TN Health Connect

TN Health Connect Tamilnadu Health System Project (TNHSP) : Dedicated to promoting health and well-being in our community. Join us in our mission to create a healthier tomorrow!

உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் குடும்பத்தினரை கௌரவித்த தமிழக அரசு!தமிழ்நாடு உடல் உறுப்பு தான தினத்தை ஒட்டி, மாந...
23/09/2026

உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் குடும்பத்தினரை கௌரவித்த தமிழக அரசு!

தமிழ்நாடு உடல் உறுப்பு தான தினத்தை ஒட்டி, மாநில உடல் உறுப்பு தான ஆணையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் குடும்பத்தினரை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் காணொலி மூலமாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் தரேஸ் அகமது மற்றும் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் (TNHSP) திட்ட இயக்குனர் டாக்டர் எஸ். உமா, இ.ஆ.ப., ஆகியோர் நிகழ்விற்கு நேரில் வருகைதந்து, மூளைச்சாவு அடைந்த கொடையாளர்களின் குடும்பத்தினரை கௌரவித்தனர்.

உறுப்பு தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு புகழ் வணக்கமும், அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

ஒருவர் மூளைச்சாவு அடையும் தருணத்தில், அவருடைய குடும்பத்தினர் எடுக்கும் அந்த ஒரு இரக்கமுள்ள, மனிதநேயமிக்க, துணிச்சலான முடிவு, பலருக்கு புத்துயிரும் புது வாழ்வும் அளிக்கக்கூடியது. இருளில் தவிக்கும் ஒருவருக்குப் பார்வையைத் தருகிறது, இயங்கத் துடிக்கும் ஒரு சிறுவனுக்குப் புதிய இதயத் துடிப்பைத் தருகிறது, நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடும் குடும்பத் தலைவருக்குப் புதிய நுரையீரலையும், சிறுநீரகத்தையும் வழங்கி, அந்தக் குடும்பத்தையே வாழவைக்கிறது!

ஒரு மூளைச்சாவு அடைந்த கொடையாளரால், 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். 50-க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

உறுப்பு தானப் படிவத்தில் கையெழுத்திடுவது, நாம் இந்த உலகத்திற்கு விட்டுச் செல்லும் மிக உயரிய கொடையாகும். இன்றே உறுப்பு தானம் செய்ய முன்வருவோம்.

.dphpm

#உறுப்புதானம்

Together for Better Stroke Care – TAEI SCRIPT Training Programme 2026The Department of Health & Family Welfare, Governme...
22/09/2026

Together for Better Stroke Care – TAEI SCRIPT Training Programme 2026

The Department of Health & Family Welfare, Government of Tamil Nadu, is conducting the TAEI SCRIPT Training Programme (Stroke Care and Rapid Intervention with Plasminogen Activator and Thrombectomy) across 15 Government Medical College Hospitals in the state.

This training brings together Doctors, Radiologists, Nurses and CT Technicians to strengthen rapid stroke response and improve patient outcomes, with the Stroke Standard Operating Protocol (SOP) set to be revised soon.

Training has already been conducted at RGGGH, Theni MCH, Thanjavur MCH, Tirunelveli MCH, Coimbatore MCH, Madurai MCH, Salem MCH, Thoothukudi MCH, Pudukkottai MCH and Chengalpattu MCH.

Better Prepared | Better Response | Better Outcomes
Skilled Teams Save Lives

.dphpm

𝐄𝐊𝐀𝐌 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐝𝐨𝐧𝐚𝐭𝐞𝐬 ₹𝟏.𝟒𝟏 𝐜𝐫𝐨𝐫𝐞 𝐰𝐨𝐫𝐭𝐡 𝐨𝐟 𝐍𝐈𝐂𝐔 & 𝐌𝐢𝐥𝐤 𝐁𝐚𝐧𝐤 𝐞𝐪𝐮𝐢𝐩𝐦𝐞𝐧𝐭 𝐭𝐨 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐑𝐚𝐣𝐚𝐣𝐢 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥, 𝐌𝐚𝐝𝐮𝐫𝐚𝐢Under NALA...
21/09/2026

𝐄𝐊𝐀𝐌 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐝𝐨𝐧𝐚𝐭𝐞𝐬 ₹𝟏.𝟒𝟏 𝐜𝐫𝐨𝐫𝐞 𝐰𝐨𝐫𝐭𝐡 𝐨𝐟 𝐍𝐈𝐂𝐔 & 𝐌𝐢𝐥𝐤 𝐁𝐚𝐧𝐤 𝐞𝐪𝐮𝐢𝐩𝐦𝐞𝐧𝐭 𝐭𝐨 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐑𝐚𝐣𝐚𝐣𝐢 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥, 𝐌𝐚𝐝𝐮𝐫𝐚𝐢

Under NALAM TN (Tamil Nadu Health Foundation) established under the Health and Family Welfare Department and the Tamil Nadu Health Systems Project, and formally launched by the Hon'ble Chief Minister of Tamil Nadu on 14.07.2026 EKAM Foundation has extended CSR support to Government Rajaji Hospital, Madurai.

