25/09/2026
சென்னை அம்பத்தூரில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் திரு. A.T.S. தமிழ்ச்செல்வம் அவர்களின் மகனும், YEF நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு. A.T.S. கோபி அவர்களும், YEF துணைத் தலைவர் திரு. அன்பரசு அவர்களும் தொடங்கியுள்ள “Fund Bridge” புதிய நிதி நிறுவனத்தை இன்று திருக்கரங்களால் திறந்து வைத்து, அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொண்டேன்.
இந்த சிறப்பான நிகழ்வில் YEF தலைவர் திரு. M.ஆனந்த் அவர்களுடன், YEF நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு. குரு கேசவ் மற்றும் திரு. ஹரிஹரன், மேலும் தென் சென்னை மேற்கு மாவட்ட டி.நகர் தொகுதி செயலாளரும், YEF உறுப்பினருமான திரு. சச்சின் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இளம் தொழில் முனைவோர் புதிய முயற்சிகளுடன் தொழில் துறையில் முன்னேறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களின் தொழில் பயணம் சிறக்கவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கி பலருக்கும் பயனளிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“Fund Bridge” நிறுவனம் சிறப்பான வளர்ச்சியடைந்து, வெற்றிகரமான நிறுவனமாக உயரட்டும்.
Young Entrepreneurs Federation