Kutti Kathai

Kutti Kathai A page for short stories

Small Is Beautiful
குட்டி குட்டியா கதைகள் இங்க உங்களுக்காக entertain பண்ண காத்திருக்கு. படிச்சிட்டு உங்க கருத்துக்களை விமர்சனங்களை சொல்லுங்க.

Kutti Kathai wishes every dynamic woman a very happy day! All day is yours!!
08/03/2019

Kutti Kathai wishes every dynamic woman a very happy day!
All day is yours!!

Story 27! பன்றியை உடைத்தல்! எட்கர் கீரத் எனும்  இஸ்ரேலிய எழுத்தாளர், எழுதின  `பன்றியை உடைத்தல்’ சிறுகதையை  குட்டி கதையில...
08/02/2019

Story 27!
பன்றியை உடைத்தல்!

எட்கர் கீரத் எனும் இஸ்ரேலிய எழுத்தாளர், எழுதின `பன்றியை உடைத்தல்’ சிறுகதையை குட்டி கதையில் உங்களோட பகிர்ந்துக்கலாம் ன்னு நினைக்கறேன் !

சிம்சன் பொம்மை ஒண்ணு வாங்கறதுக்காக ஒரு பீங்கான் உண்டியல்-ல ஒரு குட்டிப்பையன் காசு சேர்த்து வைக்கிறான். அந்த உண்டியல் ஒரு பன்றி உருவத்தில் இருக்கு. தனக்கு கிடைக்கற காசெல்லாத்தையும் அதுல சேகரிச்சிட்டு வர்றான் அந்த பையன்.ஒவ்வொரு நாளும் அந்த உண்டியலை கையில எடுத்து வெச்சுட்டு பன்றியோட பேசுவான், தன்னோட ஆசைகளை எல்லாம் பகிர்ந்துக்குவான். இப்படி அந்த பையன் அந்த பன்றிக்குட்டி பொம்மையை மிகவும் நேசிச்சான்.

ஒருநாள் உண்டியல் நிறைஞ்சுடுச்சு, அவன் கேட்டது போல அந்த பொம்மையை வாங்கிக்குடுத்துடலாம்-னு அவன் அப்பா அந்த உண்டியலை உடைக்க சுத்தியலோட வருவாரு. ஆசையா இருக்கற பன்றிக்குட்டி பொம்மையை உடைச்சுதான் காசு எடுக்கணுங்கிற உண்மை அந்த பையனுக்கு வருத்தத்தை தருது. அப்பாகிட்ட நாளைக்கு உடைச்சுக்கலாம் ன்னு சொல்லிடறேன்.

ராத்திரி எல்லாரும் தூங்குனதும், அந்த பன்றிக்குட்டி பொம்மையை எடுத்துக்கிட்டு ஒரு வயலுக்கு போறான். "வயலுக்குள்ள ஓடி ஒளிஞ்சுக்கோ..." னு சொல்லிட்டு ஆசையோட அதோட மூக்கை தடவுறான்.

அதை தவிர அந்த பன்றிக்குட்டியை காப்பாத்த அவனுக்கு வேறு வழி தெரியலைனு அந்த கதை முடியுது.
பீங்கான் பொம்மை தான்-னு அந்த பையன் நினைக்கல. புது பொம்மைக்காக இருக்கற பொம்மையை அவன் இழக்க விரும்பல. வயலுக்குள்ள அந்த பன்றி ஓடாதுனு தெரியல ஆனாலும் அவனுக்கு தெரிஞ்ச வழியில அதை காப்பாற்ற நினைக்கிறான். இதுதான் தூய்மையான அன்பின் வெளிப்பாடு!

Happy New year story lovers!
01/01/2019

Happy New year story lovers!

Story 27! சத்தம்! சத்தம் என்றால் என்ன? இரைச்சல், பேரிரைச்சல், கூச்சல் இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? கிறிஸ்டோபருக்க...
06/12/2018

Story 27!

