திராவிடர் கழகம் - Dravidar Kazhagam

  • Home
  • India
  • Chennai
  • திராவிடர் கழகம் - Dravidar Kazhagam

திராவிடர் கழகம் - Dravidar Kazhagam வாக்குகளை எதிர்பார்க்க அவசியம் இல்லாத இயக்கம்! Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va9MHto4NViemyDgvv1C

Dravidar Kazhagam is a socio cultural movement that aims at establishing an egalitarian society by eradicating the system of Varna Jathi (Casteism) and by creating conditions where different sections of people, including women, have equal status, rights and opportunities in all walks of life. Till different castes and communities attain equality, special arrangements, including reservation in educ

ational institutions and jobs, should be made to enable the disadvantaged sections be represented in proportion to their numbers in different bodies - political, educational, administrative and cultural. Measures to ensure social justice should continue till the domination of the privileged communities or upper castes over others come to an end. This is nothing but an Affirmative Action or Compensatory Justice.

இன்று 1895 - ஏங்கல்ஸ் மறைவு2000 - திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் பசுவதைத் தடையை எதிர்த்து கண்டனப் ப...
05/08/2026

இன்று

1895 - ஏங்கல்ஸ் மறைவு
2000 - திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் பசுவதைத் தடையை எதிர்த்து கண்டனப் பேரணி - பொதுக்கூட்டங்கள்

#பெரியார்_நாள்காட்டி

⚫எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது!⚫பழிவாங்கும் போக்க...
04/08/2026

⚫எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது!

⚫பழிவாங்கும் போக்கு என்பது ஜனநாயக விரோதமே!

*- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை*

👇👇👇👇👇

தஞ்சையில் நேற்று (3.8.2026) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்சேபகரமாகப் பேசியதாகக் கூறி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இன்று (4.8.2026) மதியம் 12 மணி வரை கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, காவல்துறையினர் ‘‘அதிவிரைவாகக்’’ கைது செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவதூறுப் பேச்சு என்று கருதினால், அதற்கு உரிய சட்ட முறையில் வழக்குத் தொடுத்து, விசாரணை நடத்தி, பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுதானே முறையானது!

அதுவும், நாளை (5.8.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை எப்படியாவது அதில் பங்கேற்கச் செய்யவிடக் கூடாது என்ற அவசரமே இதற்குக் காரணமா என்ற சந்தேகம்தான் பரவலாக எழுகிறது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனால், எதிர்ப்பையோ, பொதுவானவர்களின் கருத்தையோ கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசின் போக்கு கண்டனத்திற்குரியது; இந்தப் போக்கு ஒருபோதும் ஜனநாயக ஆட்சியின் அம்சமும் ஆகாது.

இத்தகைய போக்குகள் எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
4.8.2026

www.viduthalai.in

M. K. Stalin Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam

இன்று 1792 - சீர்திருத்தக் கவிஞர் ஷெல்லி பிறந்த நாள் #பெரியார்_நாள்காட்டி
04/08/2026

இன்று

1792 - சீர்திருத்தக் கவிஞர் ஷெல்லி பிறந்த நாள்

#பெரியார்_நாள்காட்டி

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கைகருநாடகாவின் ‘திடீர்’ நீர் திறப்பு – காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிம...
03/08/2026

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

கருநாடகாவின் ‘திடீர்’ நீர் திறப்பு – காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிப்பதற்கல்ல; வெள்ள நீர் வடிகால் போன்றதே!
கருநாடக முதலமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலை முதலமைச்சர் எதிரொலிக்கவேண்டும்!
ஜனநாயகம் காட்சியாக இருக்கக் கூடாது; ஆட்சியாக இருக்க வேண்டும்!

கருநாடகாவின் ‘திடீர்’ நீர் திறப்பு – காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிப்பதற்கல்ல; வெள்ள நீர் வடிகால் போன்றதே! கருநாடக முதலமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலை முதலமைச்சர் எதிரொலிக்கவேண்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த ஜூலை 14 ஆம் தேதி அன்று நாம் ஓர் அறிக்கை விடுத்திருந்தோம்.
ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லட்சக்கணக்கான விவசாயிகள்
ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்!

