்ணாமலையும், அதிமுக கூட்டணி வெற்றிக்கு மனதார வேலை பார்ப்பதாக பாவ்லா காட்டினாலும்..அவரது ஆதரவாளர்கள், அண்ணாமலை பேச்சை கேட்டு வாக்களிக்காமல் உள்குத்து குத்தியது..இப்போது வெளியே வந்து விட்டது.
இந்த சூழ்நிலையில் யாருமே எதிர்பாராமல் விஜய் வெற்றி பெற்று..அடித்து பிடித்து ஆட்சியை பிடித்ததில் பல பேருக்கும்..பல கட்சிகளுக்கும் இப்போது பெரும் குழப்பமாகி..தமிழக அரசியலே இப்போது குழம்பிய குட்டை ஆகிவிட்டது.
நாமும் விஜய்யை போல எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற அந்த ஆத்திரத்தில் பதட்டமாகி, பலரும் தப்பும் தவறுமாக முடிவு எடுக்கிறார்கள்.
அதாவது அதிமுகவில் பதவியில் இருந்து, ஒரு அந்தஸ்தான விலாசமும்.. கோடிக்கணக்கில் பணமும் பார்த்த பல தலைவர்கள்..பண்ணாடைகளாக பனையூர் கேட்டின் முன் பிச்சைக்காரர்களாக நிற்பதையும்..வாட்ச் மேனிடம் கூட பூங்கொத்து கொடுத்து விட்டு கட்சியில் சேர துடிப்பதையும் சனிக்கிழமை தோறும் பார்க்கிறோம்.
வளர்ந்த கட்சி...வாழ்வு தந்த கட்சி மீது சாதாரண தொண்டனுக்கு இருக்கும் விசுவாசம் கூட இந்த எச்சை தலைவர்களுக்கு இல்லை என்பது கேவலத்தின் உச்சம்.
அந்த வகையில் யார் என்றே தெரியாத ஒருவனை மாநில தலைவர் ஆக்கிய..
விலாசமும்..வசதியும் கொடுத்த கட்சியை..அனைவருடனும் அனுசரித்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வக்கில்லாத அண்ணாமலை..புது இயக்கம் ஆரம்பித்து..நண்டு சிண்டுகளை வைத்து வளர்ந்த கட்சியையே, நோட்டா கட்சி என கூவ வைக்கிறார் என்றால்...இந்த உருட்டெல்லாம் எத்தனை நாளைக்கு தாங்குகிறது என நாம் பார்க்க தானே போகிறோம். இந்த லட்சணத்துல இவர் மெத்த படித்த அறிவாளி வேற.
சதவீத கணக்குப்படி 3 சதவீதமாக ஆகிவிட்ட பாஜக நோட்டா என்றால் 6ல் பாக்கி 3 சதவீதமாக இருக்கும் அண்ணாமலை...நோட்டா இல்லாமல் நொண்ணாவா..?
இதோ இவருக்கு போட்டியாக..ரஜினி மனைவி லதாவின்.? புது இயக்கம்..
ராகவா லாரன்ஸ்...ம்ம்...சரியான போட்டி..
இதில் ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இன்றைய முதல்வர் விஜய்.
இருந்தாலும் "எடப்பாடியாரின்" தெண்டுல்கர் ஆட்டம் நிச்சயமாக இருக்கிறது..வெயிட் ப்ளீஸ்..! குரு

01/04/2026

அண்ணாமலை ஓரங்கட்டப்படுவாரா :

பாஜக என்ற பேரியக்கம் தன்னை எதிர்ப்பவர்களையும் துரோகம் இழைப்பவர்களையும் கையாளுவதில் தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளது. கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது உடனடியாக நேரடி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களை அவர்களே வீழ்த்திக் கொள்ளும் சூழலை உருவாக்கி அவர்களை மெல்ல மெல்ல அரசியல் களத்திலிருந்து அகற்றுவதே அக்கட்சியின் வியூகம்