The donation includes NICU equipment, Milk Bank equipment, and consumables valued at ₹1,41,52,350 (Rupees One crore forty-one lakhs fifty-two thousand three hundred and fifty only).

This contribution will significantly enhance the hospital's capacity to provide critical care to newborns and infants, reflecting NALAM TN's mission of bridging community support with government healthcare infrastructure.

We thank EKAM Foundation for this generous and impactful contribution.

.dphpm

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உயர் அதிகாரிகள், கலெக்டர் ஆய்வு!மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தாய்மாம...
20/09/2026

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உயர் அதிகாரிகள், கலெக்டர் ஆய்வு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் 28-ந்தேதி மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த விழா ஏற்பாடுகள் உசிலம்பட்டியில் தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், நேற்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் உமா தலைமையிலான அதிகாரிகள் குழு, மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் ஆய்வு செய்தனர். விழாமேடை அமைய உள்ள இடம், பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தங்க மோதிர பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டமும் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் உமா, உதவி இயக்குனர் அழகுமீனா, மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, உசிலம்பட்டி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் உட்பட வருவாய்த்துறை, பொதுபணித்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழா நாளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்குதல், முதலமைச்சர் வருகை நிகழ்வில் எத்தனை பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்பது, குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்தல் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இந்த சிறப்பு திட்ட நிகழ்வுக்கு, அனைத்து ஏற்பாடுகளும் சீராக நடைபெற உசிலம்பட்டி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

.dphpm

#உசிலம்பட்டி #மதுரை #தாய்மாமன்தங்கமோதிரம்

𝐒𝐍𝐀𝐊𝐄-𝐀-𝐓𝐇𝐎𝐍 𝟐𝟎𝟐𝟔 — 𝐀 𝐠𝐫𝐚𝐧𝐝 𝐬𝐭𝐚𝐭𝐞𝐰𝐢𝐝𝐞 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬!We are proud to share that International Snakebite Prevention Day, observe...
19/09/2026

𝐒𝐍𝐀𝐊𝐄-𝐀-𝐓𝐇𝐎𝐍 𝟐𝟎𝟐𝟔 — 𝐀 𝐠𝐫𝐚𝐧𝐝 𝐬𝐭𝐚𝐭𝐞𝐰𝐢𝐝𝐞 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬!

We are proud to share that International Snakebite Prevention Day, observed on 19.09.2026, was marked as a Red Letter Day across all (Tamil Nadu Accident and Emergency Care Initiative) Centres statewide, under the common theme "SNAKE-A-THON."

The proactive coordination between the Departments of Emergency Medicine and General Medicine/Toxicology, guided by the Poison Nodal Officers and TAEI Nodal Officers at each centre, made this a truly statewide effort. Highlights from the day included:

Community Outreach — Rangoli sessions used to creatively spread snakebite prevention tips to the public
Statewide Campaign Drive — Engaging communities on prevention, early response, and awareness
Educational Resources — Guides on the "Big Four" venomous snakes of India (Indian Cobra, Common Krait, Russell's Viper, Saw-scaled Viper), with clear Do's and Don'ts, distributed to attendees
Awareness Sessions & CME — Talks and continuing medical education programmes conducted by medical experts across centres
Educational Displays — "Big Four Snakes of India" posters exhibited for public identification training

This statewide initiative reflects the dedication and team spirit of every centre, and would not have been possible without the sincere efforts of all HODs, faculty, medical officers, nursing staff, paramedics, and students involved.

Awareness, Training & Timely Care — Building a Safer Tamil Nadu.

dphpm

EKAM Foundation donates ₹1.41 crore worth of NICU & Milk Bank equipment to Government Rajaji Hospital, MaduraiUnder NALA...
18/09/2026

EKAM Foundation donates ₹1.41 crore worth of NICU & Milk Bank equipment to Government Rajaji Hospital, Madurai

Under NALAM TN (Tamil Nadu Health Foundation) — established under the Health and Family Welfare Department and the Tamil Nadu Health Systems Project, and formally launched by the Hon'ble Chief Minister of Tamil Nadu on 14.07.2026 — EKAM Foundation has extended CSR support to Government Rajaji Hospital, Madurai.

The donation includes NICU equipment, Milk Bank equipment, and consumables valued at ₹1,41,52,350 (Rupees One crore forty-one lakhs fifty-two thousand three hundred and fifty only).

This contribution will significantly enhance the hospital's capacity to provide critical care to newborns and infants, reflecting NALAM TN's mission of bridging community support with government healthcare infrastructure.