தண்ணீர்த் திறக்கப்படாததால், காவிரி டெல்டா பகுதியில் குறுவை மற்றும் பிற சாகுபடிகள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்து, ‘‘வாடிய பயிரைக் கண்டோம்’’ என்று வருந்திய உள்ளத்தோடு துயரக் கடலில் மூழ்கியுள்ளனர்.
அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட்டும், கருநாடக அரசு அதனை ஏற்கவோ, மதிக்கவோ தயாராக இல்லை என்பதோடு, நேற்று (2.8.2026) பெங்களூருவில், கருநாடகா (காங்கிரஸ்) அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டி, ‘‘இந்த உத்தரவுகளை ஏற்க முடியாது, உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு (அப்பீல்) செய்வோம்’’ என்று ஒருமனதாக தீர்மானித்துள்ளார்கள்.

கருநாடகாவில், ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி
அனைவரும் ஓரணியில் நிற்கின்றனர்!

அங்கே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடின்றி, முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பா.ஜ.க.வின் எடியூரப்பா, சதானந்த கவுடா, பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி, சித்தராமையா, ஒன்றிய இந்நாள் அமைச்சர்கள் குமாரசாமி, ஷோபா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அசோக், எல்லா எம்.பி.,க்களும் அழைக்கப்பட்டு, அத்துணை பேரும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் தரக்கூடாது என்பதில் கட்சிகளை மறந்து ஒற்றுமை அணியாக நிற்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்தே அதே நிலைதான் அங்கே!
ஆனால், நமது தமிழ்நாட்டில் உள்ள புதிய, அரசியல் அனுபவம் அற்ற ஒரு புதிய அரசு, புதிதாக அறிந்து கொள்வதில் தயக்கமோ காட்டாமல், மற்ற அனைத்துக் கட்சிகளையும் கூட்டி, கருத்திணக்கத்தினை ஏற்படுத்தி, மற்றவர்கள் கருத்துரைகளைப் பெற்று ஒரே மனதாக மேகதாது அணை கட்ட எதிர்ப்பு, காவிரி நீர்ப் பங்கீடுகளைப் பெறுதல், வறட்சி ஏற்படும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய (Distress formula) நீர் நெருக்கடி – வறட்சி – பருவ மழை தவறிய கால நிலையில், எப்படி இரு மாநிலங்கள் அதை மனிதாபிமானத்தோடு, நிரந்தரமாக எதிர்கொள்வது என்பதை நன்கு விவாதித்து முடிவு எடுத்து, கருநாடக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் அறிவித்தால், தமிழ்நாடு அரசு சரியான நிலைப்பாட்டினை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று கருதி, பாதிப்பினை ஏற்படுத்த முயலுவோரும், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிக்க முன்வரும் நிலையை ஏற்படுத்த உதவும்.
இங்கே நடைபெறும் த.வெ.க. ஆட்சி என்ன காரணத்தினாலோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருத்திணக்க முடிவினை எடுக்க வேண்டும் என்ற அத்துணை எதிர்க்கட்சிகளின் யோசனைகளையும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது பிடிவாதமாக!
அதுமட்டுமா?

முதலமைச்சர் ஜோசப் விஜய், கருநாட கத்திற்குச் சென்று, அம் மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து, மேகதாது அணை விஷயம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, நேரம், நாள் கேட்டு, தமிழ்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நம்பியது என்பது கருநாடக அரசின் முடிவு, பிறகு நடந்து கொண்ட விதத்தால், அது வீண் நம்பிக்கை – வீண் வேலை என்று நாட்டிற்கே காட்டிவிட்டது! தேதியும் குறித்துவிட்ட பிறகு, ‘‘இங்கே நிலைமை சரியில்லை, இப்போது வராதீர்கள்’’ என்று கூறி, தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தார்கள்.

கருநாடகா முதலமைச்சரின்
ஒப்புதல் வாக்குமூலம்

‘‘அங்கே செல்வது என்பது, தமிழ்நாட்டு அரசுக்கோ, முதலமைச்சர் பதவிக்கோ பெருமை சேர்ப்பதா?’’ என்று, தமிழ்நாட்டின் உரிமை, மதிப்பைக் காப்பாற்றும் எவரும் நியாயமாகக் கேட்பார்கள்.
இதற்கிடையில், நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ள ஒரு செய்தியை, கருநாடக முதலமைச்சர் – மேகதாது அணையைக் கட்ட ‘முதலை’ப் பிடிவாதத்துடன் தொடக்கத்திலிருந்தே இருந்து வரும் சிவக்குமார் அவர்கள், ஓர் உண்மையை இப்போது உலகளவில் ஒப்புதல் வாக்குமூலம் போல் வெளியிட்டுள்ளார்.

