06/08/2026
தமிழக த.வெ.க அரசின் முதல் வேளாண் பட்ஜெட் வரவேற்கத்தக்கது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை
2026-2027 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழகத்தின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில், வேளாண் தொழிலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது
தமிழக த.வெ.க அரசின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக 100% பயிர் காப்பீடு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 4,000 ஊக்கத்தொகை கொடுப்பது, விளைபொருட்களை பாதுகாக்க ரூ.10 கோடியில் 43,500 தார்ப்பாய்களை வழங்குவது, 3 இலட்சம் சதுர மீட்டரில் பசுமைக் குடில்கள் அமைப்பது, விவசாய வருமான மேம்பாட்டு ஆணையம் அமைக்க நடப்பு ஆண்டுக்கு 5.20 கோடி நிதி ஒதுக்கியிருப்பது, 35 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்பது மற்றும் நெல் விவசாயிகளின் ஊக்கத்தொகைக்கு ரூ. 917 கோடி நிதி ஒதுக்கியிருப்பது ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பெரும் பலன் அளிக்கும்.
விவசாயிகளின் இலவச மும்முனை மின்சாரத் திட்டத்திற்காக மின்வாரியத்திற்கு ரூ. 7432.58 கோடி, குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 132 கோடி, மண்வள பாதுகாப்பு இயக்க அறிமுகத்திற்காக ரூ. 122.51 கோடி, நெல்விதை உற்பத்தி விநியோக மானியத்திற்கு ரூ. 34.72 கோடி, பலம் குறைந்த நிலத்தை மீட்டெடுக்க ரூ. 2 கோடி, பருத்தி உற்பத்தியை பெருக்கிட ரூ. 27.21 கோடி, சீமை கருவேல மரங்கலை அகற்றிட ரூ. 4 கோடி, மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுக்கு ரூ. 36 கோடி, ஒருங்கிணைந்த 8 வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்க ரூ. 27.82 கோடி, கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்திற்கு ரூ. 9 கோடி, இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்திற்கு ரூ. 10 கோடி, தென்னை மரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ. 16 கோடி, உயர்மதிப்பு பழ உற்பத்திக்கு ரூ. 1.87 கோடி, வெங்காய சேமிப்பு கிடங்குகளுக்கு ரூ. 22.80 கோடி, வேளாண் கருவிகளின் மானியத்திற்கு ரூ. 227.20 கோடி, ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்க ரூ. 6 கோடி, சூரியசக்தி பம்ப் செட்டுகள் மானிய விலையில் கொடுக்க ரூ. 23 கோடி, உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 20 கோடி, பயிர்க்கடன் வழங்க ரூ. 17,000 கோடி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ. 5,267 கோடி, ஆறு, கால்வாய்களை தூர்வார ரூ. 125 கோடி மற்றும் 12,000 விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ரூ. 1,500 கோடி என விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பெரும் பயனளிக்கும்.
அதே நேரத்தில் தமிழக அரசு விவசாயிகள் எதிர்பார்த்த விவசாயக்கடன் தள்ளுபடியை கவனத்தில் கொண்டு அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் பட்ஜெட்டை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வரவேற்று, தமிழக அரசு விவசாயிகளுக்கு துணை நின்று, விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
#உழவர்நலபட்ஜெட்
#வேளாண்பட்ஜெட்
#விவசாயபட்ஜெட்