கட்சிக்குள்ளேயே இருந்து துரோகம் இழைக்க முயன்றவர்களையும் மாநில அளவில் ஆதிக்கம் செலுத்திய வசுந்தரா ராஜே, பி எஸ் எடியூரப்பா, கேசுபாய் படேல், சாந்த குமார், உமா பாரதி மற்றும் கரியா முன்டா போன்றவர்களையும் கவனிக்க வேண்டும். இவர்களைத் தாண்டி மத்திய கமிட்டிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து பின்னாளில் விலகிப்போன முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, சுப்ரமணியம் சாமி, சுமித்ரா மகாஜன், சஞ்சய் ஜோஷி, அருண் ஷோரி மற்றும் சத்யபால் மலிக் போன்றவர்களின் நிலையும் இதற்குச் சான்று. அதே சமயம் மாற்று கட்சிகளில் இருந்து வந்தாலும் கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்று பெரும் புகழ் பெற்றவர்களாக ஹேமந்த் பிஸ்வாஸ், ஜோதிராதித்ய சிந்தியா, சுவேந்து அதிகாரி மற்றும் அண்ணாமலை ஆகியோர் திகழ்கின்றனர். ஆனால் கொள்கை கட்டுப்பாட்டை மதிக்காமல் அழிந்து போன அசோக் சவான், R P N சிங், சுதிர் ஷர்மா, திகம்பர் காமத், முகுல் ராய், சகன் புஜ்பல், ரமேஷ் மற்றும் Y S சௌத்ரி என ஒரு நீண்ட பட்டியலே உள்ளது

கட்சி கட்டுப்பாடு, கொள்கை, நேர்மை, பொறுமை மற்றும் உழைப்பு ஆகியவற்றை முறையாகப் பின்பற்றுபவர்களால் மட்டுமே இந்த இயக்கத்தில் நிலைத்து வெற்றிபெற முடியும். கட்சிக்குள் இருந்தாலும் சரி அல்லது வெளியில் இருந்து வந்தாலும் சரி, ஆதரவாளர்கள் பலத்தை வைத்து மிரட்டுவது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவது அல்லது தொண்டர்களையும் கொள்கையையும் இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அத்தகைய நபர்களைத் தயக்கமின்றி ஒதுக்கி வைக்கும் குணம் பாஜகவுக்கு உண்டு. அதிகாரம் மற்றும் ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே கட்சியின் இலக்கல்ல, கால நேரத்திற்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் ஆற்றல் இந்த இயக்கத்திற்கு உள்ளது. இது திடீரென முளைத்த ஆதரவாளர்களுக்குப் புரியாது, ஏனெனில் அவர்களுக்கு எதையும் இப்போதே அடைய வேண்டும் என்ற அவசரம் மட்டுமே உள்ளது. குறிப்பாக உங்கள் அபிமான தலைவர் ஒரு உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் ஆதரவாளர்களாகிய நீங்கள் மாற வேண்டும்; இல்லையென்றால் உங்கள் தலைவரை அழிக்கும் முதல் சக்தியாக நீங்களே இருப்பீர்கள். இது புரிந்தவர்களுக்குப் புரியும், மற்றவர்கள் வழக்கம் போல விமர்சனங்களையும் சாபங்களையும் தொடரலாம், அதனால் உண்மை நிலை மாறிவிடப் போவதில்லை.

🔺தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை 🔺பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டே...
14/02/2026

🔺தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
🔺பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில் நிதி இல்லை
🔺சமவேலைக்கு சமஊதியம் கொடுக்க மாட்டேன், எனெனில், நிதி இல்லை
🔺செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
🔺புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை.
🔺மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு & புதிய நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
🔺பழைய ஓய்வூதியம் கொடுக்க மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை.
🔺அரசு போக்குவரத்து ஓட்டுநர் நடத்துனர் ஊதிய உயர்வு & புதிய நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை.
🔺மின்வாரியா ஊழியர்கள் நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை.
🔺விவசாயக் கடன் தள்ளுபடி பண்ண மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
🔺கல்விகடன் தள்ளுபடி செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
ஆமாய்யா இது எதுக்குமே என் கிட்ட காசு கிடையாது.
அப்பறம் எதுக்குத்தான் ய்யா காசு இருக்கு..?
கார் ரேஸ் விட 😁
பேனா சிலை வைக்க 😁
அப்பன் சிலை வைக்க 😁
இந்தா இப்ப, 5000 ரூபாயக் கொடுத்து ஓட்டுப் பிச்சை எடுக்க 😁
அப்பறம், பீஹார்ல கொடுத்தா அது ஜனநாயகத்தை வளைக்கும் அராஜகச் செயல், அதையே அறிவாலயம் செய்தால், சமூக முன்னேற்ற் சரித்திரச் செயல்

★ஸ்டாலின் என்னும் தண்டக் கருமாந்திரம்

Address

BJP TAMILNADU
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Central Government Welfare Schemes Cell - BJP Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share