TNUEF - ததீஒமு

TNUEF - ததீஒமு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - மாநிலக்குழு

தமிழ்நாடு பட்ஜெட் : பட்டியலின, பழங்குடியினர் நல நிதியை உரிய திட்டங்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் - தீண்டாமை ஒழிப்பு மு...
06/08/2026

தமிழ்நாடு பட்ஜெட் : பட்டியலின, பழங்குடியினர் நல நிதியை உரிய திட்டங்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

| |

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் #மார்க்ஸ் -  #அ...
06/08/2026

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும்

#மார்க்ஸ் - #அம்பேத்கர், #மகத்_சத்தியாகிரகத்தின்
நூற்றாண்டு கருத்தரங்கம்

06.08.2026 வியாழன், மாலை 5:00 மணி K.R.பார்ட்டி ஹால், திருக்கழுக்குன்றம் சாலை, (நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் எதிரில்) #செங்கல்பட்டு.

#ததீஒமு

தமிழ்நாடு பட்ஜெட் : பட்டியல் சாதி, பழங்குடியினர் நலன்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இலக்கிடப்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே செ...
06/08/2026

தமிழ்நாடு பட்ஜெட் : பட்டியல் சாதி, பழங்குடியினர் நலன்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இலக்கிடப்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசின் 2026–27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பட்டியல் சாதி, பழங்குடியின மக்களின் நலனுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும், ஒதுக்கீடுகள், திட்டங்களின் செயலாக்கம், துணைத் திட்ட நெறிமுறைகளின் அமலாக்கம் ஆகியன குறித்து வெளிப்படையான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

பட்டியல் சாதி சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ரூ. 25,225 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு ரூ. 2,079 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என பட்ஜெட் கூறுகிறது. ஆனால், திட்ட ஒதுக்கீடுகள் குறித்த விவரங்கள் பட்ஜெட் உரையில் இல்லை. துணைத் திட்ட நிதி ஒதுக்கீடுகளில் எத்தகைய கணக்கீடு பின்பற்றப்படுகிறது என்பதை பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்க வேண்டும். 2025–26 இல் ஆதிதிராவிடர் கொள்கைக் குறிப்பில், திட்ட ஒதுக்கீட்டில் 21.97 சதவீதம் (ரூ. 20,365 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தற்போது ரூ. 25,225 கோடி என்பதை தொகையளவில் உயர்வு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த ஒதுக்கீடுகள் எவ்வாறு இலக்கிடப்பட்டு செலவழிக்கப்படுகின்றன என்பதுதான் முக்கியம். உண்மையில், ஒதுக்கீடுகளில் எவ்வளவு குறிப்பாக பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு நேரடியாக இலக்கிடப்பட்டு (Targeted) சென்றடைகின்றன என்பதை உறுதி செய்யாவிட்டால், பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்கு என்ற பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெரும் பகுதி அரசின் பொதுத் திட்டங்களுக்கே திருப்பிவிடப்படும் துயரம் தொடர்வதை தடுத்திட முடியாது.

2024 இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் மற்றும் விதிகளின்படி, திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

சமூக நீதிதுறைக்கான ஒதுக்கீட்டில் 2026–27 இல் ரூ. 3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2022–23 இல் ரூ. 4,281 கோடியாக இந்த ஒதுக்கீடு இருந்தது. 2021–22 ஆம் ஆண்டிலேயே ஒதுக்கீடு ரூ. 4,000 கோடிகளுக்கு அதிகமாக இருந்த நிலையில், இதற்கேற்ற வகையில் தற்போது ஒதுக்கீடு இருந்திருக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அயல் கல்வித் திட்டத்திற்கு பயனாளிகள் எண்ணிக்கை 362 ஆகவும், அயோத்திதாசர் வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்பிற்குரியது. எனினும், நிலம் வழங்கும் மண்ணின் மகள் திட்டத்திற்கு ரூ. 20 கோடி என்பதும், பட்டியல் சாதி தொழில்முனைவோர் திட்டத்திற்கு ரூ. 165 கோடி ஒதுக்கீடு என்பதும் போதுமானதல்ல.

மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் போவதும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது. ஆனால் அவ்வாறு செலவிடப்படாத தொகை காலாவதியாகாமல், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

மேலும், சட்டமன்ற சிறப்பு அமர்வுகள் மூலம் பட்டியல் சாதி, பழங்குடியின மக்களுக்கான திட்டங்களின் செயலாக்கம் நெறிமுறைகளின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுவதை விவாதிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று மாநில தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

#ததீஒமு

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் தலையீட்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை!கொடைக்கானல் வட்டம்,...
04/08/2026

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் தலையீட்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை!

