Anbu Chitrarasu - அன்பு சிற்றரசு

Anbu Chitrarasu - அன்பு சிற்றரசு நீ என்னை போற்றுவதற்கு நான் பிரபலமும் இல்லை தேவையில்லாமல் தூற்றுவதற்கு ஆளாக என்னிடம் பலம் இல்லாமலுமில்லை..
(2)

07/08/2026

காவிரிக்காக கற்சித்த Velmurugan.T

#காவிரி #வேல்முருகன் #தமிழகம்

07/08/2026

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஒன்றிய அரசு..

Velmurugan.T

#ஒன்றியஅரசு #தமிழ்நாடு #சமூகநீதி
#மக்கள்குரல்

07/08/2026

காவேரி தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழ் வரலாற்றின் அடையாளம்..

Velmurugan.T

#காவேரி #தமிழ் #தமிழ்மொழி #தமிழ்வரலாறு
#தமிழர்அடையாளம் #தமிழர்பெருமை #தமிழ்நாடு

06/08/2026

"எங்கள் பண்ரூட்டி வட்டத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. ஒரு பெரிய தனியார் நிறுவனம் அந்த நிலங்களை வாங்கியது. ஆனால், சில காலத்திலேயே அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள். இப்போது அந்த மொத்த நிலத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய். அந்த மக்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். கடந்த திமுக ஆட்சியின் போது கூட, இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, அந்த நிலம் வேறு யாருக்கும் கைமாறிவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால், ‘ஊழலை ஒழிப்போம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, சென்னையில் உள்ள ஒரு ஐ.ஜி (IG) மற்றும் சில அமைச்சர்களின் தலையீட்டோடு, அந்த 100 ஏக்கர் நிலத்தையும் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய அந்தத் தனியார் நிறுவன முதலாளிக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறது." - தி.வேல்முருகன்

| |

நாளை தலைநகரம் சென்னையில்...காவிரி நதிநீர் உரிமை மீட்க, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் தி...
06/08/2026

நாளை தலைநகரம் சென்னையில்...

காவிரி நதிநீர் உரிமை மீட்க, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்காக சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடலில் அமைக்கப்படும் மேடை மற்றும் ஏற்பாடுகள் நடைபெறும் இடத்தை, காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவிரி உரிமை மீட்பு இயக்கத் தலைவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காவிரியை காப்போம்... தமிழ்நாட்டின் உரிமையை மீட்போம்!

Velmurugan.T
Dr K Krishnasamy
தனியரசு

#தமிழ்நாடு #காவிரி

06/08/2026

கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லாவிட்டால் ஜனநாயகம் எப்படி இருக்கும்?

Velmurugan.T

#ஜனநாயகம்_காக்க #மக்களுக்குபதில்
#பொறுப்பான_ஆட்சி


06/08/2026

தமிழ்நாடு அரசே!
வெற்று அறிவிப்புகளால் விவசாயிகளை ஏமாற்றாதே!

தமிழ்நாடு அரசின் 2026–27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட், விவசாயிகளின் உண்மையான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய ஏமாற்றமளிக்கும் ஆவணமாகவே உள்ளது. அறிவிப்புகள் ஏராளமாக இருந்தாலும், விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உறுதியான நடவடிக்கைகள் இதில் இடம்பெறவில்லை.

நெல், கரும்பு உள்ளிட்ட முக்கிய விளைபொருட்களுக்கு இலாபகரமான கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு இல்லை. விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, வட்டியில்லாப் பயிர்க்கடன் விரிவாக்கம், உற்பத்திச் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் போன்ற அடிப்படை கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வேளாண்மை, டிஜிட்டல் சேவைகள் குறித்து அரசு பெருமையாகப் பேசுகிறது. ஆனால் விதை, உரம், பூச்சிக்கொல்லி, மின்சாரம், தொழிலாளர் பற்றாக்குறை போன்ற விவசாயியின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறாத பட்ஜெட், நிலத்தில் உழைக்கும் விவசாயிக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்காது.

தமிழக வேளாண்மையின் உயிர்நாடியான காவிரி நீருரிமை, மேகதாது அணை எதிர்ப்பு, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட மாநில உரிமைப் பிரச்சினைகள் குறித்து எந்த வலுவான செயல்திட்டமும் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நீரின்றி வேளாண்மை இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ள அரசு, இயற்கை விளைபொருட்களுக்கு உறுதியான சந்தை, விலை உத்தரவாதம் மற்றும் மாற்றக் கால நிதியுதவி போன்ற முக்கிய அம்சங்களைத் தெளிவுபடுத்தவில்லை.

அதேபோல், சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பாதுகாக்கும் தனித்துவமான திட்டங்களும் போதுமானதாக இல்லை.
பாசன மேம்பாடு, மண் வளப் பாதுகாப்பு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அவற்றை எப்போது, எவ்வாறு, எந்த மாவட்டங்களில் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதற்கான கால அட்டவணையும், செயலாக்கத் திட்டமும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

விவசாயம் என்பது வெறும் அறிவிப்புகளால் வளராது. விவசாயியின் வருமானம் உயர வேண்டும், உற்பத்திச் செலவு குறைய வேண்டும், நீர் உறுதி செய்யப்பட வேண்டும், விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.
இந்த அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றத் தவறியுள்ள இந்த வேளாண் பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பட்ஜெட்டாக இல்லை. அறிவிப்புகளை அடுக்கி வைத்திருக்கும் பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.

தமிழக விவசாயிகளின் நலனை உண்மையாகப் பாதுகாக்கும் வகையில் இந்தப் பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்து, விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

#விவசாயிஏமாற்றம்பட்ஜெட்
#அறிவிப்புகளால்வயல்விளையாது


06/08/2026

தமிழகத்தில் தொடரும் குற்றங்கள் விஜய் என்ன சொல்கிறார்?

Velmurugan.T

#தமிழகம் #குற்றங்கள் #அரசியல் #செய்திகள்

06/08/2026

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகம் திருவள்ளுவர் இல்லத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மயக்கம் ஏற்பட்டு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

06/08/2026

ஒருபுறம் மதுபான கடைகள் மூடல் மறுபுறம் புதிய எலைட் பார்கள் மக்களை ஏமாற்றும் நாடகமா?

Velmurugan.T

#மதுவிலக்கு #டாஸ்மாக் #எலைட்_பார்கள் #மக்களை_ஏமாற்றாதே #தமிழக_அரசியல் #மக்கள்_நலன் #சமூக_நீதி #மதுவிலக்கு_வேண்டும் #வேல்முருகன் #தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anbu Chitrarasu - அன்பு சிற்றரசு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share