13/12/2015
கல்வியில்_கார்ப்பரேட்_வருகுது
#நாடுமுழுசா_அடிமையாகிப்போச்சு
இதை எந்த பத்திரிக்கையும் சொல்லாது. நாம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
பாராளுமன்றத்தின் முன்பாக 7ந்தேதியிலிருந்து மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன
"கல்வியில் பன்னாட்டு தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதிக்காதே"
கல்வியை கார்ப்பரேட் மயமாக்காதே
"காட் ஒப்பந்தத்தை ரத்து செய்"
என முழங்கி வருகிறார்கள்.
1994ஏப்ரல் 15-ல் 123நாடுகள் உலக வர்த்தக மையம்(WTO) கூறிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதை 1995லிருந்து இந்த ஒப்பந்தத்தை படிப்படியாக காட் (General Agreement Trade In Service) மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
அதற்கான நிதியை உலகவங்கி, பன்னாட்டு நிதி ஆணையம் மூலம் ஏழை நாடுகளுக்கு வட்டிக்குக் கொடுத்து அடிமைப்படுத்தி செயல் படுத்தி வருகிறார்கள்.
இதை அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள்
உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் மூலம் அமல்படுத்தி வருகிறார்கள்.
அதாவது அரசுத் துறைகள் மக்கள் நலத்திட்டங்களான கல்வி, சாலை மருத்துவம்,மின்சாரம், குடிநீர்,நீர், உணவு,வீடு எல்லாவற்றையும் தனியாருக்கு விடுவது வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விடுவது இதுதான் உலகமயத்தின் சாரம்
இதை ஏற்கவில்லையென்றால் ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா போல பொருளாதாரத்தடை விதிப்பார்கள். போர் தொடுத்து அல்லது உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டிவிட்டு அடிமையாக்குவார்கள்
இந்தியாவைப் பொருத்தவரை அந்தக்கவலையே இல்லை.
அமெரிக்காக்காரன் காலைநக்கு என்பதற்குள் குண்டியை நக்கும் அடிமை நாய்கள்தான் காங்கிரசும் பிஜேபியும்.
வரும் டிசம்பர் 15-18ந் தேதியில்
WTO-GATS ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக கென்யாவில் நைரோபியில் நடக்கவிருக்கும் 10-வது வர்த்தக மாநாட்டில் 160நாடுகள் சேர்ந்து தங்களது நாட்டில் உயர்கல்வியில் பன்னாட்டு பல்கலைக் கழகங்களை தொடங்கிக் கொள்வதற்கு கையெழுத்திடப் போகிறார்கள்.
கூதரை ஸ்மிருதி இரானி தலைமையில் ஒரு குழு கிளம்பிவிட்டது.
இதில் கையெழுத்து போடுவதற்கு முன்பாகவே கடந்த 20ஆண்டுகளாக கல்வியை பையப்பையத் தனியார் மயமாக்கிக் கொண்டே வருகிறது மத்திய மாநில அரசு
Pre KG-LKG-UKG மெட்ரிக், இண்டர் நேஷனல் பள்ளிக்கூடமென ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்தே தனியார் மயத்தை திட்டமிட்டே அரசு திணித்து வருகிறது.
கல்லூரியில் MBA,MBBS, மேனேஜ்மென்ட், என பல துறைகள் இங்கிருந்தே வெளிநாட்டில் தொலைதொடர்பு மூலம் வீடியோ கான்பரன்சிங் மூலம் வந்து விட்டது
கலை அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள்
தனியார் பல்கலைக் கழகங்கள் ஏற்கெனவே புற்று நோயாக பெருகிக் கிடக்கின்றன.
இங்கிருந்து வெளிநாட்டு மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆசிரியர் மூலமும் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
டிவியிலும் இந்தியாவைவிட அயல்நாட்டில் படிக்க செலவு குறைவு வாருங்கள் வெளிநாட்டுக்கென இடைவிடாது விளம்பரங்கள் விரட்டுகின்றன.
1950-51கணக்குப்படி இந்தியாவில் 30பல்கலைக் கழகம் 695கல்லூரிகள் இருந்தது.