கொடைக்கானல் வட்டம், பூம்பாறையில் சாதிவெறி தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் ராமரின் மனைவிக்கு, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வில்பட்டி சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதியில் சமையலர் பணிக்கான நியமன ஆணையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், #ததீஒமு மாநிலச் செயலாளர் செ.முத்துராணி, மாவட்டத் தலைவர் ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் கே.டி.கலைச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வனஜா மற்றும் எம்.ஆர்.முத்துச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தா.அஜாய்கோஷ், கே.ஆர்.பாலாஜி, திண்டுக்கல் நகரச் செயலாளர் அரபு முகமது, மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ்.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தல்!பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சமூக மக்களுக்கு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்ந...
04/08/2026

பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தல்!

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சமூக மக்களுக்கு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

மாநில அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், பஞ்சமி நிலங்களை கண்டறிந்து களப் போராட்டங்களை மேற்கொண்டு நிலங்களை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்.



More: https://shorturl.at/kNHWI

திண்டுக்கல் - கொடைக்கானல், பூம்பாறை சாதிவெறி தாக்குதலில் படுகாயமடைந்த தலித் இளைஞர் பிரசாந்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ...
03/08/2026

திண்டுக்கல் - கொடைக்கானல், பூம்பாறை சாதிவெறி தாக்குதலில் படுகாயமடைந்த தலித் இளைஞர் பிரசாந்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினர்.

பிரசாந்துக்கும், அவரது குடும்பத்திற்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

#ததீஒமு

பூம்பாறை சாதிவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த பிரசாந்தை நேரில் சந்தித்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காவல் பாதுகாப்...
03/08/2026

பூம்பாறை சாதிவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த பிரசாந்தை நேரில் சந்தித்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காவல் பாதுகாப்பு வழங்க அரசை வலியுறுத்துகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை கிராமத்தில் சாதிவெறித் தாக்குதலில் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரசாந்தை, 02.08.2026 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் செ.முத்துராணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். மேலும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்தச் சந்திப்பில் #ததீஒமு தேனி மாவட்டச் செயலாளர் ஜி.எம்.நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் டி.வெங்கடேசன், இ.தர்மர் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA) துணைத் தலைவருமான பி.மகாலிங்கம், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மதுரைக் கோட்டத் தலைவர் என்.சுரேஷ்குமார், இணைச் செயலாளர்கள் ஆர்.ரமேஷ்பாண்டியன், எஸ்.முத்துக்குமாரசாமி, பெரியகுளம் கிளைச் சங்கச் செயலாளர் பி.சசிக்குமார், பொறுப்பாளர் டி.பி.சரவணக்குமார் மற்றும் கிளைச் சங்கத் தோழர்கள் ஆர்.பிரேம்குமார், ஜாபர் சாதிக், ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பிரசாந்தின் தாயார், "எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. என் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் இருக்கிறது. எனவே, எங்கள் குடும்பத்திற்கு உடனடியாக காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
எனவே, பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு நிரந்தர காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், இந்த சாதிவெறிக் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம் என்று மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தெரிவித்தார்.

குதிரை மேய்த்ததாகக் கூறி திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ராமர் படுகொலை செய்யப்பட்டார். அ...
01/08/2026

குதிரை மேய்த்ததாகக் கூறி திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ராமர் படுகொலை செய்யப்பட்டார். அதே தாக்குதலில் கடுமையாக வெட்டப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரசாந்தை 01.08.2026 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்டத் தலைவர் எஸ்.சுருளிவேல், மாவட்டச் செயலாளர் ஜி.எம்.நாகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் இ.தர்மர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது, பிரசாந்தின் உடல்நலம், வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விவரங்களை மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

கொடைக்கானல் அருகே பூம்பாறையில், குதிரை மேய்ந்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் ராமர் குடும்பத்தினருக்கு நீதி ...
01/08/2026

கொடைக்கானல் அருகே பூம்பாறையில், குதிரை மேய்ந்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் ராமர் குடும்பத்தினருக்கு நீதி கேட்டும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரியும் 2 ஆவது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் குடும்பத்தினர் சார்பில் போராட்டம்.

01/08/2026

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பூம்பாறையில், குதிரை மேய்ந்ததாகக் கூறி படுகொலை ஒரு புறம் என்றால் பெற்றோரை மிரட்டி வலுக்கட்டாயமாக சடலத்தை எடுத்துச் செல்வதற்கு நிர்பந்தம் செய்த மாவட்ட நிர்வாகம் மறுபுறம்!

குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனையி பல்வேறு ஜனநாயக அமைப்புகளுடன் கடந்த இரண்டு தினங்களாக நீதிக்கான போராட்டத்தில் களத்தில் நிற்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் தோழர் செ.முத்துராணி அவர்களின் காணொளி களத்திலிருந்து...

I I l

Address

No. 25/13, SAMPANGI Street, WEST MAMBALAM
Chennai
600033

Alerts

Be the first to know and let us send you an email when TNUEF - ததீஒமு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNUEF - ததீஒமு:

Shortcuts

Share