சத்தம்!

சத்தம் என்றால் என்ன? இரைச்சல், பேரிரைச்சல், கூச்சல் இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? கிறிஸ்டோபருக்கு புரியவில்லை. இசை எப்படி இருக்கும்? keyboard-யில் தட்டச்சு செய்யும்போது அந்த சப்தம் எப்படி வரும்? கடிகாரம் எப்படி ஒலி எழுப்பும், தொண்டை செருமும் சப்தம் என்றால் என்ன? செருமி பார்த்தான், தெரியவில்லை. ஓசை என்ன வடிவில் வரும்? ஏனிந்த கவலை திடீரென என்று அவனுக்கு புரியவில்லை.

அவன் உலகம் மௌனத்தால் நிறைந்தது. அவனுக்கு அவனது மௌனம் பிடித்திருந்தது. இரண்டு செவிகளும் பிறப்பில் இருந்தே கேட்காது. அவனுக்கு அது ஒரு குறையாக தெரியவில்லை. நேற்று வரை சப்தம் பற்றி அவன் சிந்தித்தது கூட இல்லை.ஆனால் இன்று ஏன் இந்த தடுமாற்றம்? சத்தம் என்றால் என்ன என்று இன்று தெரிந்தே ஆக வேண்டுமென்று புறப்பட்டான்.

சாலை முழுவதும் நடந்தான். வாகனங்கள், கடல் அலை ஓட்டம், குழந்தைகள் விளையாட்டு, பறவைகள் சரணாலயம், பேரம் நடக்கும் சந்தை, குதிரை பந்தயசாலை, சினிமா திரையரங்கம் அனைத்து இடங்களுக்கும் நடந்தான், கவனித்தான். அனைத்தும் காட்சிகளாகவே மனதில் பதிந்தன, சப்தம் என்னவென்று புரியவில்லை. சோர்வுடன் வீடு நோக்கி நடந்தான் கிறிஸ்டோபர். ஒரு சந்து திருப்பத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு லாரி வேகமாக இவன் மீது மோத வந்து, சுதாரித்து திரும்பியது. அந்த ஓட்டுநர் என்ன சொல்லி திட்டினானோ தெரியாது. ஆனால், அவன் இதயம் படபடத்து துடிப்பது அடங்க சிறிது நேரம் அடங்கியது. இதயத்தின் அந்த ஒலி அவனுக்கு மிக துல்லியமாக கேட்டது. சப்தமும் இசையுமாக அது ஒலித்தது.

Story 26பதில் ! அவளுக்கு அவனை பிடிச்சிருந்தது. ரொம்பவே பிடிக்கும். அவனுக்கும் அவளை பிடிக்கும் ஆனா தோழியா மட்டும். அவளுக்...
29/11/2018

Story 26

பதில் !
அவளுக்கு அவனை பிடிச்சிருந்தது. ரொம்பவே பிடிக்கும். அவனுக்கும் அவளை பிடிக்கும் ஆனா தோழியா மட்டும். அவளுக்கு இதை மேற்கொண்டு தொடரலாமா, சொல்லலாமா வேணாமா ன்னு குழப்பம். சரி, என்ன இருந்தாலும் நல்ல நண்பன் தானே, ஒண்ணு சம்மதம் இல்லைனா மறுப்பு சொல்லப்போறான் . அவ்ளோதானே? அவன்கிட்டே இன்னிக்கே சொல்லிடலாம் ன்னு போனா.

சொன்னா. அவன் அமைதியா கேட்டுக்கிட்டான். ஒண்ணுமே சொல்லல. ஒரு போன் வரவும், பேசிட்டு வரேன்னு நகர்ந்து போனான். எதிர்பாரா விதமா, ஒரு கார் வந்து அவனை இடிச்சு, அவ கண் முன்னாலேயே கீழ விழுந்து.......