‘‘நாம் தண்ணீர்த் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்தாலும், தேக்கி வைக்க முடியாது; தண்ணீரைத் தேக்கினால், நாம்தான் வெள்ளத்தில் மூழ்கிவிடுவோம்’’ என்று கருநாடக மக்களுக்கு ‘‘அறிவுரை’’ கூறியுள்ளார்.

கருநாடகாவில் கடும் மழை பொழிவால், கபினி அணை உடையும் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற எப்போதும் வெள்ள நீர் வடிகால் (Drainage Outlet) போல, அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள, தேங்கும் வெள்ள நீரைத் தமிழ்நாட்டிற்கு அளிப்பது, மனிதாபிமானமோ, நம் மீது உள்ள பச்சாதாபமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை, உச்சநீதிமன்ற ஆணையை மதிப்பதற்காகவோ அல்ல! மாறாக, தங்களது பாதுகாப்புக்கான ஒரு தேவை!

‘‘மாபெரும் அரசியல் அறப்பிழை!’’

இதையெல்லாம் உணராமல், தமிழ்நாட்டிலிருந்து கருநாடக சென்று, பேச்சுவார்த்தைக்குச் செல்ல முயற்சித்த முடிவு ‘‘மாபெரும் அரசியல் அறப்பிழை’’யாகும்.

இனியும் காலந்தாழ்ந்துவிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் முதல் அனைவரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வுரிமையைக் காப்பாற்ற, ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று காட்டவேண்டிய நல்வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது.

முதலமைச்சர், கலந்துகொள்ள மறுக்கும் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து, இப்பிரச்சினையில் நமது ஒன்றுபட்ட உறுதியினை எடுத்துக் காட்டி, களங்கண்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் உள்பட எடுக்கவேண்டும். எதிர்க்கட்சிகள் தயார்; ஆனால், என்ன காரணத்தினாலோ, ‘ஜனநாயகன்’ என்று அழைத்துக் கொள்ளும் ஆட்சித் தலைமை முன்வராத நிலை உள்ளது!

தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் முன்வரவேண்டும்!

உச்சநீதிமன்றத்தில், நமது உரிமையை நிலை நாட்ட முயல்வோம்; வாடும் பயிர்களும், வாழ முடியாதவர்களாகி வரும் நமது விவசாயப் பெருங்குடிகள் நிலையும் இப்படியா பரிதாபத்திற்குரியதாவது?

இனியாவது சிந்தித்துச் செயலாற்ற, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் முன்வரவேண்டும்!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

3.8.2026

கருநாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.விவசாய பயிர் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண...
03/08/2026

கருநாடக அரசு மேகதாதுவில்
அணை கட்ட முயற்சிப்பதை
தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாய பயிர் கடன்களை
முற்றிலுமாக ரத்து செய்ய
வேண்டும்.

டெல்டா மாவட்டத்தை
வறட்சி மாவட்டமாக
அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடும் ,தமிழ்நாட்டன்
விவசாயிகளும் பாதிக்கப்படும்
இந்த பிரச்சனையில்

நடவடிக்கை இன்றி
பேசாமல் மெத்தனம்
காட்டும் தமிழ்நாடு தவெக
அரசை கண்டித்து,

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் 03.08.2026 காலை 10 மணி அளவில் , திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆயிர கணக்கில் தோழர்கள் பங்கு பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ,

திராவிடர் கழக தலைவர்
ஆசிரியர் மானமிகு
கி.வீரமணி அவர்களின்
ஆணைக்கிணங்க
கழகத் தோழர்கள் கொடியோடு கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன உரையாற்றினார்.
#காவிரி #டெல்டா #தஞ்சை #பெரியார் #திராவிடர்கழகம்