2012-13 கணக்கின்படி 700 பல்கலைக் கழகங்கள், 35000 கல்லூரிகள் உள்ளது.
1990க்கு பிறகு 15000க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் பெருகி விட்டன.
மத்திய அரசு கல்விக்காக2014-15ல்
ஒதுக்கியது 82000கோடி
2015-16ல் ஒதுக்கியது 67000கோடி.
ராஜஸ்தானில் 7000பள்ளிகள்
மராட்டியத்தில் 4000பள்ளிகள் மூடப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் 1200பள்ளிகளை மூட ஜெயா அரசு முடிவு செய்திருக்கிறது.
மலைவாழ் பகுதியில் ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள்,நகரத்தில் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் ரகசியமாக மூடப்பட்டு வருகின்றன.
இப்படி தலைக்கு மேலே பிரச்சனை இருக்கும் போது இப்போது தலையில் இடியாக நேரடியாகவே வெளிநாட்டு தனியார் பல்கலைக் கழகங்கள் வரப்போகின்றன.
இப்போது அரசுபள்ளியில் படிப்பது கேவலம் ,மெட்ரிக் பள்ளியில் படிப்பது பெருமை என்பது போல
இனிமேல் வெளிநாட்டு கல்லூரி பல்கலையில் படிப்பது பெருமையாக பேசக்கூடும்.
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பச்சையப்பா கல்லூரியை கீழாக பார்ப்பது போல இனிமேல் சென்னையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் மற்றவர்களை கீழாக பார்க்கும் நிலை வரும்.
இந்தியாவில் கல்வி கற்றவர்கள் 74% பேர் இதில் உயர்கல்விக்கு செல்கிறவர்கள்49% பேர்
இப்படியாக 5,10,12 வகுப்புகளோடு வறுமையால் படிப்பை தொடர்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
கார்ப்பரேட்டுகள் கல்வியில் கால்பதித்தால்
இடஒதுக்கீட்டுக்கு சமாதி கட்டப்படும்
இடஒதுக்கீட்டுக்கெதிராக தகுதி, திறமை பேசும் கும்பல்கூட இனி படிக்க முடியாது .
நல்ல வசதி இருப்பவன்தான் அங்கு படிக்க முடியும்.
எல்லாம் கணிணி இணையம், வீடியோ கான்பரன்சிங் வழி படிப்பு சொல்லிக் கொடுப்பதால் ஆசிரியர் 100பேர் தேவைப்படும் நேரத்தில் 30மட்டுமே போதுமென்பார்கள்
அங்கு ஆசிரியர்,மாணவர்கள் யாருமே சங்கம் வைக்க முடியாது
தாய்மொழிக்கல்வி முற்றிலும் ஒழிக்கப்படும்
நமகுநாட்டு தொழிற்சட்டங்கள்
தொழிற்சங்க உரிமைகள் அங்குசெல்லுபடியாகாது.
பன்னாட்டு சட்டமே செல்லுபடியாகும் என்பதால் ஆசிரியர்கள் மாணவர்கள்,தொழிலாளர்கள் ITஊழியர்களைப் போல எப்போது வேண்டுமானாலும் தூக்கியெறியப் படலாம்.
மருத்துவம், கல்வி ,தனியார் மயமானதில் ஏற்பட்ட அவலங்களை நேரடியாக பார்த்து வருகிறோம்
இனி அது படு பயங்கர கொடுமையாக மாறப்போகிறது
இதை எதிர்த்து எல்லா மாணவர்களும் வீதிக்கிறங்கி போராட வேண்டும்
இந்தி எதிர்ப்பு,ஈழம், மீத்தேன் பிரச்சனைக்குப் போராடியது போல அரசை முள்முனையில் நிறுத்தும் படி போராட்டத்தீ பரவ வேண்டும்
மரம் ஒய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என மாவோ குறிப்பிட்டது போல
நாம் போராடாமல் ஒதுங்கி வாழ நினைத்தாலும் சமூக நிலைமை விடாது. போராட வா.
(இதை அதிகம் பகிருங்கள்)
குரூப்களிலும் Share செய்யுங்கள்.
Vijayakumar R