03/11/2026
திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
நாச்சிகுளத்தில்
போதைக்கு எதிராக மினி மாரத்தான்!
புகை, மது மற்றும் போதைப் பழக்கங்கள் உள்ளிட்ட சமூகத் தீமைகளிலிருந்து அனைத்து இளைஞர்களையும் மாணவர்களையும் பாதுகாக்கும் நோக்கில்,. திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நவம்பர் 1 2026 அன்று மாலை நாச்சிகுளத்தில் நடைபெற்றது.
நாச்சிகுளம் ECR சாலை துவங்கி, ரயில்வே கேட் வழியாக, நடுதெரு, லெப்பை தெரு, தச்சர் தெரு, நாடர்தெரு, வழியாக ஹைஸ்கூல் ரோடு சென்று மன்னை சாலை வழியாக ECR வரை மினி மாரத்தான் நடைபெற்றது.
இந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டத்திற்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முகம்மது சித்திக், மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் யாசர் அரபாத், நைனா முகம்மது, முகம்மது ஜவாது, மாவட்ட தொண்டரணி ஹாஜா மைதீன் மற்றும் மாவட்ட மருத்துவ அணி அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலாளர் C.V. இம்ரான் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்.
மாவட்ட தலைவர் முகமது அசாருதீன் மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார்.
சமூகத் தீமைகளுக்கு தீர்வு கண்ட நபிகள் நாயகம்” என்ற முழக்கத்துடன், போதைப் பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வை அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும்,
“போதைக்கு ‘NO’ சொல்லுங்கள்; வாழ்க்கைக்கு ‘YES’ சொல்லுங்கள்!” என்ற விழிப்புணர்வு வாசகத்துடனும்
இந்த போதைக்கு எதிரான ஓட்டம் நடைபெற்றது. போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் அனைத்து கிளை நிர்வாகிகள் , மாணவரணியினர்,தொண்டரணியினர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். கலந்துகொண்டவர்கள் அனைவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
இறுதியாக நாச்சிகுளம் கிளை செயலாளர் முஹம்மது முஸ்தாக் நன்றியுரையாற்றினார்.
இப்படிக்கு
மாவட்ட நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் தெற்கு மாவட்டம்
தொடர்புக்கு:
8524804001 | 8524804002 | 8524804003