நாளை 04.08.2026 மாலை சென்னை  #பெரியார் பெரியார் திடலில் நடைபெறுகிறது
03/08/2026

நாளை 04.08.2026 மாலை சென்னை #பெரியார் பெரியார் திடலில் நடைபெறுகிறது

இன்று 1975 - என்.வி.நடராசன் மறைந்த நாள் #பெரியார்_நாள்காட்டி
03/08/2026

இன்று

1975 - என்.வி.நடராசன் மறைந்த நாள்

#பெரியார்_நாள்காட்டி

இன்று 1859 - தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பிறந்த நாள் 1913 - தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் 1922 - விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரக...
02/08/2026

இன்று

1859 - தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பிறந்த நாள்

1913 - தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள்

1922 - விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம்பெல் மறைவு

#பெரியார்_நாள்காட்டி

*⚫ தமிழ்நாடு வேளாண்மை தொடர்பான நிதிநிலை அறிக்கை திருப்பதி கோயிலில் வைத்து பூஜையா?**⚫ ரகசியக் காப்பு உறுதிமொழி என்னாயிற்ற...
01/08/2026

*⚫ தமிழ்நாடு வேளாண்மை தொடர்பான நிதிநிலை அறிக்கை திருப்பதி கோயிலில் வைத்து பூஜையா?*

*⚫ ரகசியக் காப்பு உறுதிமொழி என்னாயிற்று?*
*சட்டமன்றத்தின் சிறப்புரிமை என்னாயிற்று?*

*- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை*

தமிழ்நாடு புதிய த.வெ.க. கூட்டணி அரசின் முதல் வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்ட இருக்கிறது. இந்நிலையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் முதன்மைப் பிரதியை, இன்று (1.8.2026) காலை தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத், ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குக் கொண்டு சென்று பூஜை செய்துள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இது சட்டமன்றத்தின் மாண்புக்கும், மரபுக்கும், சிறப்புரிமைக்கும் எதிரானதாகும்.

*மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்!*
ஒரு மாநிலத்தின் ஓர் ஆண்டு கால எதிர்காலத்தையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கிய ஆவணமான நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் வரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பட்ஜெட் என்பது வெளியிடப்படும் வரை பாதுகாப்பாக இருக்கவேண்டிய ரகசிய ஆவணம்! ஒன்றிய அரசு பட்ஜெட் தயாரிக்கும் போது, அக்குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் தயாரிப்புப் பணி தொடங்குவது முதல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை தங்கள் வீடுகளுக்குக் கூடச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சுமார் 15 நாள்கள் அவர்கள் நிதி அமைச்சக அலுவலகத்திலேயே தங்கிப் பணியாற்றுவார்கள். இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், பட்ஜெட் தயாரிப்பு நிறைவடைந்ததும் ஒன்றிய நிதியமைச்சர் அவர்களுக்கு இனிப்பு (அல்வா) வழங்கிச் சிறப்பிப்பது வழக்கம்.

*வரலாறுகள் தெரியுமா இன்றைய ஆட்சியாளர்களுக்கு?*
இந்தியாவின் முதல் பட்ஜெட் (1947-1948) உரையின் சில பகுதிகளைக் குறிப்பிட்டு, அன்றைய இங்கிலாந்து அரசின் கருவூலத் தலைவர் ஹூக் டால்டன் என்பவர், பத்திரிகையாளர்களிடம் செய்தி பகிர்ந்த காரணத்தால் பதவியை விட்டே அவர் விலக வேண்டியிருந்தது. அப்போது ஆர்.கே.சண்முகம் அவர்கள் தான் நிதியமைச்சர்.

பின்னர் ஜான் மத்தாய் நிதியமைச்சராக இருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையில் அச்சடிக்கும் இடத்தில் வெளியாகிவிட்டது என்பதால், பின்னர் அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு ரகசியமாக அச்சிடப்பட்டது. இந்த வரலாறுகள் எல்லாம் தெரியுமா இன்றைய ஆட்சியாளர்களுக்கு?

இவ்வளவு கட்டுப்பாடுகளும் ரகசியத்தன்மையும் பேணப்பட வேண்டிய ஒரு முக்கிய ஆவணத்தை, அரசு அலுவலகங்களைக் கடந்து, தமிழ்நாட்டு மாநில எல்லையைக் கடந்து, வேறு ஒரு மாநிலத்தில் உள்ள கோயிலுக்குக் கொண்டு சென்று, பார்ப்பனர்களிடம் கொடுத்து, சிறப்புப் பூஜை செய்ய வைத்தது இந்திய அளவிலேயே இதுவரை நடந்திராத ஒரு மோசமான முன்மாதிரி ஆகும்!