அவன் இப்போ இல்லை. ஆனா, அவ சொன்னதுக்கு அவன் என்ன பதில் சொல்லிருப்பான்-னு இன்னிக்கு வரை தெரிஞ்சுக்கவே முடியல அவளுக்கு.

Story 25! Notification ...கண் முழிச்சு பாத்தான் அருண், மணி 12:30 க்கு மேல இருக்கும். மேல fan ஓடுது . பக்கத்தில போன் இருந...
22/11/2018

Story 25!

Notification ...

கண் முழிச்சு பாத்தான் அருண், மணி 12:30 க்கு மேல இருக்கும். மேல fan ஓடுது . பக்கத்தில போன் இருந்துச்சு.
white light blink ஆகிட்டே இருந்தது. அருண் போன் எடுத்து பார்த்தான். 1st notification.... 2nd notification.... 3rd ...... scroll பண்ணிட்டே இருந்தான். இருட்டறையில, முகத்தில மட்டும் அதிக வெளிச்சம் தெரிஞ்சுது. அருண் scroll பண்ணிட்டே வந்தான். போனோடவே தூங்கிட்டான்.

காலையில சூரிய வெளிச்சம் முகத்தில அடிக்க லேட்டா தான் எழுந்தான். ஏன் போனில அலாரம் அடிக்கல ன்னு பாக்க போன் தேடினா, போன் இருக்கல .

ஆனா கண் முன்னால எல்லாமே notification அ தெரியுது. FB, insta, PubG, Youtube எல்லாமே ஒவ்வொரு slide அ விரிஞ்சு மறையுது.கண் சிமிட்டினா camera click ஆகுது. அம்மாவை கூப்பிட்டா ringtone தான் வாயிலேர்ந்து வருது. பேச முடியல. பேப்பர் எடுத்து எழுதினா qwerty keypad கைக்கு தெரியுது. தன்னை சுத்தி பாட்டு கேக்குது, எழுத்துக்கள் உருவாகி மறையுது தலையே சுத்திடுச்சு. தனக்கு என்ன ஆகுது என்ன செய்யறது ன்னு தெரியாம, வேகமா போய் சுவர் ல முட்டினான் அருண்.

கண் முழிச்சு பாத்தான் அருண், மணி 6:30 க்கு மேல இருக்கும். மேல fan ஓடுது . பக்கத்தில போன் இருந்துச்சு.

Story 24!மகன் சந்தோஷம்!  வேலை தேடி வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் கழித்து, தேடி பிடித்து அம்மா பார்க்க வந்திருக்க...
15/11/2018

Story 24!

மகன் சந்தோஷம்!

வேலை தேடி வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் கழித்து, தேடி பிடித்து அம்மா பார்க்க வந்திருக்கிறார்.

"உன் நல்லதுக்குதான் டா ரகு சொன்னேன், வீட்டுக்கு வந்து தங்கிடு, உன் தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம் உன் இஷ்டம் போல இரு. உன் நல்லதுக்கு தான். அப்புறம் உன் தம்பி வீட்டு லோன் போட்ருக்கான், எதோ அவனுக்கு ஒத்தாசை பண்ணினா மாதிரி இருக்கும் ல? எனக்கும் வீட்டுல ஒரு பேச்சுத்துணை... வீட்டுக்கு வந்தா அப்பாவுக்கும் மகன் கூட இருக்கான்னு தைரியம் வரும்-ல? உன் நல்லதுக்கு தான் சொல்றேன் டா! உன் சந்தோசம் தானே எங்களுக்கு? "

என் சந்தோஷமா ? என ரகுவுக்கு சிரிப்புதான் வந்தது அப்பவும். தலைப்பிள்ளையாச்சே? சந்தோஷம் தானே!

Story 23! பாட்டும் படமும் ! படத்தில, அந்த பாட்டை அங்க வெச்சது தான் timing placement .. அதான் சார் master stroke ! எனக்கு...
07/11/2018

Story 23!

பாட்டும் படமும் !

