IUML Kanchipuram

IUML Kanchipuram IUML IT WING KANCHIPURAM DISTRICT

29/08/2026

தாய்சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் 32 நபர்கள் இனணந்தார்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆயிரம் விளக்கு முஹம்மது கடாபி மற்றும் அண்ணாநகர் பகுதி தலைவர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் தலைமையில், 32 நபர்கள் தாய்சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களின் தலைமையில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில துணைச்செயலாளர் இப்ராஹிம் மக்கி, வழக்கறிஞர் புழல். ஷேக்முஹம்மது அலி, சென்னை மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, மாவட்ட பொருளாளர் அப்துல் மாலிக், செய்யது ஜியாவுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

29/08/2026

மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் அவர்கள் துறையின் செயலாளர் தக்ஷிணாமூர்த்தி ஐஏஎஸ், சிறுபான்மையினர் ஆணையர் ஆசியா மரியம் ஐஏஎஸ், மற்றும் அதிகாரிகளோடு மானிய கோரிக்கைக்கு முன்பு ஆலோசனை மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் சந்திப்பு.

07/08/2026

செங்கல்பட்டு மாவட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா......

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் ஆய்வு கூட்டங்கள் அனைத்து துறையின் சார்பிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வீரப்பன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் இன்று (04-08-2026) காலை நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்கள் பங்கேற்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தியாகராஜன் அவர்கள், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துறை அலுவலர்கள் நலத்திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த பணிகள் குறித்து விளக்கி கூறினர். சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கம் சார்பில் 400க்கும் அதிகமானோருக்கு சிறுதொழில் தொடங்கவும், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்க செயலாளர் முகம்மது பெய்க் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

04/07/2026

காயல்பட்டினம் நகராட்சி வார்டு
மறுவரையறை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருடன் சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி வார்டு
மறுவரையறை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்
இன்று 3.7. 2026 வெள்ளி மாலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் திருமதி ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே. ஏ.எம் முகம்மது அபூபக்கர் எக்ஸ் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்து உரையாடினர்.

காயல்பட்டினம் நகர அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து பொது நல அமைப்புகள் கலந்து கொண்டு 29. 6. 2026 அன்று நிறைவேற்றிய தீர்மானத்தை தேர்தல் ஆணையரிடம் அளித்து விளக்கம் அளித்தனர்.

காயல்பட்டினம் நகராட்சியில் வார்டு எண்ணிக்கை பேரூராட்சியாக இருந்த காலம் தொட்டு 18 ஆக மட்டுமே இருந்து வருகிறது; மக்கள் தொகையும், வாக்காளர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையிலும் இது மாற்றம் செய்யப்படவில்லை. இம்மாவட்டத்தின் பிற நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையிலும் காயல்பட்டினத்தில் மட்டும் உயர்த்தப்படவில்லை.
சமீபத்தில் எடுக்கப்பட்ட எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி 36540 வாக்காளர்கள் இருந்தும் காயல்பட்டினம் நகராட்சியின்வார்டுஎண்ணிக்கை மாற்றி அமைக்கப்படவில்லை. காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு எண்ணிக்கையை இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப 36 வார்டுகளாக உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைக் கேட்ட மாநிலத் தேர்தல் ஆணையர், நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 க்கு பிறகு மீண்டும் நடைபெற இருப்பதால் 31.12.2025க்குப்பின் வார்டு மறு வரையறை செய்யக்கூடாது என மத்திய அரசின் தடை உத்தரவு இருப்பதால் உங்கள் கோரிக்கையின் முந்தைய கோப்புகளை பார்த்து ஆவண செய்வதாக குறிப்பிட்டார் .

காயல்பட்டினத்தில் வார்டு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் உறுதிமொழியின் அடிப்படையில் உரிய உத்தரவு பெறப்பட்டுள்ளதை குழுவினர் சுட்டிக்காட்டினர். இதனை கவனமாக கேட்ட மாநில தேர்தல் ஆணையர் தமிழ்நாடு அரசின் நகராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்து ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் எஸ். ஏ. இப்ராஹிம் மக்கி, சமூக ஆர்வலர் ஏ.கே. முகம்மது யாசின் ஆகியோர் உடன் இருந்தனர். இக்குழுவினர் அடுத்து தமிழ்நாடு அரசு நகராட்சித்துறை செயலாளர் அவர்களை சந்தித்து பேச உள்ளனர் .

04/07/2026
04/07/2026

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when IUML Kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share