தமிழகத்தில் அதிகமான கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய தொகுதி எனும் சிறப்பை பெற்றுள்ளது செய்யாறு தொகுதி. திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைசி பகுதியில் அமைந்துள்ள செய்யாறு தொகுதியின் எல்லைகளாக வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அமைந்திருக்கின்றன. திருவத்திபுரம் என்றும் செய்யாறு என்றும் அழைக்கப்படும் இரட்டை பெயர் கொண்ட தொகுதி.
விவசாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருந்த இந்த தொகுதியின் விளை நிலங்கள் சிறப்பு பொருள
ாதார மண்டலம், பன்னாட்டு தொழில் நிறுவனங்களாக மாறிவருகிறது. அதனால், விவசாயம் சார்ந்த பகுதி என்ற நிலைமாறி, வளர்ந்துவரும் தொழில் நகரமாக செய்யாறு தொகுதி உருமாற்றம் அடைந்துள்ளது.
பொன்விழா காணும் செய்யாறு அரசு கலைக் கல்லூரி, இந்த பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது. மேலும், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையால், கரும்பு சாகுபடி விவசாயிகளின் வாழ்வு மேம்பட்டது. ஆனாலும், செய்யாறு தொகுதியின் அடையாளமாக விளங்கும் கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.