11/06/2026
எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்க, #புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, #புரட்சித்தலைவி அம்மா அவர்களால் எஃகு கோட்டையாக வளர்க்கப்பட்டு புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
நடைபெற்ற தேர்தல் பின்னடைவுகளைத் தொடர்ந்து, கழகத்தின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, அதிகாரத்தின் உச்சங்களைச் சுவைத்துவிட்டு, சுயநலத்திற்காகத் தமிழக வெற்றிக் கழகம் போன்ற மாற்று முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள சில முன்னணி நிர்வாகிகளின் செயல்பாடு, உண்மைத் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று விலகிச் சென்றவர்கள் அடைந்த பதவிகளும் புகழும் அவர்கள் தனிமனிதராகச் சம்பாதித்தவை அல்ல; அவை #இரட்டைஇலை என்னும் மந்திரச் சின்னமும், கோடிக்கணக்கான தொண்டர்களின் ஓயாத உழைப்பும் தந்த பிச்சை.
தேர்தல் களத்தில் ஒரு வேட்பாளரின் வெற்றிக்காகத் தன் குடும்பத்தையும் பாராமல், வெயிலிலும் மழையிலும் சுவரொட்டி ஒட்டி, வீதி வீதியாக வாக்குச் சேகரிக்கும் எளிய தொண்டனை மதிக்காமல், சுயநலப் போக்கோடு கட்சி மாறுவது அப்பட்டமான #துரோகம்.
கழகத்தின் ஆட்சிக் காலத்தில் வாரியத் தலைவர் பதவிகளையும், அமைச்சர் நாற்காலிகளையும் அலங்கரித்துவிட்டு, சோதனையான நேரத்தில் ஓடி ஒளிபவர்களைக் காலம் ஒருபோதும் #மன்னிக்காது.
#பதவி சுகத்திற்காகவும், கடந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள மாற்று முகாம்களில் தஞ்சம் புகும் சுயநலவாதிகள் அங்கிருந்து நாளை வேறு முகமிருக்கு செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
சுயநலத்திற்காக கட்சி மாறும் நீங்கள் வெறும் ‘அரசியல் அகதிகளாகவே’ நடத்தப்படுவீர்கள்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் கிளைக் கழக அமைப்பைக் கொண்டுள்ள ஒரே இயக்கம் அண்ணா திமுக மட்டுமே.
சுயநலவாதிகள் ஓடலாம்; ஆனால் இரட்டை இலைக்கான பாரம்பரிய வாக்கு வங்கியும், கொடிக்கணக்கான கழகத் தொண்டர்களின் பலமும் இன்னும் கழகத்தின் பக்கமே உள்ளது.
பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் கட்சியை விட்டு செல்வதால் கட்சிக்கு நஷ்டமில்லை மாறாக கட்சிக்காக உழைக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்குப் புதிய தலைமைப் பொறுப்புகள் கிடைக்க இதுவே வாய்ப்பாக அமையும்.
தற்போது கழகத்தை எஃகுக் கோட்டையாக நின்று வழிநடத்தி வரும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமைத்துவமே கழகத்தின் மாபெரும் பலம்.
#எடப்பாடியார் அவர்கள் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கிளைக் கழகச் செயலாளராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்தவர்.
அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் சுயநலப் போக்குகளையும், அடிமட்டத் தொண்டனின் மனக்குமுறல்களையும் அவரளவுக்கு அறிந்தவர் எவரும் இல்லை.
2017 முதல் 2021 வரையிலான அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள், குடிமராமத்துத் திட்டங்கள், விவசாயக் கடன்கள் தள்ளுபடி மற்றும் 7.5% மருத்துவ உள்ஒதுக்கீடு போன்றவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. தற்போதைய அரசின் நிர்வாகத் திறமையின்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மக்கள் எடப்பாடியாரின் பொற்கால ஆட்சியையே மீண்டும் விரும்புகின்றனர்.
எத்தனையோ சவால்கள், அரசியல் சூழ்ச்சிகளைத் தாண்டி கட்சியை ஒற்றைத் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்த பெருமை புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்களுக்கு மட்டுமே உண்டு.
துரோகிகளின் வெளியேற்றத்தால் கழகத்தின் வேர்களை அசைக்க முடியாது.
கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை அண்ணா திமுகவை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது!
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிப்போம்; அதே வேளையில் மக்களின் உண்மையான காவலர்களாகத் தொடர்ந்து களத்தில் நிற்போம்.
சவால்களைச் சாதனைகளாக்குவதே அண்ணா திமுக-வின் ரத்தம்.
எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் முழுமையான வெற்றியைப் பெற்று, புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் புதிய சரித்திரம் படைப்போம்!
#நாளை_நமதே!
#கழகத்தின்_வெற்றியே_நமது_இலக்கு!