League Media

*மாண்புமிகு அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் துரித நடவடிக்கையால் ஒரு‌ வருடமாக துபாயில் சிக்கியிருந்த இராஜகிரி காதர் மீரான் தாயகம்...
16/06/2026

*மாண்புமிகு அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் துரித நடவடிக்கையால் ஒரு‌ வருடமாக துபாயில் சிக்கியிருந்த இராஜகிரி காதர் மீரான் தாயகம் திரும்பினார்*

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் பகுதியில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜகிரியை சேர்ந்த காதர் மீரான் என்பவர் பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக ஒரு வருடமாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு தரப்பினரிடம் உதவி கோரியும் எந்தவித பலனும் கிடைக்காத நிலையில் கடந்த 01.06.2026 அன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஏ.எம். ஷாஜஹான் அவர்களை சந்தித்து காதர் மீரான் அவர்களின் தாயார் தன‌து மகனை மீட்டு தரக்கோரி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் உடனடியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன், அமீரக தூதரக அதிகாரிகளுடனும் பேசி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

அமைச்சர் அவர்களின் தீவிர முயற்சியாலும், இறைவனின் கிருபையாலும் இராஜகிரி காதர் மீரான் அவர்கள் இன்று (16.06.2026) பாதுகாப்பாக தாயகம் திரும்பினார்.

துபாயில் ஒரு வருடமாக உதவிகள் இன்றி சிக்கித் தவித்த தனது மகனை மீட்டுக் கொண்டு வந்த அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்களுக்கு காதர் மீரானின் தாயார் மற்றும் குடும்பத்தினர்கள் நன்றி தெரிவித்தனர்.

14/06/2026

முஸ்லிம் லீக் திமுகவின் கிளைகழகமா???
நாங்கள் பதிலடி கொடுத்தால் தாங்க மாட்டீர்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான
முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைத் தலைவர்
புளியங்குடி அல் அமீன் ஆவேசம்

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் உதயேந்திரம் பேரூராட்சி ...
13/04/2026

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்
உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் பிரியாணி விற்பனையில் ஈடுபட்டு ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி, ஏப்ரல்.12-
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பு 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி
சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.பி.பாரூக் ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் மாவட்ட செயலாளர் தேவராஜி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிற்பகல் உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி செயலாளர் ஆ.செல்வராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திமுக அரசின் 5 ஆண்டுகள் சாதனை எடுத்து கூறி ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள முஷ்தாக் நாட்டு கோழி பிரியாணி விற்பனை கடையில் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.பாரூக் பிரியாணி விற்பனையில் ஈடுபட்டு ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

முன்னதாக பேரூராட்சி பகுதி பொதுமக்கள் வேட்பாளரின் வருகையை ஒட்டி பட்டாசு வெடித்து, மாலை அணிவித்தும், பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.பின்னர் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டாக்டர் நிலோபர் அஜீம், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் உட்பட கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளருக்கு வாக்களிப்பீர்!

வாக்களிப்பீர் #ஏணி சின்னத்தில்...

#வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி நமது வெற்றி வேட்பாளர் S.S.B. #சையத்_பாரூக்

தேர்தல் நாள்: 23.04.2026

#வாணியம்பாடி4பாரூக்
#மதசார்பற்றமுற்போக்குக்கூட்டணி
#திமுககூட்டணி
#ஏணிசின்னத்தில்வாக்களிப்போம்

13/04/2026
மக்கள் பேராதரவுடன்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாபநாசம் தொகுதியில் ஏணி 🪜சின்னத்தில் ப...
13/04/2026

மக்கள் பேராதரவுடன் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாபநாசம் தொகுதியில் ஏணி 🪜சின்னத்தில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் ஏ.எம். ஷாஜஹான்....
நமது வெற்றி சின்னம் ஏணி 🪜

வெல்லட்டும் ஏணி!🪜

உயரட்டும் பாபநாசம்!!

தேர்தல் நாள் 23/04/2026

#வெல்வோம்ஒன்றாக

கைத்தறி நெசவாளர் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2000 உயர்த்தப்படும் ..வாக்களிப்பீர் 🖕திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு க...
13/04/2026

கைத்தறி நெசவாளர் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2000 உயர்த்தப்படும் ..

வாக்களிப்பீர் 🖕திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாபநாசம் தொகுதியில் ஏணி🪜 சின்னத்தில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் ஏ.எம். ஷாஜஹான்...

வெல்லட்டும் ஏணி!🪜

உயரட்டும் பாபநாசம்!!

📌தேர்தல் நாள் 23/04/2026

#வெல்வோம்ஒன்றாக

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  பாபநாசம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.ஏ.எம்.ஷாஜகான் அவர்களை ஆத...
12/04/2026

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் தொகுதியின் வெற்றி வேட்பாளர்
திரு.ஏ.எம்.ஷாஜகான் அவர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ. அவர்கள் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்கள்.

திரு.வைகோ அவர்களின் ஆதரவு
பெற்ற சின்னம் ஏணி🪜

#உங்கள்_வேட்பாளர்_ஷாஜஹான் #உங்கள்_சின்னம்_ஏணி #பாபநாசம்_சட்டமன்ற_தொகுதி

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி இ.யூ. முஸ்லிம் லீக்  செயல்வீரர்கள் கூட்டம்.வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் ஏணி சின்னத்தில் ப...
12/04/2026

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி இ.யூ. முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம்.

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் சகோதரர் S.S.B.சையத் பாரூக் அவர்களின் வெற்றிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து
K.A.M. முஹம்மது அபூபக்கர் Ex.MLA
(மாநில பொதுச் செயலாளர் இந்திய.யூ.முஸ்லிம் லீக் ) கருத்துரை வழங்கியபோது..

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when League Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to League Media:

Shortcuts

Share