21/08/2026
*பத்திரிகை செய்தி*
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டப் பணியாளர்களுக்கு ரூ.25,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை: முதலமைச்சர் நேரடி தலையீடு செய்ய மனு!
சென்னை:
தமிழ்நாடு சமக்ரா சிக்ஷா திட்டத்தில் 12 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் Data Entry Operator மற்றும் Accountant உள்ளிட்ட தொகுப்பூதியப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 நிர்ணயிக்க வேண்டும் என்றும், அடிப்படைப் பணி நலன்களை வழங்க முதலமைச்சர் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் கோரி முதலமைச்சருக்கு விரிவான மனு அனுப்பப்பட்டுள்ளது.
முக்கியக் கோரிக்கைகள் மற்றும் அம்சங்கள்:
ஊதிய முரண்பாடு:
இத்திட்டத்தில் முழுநேரமாகப் பணியாற்றும் தொகுப்பூதியப் பணியாளர்கள் பலர் இன்றளவும் மாதம் ரூ.14,000 முதல் ரூ.17,000 வரை மட்டுமே பெறுகின்றனர். முழுநேரப் தொகுப்பூதியப்பணியாளர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படும் பணியாளர்கள் இடையே ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.
ரூ.25,000 குறைந்தபட்ச ஊதியம்:
தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்ய உடனடியாக ரூ.25,000 மாத ஊதியமாக மறுநிர்ணயம் செய்ய வேண்டும்.
தொழிலாளர் நலன்கள்:
பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர்களுக்கு ESI மருத்துவப் பாதுகாப்பு, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, அகவிலைப்படி (DA), மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு போன்ற அடிப்படைப் பலன்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீடு & நேரடி ஆய்வு:
"நிதி பற்றாக்குறை" என்ற காரணத்தைக் கூறாமல் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும். மேலும், வட்டார வள மையங்களில் (BRC) பணிபுரியும் பெரும்பான்மையான பெண் ஊழியர்களின் பணிச்சூழலை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இக்கோரிக்கைகளை அரசு உடனடியாகப் பரிசீலித்து நியாயமான தீர்வு காணவேண்டும் எனப் பணியாளர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Raj Mohan
Chief Minister of Tamil Nadu
Cuddalore Rajkumar