02/09/2026
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தென் சென்னை மாவட்ட பொதுகுழு கூட்டம் நடைபெற உள்ளதால் அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் எஸ் பீர் முஹம்மத் தலைமையில் அவரது அலுவலகத்தில் 1/09/2026 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது . இதில் கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது .
1.தென் சென்னை மாவட்டம் ஒருகிணைக்கும் வகையில் செயலி (app) உருவாக்குவது
2. மாவட்டம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக ஒரு நிர்வாகி 10 புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
3. தென் சென்னை மாவட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அடையாள உறுப்பினர் அட்டை பொதுக்குழுவில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
4. வட்டி இல்ல கடன் தொகை வழங்கும் திட்டம் ( 10,000 ரூபாய் கடன் ஒரு வருடம் பூர்த்தி ஆன நிர்வாகிகளுக்கு மட்டும் வழங்கப்படும் )
5. தீர்மானம்படி நிர்வாகிகள் செயல்படவிட்டால் அவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்.
6. தென் சென்னை மாவட்டத்தில் தொகுதி வாரியாக வருடர்த்திற்கு ஒரு தொகுதியில் பொதுகுழு கூட்டம் கண்டிப்பாக நடைபெற வேண்டும்
7. தென் சென்னை மாவட்ட பொதுகுழு கூட்டம் இந்த மாதம் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.
8. தென் சென்னை மாவட்ட அன்னைத்து தொகுதிகளிலும் உட்பட
அனைத்து வார்டுகள் அந்த தொகுதி நிர்வாகிகள் தெரிய படுத்துமாறு முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட தலைவர் s பீர் முஹம்மத், மாவட்ட பொருளாளர் கவுஸ் பேக் , மாவட்ட துணை தலைவர்கள் .m.நிசார் ஷாஹுல் ஹமீத், சையத் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் j.m. அன்வருதீன், k அப்துல் காதர் , தகவல் தொழில்நுட்ப அணி மண்டல ஒருகிணைப்பாளர் m ஆரிஃப் ரஹ்மான், சைதை தொகுதி செயலாளர் i அப்துல் கலாம், வேளாச்சேரி தொகுதி செயலாளர் நூறுதீன், விருகம்பாக்கம் தொகுதி செயலாளர் N முஹம்மத் முபாரக் , மகளிர் அணி மாவட்ட தலைவி மெஹ்ஜாபீன், ஷேக் உசேன், 173 வட்ட தலைவர் V அபுபக்கர், 171 வட்ட செயலாளர் பீர் முஹம்மத் , விருகம்பாக்கம் அக்மல் பாஷா , சுல்தான் ஷெரீப், தமீம் அன்சாரி , மேடவாக்கம் மெஹ்ஜாபின் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டனர்