*ரகசியத் தகவல்கள் கசியாதா?*
கோயில்களில் தொடர்ச்சியாக நிதி மோசடிகள் சர்ச்சைகள் தொடரும் சூழலில், இது போன்ற செயல்கள் மூலம் பட்ஜெட்டின் முக்கியப் பக்கங்கள் மற்றும் ரகசியத் தகவல்கள் கசியாதா? இதன் மூலம் முன்கூட்டியே ஒப்பந்தங்களைத் தயார் செய்யவும், முறைகேடுகளுக்கு வழிவகுக்கவும் வாய்ப்பாகாதா?

குறிப்பாக வேளாண் நிதி நிலை அறிக்கை மிகவும் முக்கியமான ஒன்றல்லவா? சாமானிய மக்களுக்கும், நாட்டின் அடிப்படையான விவசாயம் சார்ந்தவர்களுக்குமான அதிமுக்கியமான வேளாண் நிதிநிலை அறிக்கையைச் சட்டப்பேரவையின் மரபுகளையும், நிதிநிலை அறிக்கையின் ரகசியத் தன்மையையும் காக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஓர் அமைச்சரே இத்தகைய செயலில் ஈடுபட்டது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது ஆகும்.

*ரகசியக் காப்பு உறுதிமொழிக்கு முரணானது இல்லையா?*
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்றுத் தானே, பதவியேற்றுள்ளார்கள். இது ரகசியக் காப்பு உறுதிமொழிக்கு முரணானது இல்லையா?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடல்லவா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றும் அதை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க, அரசு பெரும் சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் மதச்சார்பின்மையை மீறி, ரகசியக் காப்பு உறுதிமொழியை மீறி, சட்டமன்றத்தில் தாக்கல் செய்து விவாதிக்கப்பட வேண்டிய ஓர் ஆவணத்தை, சட்டமன்றத்தின் சிறப்புரிமையை (Privilige of Legislature Assembly) மீறி, திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு வருவது என்ன விளையாட்டு வேலையா?

தனிப்பட்ட முறையில், அந்த அமைச்சருக்குக் ‘கடவுள்’ நம்பிக்கை இருக்கலாம்; அவர் எந்தக் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்! அது அவரது உரிமை. ஆனால், அமைச்சர் என்ற முறையில், அதுவும் இதுவரை வெளியிடப்படாத, சட்டமன்றத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டிய ஓர் ஆவணத்தை எடுத்துக்கொண்டு, அதை அர்ச்சகர்களிடம் கொடுத்து, பூஜை செய்து வழிபட, அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

இன்று இவர் திருப்பதிக்குச் செல்கிறார்; நாளை ஓர் அமைச்சர் வேளாண் பட்ஜெட்டையோ, பொது பட்ஜெட்டையோ எடுத்துக்கொண்டு, கருநாடகாவிற்குச் செல்லமாட்டார் என்பது என்ன நிச்சயம்!

அந்தந்த அமைச்சர்கள், அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்ப, சர்ச்சுக்கும், மசூதிக்கும் ஆவணங்களை எடுத்துச் செல்வார்களா?

*முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்?*
தமிழ்நாட்டு அமைச்சர்களின் முதிர்ச்சியற்ற செயல்களுக்கு இது ஒரு மோசமான எடுத்துக்காட்டு!
இனியும், அந்த அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா?

வேளாண் துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? அரசு உயர் அதிகாரிகளுக்கு இதன் தீவிரத் தன்மை தெரியாதா? தன்னுடைய அமைச்சரவையின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்?

*- கி.வீரமணி,*
*தலைவர்,*
*திராவிடர் கழகம்*
1.8.2026
www.viduthalai.in

Address

Periyar Thidal, 84/1 (50), EVK Sampath Road, Vepery
Chennai
600007

Alerts

Be the first to know and let us send you an email when திராவிடர் கழகம் - Dravidar Kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திராவிடர் கழகம் - Dravidar Kazhagam:

Shortcuts

Share