IUML Tamil Nadu State

IUML Tamil Nadu State Official Page for Indian Union Muslim league Tamil Nadu.

ஆடுதுறை ஸ்ரீ மதுர காளியம்மன் மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்த அமைச்சர் ஷாஜஹான்நாளை மறுநாள் நடைபெற இ...
05/09/2026

ஆடுதுறை ஸ்ரீ மதுர காளியம்மன் மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்த அமைச்சர் ஷாஜஹான்

நாளை மறுநாள் நடைபெற இருக்கும் ஆடுதுறை ஸ்ரீ மதுர காளியம்மன் மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்து கோயிலுக்கு சென்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் கோயில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவர் ம.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இன்று (05-09-2026) மதியம் பாபநாசம் தொகுதி மேம்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர...
05/09/2026

இன்று (05-09-2026) மதியம் பாபநாசம் தொகுதி மேம்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் ஆலோசனை மேற்கொண்டார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே ஏ எம் முஹம்மது அபூபக்கர் மற்றும் மாநில துணைத் தலைவர் ஆர். டி. பி. ...
04/09/2026

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே ஏ எம் முஹம்மது அபூபக்கர் மற்றும் மாநில துணைத் தலைவர் ஆர். டி. பி. தாவூத் பாட்ஷா ஆகியோருடன் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில நிர்வாகிகள் 04.09.2026 வெள்ளிக்கிழமை மாலை 03.30 மணியலவில் Gen-I League msf பயிலரங்கம் சம்பந்தமாக Msf மாநில தலைவர் திருச்சி ஏ.எம்.எச்.அன்சர் அலி, தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், மாநில பொருளாளர் உளுந்தூர்பேட்டை எஸ். சையத் பாசித் ரஹ்மான், தேசியச் செயலாளர் ஏ.ஆர். அபூபக்கர் ரஸ்வி, மாநிலச்செயலாளர்கள் அ.துராபுதீன், எஸ்.ஷஃபீக் அஹமத், சா.இஹ்சானுல்லாஹ் ஆலோசனை செய்தனர்.

மங்கலம்பேட்டை பாரி இலாஹி எழுதிய அயலக கவிதைகள் என்ற நூல் பயிலரங்கத்தில் வெளியிடுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. முஹம்மது ராஷித் ஆகியோர் உடன் இருந்தனர்.

01/09/2026
வாணியம்பாடியில் ஆசிரியர்களுக்கு விருது, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா பங்கேற்பு...
31/08/2026

வாணியம்பாடியில் ஆசிரியர்களுக்கு விருது, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா பங்கேற்பு

வாணியம்பாடி, ஆக.30: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முத்தஹிதா உருது தன்ஜீம் அறக்கட்டளை, தமிழ்நாடு சார்பில் ஆசிரியர்களுக்கு விருது, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் உருது கவி அரங்கம் நிகழ்ச்சி இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் செயலாளர் முஹம்மத் ஹனீப் காதிப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த உருது ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் சுமார் 2,000 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற 300 மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற உருது கவி அரங்கில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கவிஞர்கள் கலந்து கொண்டு உருது கவிதைகளை பாடினர். இதில் உருது மொழி ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Address

Indian Union Muslim League
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when IUML Tamil Nadu State posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IUML Tamil Nadu State:

Shortcuts

Share