We thank EKAM Foundation for this generous and impactful contribution.

dphpm

சமூக நீதி நாள் — TNHSP-யில் உறுதிமொழி ஏற்பு17.09.2026 அன்று, தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் (TNHSP) பணியாளர்கள் சமூ...
17/09/2026

சமூக நீதி நாள் — TNHSP-யில் உறுதிமொழி ஏற்பு

17.09.2026 அன்று, தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் (TNHSP) பணியாளர்கள் சமூக நீதி நாளையொட்டி ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றனர்:

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை, ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்!"

சமத்துவமும், நீதியும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் நமது பொறுப்பை, இந்நாளில் நாமும் மீண்டும் உறுதிசெய்கிறோம். TNHSP-யின் "Access, Equity, Quality" எனும் நோக்கத்திற்கும் இந்த உறுதிமொழி நேரடியாகப் பொருந்துகிறது.

dphpm

#சமூகநீதிநாள்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் கணையநீர்க் கட்டி அகற்றம் — புதிய சாதனை!!திரு...
16/09/2026

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் கணையநீர்க் கட்டி அகற்றம் — புதிய சாதனை!!

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை தனது அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

50 மற்றும் 25 வயதுடைய இரண்டு நோயாளிகளைப் பாதித்திருந்த சுமார் 16 சென்டிமீட்டர் அளவிலான பெரிய மற்றும் சிக்கலான கணையநீர்க் கட்டிகளை, எந்தவொரு பெரிய அறுவை சிகிச்சையும் இன்றி எண்டோஸ்கோபிக் முறை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இச்சிகிச்சை எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் எனும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. சிஸ்டோகாஸ்ட்ரோஸ்டோமி எனும் அதிதுல்லிய மருத்துவ உத்தியைக் கையாண்டு, நோயாளியின் வயிற்றில் பெரிய அளவில் கீறல்கள் எதுவும் போடாமல், எண்டோஸ்கோப் கருவி மூலம் துல்லியமாக கணையநீர்க் கட்டிகளைக் கண்டறிந்து, இரைப்பையின் பின் சுவரில் ஒரு வடிகால் பாதையை உருவாக்கி, அதில் இருந்த நீரை முற்றிலுமாக வெளியேற்றியுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் சீரிய வழிகாட்டுதலின் கீழ், சிறப்பு மருத்துவக் குழுவினர் இச்சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான சிகிச்சையின் தொடர்ச்சியாக, இது இரண்டாவது முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இதுபோன்ற கணையத்தில் ஏற்படும் பெரிய கட்டிகளை அகற்ற, தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கும் இந்த அதிநவீன சிகிச்சை மிகக் குறைந்த செலவில் அல்லது முற்றிலும் இலவசமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெரிய அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கும் அவசியத்தைத் தவிர்த்து, நோயாளிகள் மிக விரைவாகக் குணமடைய இந்த எண்டோஸ்கோபிக் முறை பெரிதும் உதவுகிறது.

அரசு மருத்துவமனைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் இந்த சாதனை, மருத்துவ உலகினரிடையேயும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

dphpm

#திருச்சி #அரசுமருத்துவமனை

15/09/2026

Every contribution can make a meaningful difference.

Dr. Prema shares her thoughts and experience about Nalam TN, an initiative that brings together individuals, philanthropists, alumni, corporates and organisations to support the healthcare needs of Tamil Nadu.

Through Nalam TN, your contribution can help strengthen healthcare facilities and support essential medical needs across the state.

🌱 Be a part of the change. Be a part of Nalam TN.

Support Nalam TN and contribute towards a healthier Tamil Nadu.

dphpm

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனை!திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
12/09/2026

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனை!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவண்ணாமலை நகரம் மட்டுமன்றி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்களும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தினமும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், 2,000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி டீன் எட்வீனா வசந்தா கூறியதாவது: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவில் ரூ.7 கோடி மதிப்பில் கேத் லேப் (ரத்த நாள ஆய்வகம்) அரசின் மூலம் அமைக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த கேத் லேப் மூலம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் பொருத்துதல் உள்ளிட்ட இருதய நாள ஊடுறுவி சிகிச்சைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டங்களின் கீழ் தகுதியுள்ள நோயாளிகளுக்கு இச்சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதுவரை சுமார் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இதனால், இருதய நோயாளிகள் சிகிச்சைக்காக சென்னை அல்லது புதுச்சேரி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காப்பீட்டுத் திட்டங்கள் இல்லாதவர்களுக்கும் இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்படும். இந்த கேத் லேப் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர், ஆர்.எம்.ஓ. மற்றும் இருதய பிரிவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினர் இணைந்து இச்சாதனையை சாத்தியமாக்கியுள்ளனர்.

dphpm

#திருவண்ணாமலை #அரசுமருத்துவக்கல்லூரி

Address

DMS Annex New Building, 259 Anna Salai, Teynampet
Chennai
600006

Alerts

Be the first to know and let us send you an email when TN Health Connect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share