படத்தில, அந்த பாட்டை அங்க வெச்சது தான் timing placement .. அதான் சார் master stroke ! எனக்கு முன்னவே தெரியும் அது hit ஆகும்ன்னு, இயக்குநர்ன்னா சும்மாவா?
---- இயக்குனர் தன்பாட்டுக்கு பேட்டி குடுத்துக்கொண்டு இருந்தார். பேட்டி முடிந்ததுக்கு பிறகு புகைத்துக்கொண்டே உதவி இயக்குனரிடம் வந்தார்.

என்னடா, எல்லாம் சரியா சொல்லிட்டேனா?
சொன்னீங்க சார், ஆனா அந்த பாட்டு வீடியோ Youtube ல மட்டும்தான் ரிலீஸ் பண்ணுனோம், அது நம்ம படத்துலயே இல்ல சார், அதுதான் யோசனையா இருக்கு .........

இயக்குனர் முழித்துக்கொண்டு நின்னார்,உதவி இயக்குனரின் கதையில், தான் ஓட்ட முடியாததை நினைத்து.

Story 22.Waiting! -இன்னும் எவ்ளோ நேரம் wait பண்ணனும்-பா? -எதுக்கு மா wait பண்றீங்க? -இல்ல.... நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு...
01/11/2018

Story 22.

Waiting!

-இன்னும் எவ்ளோ நேரம் wait பண்ணனும்-பா?
-எதுக்கு மா wait பண்றீங்க?
-இல்ல.... நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு, உன் phone அடிச்சிட்டே இருக்கு , நீயும் பேசிட்டே இருக்கே..நேர்ல என்கிட்டே எப்ப பேசுவப்பா? ..........!

அம்மா கேட்டப்போ, ரமேஷ் க்கு எப்படி அந்த கேள்வியை எதிர்கொள்ளறது-னு தெரியல. நிமிர்ந்து அம்மாவை பாத்தான். சோர்வா அம்மா சொன்னாங்க,

-சரிப்பா.. நீ பேசு.. எனக்கு சாப்பாடு குடுக்க ஆள் வந்திருப்பாங்க, late ஆ போனா கிடைக்காது. வரட்டுமா? நீ பத்திரமா வீட்டுக்கு போ!

தட்டு தடுமாறி எழுந்து , அம்மா எதிரில் இருந்த முதியோர் இல்லத்தினுள் நடந்து சென்றார்.

Kutti Kadhai is back! keep reading !! Also share us short stories that you've written to get featured in this space to b...
01/11/2018

Kutti Kadhai is back! keep reading !!
Also share us short stories that you've written to get featured in this space to be read by all of us!! Thanks!

27/10/2015

21) கூட்டம்

கடைவீதியில் நடந்து போய் கொண்டிருந்த போது, இன்று மாலை வீட்டிற்க்கு போய் கிச்சனை சுத்தம் செய்ய வேண்டும், எந்த பொருளையும் தேட கூடாது, எல்லாம் கைக்கு எட்டினாப்புல இருக்கணும். எதுவும் தொலைஞ்சு போக கூடாது என்று நினைத்து கொண்டாள் ஜெயா . திரும்பி பார்த்தால், கூட வந்த அவளது மகனை காணோம். கூட்டத்தில் தொலைந்து விட்டான்!

10/10/2015

20) நேரம்
" இப்படி என்னை இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டியே? உனக்காக எவ்ளோ நேரம் காத்திருக்கறது? டைம்-யோட value தெரியுமா?" ன்னு கண்டபடி திட்டினான் என் நண்பன். 'நானாவது late ஆ வர்றதாவது. நான் எப்பவுமே punctual ஆச்சே' என்று அவனை திருப்பி திட்ட நினைத்துக்கொண்டு கை கடிகாரத்தை பார்த்தேன். அது ஓடாமல் ஒரு மணி நேரம் முன்னதாக நேரம் காட்டியது.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kutti Kathai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category